Translate

Wednesday, 1 June 2011

தாயகம் நோக்கிய செயற்பாட்டிற்கான சமகால கருத்தரங்கு - பிரித்தானியா


முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தாயக விடுதலைப்பயணத்தில் உருவாகியுள்ள அரசியல் இடைவெளியை நிவர்த்திசெய்யும் பொருட்டு, பிரித்தானியா வாழ் தமிழீழ செயற்பாட்டாளர்களால் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
 
இக்கருத்தரங்கு பிரித்தானியத் தலைநகர் லண்டனின் KINGSBURY பகுதியில் No: 368A Stag Lane, Kingsbury, London, NW9 9AA எனும் முகவரியில் அமைந்துள்ள RNB VENUE, மண்டபத்தில் எதிர்வரும் 05-06-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை நடைபெறவுள்ளது.


தமிழீழம் ஒன்றே தமிழர்களுக்கு முழுமையான விடுதலையை பெற்றுத்தரும் என உளமார ஏற்றுக்கொண்டவர்கள் இக்கருத்தரங்கில் பங்குபற்றலாம் என்பதை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

அத்தோடு 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இக்கருத்தரங்கில் அனுமதி இல்லை என்பதையும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்தரங்கு நடைபெறும் இடம்: "RNB VENUE"
                                                                       No: 368A Stag Lane,
                                                                       Kingsbury, London,
                                                                       NW9 9AA

காலம்: 05-06-2011 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை

No comments:

Post a Comment