Translate

Sunday 18 December 2011

நாம் ஒன்றாக இணைந்து உலகை நோக்கி ஒரே குரலில் ஓங்கி ஒலிப்போம் 'தமிழீழமே எங்கள் தாகம்' என்று!


சிங்கள அரசுடன் பேசி இலங்கைத் தீவின் இனப் பிரச்சினைக்குத்தீர்வினை எட்டும்படியான இந்தியா முதற்கொண்ட சர்வதேசநாடுகளின் அழுத்தங்களுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒரு ஏமாற்ற அனுபவத்தைப்பெற்றுள்ளது.
இதுதான் நடக்கும் என்ற எதிர்பார்ப்புடனும் உளக் குமுறலுடனும்காத்திருந்த ஈழத் தமிழ் மக்களுக்கு இது எந்த வகையிலும்ஏமாற்றத்திற்குரியது அல்ல.

மாறாகஇன்னொரு தடவை பேச்சுவார்த்தை என்ற திட்டமிட்டகாலங்கடத்தும் நிகழ்ச்சி நிரலுடன் தமிழீழ மக்களது அரசியல்அபிலாசைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் சிங்களஆட்சியாளர்களது மாறாத இனவாதம் மீண்டும் அம்பலப்பட்டுள்ளது.
தமிழீழ மக்களுக்கான ஒரே தெரிவு சிங்கள தேசத்திடமிருந்து பிரிந்துசென்று 'தமிழீழத் தனியரசுஅமைப்பது மட்டுமே என்ற நியாயத்தைஏற்க வேண்டிய தருணத்தை சர்வதேச சமூகத்திற்கு சிங்களஆட்சியாளர்கள் இன்னொரு தடவை புரிய வைத்துள்ளார்கள்.
இலங்கைத் தீவில்எங்குமே தமிழர்கள் பாதுகாப்புடன் வாழமுடியாது என்ற நிலையே யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டரை வருடகாலம் கடந்தும் தொடர்கின்றதுதிட்டமிட்ட ரீதியில் தொடர்ந்தும்தமிழ் மக்கள் மீது இன வன்முறையை ஏவிவிட்டுஅவர்களைஅச்சப்படுத்தும் நிலை தொடர்கின்றதுவீதித் தாக்குதல்கள்மனிதப்படுகொலைகள்கடத்தல்கள்கிறிஸ் பூதங்கள்சிறைச்சாலைத்தாக்குதல்கள்திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்பாலியல்கொடுமைகள்கலாச்சாரச் சீரழிவுகள் என அத்தனைவடிவங்களிலும் சிங்கள ஆதிக்கவாசிகளது கரங்கள் தமிழ் மக்களதுஇருப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.
இத்தனை இழப்புக்களின் பின்னாவது சிங்கள தேசத்தின் மனம்மாறும்தமது வாழ்வு நிலை மாறும் என்ற கனவுக்குள் தொடர்ந்தும்தமிழ் மக்களை வைத்திருக்க முடியாதுஅவர்களது வாழ்வையும்,அவர்களது பாதுகாப்பையும் அவர்கள்வசம் ஒப்படைப்பதற்கு சிங்களதேசம் என்றுமே முன்வரப் போவதில்லைதமிழ் மக்களதுவாழ்வாதாரத்தையும்பாதுகாப்பையும்நில வளத்தையுமாவதுபாதுகாக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆகக்குறைந்த கோரிக்கையும் சிங்கள ஆட்சியாளர்களால்நிராகரிக்கப்பட்டுள்ளது.
பேசுங்கள்பேசுங்கள் என்ற அனைத்துலக விருப்பங்களும்,தமிழர்களுக்கு உயிர் வாழும் அனுமதி தவர்ந்த எதையும்கொடுப்பதற்குச் சம்மதிக்காத சிங்கள விருப்பத்திற்கும் இடையேதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குறைந்தபட்சக் கோரிக்கையானவடக்குக் கிழக்கு இணைப்புநில உரிமைசுய பாதுகாப்பு என்றமூன்று கோரிக்கைகளும் சிங்கள தேசத்தால் நிராகரிக்கப்பட்டநிலையில் புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் தமிழீழ விடுதலைநோக்கிய எங்களது போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டியவரலாற்றுக் கட்டாயத்தில் உள்ளோம்.
எங்களுக்குள் பல்வேறு உள் கருத்து மோதல்கள் இருந்தாலும்,தமிழீழ விடுதலை என்ற இலக்கில் நாம் அனைவரும் ஒரேகருத்துடனேயே உள்ளோம்எங்களுக்குள் உருவாகக்கூடிய கருத்துப்பிரிவுகளைப் பூதாகரமாக்கி எதிரி உள் நுழைவதற்கு மும்முரமாகமுயன்று வருகின்றான்எங்களுக்குள் ஏற்பட்டுள்ள உரைசல்பொறிகளை ஊதித் தீயாக்கிஎம்மை எரித்துப் பொசுக்குவதற்குஎங்களுக்குள்ளேயே பல தீயவர்களை உள் நுழைய வைத்துள்ளான்.
வெளிப்படையாகவே தெரிந்து கொள்ளக்கூடிய அபாயங்களைப்புரிந்து கொள்ளாத மனிதர்களாக நாம் இருந்துவிட்டால்தமிழீழம்என்பது கனவாகவே கருகிவிடும்அதுஇன்றுவரை தமிழீழவிடுதலைக்காகத் தமது உயிர்களை ஈகம் செய்த அனைத்துத்தமிழர்களது உணர்வுகளையும்உயிர்வாழும் எங்கள்மனிதங்களையும் தொலைத்து விடுவதற்குச் சமமானதாகும்.எங்களுக்குள்ளான போட்டிகளால்எங்கள் தேசம் என்றுமே எமக்குஇல்லாமல் போகும் நிலையை நாமே உருவாக்கிவிட வேண்டாம்.
எனவே புலம்பெயர் தமிழர்களது அபிலாசைகளை ஏந்தி நிற்கும்அனைத்துத் தளங்களுடனும் இணைந்துதமிழீழ விடுதலைநோக்கிய பாதையில் வேகமாகப் பயணிக்கும் முடிவினைஎடுத்துள்ளோம்எந்தப் பதவிகளையோதகுதி நிலைகளையோஏற்க மறுத்துதமிழீழ விடுதலைக்கான பாதையில் பயணிக்கும்உங்கள் அனைவருடனும் கரம் கோர்க்கும் முடிவினைஎடுத்துள்ளோம்.
நாமும்நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும்உலகத் தமிழர்பேரவையும்அதன் கீழான மக்களவைகளும்ஏனையஅமைப்புக்களும் தங்களது சுயங்களை இழந்துவிடாமலேயே,தமிழீழு விடுதலை நோக்கிய பாதையில் கைகோர்த்துச்செயற்படலாம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளதுஅதுவேசிங்களஇனவாத சக்திகளிடமிருந்து தமிழீழத்தை மீட்கும் ஈழப் போரின்இறுதி நாட்களை உருவாக்கும்.
நாம் ஒன்றாக இணைந்து உலகை நோக்கி ஒரே குரலில் ஓங்கிஒலிப்போம் 'தமிழீழமே எங்கள் தாகம்என்று!

No comments:

Post a Comment