Translate

Tuesday, 19 July 2011

ஆடைகளை களைந்து மக்களை சுட்டுக்கொன்றவர்கள் வேட்டி, சேலை தருவதாக வாக்கு கேட்கின்றனர்: மாவை _

ஆடைகளை களைந்து மக்களை சுட்டுக்கொன்றவர்கள் வேட்டி, சேலை தருவதாக வாக்கு கேட்கின்றனர்: மாவை _



  ஆடைகளைக் களைந்து மக்களை சுட்டுக் கொன்றவர்கள் இன்று வேட்டி, சேலை தருவதாக கூறி தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்கின்றனர். இன்று வடபகுதிக்கு அனை த்து அமைச்சர்களும் படையெடுத்து வந்து அபிவிருத்தி என்ற மாயையை காண்பித்து மக்களை ஏமாற்றுகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் எம். பி.யுமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ........... read more   

கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் ஒலிபெருக்கியை நிறுத்திய பொலிஸார் _

கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் ஒலிபெருக்கியை நிறுத்திய பொலிஸார் _



  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று சுன்னாகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இரவு 10 மணியளவில் அங்கு வந்த பொலிஸார் ஒலிபெருக்கிகளை நிறுத்தி இடையூறு விளைவித்தனர்.

வலி. தெற்கு பிரதேச சபைக்கான வேட்பாளர்களை ஆதரித்து சுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவிலை அண்மித்த பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே பொலிஸார் இவ்வாறு நடந்துகொண்டனர். ............. read more  

பன்னிரண்டுகோடி மக்களுக்கு ஒரு தலைவர் அது எங்கள் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்தான்!

பன்னிரண்டுகோடி மக்களுக்கு ஒரு தலைவர் அது எங்கள் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்தான்! 
ஒரு கர்நாடகத் தமிழனின் உணர்வுப் பகிர்வு


இவற்றுக்கும் அப்பால் இவர் ஒரு திரைப்பட இயக்குநரும்கூட. (கர்நாடக) மாநில விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவரது படம், தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக புறமொதுக்கப்பட்டதை ஜீனியர் விகடன் இதழ்கூட பதிவு செய்திருந்தது.

அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் ஈழத் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு எதிரான கர்நாடகத் தமிழ் மக்களின் நிலைப்பாட்டை பதிவு செய்வதற்காக வந்திருந்தார். ........... read more  

இனப்படுகொலையை ஏற்படுத்திய நாட்டிலிருந்து தமிழ்மக்கள் பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பை மேற்கொள்ளும் உரிமையுள்ளது!- பொங்கியெழும் மக்கள் படையணி


இனப் படுகொலையை ஏற்படுத்திய தரப்பிலிருந்து அல்லது அந் நாட்டிலிருந்து தனியானதொரு மொழியை பேசும் தனியானதொரு பண்பாட்டு விழுமியங்களை கொண்ட மக்கள் தொகுதி பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பை மேற்கொள்வதற்கான நீதியானதும் நியாயமானதுமான உரிமையை கொண்டுள்ளது. இவ்வாறு பொங்கியெழும் மக்கள் படையணி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கையின் முழுவடிவம்.................. read more   

தொட்டிலையும் ஆட்டி குழந்தையையும் கிள்ளிவிடும் சூழ்ச்சிகரமான நடவடிக்கையில் புதுடில்லி

தொட்டிலையும் ஆட்டி குழந்தையையும் கிள்ளிவிடும் சூழ்ச்சிகரமான நடவடிக்கையில் புதுடில்லி


பிரிட்டன் தொலைக்காட்சியான சனல் 4 ன் இலங்கையின் கொலைக்களங்கள்' எனும் பெயரிலான காணொளி உலகின் மூலை முடுக்கு எங்கிலும் ஒளிபரப்பாகி வருகின்றது. நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் தலையில் துப்பாக்கிச் சூட்டைத் தாங்கிக் கிடக்கும் கைதிகளின் சடலங்களையும்... இலங்கை இராணுவத்தினரால் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டு இராணுவ ட்ரக் வண்டியொன்றில் குவிக்கப்பட்டிருந்த பெண்களின் இறந்த உடல்களையும் மற்றும் நடந்தேறிய உள்நாட்டு இறுதிக் கட்ட போரில் இலங்கையின் ஆயுதப் படைகளால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் ஏனைய அக்கிரமங்களையும் சித்திரிப்பனவாக அவை அமைந்துள்ளன. ............. read more 

வடக்கு உள்ளூராட்சித் தேர்தல் களம் புதைக்கப்படும் உண்மைகள்............"?

வடக்கு உள்ளூராட்சித் தேர்தல் களம் புதைக்கப்படும் உண்மைகள்............"?




இந்தத் தேர்தலில் பாரிய வெற்றி ஒன்றை பெற்று சர்வதேச சமூகத்தின் வாயை அடைப்பதற்கு அரசாங்கமும் அதனோடு இனைந்துள்ள ஈபிடிபியும் முயற்சிக்கின்றன. தேர்தலில் வெற்றியை பெறுவதற்கு கட்சிகள் விரும்புவதும் அதற்கு முயற்சிகள் எடுப்பது ஒன்றும் விமர்சனத்துக்குரிய விடயம் இல்லை. ஆனால் அது ஜனநாயகத்தைப் பலப்படுத்தும் வகையில், மக்களுக்கு தமது கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கும் வகையில் அமைய வேண்டும்.அப்படிப்பட்ட சூழல் வடக்கில் இல்லை இல்லை என்பதே உண்மை........... read more 

இலங்கையை கூறுபோட ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்: ராஜபட்ச

இலங்கையை கூறுபோட ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்: ராஜபட்ச


கொழும்பு, ஜூலை.19: இலங்கையை துண்டு துண்டாக கூறு போடுவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். இது எங்கள் நாடு. நாங்கள் பிறந்த நாடு. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழும் நாடு என்று அந்த நாட்டின் அதிபர் ராஜபட்ச தெரிவித்தார்............. read more 

இலங்கையில் யதார்த்தமான சமாதானம் நிலைநாட்டப்படவில்லை – ICG


இலங்கையில் யதார்த்தமான சமாதானம் நிலைநாட்டப்படவில்லை – ICG

இலங்கையில் யதார்த்தமான சமாதானம் இன்னமும் நிலைநாட்டப்படவில்லை என சர்வதேச அனர்த்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அரசாங்கம் மெய்யான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.............. read more

மணல் கொள்ளையடித்து பணம் சம்பாதிக்கும் டக்கிலஸ் வெளிவந்த அம்பலம் ..!


மணல் ஏற்றி 12லட்சம் ரூபாவை மாதம் கொள்ளையடிக்கும் டக்கிலஸ் வெளிவந்த அம்பலம் ..!
 
மகிந்தாவின் மடிக்குள் இருந்து தமிழனத்தை அடக்கி ஆண்டு வரும்
தமிழின துரோகி டக்கிலஸ் தேவானந்தா அவர்தம் ஆயுத குழு
திருட்டு தனமாக மணல் ஏற்றி மாதம் பன்னிரெண்டு லட்சம் ரூபாவை
கொள்ளையடித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சீறும் சிறுத்தையும் 
புரட்சியாளருமான  மாண்பிமிகு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார் ............ read more 

டக்கிளசின் முகமூடி கிழித்த சிறிதரனின் ஸ்கந்தபுர அதிரடி பேச்சு -கேட்டால் அசந்து போவீர்கள்


டக்கிளசின் முகமூடி கிழித்த சிறிதரனின் ஸ்கந்தபுர அதிரடி பேச்சு -கேட்டால் அசந்து போவீர்கள்       

 
டக்கிளசின் லீலைகளை புட்டு புட்டு வைத்த சிறிதரன் அதிரடி பேச்சு
கிழிந்த டக்கிலஸ்  வியகலாவின் முகமூடி ..!
 தமிழ் தேசிய  கூட்டமைப்பின் இரண்டாவது சுற்று தேர்தல் பிரச்சாரம் கிளி ஸ்கந்த புர பகுதியில் நடைபெற்றது .
அங்கு திரண்ட  பல நூற்றுகணக்கான மக்கள் மத்தியில் மாண்புமிகு சிறிதரன் ஆற்றிய உணர்ச்சி புரட்சி வலிமை மிக்க
பேச்சு உலக தமிழ் மக்களின் இதயங்களை ஒருகணம் உலுப்பி இருக்கும் ................ read more   

'புலி வருது, புலி வருது' வதந்தி பரப்பும் இலங்கை அரசு!

இலங்கையில் நடைபெற்று வந்த போர் முடிவடைந்து இரு ஆண்டுகள் முடிந்த நிலையில், தமிழீழ விடுதலைப புலிகள் மீண்டும் மீண்டும் இணையும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரான்ஸ் நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது............... read more 

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாய்ச் சின்னத்தில் யாராவது போட்டியிடுகிறார்களா?-இதயச்சந்திரன்!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் உணர்த்தும் செய்தி ஏன்ன? எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாய்ச் சின்னத்தில் யாராவது போட்டியிடுகிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களின் வீட்டு வாசல் கதவுகளில் நாய்களின் தலைகளை தொங்கவிடுவதில் சிலர் அக்கறை கொள்வதாக செய்திகள் கூறுகின்றன........... read more 

மஹிந்தவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் தீர்மானம்!

மஹிந்தவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் தீர்மானம்!



ஐ.நா. நிபுணர் குழுவின் போர்க்குற்ற அறிக்கையின்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் சார்பில் பெங்களூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த மாநாட்டிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.டில்லியைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மாநாட்டை தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.............. read more 

யேர்மனியில் "இலங்கையின் கொலைக்களம் " Sri lankas Killing Fields பரப்புரையின் வெற்றி.

யேர்மனியில் "இலங்கையின் கொலைக்களம் " Sri lankas Killing Fields பரப்புரையின் வெற்றி. 
Kriegsverbrechen - Sri Lankas Killing Fields.............. read more 

காஞ்சி மடாதிபதிகள் நீதிமன்றில் ஆஜர்

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர்
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர்
காஞ்சிபுரம் வரதாரஜப் பெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பில், காஞ்சி மடாதிபதிகள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உட்பட குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 24 பேரும் திங்கட்கிழமை(18.7.11) புதுவை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.............. read more 

நிர்வாணமாக குளிக்கச் சொன்னதால் மாடியில் இருந்து குதித்தார் பெண்

பஹ்ரைனில் வேலை பார்த்துவந்த இலங்கைப் பெண் ஒருவரை அவரது எஜமான் நிர்வாணமாக ஆடச் சொன்னதால் அவர் 2ம் மாடியில் இருந்து குதித்துள்ளார். இச் சம்பவம் குறித்து அவரை வேலைக்கு அமர்த்திய முகவர் நிலையம் எதனையும் பொலிசாருக்கு அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த 18 மாதங்களாக வேலைபார்த்துவந்த துஷாரி ஹெரத் (வயது 27) என்ற பெண்ணே 2மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்துள்ளார்............... read more 

யாழ்ப்பாணத்திலுள்ள நாய்கள் தமிழ் உணர்வு மிக்கவை: பா.அரியநேத்திரன் !

நாய் நன்றி உள்ள மிருகம் அதிலும் சிறப்பாக யாழ்ப்பாணத்திலுள்ள நாய்கள் தமிழ் உணர்வு மிக்கவை. காரணம் அரசாங்கம் அதன் அமைச்சர்களும் போடுகின்ற எலும்புத் துண்டுகளைக் கூட கௌவிச் செல்வதில்லை. இதன் காரணமாக இன்று நாய்களின் தலைகளை வெட்டி இனவெறியை காண்பிக்கும் அளவுக்கு யாழ்ப்பாணத்தில் நாய்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இவ்வாறு தமிழ்
தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குறிப்பிட்டார்.............. read more 

வவுனியா சிறைச்சாலை தமிழ் அரசியற்கைதிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது.


உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளின் தொடர் உண்ணாவிரப் போராட்டம், மன்னார் மறை மாவட்டஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் அவர்களினால் வழங்கப்பட்ட உறுதிமொழியையடுத்து முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த தமிழ் அரசியற் கைதிகளை,  மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அடிகளார், சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வாவுடன்  நேற்று மாலை நேரில் சென்று சந்தித்தார்................ read more 

Sunday, 17 July 2011

சகவாசத்தால் தோற்றோம், எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்-இளங்கோவன்

சகவாசத்தால் தோற்றோம், எனவே 

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம்

சட்டசபைத் தேர்தலில் நாம் சகவாசம் சரியில்லாததால்தான் தோற்றோம். 

எனவே வருகிற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தனித்துப் போட்டியிட்டு நமது பலத்தைக் காட்டுவோம் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

தூத்துக்குடி, முத்தையா புரத்தில் இளங்கோவன் கோஷ்டியினரும், ஜி.கே.வாசன் கோஷ்டியினரும் இணைந்து காமராஜர் பிறந்தநாளைக் கொண்டாடினர்............... read more 

தமிழ் மக்களின் வாக்குக் கொள்ளையர்களாக வடக்கில் படையெடுத்துள்ள அமைச்சர் பட்டாளம்:சுதந்திரமான தேர்தல் என்பது சூன்யம் என்கிறார் விக்கிரமாபாகு கருணாரட்ண


வடக்கில் இராணுவ ஆட்சி இருக்கும்வரை அந்தப் பிரதேசங்களில் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல்களை எதிர்பார்க்க முடியாது என இடதுசாரி முன்னணித் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

"தமிழ் மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காக அமைச்சர்கள் பட்டாளமொன்று வடக்குக்குப் படையெடுத்துள்ளது. அங்கு நிலைகொண்டு அதற்குத் தேவையான நடவடிக்கைகளை சுதந்திரமாக அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்'' என்றார் கருணாரட்ண
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,............ read more 



சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நித்யானந்தா நிகழ்சி

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நித்யானந்தா நிகழ்சி

ஆபாச வீடியோ குற்றச்சாட்டால் சரிந்துபோன தனது செல்வாக்கை சரிசெய்ய, தியானத்தில் இருப்பவர்களை ‘குண்டலினி சக்தி’யின் மூலம் அந்தரத்தில் மிதக்க வைப்பதாக சவால் விட்ட நித்யானந்தாவின் ஆன்மீக நிகழ்ச்சி தோல்வியில் முடிந்தது............... read more 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை ஒழிப்போம்: சீமான்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை ஒழிப்போம்: சீமான்

சமச்சீர் கல்வி என்பது பாடத்தை மட்டும் எல்லோருக்கும் சமமாக்கி பயன் இல்லை,  அடிப்படை வசதி உள்ளிட்ட அனைத்திலும் சமமாக இருக்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் சீமான் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-............  read more

ஈழ விடுதலையை மேடைகளில் பேசி பெற முடியாது- தமிழர் களம் அரிமாவளவன் பேச்சு


ஈழ விடுதலையை இங்குள்ள மேடைகளில் முழங்கியே நான் பெற்றுத் தருவேன் என்பது கூரையேறிக் கோழி பிடிக்க இயலாதவன் வானம் ஏறி வைகுண்டத்திற்கு வழி காட்டுவது போன்றது என்று தமிழர் களம் அரிமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செந்தமிழர் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட பாவலரேறு விழா நடைபெற்றது............ read more 

சங்கிலியன் சிலை இருக்க கூடாதாம்- இடிக்குமாறு ஒட்டுக்குழு ஈ.பி..டி.பியைச் சேர்ந்த மாநகர முதல்வர் உத்தரவு!

சங்கிலியன் சிலை இருக்க கூடாதாம்- இடிக்குமாறு ஒட்டுக்குழு ஈ.பி..டி.பியைச் சேர்ந்த மாநகர முதல்வர் உத்தரவு!


யாழ்ப்பாணத்தில் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த சிலை யாழ். மாநகர சபையால் இடித்து அகற்றப்படுகின்றது. சிலையைச் சுற்றி நேற்று மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்பதால் காவல்துறையினரின் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
முன்னர் வாளை உயர்த்தியவாறு வீரத்துடன் காணப்பட்ட சங்கிலியன் சிலையின் உயர்த்திய கையை சிறிலங்கா இராணுவத்தினர் அடித்து நொருக்கியிருந்தனர். அதன் பின்னர் வாளை கீழே போட்டவாறு இருக்கும் சிலை உருவாக்கப்பட்டது. தற்போது அந்த சிலையையும் இடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது................... read more