மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 21 May 2012
மெரினா கடற்கரையை அதிரவைத்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் - படங்கள்
புலிகளை ஆதரிக்கும் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமாம்: காங்கிரஸ் உண்ணாவிரதம் !
Sunday, 20 May 2012
இளமையா இருக்க ஆசையா?
‘குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்’ என்கிறது சித்த மருத்துவம். குமரி என்பது சோற்றுக்கற்றாழை யின் மற்றொரு பெயர்.
‘அலோவேரா’ சோப்பு, ஷாம்பூ... எல்லாம் சோற்றுக் கற்றாழை மூலம்தான் உற்பத்தி செய்கிறார்கள். தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு.
கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள ் மறைந்து போகும். இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும். கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.
யாழ் பல்கலைக்கழக மாணவன் தர்சானந்த் மீதான தாக்குதலுக்கு கஜேந்திரகுமார் கண்டனம்
இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நேற்று காலை 8.00 மணியளவில் பல்கலைக்கழத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையில், கலைப்பீட 4ம் வருட மாணவனும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 2012ம் ஆண்டுக்கான செயலாளராக பரிந்துரை செய்யப்பட்டவருமான பரமலிங்கம் தர்சானந், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால், அதிக சனநடமாட்டம் கூடிய யாழ்ப்பாணம் கலட்டி சந்தியில் உள்ள இராணுவ காவலரன் அருகில் வைத்து கூரிய மற்றும் இரும்பு ஆயுதங்களால் கடுமையாக தலைப்பகுதியில் தாக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்வாறான தாக்குதல்கள் கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடத்திற்கான யாழ். பல்கலைக்கழ மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.
அனைத்துலகப் பொறிமுறை ஊடாகவே நிலையான அமைதி; முள்ளிவாய்க்கால் நினைவுச் செய்தியில் பிரிட்டன் தொழிற்கட்சி வலியுறுத்தல்
முள்ளிவாய்க்கால் பேரழிவின் 3ஆவது ஆண்டு நினைவையொட்டி அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எட் மிலிபான்ட் வெளியிட்டுள்ள நினைவுச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்க ப்பட்டுள்ளதாவது:
இந்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டம்
இந்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டம்
உபயோகமான செய்தி. பகிர்ந்து கொள்ளுங்கள்..
நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்கலான, ஓட்டுனர் உரிமம், வங்கி பாச்புக், வாக்காளர், அடையாள அட்டை, முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உக்ள்ள அஞ்சல் பெட்டியில் போட்டு விடவும்.
அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும்.
உபயோகமான செய்தி. பகிர்ந்து கொள்ளுங்கள்..
நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்கலான, ஓட்டுனர் உரிமம், வங்கி பாச்புக், வாக்காளர், அடையாள அட்டை, முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உக்ள்ள அஞ்சல் பெட்டியில் போட்டு விடவும்.
அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும்.
முள்ளிவாய்க்காலுக்குப் பின் மூன்றாண்டுகளில் இலங்கை அரசின் பத்து சாதனைகள் -
01. இராணுவமயமாக்கல்
தமிழர்களின்தாயகமான வடக்கு கிழக்கை முழுமையானசிங்கள இராணுவமயமாக்கலுக்குள் வைத்திருக்கிறது இலஙகை அரசு. இராணுவமுகாங்களைமிகச் செறிவாக அமைத்து மக்களின்இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரை அகற்ற மாட்டேன் எனராஜபக்ச சொல்லியுள்ளார்.
மகாபாரதத்தில் யட்சன் கேள்விக்கு தர்மர் இந்த பதில்களை சொல்லி இறந்த சகோதரர்களை மீட்டு சென்றார்.
மனிதனால் வெல்லவே முடியாத பகை எது ?
கோபம்
யார் சந்தோசமான மனிதன் ?
கடன் இல்லாதவன், பிழைப்புக்காக வேறு நாட்டுக்குப் போகாதவன், தன் வீட்டில் சமைத்த உணவை உண்ணும் பேறு பெற்றவன் அவனே சந்தோஷமானவன்
எது ஆச்சரியம்?
ஒவ்வொரு நாளும் பிறர் இறப்பதை பார்த்தும் தான் மட்டும் சாஸ்வதம் என்று மனிதர்கள் நினைப்பது ....
மகாபாரதத்தில் யட்சன் கேள்விக்கு தர்மர் இந்த பதில்களை சொல்லி இறந்த சகோதரர்களை மீட்டு சென்றார். ...
நாம் வாங்கும் பொருளில் உள்ள லாபம்,

உங்களுக்கு அருகில் மாற்று திறனாளிகள் ஏதாவது வியாபாரம் செய்தால்,அந்த பொருளுக்கான தேவை ஏற்படும்போது முடிந்தவரை அவர்களிடம் பொருள்கள் வாங்க பாருங்கள்!!!
நம்மால் அவர்களோடு இருந்து எந்த உதவியும் கண்டிப்பாக செய்ய முடியாது!!!
ஆனால்,நாம் வாங்கும் பொருளில் உள்ள லாபம்,கண்டிப்பாக அவர்களுக்கு ஏதாவது ஒருவிதத்தில் உதவும்!!!
அரசாங்கத்தால் தமிழ் மக்களுடனான நல்லிணக்கத்தை ஏன் ஏற்படுத்திக் கொள்ள முடியாது?.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேச்சுக்களை நடத்தி வந்தோம்.
புத்தரின் புனித பொருள்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது: வைகோ _
தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்குபெறும் சூழ்நிலை இல்லை:மனோ கணேசன் _
யாழ் பல்கலைக் கழகத்தைச் சுற்றி ஆயுதம் தரித்து பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில்
இதனால் யாழ். பல்கலைக் கழகத்தின் விடுதிகளில் தங்கியுள்ள வெளி மாவட்டங்களின் மாணவ மாணவிகள் பெரும் பதட்டத்தின் மத்தியிலேயே தங்களுடைய கற்றல் செயற் பாட்டினை மேற் கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழீழ அரசாங்கத்தின் நாதம் வானோசை இலங்கை வான் பரப்பில் ஒலித்தது !
தமிழீழத் தாயகம் நோக்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறவுப்பாலம் தனது முதலாது ஒலிபரப்பினைத் தொடங்கியது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளான இன்று இலங்கையின் வான்பரப்புக்குள் நாதம் வானோசை உள்நுழைந்தது.
இச்சேவையினைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் முயற்ச்சிகளை மேற்கொண்டிருந்த போதும் சீரான முறையில் நாதம் வானோசை ஒலித்தது.
பொன்சேகாவை விடுவிக்க ராஜபட்ச உத்தரவு
கொழும்பு, மே.20: இலங்கை முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அந்த நாட்டின் அதிபர் மகிந்த ராஜபட்ச உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து 2 ஆண்டுகளாக சிறையில் உள்ள பொன்சேகா விடுதலையாக வழி ஏற்பட்டுள்ளது.
உலக போகங்களிலும், சிற்றின்பத்திலும் கிடைக்கும் சுகம்
நாஸ்தா தர்மே ந வஸு நிசயே நைவ காமோப போகே
யத் யத் பவ்யம் பாவது பகவந் பூர்வ கர்மாணு ரூபம் /
ஏதத் ப்ரார்த்யம் மம பாஹுமதம் ஜன்ம ஜன்மாந்தரேபி
த்வத் பாதாம்போருஹ யுககதா நிஸ்சலா பக்திரஸ்து //

பகவானே...! எனக்கு இந்த உலக தர்மங்களின் மீது எவ்விதமான பற்றும் இல்லை...! ஏராளமான செல்வக் குவியல்களின் மீதோ அல்லது சிற்றின்பத்தின் மீதோ எனக்கு நாட்டம் இல்லை...! என் முந்தைய ஜென்மங்களின் கர்ம வினைப்படியே, எது எது எப்படி நடக்க வேண்டுமோ, அப்படியே நடக்கட்டும்...! நான் உன்னிடம் வைக்கும் விருப்பமான கோரிக்கை என்னவென்றால், என்னுடைய எல்லா ஜன்மங்களிலும், உன் திருப் பாத கமலங்களில் மட்டும் ஸ்திரமான பக்தியினை தந்தருள வேண்டும் என்பதே...!
Saturday, 19 May 2012
தனித்தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் தீர்மானம்
தனித்தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!
தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் தீர்மானம்
முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறியர்களால் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட மே 18ஆம் நாளை "சர்வதேச இனப்படுகொலை நாளாக' அறிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் ஒவ்வோர் ஆண்டும் கடைப்பிடித்து வருகின்றனர்.................. read more
குரு பெயர்ச்சி பலன்கள் - 2012
குரு பெயர்ச்சி பலன்கள் - 2012
நந்தன வருடம் வைகாசி மாதம் 4ஆம் திகதி (17.05.2012) வியாழக்கிழமை இரவு 6.27 மணிக்கு கார்த்திகை நட்சத்திரம் 2ஆம் பாதத்தில் இடப ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைகிறார். குருபகவான் விஜய வருடம் வைகாசி மாதம் 12ஆம் திகதி (26.05.2013) ஞாயிற்றுக்கிழமை வரை இடப ராசியில் உலா வருகின்றார். குருபகவான் 17.05.2012 முதல் மேட ராசிக்கு 2இல் சாதகமான நிலையில் சஞ்சாரம் செய்கின்றார். 17.05.2012 முதல் தன ஸ்தானமான 2ஆம் இடத்தில் குருபகவான் உலா வருகின்றார். அற்புதமான நல்ல பலன்களை உங்களுக்கு அள்ளி வழங்குவார். சென்ற வருடத்தில் இருந்து வந்த பணப் பிரச்சினைகள் குறையும், பொருளாதார நிலை மேம்படும், குடும்பத்தில் நன்மை பெருகும், சுபகாரியங்கள் நடைபெறும், திருமண தடை நீங்கும், ஆடை- ஆபரணங்களின் சேர்க்கை அதிகமாகும், கடன் சுமை குறையும், புதிய வீடு வாங்குவீர்கள், பழைய கடன் வசூல் ஆகும், வியாபாரத்தில் நல்ல இலாபம் கிடைக்கும். |
|---|
லவ் மேரேஜ் பண்ணுங்க! நிறைய நன்மையிருக்கு!! அனுபவசாலிகள் ரிப்போர்ட்!!!
திருமணம் என்பது ஒரு அழகான ஒன்று. அந்த திருமண வாழ்க்கை நன்றாக அமைய வேண்டுமென்றால் இரு மனங்களும் நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே முடியும். அந்த திருமணம் இரு வகைகளில் நடைபெறும். ஒன்று காதல் திருமணம், மற்றொன்று பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைப்பது.
குரு பெயர்ச்சி பலன்கள் 2012- 2013 – எல்லா ராசிக்குமான பலன்கள்
குரு பெயர்ச்சி பலன்கள் 2012- 2013 – எல்லா ராசிக்குமான பலன்கள்
குரு மாறுகிற காலம், மீன இராசி – விருச்சிக லக்கினம். லக்கினத்தில் இராகு, 5-ல் சந்திரன், 6-ல் புதன், 7-ல் சுக்கிரன், குரு, கேது, சூரியன், 10-ல் செவ்வாய், 11-ல் சனி. அருமையான நேரம். பொதுவாக பஞ்சமஸ்தானம் – சப்தமஸ்தானம் – ஜீவனஸ்தானம் – லாபஸ்தானம் அருமையாக அமைய வேண்டும் அது அமைந்துவிட்டது. நாட்டுமக்கள் வளமோடு மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். பொருளாதரம் மேலோங்கும். 8-க்குரிய புதன், 6-ல் இருப்பதால், கல்விதுறை பல மடங்கு முன்னேறும்.
Friday, 18 May 2012
பேரெழுச்சியுடன் சென்னையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு
இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாட்டில் சிறீலங்கா அரசால் 2009 மே 17,18 அன்று முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று 17.05.2012 மாலை சென்னை வில்லிவாக்கத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது,
இந்நிகழ்வில் அய்யா பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் நினைவேந்தல் ஒளிச்சுடரை ஏற்றினார். அதனைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கையில் மெழுகுவர்த்திச்சுடர் ஏந்தி 10 மணித்துளிகள் தங்கள் நினைவஞ்சலியினை செலுத்தினர்................... READ MORE
கூட்டமைப்பு பங்கேற்க்காவிட்டால் தெரிவுக்குழுவுக்கு ஜ.தே.க. வராது; ஜனாதிபதியிடம் நேரில் திட்டவட்டமாக ரணில் தெரிவிப்பு
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எட்ட அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பங்கேற்கச் செய்வதற்கு அரசு முழு முயற்சிகளை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தெரிவுக்குழுவில் பங்கேற்று தீர்வை எட்டுவதற்கு அரசுக்கு ஒத்துழைக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரில் தெரிவித்தார்.
|
உலகத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்: சீமான் _
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள், காணாமல்போனோருக்காக தீபமேற்றிப் பிரார்த்திக்குமாறு த.தே.கூ. வேண்டுகோள் _
இதேவேளை, கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் தொடர்பாக இலங்கை பொறுப்புக் கூறுவதற்கு சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கா மீது குவியும் அனைத்துலக கவனம் – லண்டன் விவாதத்தை எட்டரை இலட்சம் பேர் பார்த்தனர்
சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள், அதற்கான பொறுப்புக்கூறல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்தல் ஆகியன குறித்தும், போருக்குப் பிந்திய நல்லிக்க சூழல் குறித்தும் அனைத்துலக அளவில் விவாதங்கள் எழுந்துள்ளன.
ஆத்ம சாந்திப் பிரார்த்தனை; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு
| ஆத்ம சாந்திப் பிரார்த்தனை; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு |
2009 மே மாதம் இடம்பெற்ற இனப் பேரழிவின் போது கொல்லப்பட்டோர் மற்றும் காணாமல் போனோர் நினைவாகவும் கடந்த காலங்களில் போரின்போது உயிர் நீத்தவர்கள் நினைவாகவும் நாளை வெள்ளிக்கிழமை ஆத்மசாந்திப் பிரார்த் தனையில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
|
பிரான்ஸ் மனித உரிமைச் சதுக்கத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வெழுச்சி(படங்கள்)
பிரான்சின் வரலாற்றுப் புகழ்மிக்க மனித உரிமைச் சதுக்கத்தில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வு மிகவும் எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் இடம்பெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர்நடுவம், சொலிடாரித்தே தமிழீழம், லாம் தூ லா பே ஆகிய அமைப்புக்கள் கூட்டாக இந்நிகழ்வை ஒழுங்குசெய்து நடாத்தியிருந்தன.
பிற்பகல், 5.15 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வு, மாலை 6.30 மணியளவில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற தேசிய விடுதலையை மீட்டெடுக்கும் நம்பிக்கையை விதைக்கும் பாடலுடன் சிறப்புற நினைவுபெற்றது.
பிற்பகல், 5.15 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வு, மாலை 6.30 மணியளவில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற தேசிய விடுதலையை மீட்டெடுக்கும் நம்பிக்கையை விதைக்கும் பாடலுடன் சிறப்புற நினைவுபெற்றது.
குடும்ப சகிதம் புத்த பிக்குகள் முன்னிலையில் பொறுப்பேற்ற வவுனியா மாவட்ட புதிய அரச அதிபர்
வவுனியா மாவட்ட புதிய அரச அதிபர் இன்று தனது குடும்ப சகிதம் புத்த பிக்குகள் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
அண்மையில் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட அரச அதிபர்கள் மாற்றத்தின்படி, காலி மாவட்டத்திலிருந்து வவுனியா மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள எம்.கே. பந்துல கரிச்சந்திர, இன்று காலை வவுனியா மாவட்டச் செயலகத்தில் புதிய அரச அதிபராக பதவியேற்றுக் கொண்டார். |
முள்ளிவாய்க்கால் துயர் பகிர்வு தமிழர் தாயகம் எங்கும் இன்று; புலம்பெயர் நாடுகளிலும் விசேட நிகழ்வுகள் சுடரேற்றி அஞ்சலி செய்யுமாறு அழைப்பு
| முள்ளிவாய்க்கால் துயர் பகிர்வு தமிழர் தாயகம் எங்கும் இன்று; புலம்பெயர் நாடுகளிலும் விசேட நிகழ்வுகள் சுடரேற்றி அஞ்சலி செய்யுமாறு அழைப்பு |
2009 மே 18 இல் முள்ளிவாய்க்காலில் கட்டவிழ்ந்த இன அழிப்புப் பெரும் துயரை நினைவு கூர்ந்து அந்தக் குறுகிய வன்முறை வெளியில் தம்மை ஆருதியாக்கிக் கொண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை தமிழர் தாயகப் பிரதேசங்களெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றன.
|
உலகத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்: சீமான்
தனி ஈழம் மலர உலகத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று கோவையில் ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“ஈழப் போர் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே மே மாதம் 17, 18 ஆகிய திகதிகளில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரில் சுமார் 1 1/2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இன்றும் ஈழத் தமிழர்கள் முள்வேலியில் சிக்கி துன்பப்படுகிறார்கள். தமிழ் இனத்துக்காக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் தமிழ் இனம் அழிக்கப்பட்ட மே 18ஆம் நாளில் ஊர்வலம், பொதுக்கூட்டங்கள் நடத்துகிறோம். அதன்படி இந்த ஆண்டு நாளை (இன்று) கோவை சிவானந்தா காலனியில் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
சிவசக்தி ஆனந்தனின் வாகனம் மோதியதில் ஒருவர் பலி
வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தனின் பயன்பாட்டில் நின்ற வாகனம் ஒன்று அவரது அலுவலகத்தில் பின்பக்கமாக செலுத்திய போது முன்னாள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகர சபை வேட்பாளருமான உதயன் என அழைக்கப்படும் பி.பரஞ்சோதி பலியாகியுள்ளார்.
உளவு துறை விசாரணையால் நித்யானந்தா சீடர்கள் பீதி
கர்நாடக மாநிலம், பிடதி ஆசிரமத்தை தலைமையிடமாகக் கொண்டு, நித்யானந்தாவுக்கு, நாடு முழுவதும் மட்டுமில்லாது, உலக நாடுகளிலும் ஏராளமான தியான பீடங்கள், ஆசிரமங்கள் உள்ளன. நடிகை ரஞ்சிதாவுடன் இணைத்து கூறப்பட்ட விவகாரத்தில், அனைத்து தியான பீடங்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் நடந்ததால், தியான பீடங்களுக்கு சீடர்கள் வருகை குறைந்தது.பல தியான பீடங்கள், தாக்குதல் பீதியால் பூட்டப்பட்டன. ரஞ்சிதா விவகாரம் அடங்கிய பின், தியான பீடங்கள், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தற்போது, நித்யானந்தா, மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றதால், மீண்டும் அவரைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் ஏற்படத் துவங்கியுள்ளன.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – உலகத் தமிழர் பேரவை கூட்டறிக்கை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – உலகத் தமிழர் பேரவை கூட்டறிக்கை
இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போன 40 விடுதலைப்புலி உறுப்பினர்களின் விபரம்!
இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போன 40 விடுதலைப்புலி உறுப்பினர்களின் விபரம்!
சரணடைந்தவர்களில் பலர் மனைவி, பிள்ளைகளோடும் சரணடைந்துள்ளனர். அவர்களின் நிலையென்ன என்பது தொடர்பாக இதுவரை அரசாங்கம் எவ்வித தகவல்களும் வெளிப்படுத்தவில்லை.
அமெரிக்க உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பேச்சுவார்த்தை
அமெரிக்க உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அமைச்சர் பீரிஸ் பேச்சுவார்த்தை தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் பீரிஸ், ஒபாமா நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினை தீர ஒரே வழி தனி ஈழம் உருவாவது தான்!
இலங்கை தமிழர் பிரச்சினை தீர ஒரே வழி தனி ஈழம் உருவாவது தான்!
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஈழப்போர் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே மே மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரில் சுமார் 1 1/2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
தர்சானந்த் தாக்கப்பட்டமைக்கு கூட்டமைப்பு கண்டனம் :
தர்சானந்த் தாக்கப்பட்டமைக்கு கூட்டமைப்பு கண்டனம் :
யாழ் பல்கலைக்கழக மாணவர் தலைவன் தர்சானந்த் தாக்கப்பட்டமைக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.அவர் தமது அறிக்கையில் சம்பவம் பற்றி விபரிக்கையில் இன்று காலை (18.05.2012)யில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளரும் கலைப்பீட நாலாம் ஆண்டு மாணவனுமான தர்சானந் மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளார். தலையிலும் கையிலும் பலத்த காயங்களுக்குள்ளாகி யாழ் மருத்தவ மனையில் சிகிச்சை பெறுகின்றார்.
சரணடைந்து காணாமல் போன 40ற்கும் மேற்பட்ட போராளிகளது விபரங்கள் வெளியாகின!
சரணடைந்து காணாமல் போன 40ற்கும் மேற்பட்ட போராளிகளது விபரங்கள் வெளியாகின!
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Wednesday, 16 May 2012
தன்னை இலங்கை அதிகாரிகள் ஐ.நாவில் வைத்து கிண்டல்செய்தனர் என்றார் ஜொலண்டா
தன்னை இலங்கை அதிகாரிகள் ஐ.நாவில் வைத்து கிண்டல்செய்தனர் என்றார் ஜொலண்டா
வெளிநாட்டுத் தீர்வைத் திணிக்கக் கூடாது! - அமெரிக்காவுக்குப் பீரிஸ் எச்சரிக்கை
நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வாசிங்டனில் அனைத்துலக புலமையாளர்களுக்கான வூட்ரோ வில்சன் நிலையத்தில் - கொள்கை வகுப்பாளர்கள் முன்னிலையில் நேற்று உரையாற்றிய போதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சிறிலங்கா அதிபரின் இலண்டன் வருகை - பழமைபேண் கட்சியின் ஆதரவுத் தமிழர்களும் அதிருப்தி
சிறிலங்கா அதிபரின் இலண்டன் வருகை - பழமைபேண் கட்சியின் ஆதரவுத் தமிழர்களும் அதிருப்தி
பிரித்தானிய மகாராணியின் வைரவிழாவிற்கு சிறிலங்கா அதிபர் அழைக்கப்பட்டுள்ள செய்தியானது மிகுந்த வேதனையைத் தருவதாக, பழமைவாதிகளுக்கான பிரித்தானிய தமிழர் அமைப்பு [The British Tamils for Conservatives - BTC] தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய மனித அவலத்தை சிறிலங்காவின் இனவெறி அரசு நடாத்தியிருக்கின்றது
ஜம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை ஒரே நாளில் கொன்றொழித்த இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலை இடம் பெற்ற நாள் மே18.
ஈழப்படுகொலைக்கு துணை நின்ற நிருபமா ராவ்-விற்கு கவுரவ முனைவர் பட்டம் - மே 19ம் தேதி புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுவை பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழா வருகிற 19ம் ÷தி நடைபெற உள்ளதென்றும், இதில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் கலந்து கொண்டு பட்டங்களை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
புலிகள் இயக்கத்திலிருந்து விலகியவர்கள் கைது செய்யப்படவில்லை: கருணா
மட்டக்களப்பில் முன்னாள் விடுதலைப்புலிஉறுப்பினர்கள் யாரையும் கைதுசெய்ய எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனஇலங்கை அமைச்சர் கருணா என்கிறவிநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
அவ்வாறு யாரும் கைதுசெய்யப்பட்டிருந்தால்அது தொடர்பில் தம்மைத் தொடர்புகொள்ளுமாறும் அமைச்சர் தெரிவித்தார்.
அவ்வாறு யாரும் கைதுசெய்யப்பட்டிருந்தால்அது தொடர்பில் தம்மைத் தொடர்புகொள்ளுமாறும் அமைச்சர் தெரிவித்தார்.
பண்டத்தரிப்பில் திருவிழா - 250 ஆட்டுக்கடாக்கள் உயிரைவிட்டன! பார்த்து மகிழ்ந்தனர் பக்தர்கள்.
இந்தியா எதைத் தந்துவிடப்போகிறது என்று உழுத்ததைத் தூக்கிக் காட்டினீர்கள்? ; மெனிக்பாம் மக்கள் மீது பாய்ந்தார் அமைச்சர்
| இந்தியா எதைத் தந்துவிடப்போகிறது என்று உழுத்ததைத் தூக்கிக் காட்டினீர்கள்? ; மெனிக்பாம் மக்கள் மீது பாய்ந்தார் அமைச்சர் |
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ஆய்வுசெய்ய வந்த இந்திய அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவிடம் பழுதடைந்த பருப்பைக் காட்டியதற்காக வவுனியா இடைத்தங்கல் முகாமிலுள்ள மக்களைக் கடிந்துகொண்டார் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன்.
|
தமிழர் பகுதியிலுள்ள சிங்கள இராணுவத்தை அகற்ற இலங்கைக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்;கோரிக்கை விடுக்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்
தமிழர் பகுதியில் நிலைகொண்டுள்ள சிங்கள இராணுவத்தை அகற்ற இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
|
பஷில் ராசபக்சவுக்கு மிகவும் விசுவாசமாக செயற்படுபவர் அருமைநாயகம்!
இவர் இமெல்டா சுகுமாருக்கு சளைத்தவர் அல்ல என மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)


.jpg)