Translate

Sunday, 17 July 2011

சங்கிலியன் சிலை இருக்க கூடாதாம்- இடிக்குமாறு ஒட்டுக்குழு ஈ.பி..டி.பியைச் சேர்ந்த மாநகர முதல்வர் உத்தரவு!

சங்கிலியன் சிலை இருக்க கூடாதாம்- இடிக்குமாறு ஒட்டுக்குழு ஈ.பி..டி.பியைச் சேர்ந்த மாநகர முதல்வர் உத்தரவு!


யாழ்ப்பாணத்தில் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த சிலை யாழ். மாநகர சபையால் இடித்து அகற்றப்படுகின்றது. சிலையைச் சுற்றி நேற்று மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்பதால் காவல்துறையினரின் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
முன்னர் வாளை உயர்த்தியவாறு வீரத்துடன் காணப்பட்ட சங்கிலியன் சிலையின் உயர்த்திய கையை சிறிலங்கா இராணுவத்தினர் அடித்து நொருக்கியிருந்தனர். அதன் பின்னர் வாளை கீழே போட்டவாறு இருக்கும் சிலை உருவாக்கப்பட்டது. தற்போது அந்த சிலையையும் இடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது................... read more 

கேவலம் கெட்ட தமிழ் நாட்டுப் பாணியில் யாழ்ப்பாணத்தில் தோ்தல் அன்பளிப்புகள்

கேவலம் கெட்ட தமிழ் நாட்டுப் பாணியில் யாழ்ப்பாணத்தில் தோ்தல் அன்பளிப்புகள்

தமிழ்நாட்டுத் தேர்தல்களை மிஞ்சிவிடும் வகையில், அன்பளிப்புகளால் நிரம்பி வழிகின்றது யாழ்ப்பாணம். சேலைகள், வேட்டிகள், தையல் இயந்திரங்கள், பம்புகள் மற்றும் தெளிகருவிகள் என அன்பளிப்புகளுக்கு பஞ்சமேயில்லை. ஆனாலும் ஆசைவார்த்தை காட்டி அழைத்துச் செல்லப்படும், எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடுவதில்லையென்ற மனக் கவலைகளுண்டு. உரும்பாலும் பிரதேச செயலகங்கள், கிராம சேவையாளர்களூடாகவோ அல்லது சமுர்த்தி உத்தியோகத்தர்களூடாகவோ ஆட்திரட்டல் நடக்கின்றது............ read more  

தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட குண்டர்களால் நிரம்பி வழியும் யாழ்ப்பாண விடுதிகள்

தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட குண்டர்களால் நிரம்பி வழியும் யாழ்ப்பாண விடுதிகள்

ஞாயிறு, 17 ஜூலை, 2011

வடக்கில் எதிர்வரும் 23ம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சிறிலங்கா அரசு குண்டர் குழுக்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிவதாகவும், அவற்றில் பெரும்பாலானவற்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. .............. read more 

வடமராட்சியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட படையினர் ஆயுதங்களைக் கைவிட்டு தப்பியோட்டம் ஞாயிறு,


வடமராட்சிப் பகுதியில் இரவு வேளையில் துப்பாக்கிகள் சகிதம் சென்ற படையினர் என நம்பப்படுகின்ற மூவர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை பதிலுக்கு இளைஞர் குழுக்கள் இணைந்து நடத்திய தாக்குதலில் அவர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது.

வடமராட்சியின் வல்வெட்டிப் பகுதியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. அப்பகுதியைச் சேர்ந்த உள்ளுர் இளைஞர் ஒருவர் சகிதம் மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படுகின்ற படையினர் மூவர் மதுபோதையில்.............. read more 

ஓகஸ்ட் மாதம் இந்திய பாராளுமன்றில் இலங்கைப் பிரச்சனை

bjp3
இலங்கை தமிழர் பிரச்சனையை இந்தியப் பாராளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்புவோம் என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இது குறித்து அவர் திருச்சியில் நிரூபர்களிடம் கூறியதாவது:-.............. read more 

ஓகஸ்ட் மாதம் இந்திய பாராளுமன்றில் இலங்கைப் பிரச்சனை

பிரிட்டனில் குடியேற விரும்பும் குடும்பங்களுக்கு இணையத்தில் ஆலோசனை!

பிரிட்டனில் குடியேற விரும்பும் குடும்பங்களுக்கு இணையத்தில் ஆலோசனை!


குடும்பத்துடன் நாட்டில் குடியேற விரும்புபவர்களுக்கு இணையம் மூலம் ஆலோசனைகள், வழிகாட்டல்கள் ஆகியவற்றை இலவசமாக வழங்குகின்ற 12 வார கால திட்டம் ஒன்றை பிரித்தானிய அரசு தொடங்கி உள்ளது. இத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி நிறைவு பெறும்.

கௌரவமான குடியேற்றத்தை ஊக்குவித்தல், துஷ்பிரயோகங்களை நிறுத்துதல், பொதுச் சேவைகள் மீதான நிதித் தாக்கத்தை குறைத்தல் ஆகிய மூன்று நோக்கங்களை முன்னிறுத்தி இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

http://www.ukba.homeoffice.gov.uk/policyandlaw/consultations என்கிற இணையப் பக்கத்துக்கு செல்கின்றமை மூலம் ஆர்வலர்கள் பயன் பெற முடியும்.

தி.மு.க மற்றும் கருணாநிதி தொடர்பாக வரும் ஊழல் செய்திகளை மறைப்பதற்கு மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ள சீமான்

நடிகை விஜயலட்சுமி இதுவரையில் கன்னடம்,தெலுங்கு,மலையாளம்  மற்றும் தமிழ் படங்களில் நடித்த போது  துணை இயக்குனர்களைக்கூட விட்டுவைக்காமல் காதலிப்பதாக காதல் கடிதங்களும் பரிமாரியிருந்தார்.

இது போல் இவரின் சேட்டைகள் மிகவும் அதிகம் என்றே தமிழக சினிமா வட்டாரங்கள் பரபரப்பாக பேசிவருகின்றனர்.

சில முக்கிய பிரமுகர்களுடன் இவரே தொடர்புகளை ஏற்படுத்தி ஆசை வார்த்தைகள் பேசி காதலிப்பதாக நடித்து பல கோடீஸ்வரர்களிடம் பணம் பறித்துள்ளார் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தியை தமிழகம் உட்பட பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தமை உலகம் அறிந்த உண்மை................ read more 

சனல் 4 காணொளி பொய் என்றால் சர்வதேச விசாரணையை ஏற்கலாமே-கேணல் ஹரிகரன் கூறுகிறார்

சனல் 4 வெளியிட்ட இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள காணொளிகள் உண்மையானவையென சர்வதேச நிபுணர்கள் நிரூபித்துள்ளனர். எனவே அதனை இல்லை என உறுதிப்படுத்தும் பொறுப்பு இப்போது இலங்கை அரசிடமே உள்ளது. இவ்வாறு இந்திய அமைதிப்படையின் முன்னாள் புலனாய்வுத்துறைத் தலைவர் கேணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

சனல் 4 வெளியிட்ட காணொளித் தொடர்பில் கருத்து தெரிவித்த கேணல் ஹரிகரன் மேலும் தெரிவிக்கையில்,........... read more 

இலங்கை பிரச்சினையில் அந்நாட்டு அரசுடன் இந்தியா வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: டி.ராஜா

இலங்கை பிரச்சினையில் அந்நாட்டு அரசுடன் இந்தியா வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: டி.ராஜா


பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து வருகின்றன. அங்கு மனித உரிமை மீறல் நடந்து வருகிறது. இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மன்மோகன்சிங் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை அரசு சர்வதேச போர் விதிமுறையை மீறி செயல்பட்டது. பெண்கள் மற்றும் போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஏராளமானோரை போர்க்குற்றவாளி என்ற பெயரில் ராணுவம் கைது செய்து உள்ளது. அவர்களுக்கு தண்டனை அளிப்பதாக கூறி மனித உரிமை மீறலை நடத்தி வருகிறார்கள். இன்னும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல் தொடர்கிறது. இதை அனைத்து தரப்பினரும் கண்டிக்க வேண்டும்.............. read more 

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள்- அனைத்துலக விசாரணைக்கு அமெரிக்காவில் ஆதரவு அதிகரிப்பு!

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் ஆவணப்படம் நேற்று வொசிங்டனில் காண்பிக்கப்பட்டதை அடுத்து, அது குறித்து அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் கப்பிரல் வளாகத்தின் உள்ளே நேற்று சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் திரையிடப்பட்டது............. read more  

அமெரிக்கா நாடாளுமன்றத்தில் முன்னர் மகிந்தருக்கு ஆதரவளித்தவர்கள் இத்போது எதிராகத் திரும்பினர்.


சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இப்போது சிறிலங்காவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிர்ச்சியடைந்துள்ளது.ஒரு காலத்தில் ஆதரவாக இருந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு சிறிலங்கா அரசுக்கு எதிராகத் திரும்பினர் என்று தெரியாமல் சிறிலங்கா வெளிவகார அமைச்சு குழப்பமடைந்துள்ளது.
இவர்களில், குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் றொபேட் அடெனோல்ற் 2004இல் சுனாமிக்குப் பின்னர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தவர்.............. read more 

அரசின் அற்பசொற்ப சலுகைகளுக்கு தமிழ்மக்கள் ஏமாந்துவிடமாட்டார்கள்- சுரேஷ் எம்.பி


அரசின் அற்பசொற்ப சலுகைகளுக்கு தமிழ்மக்கள் ஏமாந்துவிடமாட்டார்கள்- சுரேஷ் எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது, தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை இந்தத் தேர்தலிலும் பிரதிபலிக்கும். பல வருடங்களாகத் திறக்கப்படாமலிருந்த வீதிகளைத் திறப்பதனாலோ,ஆசைவார்த்தைகளுக்காகவோ,அற்பசொற்ப சலுகைகளுக்காகவோ ஏமாந்து தமிழ்மக்கள் வாக்களிக்கமாட்டார்கள்.
இந்தத் தேர்தலிலும் கூட்டமைப்பு பெரு வெற்றி அடையும் என்பது நிச்சயம்.இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று உதயனுக்குத் தெரி வித்தார்............. read more 

அடிப்படை வசதிகளின்றி கிளி. மக்கள்

அடிப்படை வசதிகளின்றி கிளி. மக்கள்

குடியிருப்பு- கோப்பு படம்
கிளிநொச்சியில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட வில்லை என மக்கள் விசனம்- கோப்பு படம்


இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பட்டுள்ள மக்களுக்கு தமது அன்றாட தேவைகளைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்............... read more  

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் நால்வரினதும் உடல்நிலை கவலைக்கிடம்

  சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அல்லது அவர்களுக்கான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், நிரபராதிகளான தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரி வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்ற நான்கு தமிழ் அரசியல் கைதிகளினதும் உடல் நிலை நாளுக்குநாள் மோசமடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ........... read more 

கனடாவில் தமிழீழத்தைப் பார்த்தோம்!

கனடாவில் தமிழீழத்தைப் பார்த்தோம்!    

ரொரண்டோ நகரின் வடக்கே, மார்க்கம் ஃபெயார் மைதானத்தில் கடந்த 9ம் 10ம் ஆகிய இரண்டு நாட்கள். ஈழ உறவுகள் மட்டுமன்றி, பல்லின மக்களும் அலைமோதின. நல்லூர் திருவிழாவுக்கு, மாமாங்கப்பிள்ளையாரது தீர்த்தக்கரைக்கு, புளியம் பொக்கணை நாகதம்பிரான் திருவிழாவுக்கு, கொச்சிக்கடை அந்தோணியாரது திருவிழாவுக்கு என்று அலை அலையாக மக்கள் சென்றது போல் தோற்றம் அளித்தது. என்ன அது என்று அறிந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது. நேரத்தை சிக்கனப்படுத்திக் கொண்டு சென்றேன்................ read more

பான் கீ மூனுடனான சந்திப்பின் பின் மகிந்தவைக் காப்பாற்ற ரணில் முடிவு!

பான் கீ மூனுடனான சந்திப்பின் பின் மகிந்தவைக் காப்பாற்ற ரணில் முடிவு!

சர்வதேச அழுத்தங்களிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கு மகிந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய தேசியக் கட்சி தயார் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.  சர்வதேச பிரச்சினைகளிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டிய காலம் வந்துவிட்டது. தாமதித்தால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்............... read more 

தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும்: இ.கம்யூ., தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா

இந்தியாவின் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா வலியுறுத்தினார்.


பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா,

மும்பையில் நடைபெற்று உள்ள தொடர் குண்டு வெடிப்பில் அப்பாவி பொதுமக்கள் 18 பேர் பலியாகி இருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தியா சார்பில் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் அதன் மீது நடவடிக்கை எடுத்து அந்த பட்டியலில் உள்ள தீவிரவாதிகளை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.......... read more 

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண இந்தியா உதவ வேண்டும்: டி.ராஜா

பெங்களூர், ஜூலை 15: இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண இந்தியா உதவ வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:........... read more  

TNAயின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மனோகணேசனும் இணைகிறார்:-


TNAயின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மனோகணேசனும் இணைகிறார்:-

எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனநாயகமக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோர் இன்று கிளிநொச்சி செல்கின்றனர்.
 
இன்று மாலை 4 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட பணிமனையில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் இவர்கள் உரையாற்றுவர்............ read more 

முரளீதரன், சங்ககாராவுடன் நீங்களும் சேர்ந்து கொண்டு அரசியல்தான் பேசுகிறீர்கள்..


முரளீதரன், சங்ககாராவுடன் நீங்களும் சேர்ந்து கொண்டு அரசியல்தான் பேசுகிறீர்கள்..

முரளீதரன், சங்ககாராவுடன் நீங்களும் சேர்ந்து கொண்டு அரசியல்தான் பேசுகிறீர்கள்..

எனது பல நண்பர்களைப் போலவே கிரிக்கெட்டில் என்றும் எனக்கு ஈடுபாடு இருந்ததில்லை. இந்தியாவிலும் தமிழகத்திலும் அது மேட்டுக்குடியினரதும் மேல்சாதியினரதும், இன்றைய நிலையில் அது கார்ப்பரேட்டுகளால் முழுமையாக இலாபத்தை முன்வைத்து மட்டுமே நடத்தப்படும் ஊழல் புழுத்த ஒரு தொழில் என்பதுதான் எமது அவதானமாக இருக்கிறது. இது விளையாட்டின் பிழையா எனும் கேள்வி மிக நேர்மையான, பதில் காணவேண்டிய கேள்வி. ஆப்ரிக்க மார்க்சியரான சி.எல்.ஆர். ஜேம்ஸின் கிரிக்கெட்டின் காலனியாதிக்க வரலாறும் அழகியலும் குறித்த எழுத்துக்களை (Beyond A Boundry : C.L.R.James : 1963 - fair play is what justice done )வாசிக்க, வரலாறு கடந்து கிரிக்கெட்டை வெறுப்பது சரிதானா என்ற கேள்வியோடு அவ்வப்போது தொலைக்காட்சி ................ read more   

பெண் போராளிகளை கழுத்து நெரித்து கொலை செய்யும் சிங்களம் ..!photo in


பெண் போராளிகளை கழுத்து நெரித்து கொலை செய்யும் சிங்களம் ..!photo in

இறுதி யுத்தத்தின் போது  காய மடைந்த  நிலையில் கைதான  பெண் போராளிகளை
 
வதைகள் செய்து கற்பழித்த பின்னர் கழுத்தை நெரித்து கோரமாக கொலை செய்துள்ளது
சிங்கள இனவெறி காட்டு மிராண்டிகள் .
 
கழுத்தை சங்கிலியால் .சரத்தினால்  .வயறுகளினால் கொலை செய்த காட்சி படங்கள்
கிடைக்க பெற்றுள்ளன ............ read more

பிரித்தானிய குறைடன் பகுதியில் போலீசார் மீது துப்பாக்கி சூடு ..!


பிரித்தானியாவின் குறைடன் Kingsdown Avenueபகுதியில் வைத்து
பொலிசார் மீது சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார் .
 
பலத்த காயமடைந்த  அவர்  அதே பகுதியில் உள்ள மருத்துவ  மனையில்  அனுமதிக்க பட்டுள்ளார் .
இது அவருக்கு விடப்பட கொலை அச்சுறுத்தல் என தெரிவிக்க பட்டுள்ளது ..!................ read more

நடிகர் சரத்குமாருக்கு ஓர் அன்பு மடல்

  • ஓ ! நாங்கள் இசை விழாக்களில் களித்து இன்புறுகின்றோம்.
  •  கேக் வெட்டி வீடுகளில் பிறந்த நாள் கொண்டாடுகின்றோம்.
  •  திருவிழாக்களில் சினிமாப்பாடல்களைப் பாடி மகிழ்வுறுகின்றோம்.
  •  எல்லாக் கொண்டாட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன


நடிகர் சரத்குமாருக்கு ஓர் அன்பு மடல்


அன்புக்குரிய சரத்குமாருக்கு வணக்கம். தங்கள் பிறந்த நாள் கடந்த 14 ந் திகதி என்று பத்திரிகை வாயிலாக அறிந்தோம். ஈழத்தமிழர்களின் அவல நிலைகண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அனைத்தையும் முற்றாக நிறுத்துவதாக தாங்கள் வெளியிட்ட அறிக்கையை வாசித்தபோது எம் இதயம் நெக்குருகியது.
உலகறிந்த நடிகராக, தமிழக சட்டசபையின் உறுப்பினராக,நடிகர்சங்கத் தலைவராக இருக்கும் தாங்கள் ஈழத் தமிழர்கள் அவலப்படும் போது எனக்குப் பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாமென்று நீங்கள் அறிவித்தபோது - கைக்குட்டையால் எங்கள் முகங்களை மூடி விம்மி அழுதோம். எங்கள் அழுகைக்கு இரண்டு காரணங்கள் உண்டு.

அதில் ஒன்று நீங்கள் எங்கள் மீது கொண்ட அளவுகடந்த பாசம். மற்றையது, எங்கள் இனத்தின் போக்கு............ read more 

வவுனியாவில் தமிழர்கள் விரட்டியடிப்பு, 165 சிங்களக் குடும்பங்கள் திடீா் குடியேற்றம்

தொடர்ந்தும் வன்னிப் பெருநிலப் பரப்பில் தமிழர் வாழ் நிலங்கள் வன்பறிக்கப்படும் நிகழ்வு அரங்கேறி வருகின்றதன் ஒரு கட்டமாக, வவுனியா தேமாமடு பிரதேசத்திலுள்ள கொக்கடிவான்குளம் பகுதியில் நூற்று அறுபத்தைந்து சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதுடன் அந்தக் கிராமத்தின் பெயரும் மாற்றப்பட்டு கலாபோவவெள எனும் சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன............ read more 

விசா பெற்றுக்கொடுத்த காசைத் தராததால் மண்டையை உடைத்த சொலிசிட்டர் !

விசா பெற்றுக்கொடுத்த காசைத் தராததால் மண்டையை உடைத்த சொலிசிட்டர் !
பணத்தைக் கட்டவில்லை என்றால் விசாவைத் தரமாட்டோம் என்பதும், விசாவைத் திருப்பி அனுப்பிவிடுவோம் என்று மிரட்டுவதும் அவர்களின் வாடிக்கை.

 சமீபத்தில் நடந்த பல உண்மைச் சம்பவங்கள் இதற்கு சான்றாக உள்ளது. சமீபத்தில் 5,000 பவுன்ஸ் கட்டினால் விசா எடுத்துத் தருவதாகக் கூறிய தமிழ் சொலிசிட்டர் ஒருவர், விசா வந்ததும் 13,000 பவுண்டுகளைக் கேட்டுள்ளார். இப் பணத்தின் தொகை குறைவாக உள்ள காரணத்தால், தாம் கொடுத்த விசாப் பேப்பரை இழுத்து பறிக்க முற்பட்ட குறிப்பிட்ட சொலிசிட்டர் அது நிறைவேறாது போக, அங்கே ஏற்கனவே தான் வைத்திருந்த அடியாட்களை வைத்து இந்த நபர்களைத் தாக்கியுள்ளார். அத்தோடு நின்றுவிடாது தானே உள்ளே சென்று ஒரு இரும்புக் கம்பியை எடுத்துவந்து விசாப் பெறச் சென்ற நபர்களைத் தாக்கியும் உள்ளார். இதனால் விசாவைப் பெறச் சென்ற தமிழர் படுகாயம் அடைந்துள்ளார்.
 அவர் கொடுத்த முறைப்பாட்டில் பொலிசார் குறிப்பிட்ட சொலிசிட்டரை கைதுசெய்துள்ளதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. ............. read more