Translate

Thursday, 21 June 2012

சிங்கள அமைச்சரின் இனவெறிப் பேச்சைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!


சிங்கள அமைச்சரின் இனவெறிப் பேச்சைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!

thol_thirumaavalavan
இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளைச் சந்திக்க நேரிடும்” என சிங்கள அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் இனவெறிப் பேச்சைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பா தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

ஐ.நா குழுவை அனுமதிக்க மறுத்தால் கடும் நடவடிக்கையில் இறங்குவார் நவிபிள்ளை

pillei-lankatruth
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகள் குழுவை சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க மறுத்தால், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை அடுத்தகட்டமாக கடும் நடவடிக்கைகளில் இறங்கக் கூடும் என்று ஜெனிவா தகவல்கள தெரிவிக்கின்றன.

விக்லீக்ஸ் ஸ்தாபகர் யூலியனுக்காக இலவசமாக சட்ட உதவி வழங்க முன்வந்துள்ள தமிழ் ஆலோசகர் குலேந்திரன்


பிரித்தானியாவின் நீதி மன்றங்களின் தீர்ப்பின்படி சுவீடன் நாட்டுக்கு நாடுகடத்தப்படும் நிலையில் உள்ள சர்ச்சைக்குரிய விக்லீக்ஸ் ஸ்தாபகர் யூலியன் எசேன்ஜ் (40 வயது) 240000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பிணையில் விடப்பட்டுள்ளார்.
எனினும் தான் சுவீடனுக்கு நாடு கடத்தப்படும் நிலையிலிருந்து விடுபடுவதற்காகவும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும்  பிரித்தானியாவில் உள்ள எக்குவாடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.

சிங்களவன் வெறியாட்டம் போடுகிறான்...- வைகோ ஆவேச அறிக்கை!



அறிக்கையில் வைகோ!
சிங்கள அமைச்சரின் ஆணவ திமிர் பேச்சு இலங்கை அதிபர் ராஜபக்சேயின் குரூரமான எண்ணத்தின் வெளிப்பாடே ஆகும்.
தமிழர்களுக்கு ஒரு முள்ளிவாய்க்கால் போதும் என்று திமிராகப் பேசிய இலங்கை அமைச்சர் சம்பிக ரணவக்கவை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் அறிக்கைகள் விடுத்து வருகின்றன.

வைகோ அறிக்கை வருமாறு: இலங்கைத் தீவில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொடூரமாக படுகொலை செய்த மகிந்த ராஜபக்சேயின் பேரினவாத சிங்கள அரசின் உண்மையான கோரம் முகம் மீண்டும் அம்பலத்திற்கு வந்து விட்டது.

'100 முள்ளிவாய்க்கால்கள்': சம்பிக்க ரணவக்கவின் திமிருக்கு கருணாநிதி கண்டனம்-மன்மோகனுக்கும் கடிதம்


'100 முள்ளிவாய்க்கால்கள்': சம்பிக்க ரணவக்கவின் திமிருக்கு கருணாநிதி கண்டனம்-மன்மோகனுக்கும் கடிதம்

'100 முள்ளிவாய்க்கால்கள்': சம்பிக்க ரணவக்கவின் திமிருக்கு  கருணாநிதி கண்டனம்-மன்மோகனுக்கும் கடிதம்
ஒரு முள்ளிவாய்க்கால் சம்பவமே போதும், நூறு முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவங்கள் நடைபெற யாரும் முயற்சிக்க வேண்டாம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்திருப்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் துயரத்துக்குப் பின் வட இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் நிலங்கள் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தங்கள் பூர்வீக வீடுகள், நிலங்களை இழந்த தமிழ் மக்கள், இப்போது அறவழிப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு ''எல்லா வகையிலும்'' உதவிகளைச் செய்த இந்தியாவை மிதிக்கிறதுஇலங்கை


புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு ''எல்லா வகையிலும்'' உதவிகளைச் செய்த இந்தியாவை மிதிக்கிறதுஇலங்கை

விளக்கம் கேட்கவே மேனன் இலங்கை செல்கிறார்:-
புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு ''எல்லா வகையிலும்'' உதவிகளைச் செய்த இந்தியாவை மிதிக்கிறதுஇலங்கை
புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு ''எல்லா வகையிலும்'' உதவிகளைச் செய்த இந்தியாவை காலில் போட்டு மிதிக்கிறது இலங்கை:- 
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு ''எல்லா வகையிலும்'' உதவிகளைச் செய்திருந்தாலும் சமீபகாலமாக இந்திய அரசையே அலட்சியப்படுத்துகிறது இலங்கை அரசு. இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யவும், கொடுத்த வாக்குறுதிகளைக் காலில் போட்டு மிதிக்கவும் தயாராகிவருகிறது. அத்துடன் சீனாவுடன் கொஞ்சிக் குலாவத் தொடங்கிவிட்டது.

அமெரிக்கா விஜயங்களின் போது மகிந்த டெலி புரம்டர் ஒப்பரேட்டரை அழைத்துச் சென்றார்:- – விக்கிலீக்ஸ்


அமெரிக்கா விஜயங்களின் போது மகிந்த டெலி புரம்டர் ஒப்பரேட்டரை அழைத்துச் சென்றார்:- – விக்கிலீக்ஸ்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டெலி புரம்டர் கருவியை இயக்கக் கூடிய நபர்ஒருவரையும் தமது அமெரிக்க விஜயங்களில் இணைத்துக் கொள்வதாக விக்கிலீக்ஸ் தகவல்வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டுராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த தகவல்களில் இந்த விடயம்குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்தவின் மனிதப் படுகொலை அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்..


மஹிந்தவின் மனிதப் படுகொலை அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்..
ஹம்பாந்தோட்டையில் தமது கட்சி அங்கத்தவர் இருவரின் கொலைக்கு அரசியல் பின்னணி உள்ளதாகவும் இந்த இரு மரணங்களுக்குமான பொறுப்பை மஹிந்த ராஜபக்ஷ அரசே ஏற்க வேண்டும் என்றும் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். 

போரில் துணைவனை இழந்த விதவையின் அவலம்-வவுனியாவில்!



போரின் போது துணைவனை இழந்த 29 அகவை தாய் ஒன்று கருத்தரித்து பிறந்த சிசுவினை புதைத்து 15 நிமிடங்களில் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
பிறந்து ஐந்து நாட்களேயான சிசுவொன்று புதைக்கப்பட்டு 15 நிமிடங்களின் பின்னர் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி சிசுவை புதைத்த குற்றச்சாட்டில் 29 வயதான தாய் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் அயலவர்களினால் குறித்த சிசு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடத்தல், காணாமல் போதல் சம்பவங்களில் படையினரே ஈடுபடுகின்றனர் – ரணில் குற்றச்சாட்டு!

கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களுடன் பல சந்தர்ப்பங்களில் ஆயுதப்படையினரே ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிர மசிங்க நாடாளுமன்றில் கூறினார். இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு:
நாட்டில் சட்டம், ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துள்ளது. காட்டுச் சட்டமே நடைமுறையில் உள்ளது. ஹம்பாந்தோட்டையில் ஜே.வி.பி. நடத்திய பகிரங்கக் கூட்டத்தின் போது ஆயுததாரிகள் அங்கு வந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

3 பேரால் கற்பழிக்கப்பட்ட இலங்கைப் பெண்: குவைத்தில் சம்பவம் !

குவைத்தில் நீண்ட காலம் பணியாற்றிய பின்னர் இலங்கை திரும்பத் தயாராக இருந்த பெண்ணொருவரை பலாத்காரமாகக் கடத்திச் சென்று அவர் மீது மூன்று இளைஞர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் குறித்து நாம் ஏற்கனவே செய்திவெளியிட்டிருந்தோம். தனது எஜமானுடன் வீதியில் நடந்துசென்றுகொண்டிருந்த குறிப்பிட்ட பெணணை, வாகனத்தில் வந்த 3 குவைத் இளைஞர்கள் கடத்தியுள்ளனர். பிரமாண்டமான கட்டடம் ஒன்றுக்குப் பின்புறமாகக் கொண்டு சென்று அப்பெண்ணை அவர்கள் கற்பழித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் குவைத் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

லண்டன் கடை உரிமையாளர்களே கவனம்: புது சுத்துமாத்தில் இறங்கியுள்ள வெள்ளையர்கள் !

லண்டனில் கடை வைத்திருக்கும் தமிழ் உரிமையாளர்களே கவனம் ! புதிதாக ஒரு சுத்துமாத்தில் சிலர் இறங்கியுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. TFL என்று அழைக்கப்படும் லண்டன் போக்குவரத்து கழகம், கடைகளுக்கு ஒயிஸ்டர் இயந்திரத்தை வழங்கிவருகிறது. பலர் இந்த இயந்திரத்தைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளார்கள். இவ்விண்ணப்பங்களை எப்படியோ களவாடியுள்ள ஒரு கும்பல், தமிழ் கடை உரிமையாளர்களை தொலைபேசி மூலம் அணுகி, உங்களுக்கான ஒயிஸ்டர் இயந்திரம் இன்னும் 10 நாட்களில் பொருத்தப்படும் என்று கூறி, 450 பவுண்டுகளை குறிப்பிட்ட வங்கிக் கணக்கு ஒன்றில் கட்டுமாறு கோருகின்றனர்.

சகல மத வழிபாட்டுடன்கூடிய விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றினை பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கீழ்வரும் முகவரியில் ஏற்பாடுசெய்துள்ளது

கூட்ட காலம்/நேரம்: வியாழக்கிழமை (Thursday) 21st Jun 2012 
மாலை 6:00 - 7:00 வரை ஒருங்கிணைவு 
மாலை 7:00 - 8:45 வரை மத வழிபாட்டுடன்கூடிய 
விழிப்புணர்வுக் கூட்டம்! 

கூட்டம் இடம்பெறும் இடம்: 
Trinity Centre, East Avenue, Eastham, London E12 6SG 

சகல மத வழிபாட்டுடன்கூடிய விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றினை பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கீழ்வரும் முகவரியில் ஏற்பாடுசெய்துள்ளது. 

ஜெனிவா ஐ.நா.பேரவையில் தொடர்ச்சியான இராஜதந்திர சந்திப்புக்களில் பிரித்தானிய தமிழர் பேரவை.



கடந்த திங்கட்கிழமை முதல் ஜெனிவாவில் ஆரம்பித்திருக்கும் 20வது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்குபற்றும் புலம்பெயர் தமிழர்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டு அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மனித உரிமைகள் நிபுணர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என்று பலருடன் தொடர்ச்சியான சந்திப்புக்களை நடாத்தி வருகின்றது.

கப்பலேறிய மானமும் மகிந்தருக்கு கிடைத்த செம்புத்தண்ணீரும் – சேரமான்.



தேடி வந்தவனை துடைப்பக் கட்டையால் அடித்துவிட்டு செம்புத்தண்ணீர் கொடுத்து உபசரித்த கதையாக’ மகிந்தரை இலண்டனுக்கு அழைத்து உரிய மரியாதைகளையும்,கூடவே அவமரியாதைகளையும் செலுத்திவிட்டு பிரித்தானியா வழியனுப்பியுள்ளது. 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒக்ஸ்போர்ட்டில் உரையாற்ற வந்து வெறும் கையுடன் திரும்பிச் சென்ற பொழுது ஏற்பட்டதைவிட மிகப் பெரும் அவமானம் இம்முறை மகிந்தருக்கு ஏற்பட்டுள்ளது. விழிபிதுங்கிய நிலையில் கூனிக்குறுகி எலிசபெத் மகாராணியாரின் விருந்துபசாரத்தில் மகிந்தர் கலந்து கொண்டமை இதனைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றது.

தமிழர்கள் மீதான தொடர் தாக்குதல்களையும், அடக்குமுறைகளையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.


தமிழர் தாயகத்தின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்-தெல்லிப்பளை பகுதியில் தமது வாழ்வுரிமையை வலியுறுத்தியும், தமது சொந்த இடங்களில் குடியமர அனுமதி கோரியும் சனநாயக முறையில் அமைதிவழியில் போராட்டம் நடாத்திய எம் மக்கள் மீது காட்டுமிராண்டித் தனமான முறையிலும், மிகவும் கீழ்த்தரமான வகையிலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் (BTU) பிரித்தானியத் தமிழர்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றது.

Tuesday, 19 June 2012

வடக்கில் இராணுவ பிரசன்னம் சிறுவர்களை பெரிதும் பாதிக்கும் சர்வதேச தொண்டர் அமைப்புகள்

வட பகுதியில் இராணுவ பிரசன்னம் தொடர்ந்தும் இருப்பது சிறுவர்களை உள ரீதியாக பெரிதும் பாதிக்குமென சிறுவர்களுக்கான தொண்டர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் முன்னாள் மோதல் வலயங்களில், குறிப்பாக வட பகுதியில் பாரியளவில் இராணுவத்தினர் தொடர்ந்தும் பிரசன்னமாகியுள்ளமை சிறுவர்களின் மன நிலையில் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்துமென சிறுவர் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

தமிழ்நாட்டை அச்சுறுத்த கேரளாவுடன் கைகோர்க்கிறது சிறிலங்கா


சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவின் கேரளா மாநிலத்துடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு கட்டமாக இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் கடந்த வாரம் மூன்று நாள் பயணமாக கேரளாவுக்கு சென்று மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

மகிந்தவிடம் டேவிட் கமரூன் மன்னிப்புக் கோரவில்லை – பிரித்தானியா


மகிந்தவிடம் டேவிட் கமரூன் மன்னிப்புக் கோரவில்லை – பிரித்தானியா

மகிந்தவிடம் டேவிட் கமரூன் மன்னிப்புக் கோரவில்லை – பிரித்தானியா
லண்டனில் கொமன்வெல்த் பொருளாதார மன்றத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிகழ்த்தவிருந்த உரை நிறுத்தப்பட்டதற்காக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் மன்னிப்புக் கோரவில்லை என்று கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் இலங்கை தமிழச்சியின் இசையா?


ஒலிம்பிக் போட்டியில் இலங்கை தமிழச்சியின் இசையா?

ஒலிம்பிக் போட்டியில் இலங்கை தமிழச்சியின் இசையா?
லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழா நிகழ்வில் இலங்கை தமிழச்சியான மியா என்றழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் அவர்களின் பாடல் ஒன்று இடம் பெற இருப்பதாக பிரித்தானிய நாளிதழ்கள் தகவல்கள் தெரிவித்துள்ளது.
2012ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் இந்த வருடம் லண்டனில் நடைபெற உள்ளது.

முள்ளிவாய்க்கால் போன்று பல அழிவுகளைச் சந்திக்க நேரிடும் - எச்சரிக்கை விடுத்தார் சம்பிக்க!


முள்ளிவாய்க்கால் போன்று பல அழிவுகளைச் சந்திக்க நேரிடும் - எச்சரிக்கை விடுத்தார் சம்பிக்க!

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து அவர்கள் பின்னால் தமிழர்கள் செல்வார்களாயின்,

 தற்போது நிகழ்ந்துள்ளது போன்று 100 முள்ளிவாய்க்கால்களை பார்க்க நேரிடும் என இலங்கை அமைச்சர் சம்பிக ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.சிறிலங்கா அரசின் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சரான சம்பிக ரணவக்க, ஜாதிக ஹெல உருமய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட மாநாட்டில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டி தொடக்கவிழாவில் இளையராஜாவின் பாடல்!!


லண்டன் ஒலிம்பிக் போட்டி தொடக்கவிழாவில் இளையராஜாவின் பாடல்!!

ண்டனில் தொடங்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுத் திருவிழாவின் தொடக்கவிழா நிகழ்வில், இசைஞானி இளையராஜாவின் பாடல் ஒன்று இடம் பெற இருப்பதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதே நேரம் செய்தி உண்மைதான் இளையராஜாவின் அலுவலகத்தில் உறுதி செய்துள்ளனர்.
உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு இந்த செய்தி இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

தெல்லிப்பழை தாக்குதல் வடக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுவதை உறுதிசெய்கிறது! அரியம் எம்.பி.


யாழ் தெல்லிப்பழையில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது
வலிகாமம் வடக்கு மக்களின் காணிகள் படையினரால் அபகரிப்பு செய்யப்படுவதை எதிர்த்து யாழ் தெல்லிப்பழையில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு அரச புலனாய்வாளர்கள் கழிவு ஒயிலை ஊற்றிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்..........................  read more

இலங்கையில் நால்வர் ஆட்சி முடிவுக்கு வரும் சாத்தியங்கள்.

Posted Image

(ஆசிரியர் தலையங்கம் 18.06.2012)பலம் வாய்ந்த மிகச் சிறிய எண்ணிக்கையினரால் அவர்களுடைய ஏகபோக நன்மைக்காக நடத்தப்படும் அரசாட்சியை ஒலிகார்க்கி (Oligarchy) என்று வகைப்படுதுகிறார்கள். சிறு தொகையினரால் ஆளப்படும் நாட்டையும் இப்படித் தான் அழைப்பார்கள்.

கட்சி வேறுபாடுகளை களைந்து இன விடுதலைக்காக அனைத்துத் தரப்பினரும்; 26ம் திகதி நடைபெறவுள்ள


கவனஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் - TNA - குளோபல்தமிழ்ச்செய்தியாளர்
கட்சி வேறுபாடுகளை களைந்து இன விடுதலைக்காக அனைத்துத் தரப்பினரும்; 26ம் திகதி நடைபெறவுள்ள
 எதிர்வரும் 26ம் திகதி முறிகண்டி ஆலய முன்றலில் நடைபெறவுள்ள கவன ஈர்ப்பு போராட்டத்தில் கட்சி வேறுபாடுகளை களைந்து, இன விடுதலைக்காக அனைத்துத் தரப்பினரும், பாதிக்கப்பட்ட மக்களும் கலந்து கொள்ளவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பில் இன்று விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகையில்

தேசத்திற்கான அங்கீகாரத்திற்காக உழைப்போம்- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி



தமிழ் மக்களிற்கான இனப்பிரச்சினைத் தீர்வில் உள்ளகப் பொறிமுறை சாத்தியமற்றது என்பது மேலுமொரு வகையில் குடாநாட்டில் காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்படுவதன் வாயிலாக புலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழர் பிரச்சினைக்கு நாங்கள் ஓர் தேசம் என்பதனை சர்வதேசம் அங்கீகரிப்பதுவே வழியென்பதை உணர்துவதற்காக இப் பிரச்சினைக்கு எதிராக போராட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட ரீதியில் தமிழ்ர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வந்துள்ளன.

யாழ் மாதகல் பகுதியில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் வெளியேறவேண்டும் மக்கள் போரட்டம்!


கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட மாதகல் பகுதியின் சில இடங்களில் மீண்டும் மிதிவெடிகள் புதைக்கப்பட்டு தாம் அச்சுறுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டிய மாதகல் மேற்கு பகுதி மக்கள் தமது பகுதியில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் உடனடியாக வெளியேறி தாங்கள் மீளக்குடியேற வழிவிடவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

மன்னார் முள்ளிக்குளத்தில் சிறீலங்கா கடற்படையினரின் பாதுகாப்புடன் சிங்கள குடியேற்றம்!


முள்ளிக்குளம் கிராமத்தை சுற்றிவர கடற்படையினரின் பாதுகாப்புடன் சிங்கள மக்கள் குடியேற்றம்-அதிர்ச்சித்தகவல்.மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் தற்போது கடற்படையினரின் குடும்பங்கள் மிகவும் இரகசியமான முறையில் பாதுகாப்புடன் குடியமர்த்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவதாக அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகியுள்ளது.

பணம் உங்களுக்குத் துன்பத்தை வரவழைப்பதில்லை முட்டாள்தனம் தான் துன்பத்தை வரவழைக்கிறது....


‘பணம் துன்பத்தை வரவழைக்கிறதா?’ என்ற ஒரு தியான அன்பரின் கேள்விக்கு சத்குருவின் சுவாரஸ்யமான பதில்.
பணம் உங்களுக்குத் துன்பத்தை வரவழைப்பதில்லை. முட்டாள்தனம்தான் உங்களுக்குத் துன்பத்தை வரவழைக்கிறது. பணம் உங்கள் வாழ்க்கையில் நுழையும்போது முட்டாள்தனமும் உங்கள் வாழ்க்கையில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அந்த நிலையில் துன்பமும் சேர்ந்து வரலாம். அதற்காக பணம் வந்துவிட்டாலே துன்பமும் வந்தாக வேண்டும் என்று கிடையாது. பணம் உங்களுக்கு நிச்சயமாக வசதிகளைக் கொண்டு வருகிறது.

நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இன்றைய முதல் நாள் கொடியேற்ற


நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இன்றைய முதல் நாள் கொடியேற்ற வைபவத்தில் அடியவர்களுக்கு அருள் பாலிப்பதற்காக அம்பிகையின் எழுந்தருளித் தோற்றம்.

நயினாதீவு நாகபூஷணியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று 19 ஆம் திகதி கொடியேற் றத்துடன் ஆரம்பமாகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை பகல் 12 மணியளவில் திருவிழா ஆரம்பமாகி தொடர்ந்து 16 தினங்களுக்கு நடைபெற விருக்கின்றது.

நம்பிக்கையைக் கைவிடவேண்டாம்! கனடியத் தமிழ்மக்களுக்கு ஸ் ரீவன் வூட்வோர்த் MP


தமிழர் தாயகத்தில் இருக்கின்ற தங்களின் உற்றார் உறவினர் நண்பர்கள்படும் கொடுமைகளையும்அவர்கள் சந்திக்கும் மரணங்களையும் எண்ணி மிகவும் ஆழமான கவலையில் இருக்கும்  னடியத்தமிழரைச்சந்திக்கும்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினரான னக்குஏற்படும்கவலையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
இலங்கையில்2009ம் ஆண்டு தமிழர்களுக்கெதிராக நடந்தகொடுமைகளைப்பற்றி என்னுடைய தொகுதி தமிழ்மக்களின் மூலம் அறிந்தபோதுநான்மிகவும் வருத்தமுற்றேன்என்னுடைய உணர்ச்சி இப்படித்தான்இருந்தது.

ஜெனிவா கூட்டத்தில் கனடாவை எச்சரித்தது இலங்கை


தனது மக்களின் உரிமைகளை மீறும் கனடாஏனைய நாடுகளை நோக்கி தமது விரல்களை நீட்டக் கூடாதுஎன்று இலங்கை எச்சரித்துள்ளது.
.நா மனிதஉரிமைகள் பேரவையின் 20ஆவது கூட்டத்தொடர்நேற்று ஜெனிவாவில் ஆரம்பமானது.

Monday, 18 June 2012

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று அழைப்பு விடுத்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு TNAஉட்பட பலஅமைப்புகள் ஆதரவு


இணைப்பு2 யாழ்ப்பாணத்தில் நடைபெற இருந்த நில அபகரிப்புக்குஎதிரான ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை
வடகிழக்கில் இடம்பெற்றுவரும், நில அபகரிப்பு மற்றும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்து இன்று யாழ்.நகரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கு யாழ்.நீதிமன்றிடமிருந்து காவற்துறையினர் தடையுத்தரவு பெற்றுள்ள நிலையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 1.00 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவிருந்தது. இதனையடுத்து அதிகாலை முதலே நகரில் பெருமளவு காவற்துறையினரும், பெருமளவு இராணுவப் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

சிறு சிறு முரண்பாடுகள் பொது விடயங்களுக்காக விட்டுக்கொடுக்க கூடியவை – மாவை


தமிழ் தேசத்தின் இறைமை முதலில் அங்கீகரிக்கப்பட வேண்டும் TNAயினாலேயே தற்போது முடியும் - கஜேந்திரன்
சிறு சிறு முரண்பாடுகள் பொது விடயங்களுக்காக விட்டுக்கொடுக்க கூடியவை – மாவை –

இலங்கை அரசினது காணி சுவீகரிப்பிற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பித்து வைத்த போராட்டம் பரவத்தொடங்கியுள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை தெல்லிப்பளையிலும் அதை தொடர்ந்து எதிர்வரும் 26ம் திகதி வன்னி திருமுறிகண்டியினிலும் இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புப்போராட்டங்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய அரசின் முறையற்றா அணுகுமுறையால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து. வைகோ


மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகளை மத்திய அரசு முறையாக கையாண்டு, தீர்வு காணாவிடில், இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

 அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மதிமுக 19-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

முள்ளிவாய்க்காலில் இருந்து தான் மீண்டும் வரலாறு தொடங்கும். பழ.நெடுமாறன்


முள்ளிவாய்க்காலில் இருந்து தான் மீண்டும் வரலாறு தொடங்கும் என்றார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்.

 விழுப்புரத்தில் தமிழிளைஞர் கூட்டமைப்பின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது.

இலங்கையில் இடம்பெறும் கொலைகளுக்கு கோத்தபாயவே பொறுப்பு!


இலங்கையில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் குற்றச்செயல்களின் மோசமான அதிகரிப்புக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே பொறுப்பு என்று ஐ.தே.க குற்றம்சாட்டியுள்ளது.

நில அபகரிப்புக்கு எதிரான மக்களின் குரலை ஒடுக்க ஈ.பி.டி.பி ஒட்டுக் குழு!


தமிழர் தாயகத்திலுள்ள ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பி சிங்கள இனவெறியர்களின் காணிச் சுவீகரிப்புகளுக்கு உடந்தையாகச் செயற்படுகிறது என்று கிளிநொச்சி மக்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.கிளிநொச்சியிலுள்ள பல ஏக்கர் கணக்கான காணிகளை சிறிலங்காப் படையினர் சுவீகரித்து வருகின்ற நிலையில் இதற்கு எதிராக மக்களின் எதிர்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.

நில அபகரிப்பிற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்றும் நாளையும் பாரிய ஆர்ப்பாட்டம்!


தழிழர்களது வாழ்விடங்களை அபகரிக்கும் இலங்கை அரசின் திட்டமிட்ட செயற்பாடுகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்றும் நாளையும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Congratulations Juanita!


Juanita Nathan, Vice President of Canadian Tamil Congress receives the prestigious Queen's Diamond Jubilee Medal in recognition of her service in the community, making this a great region to live for all residents. Congratulations Juanita!

Sunday, 17 June 2012

சின்னக்குத்தூசியார் அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு திடீர் அனுமதி மறுப்பு

உயர்நீதிமன்ற அவசர ஆணை புறக்கணிப்பு
--------------------------------------------------------
 
சென்னை, ஜூன் 15-
பத்திரிகையாளர் சின் னக்குத்தூசி நினைவு அறக் கட்டளையின் விருது வழங் கல் நிகழ்ச்சி நடைபெறுவ தாக இருந்த நூலக அரங் கம், உயர்நீதிமன்ற ஆணை யையும் மீறி இழுத்து மூடப் பட்டது. அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்ட பார்வை யாளர்களுடன் கூட்டம் நூலக வளாகத்திலேயே அரையிருட்டில் நடத்தப் பட்டது.

கனத்த மனதின் ஒரு பக்கம்


சிலசமயங்களில் வரும் கோபம்
தேடுவாரற்று கிடக்கும் ஊசிநூல்
மடிக்கப்படாத படுக்கை
கிழிக்கப்படாத கலண்டர் _எப்பவாவது
விரல்வெட்டி வரும் இரத்தம்
ஈரவிறகின் கண்ணெரிக்கும் புகை
தனியாக எனைக்கடக்கும் தாய்
இப்படியாக என்பொழுதுகள்
ஒவ்வொன்றாலும்
உணரப்படுகிறாய் நீ !

பாரம்பரிய நிலங்களை திட்டமிட்ட வகையில் அபகரித்து வருகின்றமை, சமீபத்திய காலங்களில் தீவிரமடைந்துள்ளன.


பாரம்பரிய நிலங்களை திட்டமிட்ட வகையில் அபகரித்து வருகின்றமை, சமீபத்திய காலங்களில் தீவிரமடைந்துள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள், இத்தகைய நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்கஙை நடாத்த இருப்பதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் தாயகப் போராட்டங்களுக்கு வலுவூட்ட, தமிழர் வாழும் தேசமெங்கும் கவனயீர்ப்பு போராட்டங்களை, சமாந்திரமாக முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

காங்கிரஸ்காரர்களே என் கழுத்தை அறுத்து விட்டனர்: திருப்பதி தொகுதியில் தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் கதறி அழுதார்


ஆந்திராவில் 18 தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்கட்சி அமோக வெற்றி பெற்றது.
 
இடைத்தேர்தல் நடந்த 18 தொகுதியில் 15 தொகுதியில் அக்கட்சி வெற்றி பெற்றது. மேலும் நெல்லூர் எம்.பி. தொகுதியையும் கைப்பற்றியது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதியில் திருப்பதி குறிப்பிடத்தக்கது.

பிரணாப்பை பாஜக கூட்டணி ஆதரிக்கக் கூடாது.. ஆதரிச்சா நானும் போட்டியிடுவேன்: ஜெத்மலானி


டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நிறுத்தியுள்ள பிரணாப் முகர்ஜியை பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரிக்கக் கூடாது என்று பாஜக எம்.பியான ராம்ஜெத்மலானி வலியுறுத்தியுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளரை உடனடியாக பணி நீக்குமாறு ஐ.தே.க கோரிக்கை


பாதுகாப்புச் செயலாளரை உடனடியாக பணி நீக்குமாறு ஐ.தே.க கோரிக்கை
பாதுகாப்புச் செயலாளரை உடனடியாக பணி நீக்கம் செய்யுமாறு ஐக்கியதேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஹம்பாந்தோட்டை கட்டுவான பிரதேசத்தில் ஜே.வி.பி கூட்டத்தின் மீதுநடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில், பாதுகாப்புச் செயலாளரின் நிர்வாகத்தின் கீழ்சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றஉறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜயலத் ஜயவர்தன பாப்பாண்டவரிடம் முறைப்பாடு


ஜயலத் ஜயவர்தன பாப்பாண்டவரிடம் முறைப்பாடு
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன பாப்பாண்டவர்16ம் பெனடிக் ஆண்டகையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
மன்னார் ஆயருக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் இந்த முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.

ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு! இந்த போராட்டம் தொடரும்!- காசிஆனந்தன்



ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு, இந்த போராட்டம் தொடரும். இந்திய விடுதலைப் போராட்டத்தை விட 100 மடங்கு பெரியது இலங்கை ஈழ விடுதலை போராட்டம் என்று புத்தக வெளியீட்டு விழாவில் காசி ஆனந்தன் பேசினார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி பேசிய அவர்,

ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்த நாடுகளால் சிறிலங்காவுக்குப் புதிய நெருக்கடி.

ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த மற்றும் நடுநிலை வகித்த நாடுகளும் இப்போது சிறிலங்காவுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளன.

அந்நிய படையினரைப் போல் வட,கிழக்கில் இராணுவம் நில அபகரிப்பை நடத்துகிறது

வடக்கு கிழக்கை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகக் கருதி அந்நியப் படையினரைப் போல் இராணுவம் நில அபகரிப்பு நடவடிக் கைகளை முன்னெடுத்து வருவதாக நவசம சமாஜக்கட்சி பொதுச் செயலாளர் விக்கிரம பாகு கருணாரட்ன குற்றம் சாட்டியுள்ளார்.

மொழிப்போர் + இனப்போர் + மதப்போரும் = இலங்கை!

இந்நாட்டில் மொழிப்போர் ஆரம்பிக்கப்பட்டு, அது இனப்போராக மாறி, இன்று மதப்போராக அது உருமாறி வளர்ந்து இருக்கின்றது. இதுதான் இந்த நாட்டில் இன்று நாம் காணும் அற்புதமான வளர்ச்சியாகும்.

இத்தகைய ஒரு பின்னணியில் வடக்கு-கிழக்கு உட்பட நாடு முழுக்க உள்ள பன்னிரண்டு மாவட்டங்களில் இருந்து பிரதிநிதிகளையும், பெளத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத தலைவர்களையும் அழைப்பித்து, கொழும்பில் மாநாடு நடத்துவதற்கு இதைவிட பொருத்தமான தருணம் வேறு எதுவும் கிடையாது, என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.