Translate

Monday, 26 March 2012

ஐ.நா. மனித உரிமை கவுன்ஸில் உறுப்பு நாடுகளுக்கு சம்பந்தனின் விளக்க கடிதம்


ஐ.நா. மனித உரிமை கவுன்ஸில் உறுப்பு நாடுகளுக்கு சம்பந்தனின் விளக்க கடிதம்

ஐ.நா. மனித உரிமை கவுன்ஸில் நடவடிக்கை மேற்கொள்ளத் தவறினால் அது மாற்றத்துக்கான கடப்பாட்டை வெளிக்காட்டாத மற்றும் சீர்திருத்தத்துக்கான வெற்று வாக்குறுதிகளை மட்டும் வழங்கிவிட்டு தமது கடப்பாடுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் அரசாங்கங்களுக்கு உதவுவதாகவே அமையும். இது அபாயகரமானதும் தீங்கு விளைவிக்கக் கூடியதுமான தண்டனையில் இருந்து தப்புவதற்கான பாதுகாப்பை கவுன்ஸில் அங்கீகரித்தமைக்கான ஒரு முன்மாதிரியை நிறுவிவிடும். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு - இலங்கையில் சமாதானம், நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கு கவுன்ஸிலினால் அதன் 19ஆவது கூட்டத்தொடரில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை அவசியமான தொடக்கமாகக் கருதி முழுமையாக ஆதரிக்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்ஸிலில் அங்கத்துவம் வகிக்கும் 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த 14ஆம் திகதி அனுப்பிய அறிக்கையின் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையின் தமிழாக்கம் முழுமையாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது. 

புற்று நோய் பற்றிய விரிவான தகவல்கள்


யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று தான் புற்றுநோய்.
ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய நோய். தொடக்கத்திலே கண்டுபிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்கவைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன.

How Thinakkathir twisted and massaged the news about Sumanthiran, MP


ஆசிரியர்   தினக்கதிர் 

எனது பின்னூட்டத்தை போடத் துணிவில்லையா? , இதுதான் நீர் வாய்கிழியப் பேசம் ஊடக அறமா? ,  இப்படி ஒரு கோழையாக இருப்பீர் என நான் கனவிலும் நினைக்கவில்லை! 

தமிழீழ புரட்சிகர மாணவர்கள் என்பது இணையதளத்தில் அவ்வப்போது வலம் வரும் அநாமதேயங்கள்.  அவர்கள் தமிழீழத்திலும் இல்லை, புரட்சியும் இல்லை, மாணவர்களும் இல்லை! 


நக்கீரன் 

டெயிலி மிறர் ஏட்டில் வந்த செய்தி தவறானது. இரண்டு மணித்தியாலம் சிங்களத்தில் கொடுத்த செவ்வியை திரிபுபடுத்தி டெயிலி மிறர் நிருபர் வெளியிட்டுள்ளார். அதனை வைத்து ததேகூ எதிரான தினக்கதிர் உட்பட சில இணையதளங்கள் தவறான செய்திகளை வெளியிடுகின்றன.


செவ்விக்குப் பின்னர் சுமந்திரனை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் வேறு வழியாக அவரை வீட்டுக்குக் கூட்டிப் போய் விட்டுள்ளனர்.

Sunday, 25 March 2012

முன்னாள் போராளிகளை மீண்டும் கைது செய்யும் சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்கள்!


முன்னாள் போராளிகளை மீண்டும் கைது செய்யும் சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்கள்!

தற்போது பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் விடுதலைப்புலி போராளிகளை சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினர் மீண்டும் கைது செய்து வருகின்றனர். பொத்துவில் விநாயகபுரத்தை சேர்ந்த மயிலர் இராசேந்திரம்என்ற ஒரு பிள்ளையின் தந்தையான முன்னாள் போராளியை சிறிலங்கா இராணுவ புலனாய்வுப்பிரிவினர் நேற்று மட்டக்களப்பு நகரில் வைத்து கைது செய்துள்ளனர்.

சர்வதேச சட்டத்திற்கு முரணாக செயற்பட்ட சிறிலங்கா


சர்வதேச சட்டத்திற்கு முரணாக செயற்பட்ட சிறிலங்கா
அனலை நிதிஸ் ச. குமாரன்
எந்தவொரு நாடும் சர்வதேசச் சட்டங்களை உள்வாங்கியே உள்நாட்டுச் சட்டங்களை இயற்றுகின்றன. சர்வதேச சட்ட விதிமுறைகளை புறம் தள்ளிவிட்டு உள்நாட்டுச் சட்டங்களைச் சர்வாதிகார நாடுகளே இயற்றுகின்றன. சீனா சர்வாதிகார நாடாக இருந்தாலும் பல சர்வதேசச் சட்ட வரைமுறைகளைப் பின்பற்றியே நடக்கிறது. சர்வதேச நாடுகளுடன் நட்புறவைப் பேண வேண்டுமாயின் பெரும்பாலான சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொண்ட சர்வதேசச் சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.கடந்த முப்பது ஆண்டுகாலப் போரில் சர்வதேசச் சட்ட விதிமுறைகளை மீறியே செயற்பட்டார்கள் சிறிலங்கா அரசுகள்.

மனோ கணேசனுடன் கனடிய நாடாளுமன்ற குழு கொழும்பில் சந்திப்பு


மனோ கணேசனுடன் கனடிய நாடாளுமன்ற குழு கொழும்பில் சந்திப்பு

ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனை,  இலங்கை  வந்துள்ள கனடிய நாடாளுமன்ற குழுவினர் சந்தித்து உரையாடியுள்ளனர். இச்சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் இடம் பெற்றது. இச்சந்திப்பில் கிரிஸ் அலெக்சாண்டர், ரிக் டிஸ்ட்ரா, வேர்ன் வைட், ஜோன் லைட் ஆகிய கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், கொழும்பிலுள்ள கனடிய உயர்ஸ்தானிகரக  அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

வெளிமாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்காதே என வலியுறுத்தி தமிழகமெங்கும் த.இ.மு. போராட்டங்கள்!


வெளிமாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்காதே!
தமிழகமெங்கும் தமிழக இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்!

தமிழகம் மிக வேகமாக வெளியார் மயமாகி வருகிறது. உலகமயம் என்பதே வெளியார் மயம் தான்! தமிழகத் தொழில், வணிகம் ஆகியவற்றை ஏற்கெனவே மார்வாரி, குசராத்தி சேட்டுகளும் மலையாளிகளும் கைப்பற்றி மேலாதிக்கம் செய்கின்றனர்.

ஏ தமிழ்ச் சமுதாயமே நீங்கள் யார் பக்கம்?-சுப.உதயகுமார்.

நீங்கள் யார் பக்கம்?-சுப.உதயகுமார்.

ஏ  தமிழ்ச் சமுதாயமே உண்கண்முன்னால் உன்சந்ததியின் எதிர்காலத்திற்காக போராடும் ஒரு உண்மைத் தமிழனும் அவனைச் சுற்றி ஒரே ஒரு சிறு பகுதி  மக்களும் மாத்திரம் தன்னந்  தனியாக அநாதரவாக நிற்கிறார்கள்.  ஒரு  ஜில்லாவிலிருந்து  ஒரு மாநிலத்திலிருந்து ஏன்  ஒரு நாட்டிலிருந்தே  ஒரே ஒரு ஊர் மாத்திரம் எதோ ஒரு எதிரி நாடுபோல நீ உன் நாடென்று நினைக்கும் இந்திய நாட்டால்  இன்று தனியாகப் பிரிக்கப் படுகிறது.  

அமெரிக்காவின் முதல் நகர்வு முடிவுற்றது… அடுத்து வருவது என்ன..? – இதயச்சந்திரன்


அமெரிக்காவின் முதல் நகர்வு முடிவுற்றது… அடுத்து வருவது என்ன..? – இதயச்சந்திரன்

ஒருவாறாக ஐ.நா. சபை மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரும் முடிவடைந்து விட்டது.
அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன. 15 நாடுகள் எதிர்த்தன. 8 நாடுகள் மௌனவிரதம் மேற்கொண்டன. நல்லிணக்க ஆணைக் குழுவில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுங்கள் என்பதாக அப் பிரேரணை அமைந்திருந்தது.

மகிந்த – கடாபி நடந்த, நடக்கப்போகும் புகைப்பட ஒப்பீடுகள்


மகிந்த – கடாபி நடந்த, நடக்கப்போகும் புகைப்பட ஒப்பீடுகள்

பொறுத்தார் பூமி ஆள்வார்! ச.வி.கிருபாகரன் .


பொறுத்தார் பூமி ஆள்வார்! ச.வி.கிருபாகரன் .

இலங்கைத் தீவில் எத்தனை இனக்கலவரங்கள், எத்தனை அரசியல் போராட்டங்கள், எத்தனை படுகொலைகள், எத்தனை இடப்பெயர்வுகள், பட்டினிச்சாவுகள், எத்தனை தசாப்தங்களாக நடைபெற்று முடிந்துள்ளன.

தங்களின் மேலான பங்களிப்பை நாடும் பொங்குதமிழ் மாநாடு 2012 (கருநாடகம்)


தங்களின் மேலான பங்களிப்பை நாடும் பொங்குதமிழ் மாநாடு 2012 (கருநாடகம்)

அன்பிற்கும், பாசத்திற்கும்,மதிப்பிற்குமுரிய தமிழின மக்களுக்கு ‘பொங்குதமிழ் 2012 கருநாடகம்’ விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் வணக்கத்துடன் விடுக்கும் வேண்டுகோள்.        யாழ் பல்கலையில் தொடங்கி எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் உலகெங்கும் நம்மின ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தியும், தமிழினம் தன் கலை, இலக்கியம், பண்பாடு இவற்றினூடாக இனவெழுச்சியுற்று, தடைகளைத் தகர்த்து ஒற்றுமையுடன் ஓரினமாய் கிளர்ந்தெழுந்து நம்மின விடுதலையை நோக்கி முன்னகரக்கூடிய சாத்தியத்தை உருவாக்கும் நிக்ழவாகப் ‘பொங்குதமிழ்’ விழா நம்மிடையே முன்னெடுக்கப்படுகிறது.

பிரித்தானிய லிவெர்பூல் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேக விழா விஞ்ஞாபனம்.

 

இந்திய உயர்குழு வருகை இரத்து; கொழும்பு சீற்றத்தில் உள்ளமையே காரணம்


இந்திய உயர்குழு வருகை இரத்து; கொழும்பு சீற்றத்தில் உள்ளமையே காரணம்

இந்தியாவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் இலங்கைப் பயணம் இப்போது இடம்பெறாது எனப் புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பயணம் ரத்துச் செய்யப்படலாம் அல்லது பின் தள்ளிப் போகலாம் எனவும் டில்லியின் இராஜ தந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது

வடபகுதி தண்ணீர் பிரச்சினைக்கு புதிய தீர்வு


வடபகுதி தண்ணீர் பிரச்சினைக்கு புதிய தீர்வு

வடபகுதி தண்ணீர் பிரச்சினைக்கு புதிய தீர்வு
வடபகுதியில் உள்ள தண்ணீர் தட்டுப்பாட்டையினை நிவர்த்தி செய்வதற்காக மொரகஹகந்தயில் இருந்து புதிய கால்வாய் கட்டமைப்பு ஒன்றை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் திர்மானித்துள்ளதாக நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் அகதிகளுக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு


  தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக, ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அகதிகளின் பிள்ளைகளுக்கு உயர் கல்வி பயில்வதற்காக 1200 ரூபாய் முதல் 2850 ரூபாய் வரையிலும் ஆண்டு உதவித் தொகையாக வழங்கவும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.

அரசு ஒருபோதும் அடிபணியாது; ஜெனிவா தீர்மானம் குறித்து தெற்கில் எதிர்ப்பு வலுக்கிறது


அரசு ஒருபோதும் அடிபணியாது; ஜெனிவா தீர்மானம் குறித்து தெற்கில் எதிர்ப்பு வலுக்கிறது
news
ஜெனிவா மனித உரிமைகள் சபையில் நிறை வேற்றப்பட்டுள்ள இலங்கை மீதான தீர்மானத்தை ஒரு போதும் ஏற்கப்போவதில்லை எனவும் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் எனவும் தெற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சிங்களவருக்கு இணையான சலுகை இலங்கை தமிழருக்கும் வழங்கப்படும் : இந்திய மத்திய அமைச்சர் வாசன் _


  சிங்களவர்களுக்கு நிகராக தமிழர்களுக்கும் சலுகைகள் கிடைக்கும் ௭ன இந்திய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உறுதியளித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது, இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு கண்ணியத்துடனும் நிதானத்துடனும் செயற்பட்டு ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வந்துள் ளது.

ஆயுதம் தாங்காத அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் விட்டு கொடுப்பிற்கு தயார் இல்லை


ஆயுதம் தாங்காத அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் விட்டு கொடுப்பிற்கு தயார் இல்லை

ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனை, இலங்கை வந்துள்ள கனடிய பாராளுமன்ற குழுவினர் சந்தித்து உரையாடியுள்ளனர். இச்சந்திப்பு இன்று (25) ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் இடம் பெற்றது.

ஐ.நா கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்றது உறுப்புரிமை நாடுகளே


ஐ.நா கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்றது உறுப்புரிமை நாடுகளே

ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பின்னணியில் கூட்டமைப்பு செயற்பட்டதாகவும் அது தொடர்பில் தற்பொழுது வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். சென்னையில் லயோலா கல்லூரியில் இன்று இடம்பெற்ற மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

கடும் வெய்யிலில் கருணா கோட்- சூட்டு உடன் தர்ணா நடத்தினார் !


கடும் வெய்யிலில் கருணா கோட்- சூட்டு உடன் தர்ணா நடத்தினார் !


நேற்றைய தினம்(24) கருணா, மற்றும் ஏனைய அமைச்சர்கள் சிலர் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இதில் கலந்துகொண்ட சில அமைச்சர்கள் சாதாரண உடை அனிந்திருந்தனர். ஆனால் கருணாவோ கோட் சூட் போட்டு வந்து கொழுத்தும் வெய்யிலில் வெந்து போனாராம். இருப்பினும் அமெரிக்காவுக்கு எதிராக கோஷமிட்டுள்ளார். போதக்குறைக்கு பதாதைகளையும் தாங்கி நின்று தனது எதிர்ப்பைக் காட்டியுள்ளார்.

அமெரிக்கப் பொறிக்குள் இலங்கை -தேவராஜ் .


அமெரிக்கப் பொறிக்குள் இலங்கை -தேவராஜ் .

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது எதிர்பார்த்த ஒன்றே. ஆனால் இந்த வெற்றியை நிர்ணயிக்கும் வாக்குகள் எத்தனை? என்பது குறித்துத்தான் கேள்வியாக இருந்தது.
இலங்கைத் தரப்பு ஆரம்பத்திலிருந்து ““இந்தப் போரில் வெற்றியடைவோம்” என்று கூறி வந்தது. வாக்களிக்கத் தகுதி பெற்ற 47 நாடுகளில் 22 நாடுகளுக்கு மேல் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலையில் இருப்பதாக இலங்கைத் தரப்பு நம்பிக்கை வெளியிட்டிருந்து. ஆனால் இந்தியாவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த எதிர்பார்ப்பில் இலங்கைக்கு நம்பிக்கை குறைவடையத் தொடங்கியது.

இனிமேலும் ஏமாற்ற முனைந்தால் கசப்பான பாடங்களை கற்க நேரிடும்


இனிமேலும் ஏமாற்ற முனைந்தால் கசப்பான பாடங்களை கற்க நேரிடும் .

ஐ .நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் பல படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்துள்ளது. போர் முடிவுக்கு வந்த பின்னர், நாட்டை சரியானதொரு பாதையில் வழிநடத்த அரசாங்கம் தவறியுள்ளதன் வெளிப்பாடுதான் இந்தத் தீர்மானம்.
அந்த உண்மையை புரிந்து கொள்ளும் நிலையில் அரசாங்கம் இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.

இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது – தலைங்கம்!


இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது – தலைங்கம்!

 உள்நாட்டு அரசியலின் நெருக்கடியால்தான் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பீரிஸ், வாக்கெடுப்பின்போது மறைமுகமாக இந்தியாவைக் குறிப்பிட்டாலும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் முதல்முறையாக இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.