போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்தபோது ஐ.நா பொதுச்செயலரின் பிரதிநிதியாக, சிறிலங்கா விவகாரங்களைக் கையாண்டவர் விஜய் நம்பியார்.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 17 November 2012
உள்ளக அறிக்கையில் மறைக்கப்பட்ட விஜய் நம்பியார்
போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்தபோது ஐ.நா பொதுச்செயலரின் பிரதிநிதியாக, சிறிலங்கா விவகாரங்களைக் கையாண்டவர் விஜய் நம்பியார்.
Thursday, 15 November 2012
உள்ளக அறிக்கையில் மறைக்கப்பட்ட விஜய் நம்பியார் – பதிலளிக்காமல் நழுவிய பான் கீ மூனின் பேச்சாளர்
ஐ.நாவின் மூத்த அதிகாரி சாள்ஸ் பெற்றி சமர்ப்பித்துள்ள சிறிலங்காவில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்த உள்ளக மீளாய்வு அறிக்கையில், பான் கீ மூனின் மூத்த ஆலோசகர் விஜய் நம்பியார் குறித்த எந்தத் தகவலும் இடம்பெறவில்லை.
மீண்டும் இனமோதல் வெடிக்கும் - பிரபா கணேசன் எச்சரிக்கை!
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படுதல் மீண்டும் இனப்பிரச்சினைக்கு வழிகோலும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டு 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் அது கூடுதல் அதிகாரப் பகிர்வினை உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.எனினும், வெறுமனே 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அது மீண்டும் இன முறுகல் நிலைமைகளை ஏற்படுத்தக் கூடும்.
கந்தசஷ்டி விரதம் இருப்பது எப்படி????
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார்
என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.
இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.
வேண்டுவனயாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?
பிரித்தானியாவால் இலங்கைக்கு மற்றுமொரு தலையிடி: சாட்டை கெமரூன் கையில்!
பிரித்தானியாவால் இலங்கைக்கு மற்றுமொரு தலையிடி: சாட்டை கெமரூன் கையில்!
பொதுநலவாய நாடுகளின் எதிர்காலம் மற்றும் பங்கு தொடர்பான பிரித்தானிய வெளிவிவகாரக்குழுவின் அறிக்கை நேற்று ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த அறிக்கையில், 2013ல் பொதுநலவாய உச்சிமாநாடு நடைபெறவுள்ள இலங்கை மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான சாட்சியங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கசிந்துள்ள ஐ.நா அறிக்கையின் படி 80,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல் !
கசிந்துள்ள ஐ.நா அறிக்கையின் படி 80,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல் !
ஐ.நா செயலாளர் நாயகத்தால், இலங்கையில் போர் நடைபெற்றவேளை ஐ.நா காத்திரமான முடிவுகளை எடுக்கவில்லையா என ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இக் குழு 128 பக்கங்களைக் கொண்ட தனது அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் சமர்பித்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே இவ்வறிக்கை எப்படியோ கசிந்துள்ளது. இரகசியமாக ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு மட்டும் கையளிக்கப்படவேண்டிய இவ்வறிக்கை எப்படிக் கசிந்தது என்பது ஒருபுறம் இருக்க அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள, பல செய்திகள் மேலும் அதிர்ச்சி தருகின்ற வகையில் அமைந்துள்ளது. வன்னியில் போர் நடைபெற்றவேளை, 3 லட்சத்தி 60,000 ஆயிரம் பேர் அப்பகுதியில் வசித்ததாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போர் முடிவடைந்த பின்னர் சுமார் 2 லட்சத்தி 80,000 ஆயிரம் பேர் மட்டுமே இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றனர் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழக அரசுக்கு ஜி.கே.மணி வலியுறுத்தல்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி,
13வது திருத்தத்தை இரத்து செய்தால், பௌத்த மதத்தையும் இரத்துச் செய்ய வேண்டும்: சமித்த தேரர்
13வது திருத்தத்தை இரத்து செய்தால், பௌத்த மதத்தையும் இரத்துச் செய்ய வேண்டும்: சமித்த தேரர் |
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு கூக்குரலிடுவோர் அந்த திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்பட்ட பின்னர், வழங்க போகும் மாற்று திட்டம் என்ன என்பதை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் பத்தேமகம சமித்த தேரர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நடந்து விட்டால், எமது நாடு சர்வதேசத்தின் முன்னிலையில் மிலேச்சத்தனமான, வலதுகுறைந்த நாடாக மாறிவிடும். எவர் எதனை கூறினாலும் சர்வதேச சமூகம் இன்றி எம்மால் வாழ முடியாது. வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு ஓரளவேனும் தீர்வு வழங்கும் நோக்கத்தில் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. |
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் நாட்டில் பழுது பார்க்க முடியாதளவு பாதக நிலைமை ஏற்படும்: - சம்பந்தன் எச்சரிக்கை
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் நாட்டில் பழுது பார்க்க முடியாதளவு பாதக நிலைமை ஏற்படும்: - சம்பந்தன் எச்சரிக்கை |
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படக் கூடுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் நாட்டில் பழுது பார்க்க முடியாதளவு பாதக நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
|
Wednesday, 14 November 2012
இனப்படுகொலையை தடுக்க ஐ.நா அதிகாரிகள் தவறி விட்டனர்
நியூயார்க் : ‘இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, அப்பாவி தமிழர்களின் உயிரை காப்பாற்ற ஐ.நா. அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கையிலேயே பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு உச்சகட்ட போரின்போது, சுமார் 40,000 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்க, முன்னாள் அதிகாரி சார்லஸ் பெட்ரி தலைமையில் ஒரு குழுவை ஐ.நா. சபை அமைத்தது. இக்குழுவின் அறிக்கை ஐ.நா. சபையிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
அரசின் தாக்குதல்களால்தான் மக்களுக்கு அதிக இழப்பு என்பதை மறைத்தது ஐ.நா.
அரசின் தாக்குதல்களால்தான் மக்களுக்கு அதிக இழப்பு என்பதை மறைத்தது ஐ.நா. |
இலங்கை அரசின் எறிகணைத் தாக்குதல்களால்தான் பொதுமக்களுக்கு அதிகமான இழப்புக்கள் ஏற்பட்டன என்ற விவரம் தெரிந்திருந்தபோதும் ஐ.நா. அதனைப் பகிரங்கப்படுத்தவில்லை என்று அதன் உள்ளக விசாரணை அறிக்கை விமர்சித்துள்ளது.
|
பரிதி அவர்களை கொலைசெய்த குற்றவாளிகளுக்கு 50.000 யூரோக்கள் சிறீலங்கா அரசால் வழங்கப்பட்டது
பரிதி அவர்களை கொலைசெய்த குற்றவாளிகளுக்கு 50.000 யூரோக்கள் சிறீலங்கா அரசால் வழங்கப்பட்டது - திடுக்கிடும் தகவல் 'லா பாரிசியன்' என்ற செய்தித்தாளில் வெளியான செய்தி..
http://www.leparisien.fr/espace-premium/actu/deux-suspects-interpelles-apres-le-meurtre-du-leader-tamoul-13-11-2012-2315875.php
http://www.leparisien.fr/
நீரிழிவு நோய் – எனது அனுபவமும் எனது தேடலும் : பி. எம் புன்னியாமீன்
நவம்பர் 14 - உலக நீரிழிவு நோய் தினம்
இன்று உலகம் முழுவதும் பேசப்படும் நோய்களில் ஒன்றாகவே நீரிழிவு நோய் காணப்படுகின்றது. காரணம் இந்நோய் பரவலாக அதிகமான மக்களிடம் காணப்படுவதுடன் அதன் தொடர் விளைவுகளும் பாரதூரமாகவே இருப்பதுமாகும். இந்நோய் வந்து விட்டால் அதை முற்று முழுதாகக் குணமாக்க முடியாது எனக்கூறப்படுகின்றது. இருப்பினும் வைத்திய ஆலோசனைப்படி நடப்பதில் நோயாளி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இந்நோயின் தொடர் விளைவுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும்.

Subscribe to:
Posts (Atom)