இலங்கை அரசு எப்போதும் தனது உறுதிமொழியை நிறைவேற்றியதே இல்லை

இந்தியா இலங்கை இடையேயான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நட்பை கருத்தில் கொண்டு இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான ஜெனீவா தீர்மானத்தின் மீது முடிவெடுக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த விளக்கத்திற்கு தமிழக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக எம்பி கனிமொழி பேசுகையில்,
இலங்கை தமிழர்களுக்காக இன்னும் 50 வீடுகள் கூட முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. 13வது சட்ட திருத்தத்தை இலங்கை அரசு பரிசீலிக்கும் என இலங்கை அதிபர் உறுதி அளித்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.
சில நாட்களிலேயே தான் அது மாதிரி எந்த உறுதியையும் அளிக்கவில்லை என ராஜபக்சே தெரிவித்தார். இலங்கை அரசு உறுதிமொழிகளை காப்பாற்றும் என்பதை எப்படி நம்புவது. இஸ்ரேலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல் தீர்மானத்தை ஆதரித்த இந்தியா, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் மவுனம் சாதிப்பது ஏன் என்றார்
.
.
No comments:
Post a Comment