அரசாங்கம் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றிக் கொள்வதில் கூடுதல் நாட்டம் காட்டி வருவதாக லண்டனிலிருந்து பிரசூரமாகும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்களும் அதிகாரத்தை விஸ்தரிப்பதல் முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 6 November 2012
இலங்கை விடயத்தில் ஐ.நா.பாராமுகமாக உள்ளதா? கேள்வியெழுப்புகிறது இன்னர் சிற்ரி பிரஸ்
முன்னாள் போராளிகள் காணாமல் போகின்ற சம்பவங்கள் வடக்கில் மீண்டும் தலைதூக்கியுள்ளன
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் முன்னாள் போராளிகள் காணாமல் போகின்ற சம்பவங்கள் வடக்கில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் வன்னியி;ல் சுமார் ஏழு இளைஞர்கள் ஓரே சந்தர்ப்பத்தில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்குடியிருப்பை அண்டிய பகுதியொன்றில் அவர்கள் காணாமல் போயிருப்பதாக கூறப்படுகின்றது. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஒன்று கூடியிருந்த இடமொன்றில் வைத்து படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடித்து செல்லப்பட்டதாக அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன. அச்சங்காரணமாக அவர்கள் பிடித்து செல்லப்பட்டமை தொடர்பாக குடும்பத்தவர்கள் புகார் எதனையும் தெரிவித்திருக்கவில்லை.
சர்வதேசத்தின் பலத்தைக் கண்டு இலங்கை தற்போதுதான் பயப்பட ஆரம்பித்துள்ளது -றிக் டிக்ஸ்ரா
இலங்கையின் 2009ம் ஆண்டு இறுதிப் போரின் போது காணமற் போனவர்களிற்கான பதிலைச் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் உள்ள அழுத்தத்தை அது இப்போது தான் புரிந்து கொண்டுள்ளது.
பிரித்தானிய மாநாட்டில் இன அழிப்பை முன்நிறுத்துமாறு தமிழர் பேரவைக்கு த.தே.ம.முன்னணி யோசனை
திருகோணமலையில் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் நடாத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இலங்கை விவகாரம்:ஸ்டாலினுக்கு போட்டியாக கனிமொழியை களமிறக்கிய கருணாநிதி
ஐ.நா மனித உரிமைச்சபை : சுதந்திர தமிழீழம் நோக்கிய நீதிக்கான சர்வதேச பரப்புரையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
சர்வதேச அரங்கொன்றில் சிறிலங்காவினை அம்பலபடுத்தவும், தமிழர்களின் நியாயப்பாட்டினை வலியுறுத்தவும் கிடைத்த இன்னுமொரு இராஜதந்திரக்களமாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நோக்கியிருந்தது.
ஐநா மனித உரிமைகள் ஆணையம்: இலங்கை ஏற்றதும் மறுத்ததும்
வெளிநாட்டுத் தூதுவர்களாக மூத்த இராணுவ அதிகாரிகள்; தமிழரை அழித்ததற்கு பரிசு
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், முக்கிய பங்காற்றிய இலங்கை இராணுவத் தளபதிகள் மூவர், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் இராஜதந்திரிகளாக இரண்டாம் நிலைப் பதவிகளில் அமர்த்தப்படவுள்ளனர்.
|
தமிழர் இனப்படுகொலைக்கு நீதிகோரி லண்டனில் தமிழ் உணர்வாளர் மாநாடு
இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக ஏவிவிடப்பட இனப்படுகொலை ஓர் சர்வதேச தீர்ப்பாயத்தின் முன்பாக விசாரணைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் மாநாடு நாளை புதன்கிழமை லண்டனில் நடைபெறவுள்ளது.
இதனை பிரிட்டன் தமிழர் பேரவையும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். தாயகத்துத் தமிழர் பிரதிநிதிகள், தமிழக மக்கள் பிரதிநிதிகள், புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனத் தமிழ் கூறும் நல் உலகின் பிரதிநிதிகள் அனைவரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். |
ஜெனிவாவில் இந்தியா குத்துக்கரணம்!
Subscribe to:
Posts (Atom)