மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday, 2 March 2012
ஜெனீவாவில் கூட்டமைப்பின் பங்கேற்பின்மை பயங்கரமான சதித்திட்டத்தின் வகிபாகம்
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் இந்தியாவின் மௌனமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளாமையும் பயங்கரமான சதித்திட்டத்தின் வகிபாகமாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.
இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை: மத்திய அரசுக்கு சீமான் கேள்வி
இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை தொடர்பான விடயத்தில் மத்திய அரசு மௌனம் சாதிப்பது ஏன்? என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேள்வி விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் நடக்கும் ஆடுபுலி ஆட்டம்
டக்ளஸ், கருணா, தொண்டமான் ஆகியோர் அரசுக்கு தலையாட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்!- பிரபா கணேசன்
ஜெனிவாவில் இலங்கை அரச பிரதிநிதிகளுடன் புலம்பெயர் தமிழர்கள், மனிதஉரிமை அமைப்புகள் கடும் விவாதம்
பிரித்தானியப் பெண்ணின் கொலை தொடர்பில் சில உண்மைத் தகவல்கள்
இந்நிலையில், இறந்த இப்பெண்ணை பதிவு திருமணம் செயதவரை சந்தேகத்தின் பெயரில் கொள்ளுப்பிட்டிய பொலிசார் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை தனக்கான காலத்தை நழுவ விட்டுள்ளது - ஜெனீவா கூட்டத் தொடரில் அமெரிக்கா
இலங்கை தனக்கான காலத்தை நழுவ விட்டுள்ளதாக அமெரிக்காவின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான செயலர் மரியா ஒற்றேரோ சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றும்போதே போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்............ read more
ஜெனிவாவில் பரபரப்பு! தமிழர்களை கண்டு கால்தெறிக்க ஓட்டம் பிடித்த கனகரத்தினம்!
இலங்கைக்குழுவுடன் வருகை தந்திருக்கும் கனகரத்தினம் நேற்று ஜெனிவா நகரை சுற்றிப்பார்ப்பதற்கு என வேறு ஒரு நபருடன் சென்ற போது இரு தமிழ் இளைஞர்களை கண்டிருக்கிறார். அந்த இளைஞர்கள் கனகரத்தினத்தை நோக்கி வருவதை கண்ட கனகரத்தினம் தான் இருந்த ஹொட்டலை நோக்கி கால்தெறிக்க ஓடியுள்ளார்.
சீனா இலங்கையை கைவிடாதாம்! உறுதியளித்தார் சீனா பாதுகாப்பு அமைச்சர் !!
இலங்கையில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி, சமாதான முயற்சிகள் மற்றும் நாட்டின் இறைமையினைப் பாதுகாப்பதற்கு சீனா முழு ஆதரவையும் வழங்கும் என உறுதியளித்துள்ளதாக, “சின்ஹுவா” செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைப் பேரவை, இலங்கை விவகாரம் குறித்து கவனம் செலுத்தும் - நவனீதம்பிள்ளை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை விவகாரம் குறித்துகவனம் செலுத்தும் என பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
பத்மினியிடம் சிவனேசனின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்கள் குறித்து விசாரணை
வன்னியில் இலங்கை அரச படைகளது ஆழ ஊடுருவும் படையினரால் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசனின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்கள் தொடர்பான தகவல்களை தம்மிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் கேட்டிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தருமான திருமதி;.பத்மினி சிதம்பரநாதன் தெரிவி;த்துள்ளார். இன்றைய தினம் கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல் தலைமையகத்திற்கு திருமதி;.பத்மினி சிதம்பரநாதன் விசாரணைக்கென அழைக்கப்பட்டிருந்தார்.
"அரசாங்கத்தின் வாக்குறுதி குறித்து நம்பிக்கையில்லை"–சர்வதேச மன்னிப்புச் சபை!
அரசாங்கத்தின் வாக்குறுதிகள் தொடர்பில் நம்பிக்கை கிடையாது எனசர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது. குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்த கால அவகாசம் தேவை எனஅரசாங்கம் விடுத்தள்ள கோரிக்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
மார்ச் 5 ஐநா.முன் வாருங்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து எமக்குள்ளே பேசிக்கொண்டிருப்பதில் பயன்??
ஈழத் தமிழர்களுக்கான விடிவினைப் பெற்றுக்கொடுக்க உலகத் தமிழினமே சர்வதேசத்திடம் உண்மைகளை எடுத்துச் சொல்லி நீதிகேட்போம். எம்மோடு மார்ச் 5ம் திகதி அனைவரும் வாருங்கள் என்று அன்புரிமையோடு அறைகூவல் விடுத்து நீதிக்கான நடைப்பயணம் இன்று 25வது நாளாகவும் தொடர்கின்றது....... read more
மாயமானாக உருவெடுத்துள்ள சிங்களத்திற்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை நிரந்தரமாக்கி வெற்றிகொள்ள ஜெனீவா நோக்கி படைதிரட்டி வாருங்கள் தமிழர்களே!!!
விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் - ஜெனிவா பேரணிக்கு ஆதரவ
சிறிலங்காவுக்கு சீனா தொடர்ந்து ஆதரவு நல்குமாம் சீன பாதுகாப்பு அமைச்சர்
இன்று இலங்கைக்கு ஆப்பு: விவாதத்தில் 2வது இடம் இலங்கைதான் !
2 ஊடகவியலாளரைக் காட்டிக் கொடுப்பேன்: டக்ளஸ் மாமா பிதற்றல் !
ஐ.நாவில் துள்ளிக்குதித்தது எகிப்த்தும் பாக்கிஸ்தானும் மட்டுமே !
ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் விவாதிப்பதையிட்டு நவனீதம் பிள்ளை பெருமை
ஜெனிவா சமருக்காய் தமிழ்ப் பெண்மணியை களமிறக்குகிறது சிறிலங்கா
இதன்படி இன்றுமுதல் எதிர்வரும் 23ம் திகதி வரை ஜெனிவாவில் இலங்கை தொடர்பான விடயங்களைத் தமரா தலைமையிலான குழுவே கையாளும் எனத் தெரிகிறது.
Thursday, 1 March 2012
ஆதித்தமிழர்களும் பரிணாம அறிவியலும் (வீடியோ இணைப்பு)
கீ.மு 10ம் நூற்றாண்டுக்கு முன் பண்டைய தமிழர்கள் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமாக தெளிவான ஆறு புலன்களின் மூலம் அதாவது தொடுதல், சுவைத்தல், மணத்தல், பார்த்தல், கேட்டல், அறிதல் என வகுத்துள்ளான்.
அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இந்திய ஆதரவு அளிக்க வேண்டும்!
ராஜபக்ஷே கும்பலுக்கு சர்வதேச நீதிமன்ற நடவடிக்கை
கோரி 10 லட்சம் பேரிடம் வி.சி.க.பெற்ற கையொப்பப் படிவங்கள் ஐ.நா.வுக்கு அனுப்பப்பட்டன.
அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இந்திய ஆதரவு அளிக்க வேண்டும்!
- தொல். திருமா அறிக்கை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அவை கூட்டம் பிப்ரவரி 27 அன்று ஜெனிவாவில் தொடங்கியுள்ளது. இக்கூட்டத் தொடரில் சிங்கள இனவெறி ஆட்சியாளர்களுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை முன்மொழிவதற்கு அமெரிக்க வல்லரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இலங்கைக்கு எதிராக தமது முடிவை மாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
இது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து விடுத்த கோரிக்கைகள் இன்று அவருக்கே நெருக்கடியாகி உள்ளன: மங்கள சமரவீர
கொள்ளுப்பிட்டி விடுதியில் தமிழ் பெண் கொலை! சந்தேகத்தில் உயிரிழந்த பெண்ணின் இரண்டாவது கணவன் கைது!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்கும் முயற்சியில் உலகக் கோடீஸ்வரரான தக்ஸின் ஸின்வத்ரா!
தமிழ்க் கூட்டமைப்பு கலந்து கொள்வதை இந்தியாவே தடுத்தது
தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க முன்வரும்போது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் விமல் வீரவன்ச, சம்பிக ரணவக்க ஆகியோர் மக்கள் மீது சுமைகள் சுமத்தப்படும்போது ஏகாதிபத்தியத்தை மறுத்து விடுகின்றனர் என இடதுசாரி முன்னணி தெரிவித்தது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான இலங்கையில் எழுத்து மூலமான உறுதிமொழியை பெற்றுக் கொள்ளவே இந்தியா முயற்சிப்பதாகவும் அம் முன்னணி அறிவித்தது.
இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை, கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.............. read more
கூட்டமைப்பின் பங்கேற்பின்மை பயங்கரமான சதித்திட்டம்
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் இந்தியாவின் மௌனமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளாமையும் பயங்கரமான சதித்திட்டத்தின் வகிபாகமாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்து அரசாங்கமே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக கலாநிதி குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில், பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தியாவின் தேவைக்காகவே அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் பிரேரணையை கொண்டு வருகிறது.................. read more
கால அவகாசம் மனித உரிமை கண்காணிப்பகம் அதிர்ச்சி
மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சர்வதேசம் ஏற்கனவே கோரிக்கை விடுத்த போதெல்லாம் அவற்றை நிராகரித்த இலங்கை அரசு, மேலும் கால அவகாசம் கோருவதையிட்டு மனித உரிமை கண்காணிப்பகம் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் மனித உரிமை விடயங்களில் கால அவகாசம் பற்றி இலங்கை கோரிக்கை விடுப்பது புதிதான விடயம் அல்ல என சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை ஆய்வாளர் யொலன்டா பொஸ்டர் தெரிவித்துள்ளார்........... read more
இன்று பிரித்தானியாவில் பெற்றோர் பெரும் பரபரப்பாக இருப்பர் !
தூக்கில் தொங்கிய த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் சுமந்திரன் MP !
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவியொன்று நேறு யாழ்பல்கலைக்கழக வளவினுள் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தது. மாலை வேளையினில் இது தொங்க விடப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது. தமிழின துரோகி சுமந்திரன் எனத்தெரிவிக்கப்பட்டிருந்த அக்கொடும்பாவியினில் தொங்க விடப்பட்டிருந்த சுலோக அட்டையினில் போர் குற்ற விசாரணை எங்கே எனக்கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது.
தமிழர் நாடுகடத்தல் குறித்து பிரிட்டன் கருத்து
தமிழ்நாட்டிலிருந்து பல லட்சம் கையெழுத்துப் படிவங்கள் கையெழுத்தாகி.. ஐ.நா மன்றத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது.
5.2.2012 அன்று ஐ.நா. மனித உரிமை செயலாளர் நவநீதம் பிள்ளையிடம் ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கியவிண்ணப்பங்கள்.கொடுக்கப்பட இருக்கின்றன.
தமிழ்நாட்டிலிருந்து பல லட்சம் கையெழுத்துப் படிவங்கள் கையெழுத்தாகி.. ஐ.நா மன்றத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது.......... read more
எமக்கான விடுதலை எம் பலம் வாய்ந்த கைகளில் தான் இருக்கின்றது; அனைத்துலக மக்களவை அழைப்பு!
எமக்கான விடுதலை எம் பலம் வாய்ந்த கைகளில் தான் இருக்கின்றது …
அனைத்துலக மக்களவை அழைப்பு!
புலம் பெயர் தமிழ் மக்கள் ஆகிய நாம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழின படுகொலைகளின் கவலைகளை மறக்கவில்லை. மறக்கவும் மாட்டோம். எமது கடும் கோபம் அணையாத நெருப்பாகவே இருந்து வருகிறது............. read more
Wednesday, 29 February 2012
'வல்வெட்டித்துறை மக்கள் தமிழ்தேசியகூட்டமைப்பில் மிகுந்த கோபத்தில் உள்ளனர்' -வல்வை நகரசபைதலைவர்
மீண்டும் U.N. முருகதாசன் திடலில் அணிதிரள வேண்டுகோள்!
விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை.இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு.ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும்.
யாருடைய அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது?
-இதயச்சந்திரன்
- கேட்டுப் பெற்றால் , அதை மீண்டும் பறித்துக் கொள்வார்கள்.
முதலில் நாம் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
சிங்களம் சொல்வது, அதிகாரப் பரவலாக்கமே தவிர அதிகாரப் பகிர்வல்ல.
13 வது திருத்தச் சட்டமும், அதன் குழந்தையான [சம்பந்தரின் மொழியில்] மாகாண சபையும், சிங்கள இறைமையின் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளவில்லை.
வடபுல அரச அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை போராடுமாறு அரசாங்கம் பலாத்காரம்
போராட்டம் வெற்றி அளிக்கவில்லை
வடபுலத்தை சேர்ந்த அரச அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை கொண்டு ஜெனிவாவினில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணையை கண்டித்தும் ஜனாதிபதிக்கு ஆதரவும் ஆசியும் வேண்டியும் இன்று நடத்தப்படவிருந்த போராட்டங்கள் வெற்றி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அரச அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து விட்டமையே போராட்டங்கள் வெற்றி அளிக்காமைக்கான காரணம் எனப்படுகின்றது.
துஷ்பிரயோகம் செய்த சிப்பாய் - நடவடிக்கை எடுக்காத பொலிஸார்: அதிகாரிகள் விசனம் தெரிவிப்பு
துஷ்பிரயோகம் செய்த சிப்பாய் - நடவடிக்கை எடுக்காத பொலிஸார்: அதிகாரிகள் விசனம் தெரிவிப்பு |
கிளிநொச்சியில் மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட படைச் சிப்பாய் மீது பொலிஸார் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று துறைசார் அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர். |
மட்டக்களப்பு வின்சன்ட் கல்லூரி மாணவிகளின் அதிரடி நடவடிக்கை _
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் கடந்த 23 ஆம் திகதியன்று சரஸ்வதியின் உருவச்சிலை வைக்கப்பட்டு அச்சிலை அன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவிருந்தது.
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டோரில் அதிகமானோர் தமிழர்கள்
இவர்களில் 44 பேர் ஆண்கள் என்பதுடன், 8 பேர் பெண்கள் ஆவர்.
2009 மே 17ல் வன்னிப் போர்முனையில் நிகழ்ந்தவை என்ன? - கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மேரி கொல்வினின் சாட்சியம்
சிறிலங்கா ஆயுதப்போராட்டத்தின் பின்னணி குறித்து தமிழ்நாட்டில் தகவல் திரட்டுகிறது அமெரிக்கா
சிறிலங்காவில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் மற்றும் அதன் பின்னணி குறித்து இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தமிழ்நாட்டில் நடத்தி வரும் ஆய்வு தொடர்பாக சிறிலங்கா அரசு கடும் விசனத்திற்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்காவில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி, அதன் வரலாறு, தமிழகத்திலுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு இதிலுள்ள பிணைப்பு, இந்தியாவிலிருந்து அதற்கு கிடைத்த ஆதரவு என்பன குறித்து இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விரிவான ஆய்வொன்றை செய்து வருகிறது.
இலங்கைக்கு இந்தியா ஆதரவு - பழ. நெடுமாறன் கடும் கண்டனம்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
Subscribe to:
Posts (Atom)