எதிர்வரும் டிசம்பர் 4-ஆம் நாள் தொடங்கி 6-ஆம் நாள் வரை நடைபெறவிருக்கும் அனைத்துலக இஸ்லாமிய பொருளாதார ஆய்வரங்கில் கலந்துக்கொள்ள வரும்படி ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 26 November 2012
ராஜபக்சே மலேசியா வருகை ரத்து! மலேசியத் தமிழ் மக்கள் கொந்தளிப்பின் எதிரொலி!
மட்டக்களப்பில் குடும்ப விவரங்களை திரட்டும் இராணுவம்!
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனைப்பற்று பிரதேசத்தில் உள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று குடும்ப விபரங்களைத் திரட்டுவதுடன், குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களையும் புகைப்படம் எடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ராஜபக்ஷ மலேசியாவுக்குள் கால் வைத்தால்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய மலேசியாவுக்கான பயணத்தை இறுதி நேரத்தில் எந்தவித காரணங்களும் தெரிவிக்காமல் திடீரென இடைநிறுத்தியுள்ளார்.
“போர்க்குற்றவாளியான மஹிந்த மலேசியாவுக்குள் காலடிவைத்தால் போராட்டங்கள் வெடிக்கும்” என்று மலேசியாவில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் குறிப்பாக தமிழ்த் தொண்டு அமைப்புகள் எச்சரித்திருந்தமையே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
த.தே.கூடன் அமெரிக்கா பேசுவதற்கு திட்டம்
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை ஒன்றினை அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் நடாத்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அடுத்த அமர்வுகளுக்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையினை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம் சீமான்
ஒன்றுபடுவோம், இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம். மாவீரர்கள் நினைவு நாளில் அவர்களின் நினைவை சுமந்து கனவை நோக்கி தொடர்ந்து போராடுவோம் என்று உறுதியேற்போம்” நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நம் மண்ணைக்காக்க, நம்மினத்தின் மானத்தைக் காக்க, தமிழீழத் தேசத்தில் தன்னாட்சியை படைக்க உருவானதே தமிழீழ விடுதலைக்கான ஆயுத வழிப் போராட்டமாகும். லட்சியத்தை நோக்கிய போராட்டத்தை, உறுதியுடனும் முன்னெடுத்த நமது தலைவர், வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இன்று பிறந்த நாள்.
விடுதலைதேடி முதலடிவைத்து முன்நின்ற தலைவனே நீ வாழ்க"

வானமே,வையகமே,தமிழீழத் தாயகமே,இன்று நீ மடிசுமந்து பெற்ற உன் தவப் புதல்வனின் பிறந்தநா
ள். பெற்றதாய் குழந்தையைப் பேணுவதுபோல் உனைப் பேணிக்காத்த வேங்கைகள் தலைவனின் பிறந்தநாள்.
ஆண்டாண்டு காலமாக அடிமைகளாக்கப்பட்டு,அடக்கியொடுக ்கப்பட்ட இனத்தின் தீராத தலைவிதியை மாற்றியமைக்க முதலடிவைத்து முன்நின்ற எங்கள் தேசியத் தலைவனே நீ வாழ்க. கத்தியின் முனையாலும்,புத்தியின் துணையாலும்,மண்ணின் பாரத்தை மனதில் சுமந்து,முன்நின்று முகம்காட்டிய மூதறிஞனே நீ வாழ்க.
ஆண்டாண்டு காலமாக அடிமைகளாக்கப்பட்டு,அடக்கியொடுக
தேசியத் தலைவரின் வரலாறு"
"தேசியத் தலைவரின் வரலாறு"
=================
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில
=================
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில
் ஒன்றாகவும், தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடி, திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர் -கள் வாழும் பூமிதான் வல்வெட்டித்துறை. தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகிறது.
ஈகைச்சுடரொளி முருகதாசனின் நினைவுக் கல்லறை திறந்துவைக்கப்பட்டது
பிரித்தானியா தமிழர் ஒருங்கினைப்புக்குழுவின் மாவீரர் பணிமனையினரால் ஈகைச்சுடரொளி முருகதாசனின் நினைவுக் கல்லறை திறந்துவைக்கப்பட்டது.




மாவீரர் தியாகத்தால் இன விடுதலை கிடைப்பது உறுதி…
கல்லறைகள் முழுவதும் இடித்தழிக்கப்பட்டன. கோயில்கள், தெருகள் முழுவதும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துகின்றனர். இத்தனையும் மாவீரர்களுடைய நினைவு நாள் அனுட்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே................. read more
ஈழத் தேசிய மாவீரர் தினத்தை பக்தியுடனும் பயனுடனும் அனுட்டிப்போம்:
அன்பான ஈழத்தின் உடன்பிறப்புக்களே சகோதர சகோதரிகளே
ஈழத் தமிழர் எங்கிருந்தாலும் ஒன்றாக ஒருங்கிணைந்து உலகளாவிய ரீதியில் அனுசரிக்கும் ஓர் தேசிய தினமாக மாவீரர் நாள் வளர்ந்து விட்டது. அன்றைய தினத்தை ஓர் புனித நாளாகக் கணி;த்து முதலில் ஆண்டவனை வழிபடுவோம். அவனின்றி அணுவும் அசையாது. எம்மை ஈழத்தமிழராக அந்த இடத்தில் இனாமான கொடைகள் - மொழி கலை கலாச்சாரம் - கொடுத்து இருத்தியவர் அவரே. கடந்த ஆறு தசாப்தங்களாக அனுபவித்த சகலத்தையும் முழுமையாக அறிந்தவரும் அவரே. ஆகையினால் எமது தாகத்தையும் சோகத்தையும் எமது இன்றைய முயற்சிகளையும் அவன் பாதத்திலே வைப்போம். |
ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் தீர்வு இன்றேல் சாகும்வரை உண்ணாவிரதம்: - செல்வம் அடைக்கலநாதன்
தமிழர் தேசிய பிரச்சினைக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்தினால் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
|
தமிழர் பிரச்சனைக்கான தீர்வு; ஒபாமாவின் புதிய நிர்வாகத்தில் விசேட குழு! - விவகாரம் சூடு பிடிக்கலாம்..!
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் போது இலங்கை விவகாரங்களை கையாள்வதற்கான விசேட அரச உயர்மட்டக் குழு ஒன்று தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வரை காலமும் இலங்கை விவகாரங்களை ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜதந்திரிகளே கையாண்டு வந்த போதிலும் ஜனாதிபதி ஒபாமாவின் புதிய நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களமே நேரடியாக இலங்கை விவகாரங்களை கையாளவுள்ளது.
|
கனடாவில் அகதிக் கோரிக்கையா? புதிய கட்டுப்பாடுகள் - ஆயிரம் முறை யோசித்தே முடிவெடுங்கள்!
ஒரு காலத்தில் அகதிகளின் சொர்க்கபுரியாக, மனிதாபிமானம் நிறைந்த அன்பால் உபசரிக்கும் ஒரு நாடாகத் திகழ்ந்த கனடாவின் இன்றைய அகதியாளர் தொடர்பான கொள்கை மிகவும் கடுமையானதொன்றாகவும், அகதிகளிற்கான வசதிகள் பலதை மறுப்பதாகவும் இருக்கின்றது. கடந்த காலங்களில் ஒரு அகதிக்கோரிக்கையாளர் சமூகநல உதவிகளைப் பெறுவதுடன், அவரது அகதிக்கோரிக்கை ஏற்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தன. அத்தோடு அந்த அகதி தனது குடும்பத்தினரை வரவழைப்பது கூட மிகச் சுலபமாக இருந்தது. இப்போதோ எல்லாமே தலைகீழ்.
|
பிரான்ஸ் ல் இரவோடு இரவாக நாடு கடத்தப் படும் தமிழர்கள் ..அதிர்ச்சியில் தமிழர்கள் …!!
பிரான்ஸ் ல் சில தினங்களாக வதிவிட அனுமதி இன்றி வாழும் பல தமிழர்கள் இரவோடு இரவாக காணமல் போன சம்வங்கள் அதிகரித்துள்ளது …இதனை அடுத்து மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர் ..!!உறவினர்கள் நண்பர்கள் தொலைந்தவர்களை தேட ஆரம்பித்தனர் சிலர் காவல்துறை அலுவலகங்களையும் நாடினர் ….அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது ..!!!
பேஸ்புக்கில் இணையத்தில் எப்படி தமிழில் எழுதுவது எல்லோருக்கும் இருக்கும் ஒரு கேள்வி?
பேஸ்புக்கில் எப்படி தமிழில் எழுதுவது எல்லோருக்கும் இருக்கும் ஒரு கேள்வி? இலகுவாக தமிழில் எழுத
ஒருவழி
இலகுவாக தமிழில் எழுத ஒருவழி இதை கிழிக் பண்ணுங்க
எம் சிந்தனைகளை, எண்ணங்களை, இணையத்தில் நம் தமிழ் மொழியிலே
ஒருவழி
இலகுவாக தமிழில் எழுத ஒருவழி இதை கிழிக் பண்ணுங்க
http://www.facebook.com/ photo.php?fbid=382098141876501& set=a.129963973756587.35482.10 0002289551088&type=1&theater
எம் சிந்தனைகளை, எண்ணங்களை, இணையத்தில் நம் தமிழ் மொழியிலே
எழுதலாம் வாருங்கள். இணையத்தில் என்னதான் ஆங்கில மொழியில் நாம் எழுதினாலும். அதையே நம் எண்ணங்களை சொந்த மொழி தமிழில் எழுதும் போது அந்த உணர்வே தனிந்தான். எனவே எங்கும் தமிழ், எதிலும் தமிழ், என்று எல்லா இடத்திலும் இணையத்திலும் வந்து விட்டது தமிழ் மொழி
Friday, 23 November 2012
13ஆவது திருத்தம் தொடர்பான பின்னணி தெரியாது அரசியல்வாதிகள் கருத்து வெளியிடுகின்றனர்: ரெலோ ஜனா
13ஆவது திருத்தம் தொடர்பான பின்னணி தெரியாது அரசியல்வாதிகள் கருத்து வெளியிடுகின்றனர்: ரெலோ ஜனா
அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பெண்களை வைத்தியசாலையில் வைத்து கற்பழித்த இராணுவம்: அதிர்ச்சி ஆதாரம் ! (video in)
பெண்களை வைத்தியசாலையில் வைத்து கற்பழித்த இராணுவம்: அதிர்ச்சி ஆதாரம் ! (video in)
30.7.11

இலங்கை ராணுவத்தின் 58 வது பிரிவில் கடமையாற்றிய உயரதிகாரியான பெனாண்டோ ஏன்பவர் தறோது ஒரு வெளிநட்டில் சரணடைந்துள்ளார் என்று சொல்லப்படுகிற்து. இறுதி நேரத்தில் நடந்த போரில் இரணுவம் செய்த அட்டூளியங்களை அவர் புட்டுப் புட்டு வைக்கிறர். இராணுவத்தின் தேசிய அடையள அட்டையோடு தன்னை நிரூபிக்கும் அவர், சமீபத்தில் சனல் 4 தொலைக்காட்சிக்கு முகம் மறைக்கப்பட்ட நிலையில் நேர்கணல் ஒன்றையும் வழங்கியிருந்தார். காயப்பட்டு வைத்தியசலையில் சிகிச்சைபெற்று வந்த பெண்கள் பலரை இலங்கை இராணுவம் கற்பழித்ததாக அவர் தெரிவித்துள்ளார். தான் சொந்தக் கண்களால் கண்டதாகக் கூறும் இவர் புதுமாத்தளான் பிடிபடும்போது அன்றய தினம் மட்டும் சுமார் 1,500 பொதுமக்கள் இறந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை ராணுவத்தின் 58 வது பிரிவில் கடமையாற்றிய உயரதிகாரியான பெனாண்டோ ஏன்பவர் தறோது ஒரு வெளிநட்டில் சரணடைந்துள்ளார் என்று சொல்லப்படுகிற்து. இறுதி நேரத்தில் நடந்த போரில் இரணுவம் செய்த அட்டூளியங்களை அவர் புட்டுப் புட்டு வைக்கிறர். இராணுவத்தின் தேசிய அடையள அட்டையோடு தன்னை நிரூபிக்கும் அவர், சமீபத்தில் சனல் 4 தொலைக்காட்சிக்கு முகம் மறைக்கப்பட்ட நிலையில் நேர்கணல் ஒன்றையும் வழங்கியிருந்தார். காயப்பட்டு வைத்தியசலையில் சிகிச்சைபெற்று வந்த பெண்கள் பலரை இலங்கை இராணுவம் கற்பழித்ததாக அவர் தெரிவித்துள்ளார். தான் சொந்தக் கண்களால் கண்டதாகக் கூறும் இவர் புதுமாத்தளான் பிடிபடும்போது அன்றய தினம் மட்டும் சுமார் 1,500 பொதுமக்கள் இறந்ததாகத் தெரிவித்துள்ளார்.
Tuesday, 20 November 2012
பான்கிமூன்-மகிந்த கூட்டறிக்கைக்கு என்ன நடந்தது; மனோ கேள்வி
| ||||||||||
தமிழ்ப் பெண்ணின் போராட்ட வாழ்க்கை! -கனேடிய பத்திரிகை
சன் சீ கப்பலில் வந்த அகதிகளின் தற்போதைய நிலைபற்றி வன்கூவரில் இருந்து வெளிவரும் ரைம்ஸ்கொலெனிஸ்ற் என்ற பத்திரிகை விவரணக் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான உதாரணமாக அக் கப்பலில் வந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பற்றிய அந்தக் கட்டுரையில்,
தற்போது கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கனடியத் தமிழர் பேரவையின் (தமிழ்க் காங்கிரஸ்) பராமரிப்பில் உள்ள நிரஞ்சலா என்ற புனைபெயரையுடைய பெண் கடல் வழியே எம்வி சன் சீ என்ற ஒரு பழைய துருப்பிடித்த கப்பல் மூலம் பன்னிரெண்டு வாரங்கள் பயணித்து கனடாவை வந்துச் சேர்ந்திருக்கிறார்கள் அவரும் அவரது கணவரும்.
வெலிக்கடையில் பெயர்களை அழைத்து படுகொலை செய்த சிறப்பு அதிரடிப்படை - சிறை அதிகாரிகள் தகவல்
வெலிக்கடைச் சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் போது கணிசமானளவு கைதிகள், சிறப்பு அதிரடிப்படையினரால், படுகொலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிறிலங்கா இராணுவ கொமாண்டோக்களால் கலவரம் அடக்கப்பட்ட பின்னர், சிறிப்பு அதிரடிப்படையினரால் இவர்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
சிறிலங்கா இராணுவ கொமாண்டோக்களால் கலவரம் அடக்கப்பட்ட பின்னர், சிறிப்பு அதிரடிப்படையினரால் இவர்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஒன்றுபட்டு நின்று சிங்களத்தின் சதிகளை முறியடிப்போம்! – தமிழீழ விடுதலைப் புலிகள் அவசர வேண்டுகோள்-
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் எமதமைப்புக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாரிய அழிவுகளின் பின்னர், இன்று புலம்பெயர் நாடுகளிற் தமிழர்கள் மத்தியிற் பல பிரிவினைகள் உருவாகியுள்ளனளூ எதிரியாற் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
20-11-2012.
20-11-2012.
ஒன்றுபட்டு நின்று சிங்களத்தின் சதிகளை முறியடிப்போம்!
எமது அன்புக்குரிய தமிழ்மக்களே, போராளி நண்பர்களே,
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் எமதமைப்புக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாரிய அழிவுகளின் பின்னர், இன்று புலம்பெயர் நாடுகளிற் தமிழர்கள் மத்தியிற் பல பிரிவினைகள் உருவாகியுள்ளனளூ எதிரியாற் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன.
இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணும் வரை தி.மு.க ஓயாது: டி.ஆர்.பாலு
தி.மு.க.பொதுக்கூட்டம் புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. நாடாளுன்ற குழு தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான டி.ஆர்.பாலு கலந்து கொண்டு பேசுகையில்,
டெசோ மாநாட்டு தீர்மான நகலை நானும், துணை செயலாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஐ.நா.சபையில் கொடுத்துள்ளோம். இத்துடன் இதுகுறித்த வேலை இன்னும் முடியவில்லை. தி.மு.க மட்டும் தான் பொது பிரச்சினை குறித்து ஐ.நா. சபை வரை சென்றுள்ளது.
ராஜபக்சே பிறந்தநாள்: தேர்வுகள் ரத்தாம்!
கொழும்பு, நவ. 21 - ராஜபக்சேவின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக முல்லைத்தீவு மாவட்ட பள்ளிகளில் மாகாண அளவிலான தேர்வுகளை அதிகாரிகள் ரத்து செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே தனது 67 வது பிறந்த நாளை கொண்டாடினார். நாடுமுழுவதும் ஒருவாரம் கொண்டாடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெறுவதால், முல்லைத்தீவு மாவட்டப் பள்ளிகளில் நடக்கவிருந்த மாகாண அளவிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
சிங்களவர்களும் வீதிகளில் சாகவேண்டிய நிலை வரும் - அஸ்கிரிய மகாநாயக்க தேரர்
| சிங்களவர்களும் வீதிகளில் சாகவேண்டிய நிலை வரும் - அஸ்கிரிய மகாநாயக்க தேரர் |
"அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் நாடு அழிவின் விளிம்பை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்த நிலை நீடித்தால், சிங்கள பௌத்தர்களும் காடுகளில் வாழவேண்டிய, வீதிகளில் சாகவேண்டிய அபாயநிலை தோன்றக்கூடும்'' என்று எச்சரிக்கிறார் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வண. உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர்.
இந்த அபாய நிலையிலிருந்து நாட்டையும், சிங்கள, பௌத்த மக்களையும் பாதுகாக்கப் பௌத்த குருமார்கள் ஒழுக்கமாக நடந்து, பௌத்த மதத்தின் புகழைப் பரப்பவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். |
ஆயிரம் பாடசாலைகள் வேலைத்திட்டத்தில் கிழக்கில் தமிழ் பாடசாலைகள் புறக்கணிப்பு
தமிழ் பேசும் மக்களை அதிகமாகக் கொண்டுள்ள கிழக்கு மாகாணத்தில் மஹிந்தோதய ஆயிரம் பாடசாலைகள் வேலைத்திட்டத்தின் கீழ் 3 பாடசாலைகளே அபிவிருத்தி செய்யப்பட்டிருப்பதாகவும் அவை மூன்றும் சிங்கள பாடசாலைகளாகவே அமைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. பொன். செல்வராசா இன்று சபையில் குற்றம்சாட்டினார்.
வடக்கில் இளைஞர்கள் குண்டு, செல்களினது துகள்களை சுமந்துக்கொண்டு வாழ்கின்றனர்: த.தே.கூ.
வடக்கில் இளைஞர்கள் புத்தக பைகளை சுமப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் 737 மாணவர்கள் இன்னும் தமது உடல்களில் குண்டுகளினதும், செல்களினதும் துகள்களை சுமந்துக்கொண்டு பரிதாப வாழ்க்கை வாழ்கின்றனர். இதிலிருந்து அவர்களை மீட்க இன்றுவரை எவ்விதமான நடடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கூட்டமைப்பின் எம்.பி. சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
இ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர்!
ஒரு வீடியோ படமா இ-மெயிலில் அனுப்பி வை. புகைப்படங்களா? உடனே அனுப்பு இ-மெயிலில். எந்தக் கடிதங்கள் ஆனாலும் அனுப்பிய மறு நிமிடம் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமா? இ-மெயிலில் அனுப்பச் சொல்லுங்கள்.
மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே இ - மெயில் இல்லாத மனித வாழ்க்கையை இனி நினைத்துப் பார்க்கவும் முடியாது. தனிநபர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றமாகட்டும், நிறுவனங்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றமாக இருக்கட்டும் இப்போது இ - மெயிலே சரணம் என்ற நிலை உருவாகிவிட்டது.
போராளிகளை விமர்சிக்கும் கைக்கூலி தளங்களிற்கு தமிழ் இளையோரின் கண்டனம்
அச்செய்தியில் கடற்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கட்டளைத் தளபதிகளில் ஒருவரான புலவர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக தமிழகத்திற்கு போராளி ஒருவரை அழைத்து சிகிச்சை கொடுக்காது ஏமாற்றியதாக வெளியிடப்பட்டிருந்தது.
நானும் ஒரு போராளி
நானும் ஒரு போராளி ,இதனைப் படித்தபின் ஒன்று தெளிவாகிறது ,அதாவது எம்மைவைத்து இன்னும் நீங்களும் ,உங்களைப்போன்ற நபர்களும்
பணம் சம்பாதிக்கப் புறப்பட்டுவிட்டீர்கள் .இதுவரைகாலமும் இல்லாத இந்த யோசனை ஏன் மாவீரர் நாள் நெருங்கி வரும்போது உங்கள் மனதில்
வெளிப்படுகிறது ,இதிலிருந்தே தெரிகிறது மாவீரர் நாள் பணத்தில் உங்களுக்கும் பங்கு உண்டென்பது ,எமது விடுதலை தொடர்பாகாவோ அல்லது
Sunday, 18 November 2012
13ஆவது திருத்தத்தை மாற்ற தெரிவுக்குழு
13ஆவது திருத்தத்தை மாற்ற தெரிவுக்குழு
மாகாணசபை முறையை இலங்கைக்கு அறிமுகம் செய்த அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டுமொருமுறை திருத்தத்துக்குட்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான விவாதம் ஆரம்பிக்கப்பட்ட கையோடு அரசாங்கத்தின் இணை கட்சிகள் பல 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக குரல்களை எழுப்பின.
இலங்கைக்கு எதிராகக் கை நீட்டியவர்களுடன் கைகோர்க்க வேண்டிய அவசியமில்லையாம்; விமல்
இலங்கைக்கு எதிராகக் கை நீட்டியவர்களுடன் கைகோர்க்க வேண்டிய அவசியமில்லையாம்; விமல்
1,46,676 பேர் தொடர்பில் ஐ.நா சந்தேகம்
1,46,676 பேர் தொடர்பில் ஐ.நா சந்தேகம்
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கைக்கும் யுத்தத்துக்கு முன்னர் வன்னியில் காணப்பட்டதாகக் கூறப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கைக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
பரிந்துரைகளை அமுல்படுத்த ஆலோசனை குழு: மெல்கோரா
பரிந்துரைகளை அமுல்படுத்த ஆலோசனை குழு: மெல்கோரா
Posted by sankathinews on November 18th, 2012
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது தமிழர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் தவறியமை தொடர்பான இரகசிய அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக சிரேஷ்ட ஆலோசனை குழுவொன்று நியமிக்கப்படும் என்று ஐ.நா அமைப்பின் உயரதிகாரி சுசனா மெல்கோரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பால் தாக்கரேவின் உடல் இன்று மாலை தகனம்
பால் தாக்கரேவின் உடல் இன்று மாலை தகனம்
November 18, 2012 02:40 pmபால் தாக்கரேவின் இறுதி ஊர்வலம் இன்று காலை தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த சிவாஜி பார்க் பகுதியில் வைக்கப்பட்டு இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.
சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
| சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை |
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் சிறிலங்கா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்படுவதில் ஒத்துழைக்கத் தவறினால், சிறிலங்கா உள்ளிட்ட எட்டு நாடுகளையும் கறுப்புப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள நேரிடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. |
தமிழகம் வழங்கிய சைக்கிள்கள் பெரும்பான்மை இன மக்களுக்கு; போரால் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம்
| தமிழகம் வழங்கிய சைக்கிள்கள் பெரும்பான்மை இன மக்களுக்கு; போரால் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் |
தமிழக மக்களால் இடம்பெயர்ந்த மக்களுக்கென வழங்கப்பட்ட சைக்கிள்கள் தற்போது பெரும்பான்மை இன மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்டப் போர் இடர்களால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கென இந்திய அரசின் அனுசரணையுடன் தமிழக மக்களால் சைக்கிள்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
|
ஆசியாவின் மற்றொரு மியன்மாராக இலங்கை; சபையில் மங்கள விமர்சனம்
| ஆசியாவின் மற்றொரு மியன்மாராக இலங்கை; சபையில் மங்கள விமர்சனம் |
இலங்கை இன்று சர்வதேச சமூகத்திடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆசியாவில் மற்றும் ஒரு மியன்மாராக உருவாகி வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர நேற்று விமர்சித்தார். நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்ட உரை மீதான எட்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே மங்கள சமவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது: |
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் - மன்மோகன், சோனியா பாதுகாப்பு அதிகரிப்பு!
தில்லியில் தாக்குதல் நடத்த "இந்தியன் முஜாகிதீன்' பயங்கரவாத இயக்கம் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக றோ (ரிசர்ச் அண்டு அனாலிசிஸ் விங்) உளவுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. முக்கிய பிரமுகர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத் தகவல் கிடைத்துள்ளதால் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழினப் படுகொலையில் ஐ.நா. வகித்த பங்கை பெட்ரி அறிக்கை வெளிப்படுத்துகிறது: - நாம் தமிழர் கட்சி
இலங்கையில் தமிழினத்தை அழிக்க சிங்கள இனவெறியன் இராசபக்ச நடத்திய போரில் தமிழர்கள் கொல்லப்படுவதை ஐக்கிய நாடுகள் அமைப்பு தடுத்து நிறுத்தத் தவறிவிட்டது என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அமைத்த சார் ல்ஸ் பெட்ரி ஆணையம் அளித்த அறிக்கையின் கசிவு சுட்டுக்காட்டியுள்ளது.
தாக்குதலுக்கு உட்படுத்தாத பகுதிகள் (நோ ஃபயர் ஜோன்) என்ற அறிவித்து, அப்பகுதிக்குள் தமிழர்கள் வந்தால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்று சிங்கள அரசு அறிவித்ததை நம்பி அங்கு வந்து தஞ்சமடைந்த அப்பாவி மக்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டும், விமானத்தில் இருந்து குண்டுகளைப் பொழிந்தும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை சிங்கள படைகள் கொன்று குவித்தபோது, அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய ஐ.நா. அமைப்பின் அதிகாரிகள், பொறுப்பின்றி செயல்ப்பட்டுள்ளார்கள் என்று சார்ல்ஸ் பெட்ரி அறிக்கை குற்றம் சாற்றியுள்ளது.
சிறிலங்காவுக்கு மஞ்சள்அட்டை காண்பித்து ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
ஆசியாவின் மற்றொரு மியன்மாராக இலங்கை
அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது:
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் - CPI
இலங்கை யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடாத்த சர்வதேச பொறிமுறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.
ஐ.நா உள்ளக அறிக்கைகளினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது – பாலித கொஹணே
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உள்ளக அறிக்கைகளினால் இலங்கைக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என அந்த அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான உள்ளக அறிக்கையினால் பாதிப்பு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Saturday, 17 November 2012
உள்ளக அறிக்கையில் மறைக்கப்பட்ட விஜய் நம்பியார்
போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்தபோது ஐ.நா பொதுச்செயலரின் பிரதிநிதியாக, சிறிலங்கா விவகாரங்களைக் கையாண்டவர் விஜய் நம்பியார்.
Thursday, 15 November 2012
உள்ளக அறிக்கையில் மறைக்கப்பட்ட விஜய் நம்பியார் – பதிலளிக்காமல் நழுவிய பான் கீ மூனின் பேச்சாளர்
ஐ.நாவின் மூத்த அதிகாரி சாள்ஸ் பெற்றி சமர்ப்பித்துள்ள சிறிலங்காவில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்த உள்ளக மீளாய்வு அறிக்கையில், பான் கீ மூனின் மூத்த ஆலோசகர் விஜய் நம்பியார் குறித்த எந்தத் தகவலும் இடம்பெறவில்லை.
மீண்டும் இனமோதல் வெடிக்கும் - பிரபா கணேசன் எச்சரிக்கை!
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படுதல் மீண்டும் இனப்பிரச்சினைக்கு வழிகோலும் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டு 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் அது கூடுதல் அதிகாரப் பகிர்வினை உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.எனினும், வெறுமனே 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அது மீண்டும் இன முறுகல் நிலைமைகளை ஏற்படுத்தக் கூடும்.
கந்தசஷ்டி விரதம் இருப்பது எப்படி????
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார்
என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.
இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.
வேண்டுவனயாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?
பிரித்தானியாவால் இலங்கைக்கு மற்றுமொரு தலையிடி: சாட்டை கெமரூன் கையில்!
பிரித்தானியாவால் இலங்கைக்கு மற்றுமொரு தலையிடி: சாட்டை கெமரூன் கையில்!
பொதுநலவாய நாடுகளின் எதிர்காலம் மற்றும் பங்கு தொடர்பான பிரித்தானிய வெளிவிவகாரக்குழுவின் அறிக்கை நேற்று ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த அறிக்கையில், 2013ல் பொதுநலவாய உச்சிமாநாடு நடைபெறவுள்ள இலங்கை மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான சாட்சியங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கசிந்துள்ள ஐ.நா அறிக்கையின் படி 80,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல் !
கசிந்துள்ள ஐ.நா அறிக்கையின் படி 80,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல் !
ஐ.நா செயலாளர் நாயகத்தால், இலங்கையில் போர் நடைபெற்றவேளை ஐ.நா காத்திரமான முடிவுகளை எடுக்கவில்லையா என ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இக் குழு 128 பக்கங்களைக் கொண்ட தனது அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் சமர்பித்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே இவ்வறிக்கை எப்படியோ கசிந்துள்ளது. இரகசியமாக ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு மட்டும் கையளிக்கப்படவேண்டிய இவ்வறிக்கை எப்படிக் கசிந்தது என்பது ஒருபுறம் இருக்க அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள, பல செய்திகள் மேலும் அதிர்ச்சி தருகின்ற வகையில் அமைந்துள்ளது. வன்னியில் போர் நடைபெற்றவேளை, 3 லட்சத்தி 60,000 ஆயிரம் பேர் அப்பகுதியில் வசித்ததாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போர் முடிவடைந்த பின்னர் சுமார் 2 லட்சத்தி 80,000 ஆயிரம் பேர் மட்டுமே இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றனர் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழக அரசுக்கு ஜி.கே.மணி வலியுறுத்தல்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி,
13வது திருத்தத்தை இரத்து செய்தால், பௌத்த மதத்தையும் இரத்துச் செய்ய வேண்டும்: சமித்த தேரர்
| 13வது திருத்தத்தை இரத்து செய்தால், பௌத்த மதத்தையும் இரத்துச் செய்ய வேண்டும்: சமித்த தேரர் |
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு கூக்குரலிடுவோர் அந்த திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்பட்ட பின்னர், வழங்க போகும் மாற்று திட்டம் என்ன என்பதை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் பத்தேமகம சமித்த தேரர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நடந்து விட்டால், எமது நாடு சர்வதேசத்தின் முன்னிலையில் மிலேச்சத்தனமான, வலதுகுறைந்த நாடாக மாறிவிடும். எவர் எதனை கூறினாலும் சர்வதேச சமூகம் இன்றி எம்மால் வாழ முடியாது. வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு ஓரளவேனும் தீர்வு வழங்கும் நோக்கத்தில் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. |
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் நாட்டில் பழுது பார்க்க முடியாதளவு பாதக நிலைமை ஏற்படும்: - சம்பந்தன் எச்சரிக்கை
| 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் நாட்டில் பழுது பார்க்க முடியாதளவு பாதக நிலைமை ஏற்படும்: - சம்பந்தன் எச்சரிக்கை |
13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படக் கூடுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் நாட்டில் பழுது பார்க்க முடியாதளவு பாதக நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
|
Wednesday, 14 November 2012
இனப்படுகொலையை தடுக்க ஐ.நா அதிகாரிகள் தவறி விட்டனர்
நியூயார்க் : ‘இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, அப்பாவி தமிழர்களின் உயிரை காப்பாற்ற ஐ.நா. அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கையிலேயே பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு உச்சகட்ட போரின்போது, சுமார் 40,000 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்க, முன்னாள் அதிகாரி சார்லஸ் பெட்ரி தலைமையில் ஒரு குழுவை ஐ.நா. சபை அமைத்தது. இக்குழுவின் அறிக்கை ஐ.நா. சபையிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
அரசின் தாக்குதல்களால்தான் மக்களுக்கு அதிக இழப்பு என்பதை மறைத்தது ஐ.நா.
| அரசின் தாக்குதல்களால்தான் மக்களுக்கு அதிக இழப்பு என்பதை மறைத்தது ஐ.நா. |
இலங்கை அரசின் எறிகணைத் தாக்குதல்களால்தான் பொதுமக்களுக்கு அதிகமான இழப்புக்கள் ஏற்பட்டன என்ற விவரம் தெரிந்திருந்தபோதும் ஐ.நா. அதனைப் பகிரங்கப்படுத்தவில்லை என்று அதன் உள்ளக விசாரணை அறிக்கை விமர்சித்துள்ளது.
|
பரிதி அவர்களை கொலைசெய்த குற்றவாளிகளுக்கு 50.000 யூரோக்கள் சிறீலங்கா அரசால் வழங்கப்பட்டது
பரிதி அவர்களை கொலைசெய்த குற்றவாளிகளுக்கு 50.000 யூரோக்கள் சிறீலங்கா அரசால் வழங்கப்பட்டது - திடுக்கிடும் தகவல் 'லா பாரிசியன்' என்ற செய்தித்தாளில் வெளியான செய்தி..
http://www.leparisien.fr/ espace-premium/actu/ deux-suspects-interpelles-apres -le-meurtre-du-leader-tamoul-1 3-11-2012-2315875.php
http://www.leparisien.fr/
நீரிழிவு நோய் – எனது அனுபவமும் எனது தேடலும் : பி. எம் புன்னியாமீன்
நவம்பர் 14 - உலக நீரிழிவு நோய் தினம்
இன்று உலகம் முழுவதும் பேசப்படும் நோய்களில் ஒன்றாகவே நீரிழிவு நோய் காணப்படுகின்றது. காரணம் இந்நோய் பரவலாக அதிகமான மக்களிடம் காணப்படுவதுடன் அதன் தொடர் விளைவுகளும் பாரதூரமாகவே இருப்பதுமாகும். இந்நோய் வந்து விட்டால் அதை முற்று முழுதாகக் குணமாக்க முடியாது எனக்கூறப்படுகின்றது. இருப்பினும் வைத்திய ஆலோசனைப்படி நடப்பதில் நோயாளி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இந்நோயின் தொடர் விளைவுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும்.
இன்று உலகம் முழுவதும் பேசப்படும் நோய்களில் ஒன்றாகவே நீரிழிவு நோய் காணப்படுகின்றது. காரணம் இந்நோய் பரவலாக அதிகமான மக்களிடம் காணப்படுவதுடன் அதன் தொடர் விளைவுகளும் பாரதூரமாகவே இருப்பதுமாகும். இந்நோய் வந்து விட்டால் அதை முற்று முழுதாகக் குணமாக்க முடியாது எனக்கூறப்படுகின்றது. இருப்பினும் வைத்திய ஆலோசனைப்படி நடப்பதில் நோயாளி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இந்நோயின் தொடர் விளைவுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும்.
Subscribe to:
Posts (Atom)

