தாயக மக்கள் மேம்பாட்டிற்காக பிரித்தானியாவில் இருந்து கொவன்றி மக்கள் மேம்பாட்டு மையத்தினரால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னNiயூடாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கடந்த 11-01-2012 அன்று பிரித்தானியாவில் இருந்து கொவன்றி மக்கள் மேம்பாட்டு மையத்தினரால் அனுப்பப்பட்ட பணம் பின்வரும் பயனாளிகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தாயக மக்களின் எதிர்கால நல்வாழ்வை கருத்தில் கொண்டு தாங்கள் இந்த உதவியை வழங்கியைமைக்கு தாயக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். சிலரது புகைப்படங்களை பெற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்களது தொலை பேசி இலக்கங்கள் இங்கு தரப்பட்டுள்ளது. அந்த இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுவதன் மூலம் குறிப்பிட்ட நபர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
நன்றி
செ.கNஐந்திரன்
பொது செயலாளர்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
01 பெயர்:- திருமதி.தே.சாந்தகுமாரி
முகவரி:- அன்னங்கை, உரும்பிராய்
இறுதி யுத்தகால இடப்பெயர்வின்போது எறிகணைத் தாக்குதலில் காயடைந்துள்ளார். ஊடல் முழுவதும் பலத்த காயங்கள். இன்னமும் சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ளார். காலிலும், கையிலும் தகடுகள் வைக்கப்பட்டுள்ளது. எனினும் கடுமையான வறுமை காரணமாக மேலதிக சத்திரசிகிச்சை செய்ய முடியாத நிலையில் உள்ளார். நாளாந்ம் உணவுக்கே வழியில்லாத நிலையில் வாழ்கின்றனர். நிவாரண உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளது. கூலி வேலை செய்ய முடியாதளவு உடல் பாதிப்புள்ளது. வெயிலில் அதிகநேரம் நிற்க முடியாதளவு வலிவேதனை உள்ளது. அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
முன்னாள் போராளியான கணவர் காயமடைந்து இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையில் உள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக தற்போது வவுனியாவில் தங்கியுள்ளார்.
02 முழுப் பெயர்:- வேலுச்சாமி சிவராசா
முகவரி:- கும்புறுப்பிட்டி, திருகோணமலை
1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து தனது குடும்பத்தினருடன் வன்னிக்கு வந்திருந்தார். குடும்ப வறுமை காரணமாக காந்தறூபன் அறிவுச்சோலையில் வளர்ந்தார். அங்கிருந்து கல்விகற்று யாழ்பல்கலைக் கழகத்திற்கு தெரிவானார். பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கொண்டிருந்த காலப்பகுதியில் 2006 அல் யுத்தம் ஆரபித்தபோது வன்னியில் தங்கியிருந்தார். யுத்தம் முடிவடைந்து முகாமுக்குச் சென்றபோது அங்கு வைத்து சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு தடுப்பு முகாமில் ஆறு மாதங்கள் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் விடுவிக்கப்பட்டபோது இவரும் விடுதலையானார். விடுதலையான பின்னர் அவரை அரவணைப்பதற்கு யாரும் இல்லாத நிலையில் கூலி வேலை செய்தும், நண்பர்களது உதவியுடனும் தனது கல்வியை தொடர்கின்றார். மிகவும் விரக்தியடைந்த நிலையில் உள்ளார்.
03 தேவராஐ; சுரேஸ்குமார்
முகவரி:- மாதாகோவிலடி, மந்துவில், புதுக்குடியிருப்பு
இவரது குடும்பம் மிகவும் வறுமையானது. தந்தை இறந்துள்ளார். தூய் கூலி செய்து பிழைப்பு நடாத்தி வந்தார். வறுமை காரணமாக காந்தறூபன் அறிவுச் சோலையில் வளர்ந்தார். அங்கிருந்து கல்வி கற்று பாழ்பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தார். யுத்தம் முடிவடைந்த பின்னர் அவருக்கு உதவுவதற்க யாரும் அற்ற நிலையில் மிகவும் கஸ்ர நிலையில் உள்ளார். தாயார் வயது முதிர்ச்சியால் கூலி வேலையும் செய்ய முடியாத நிலையில் உள்ளார். சுரேஸ்குமார் கூலி வேலை செய்தவாறு தனது தாயாரையுத் பராமரித்தவாறு கல்வியையும் தொடர்கின்றார். இடையிடையே தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அவருக்கு நிதி உதவிகளை வழங்கி வருகின்றது.
04 Nஐhன்வர்கீஸ் மாக்கிரட்(80)
முகவரி- சின்னத்தோட்டம், 3ம் குறுக்குத்தெரு, பருத்தித்துறை
இவருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர். கணவர் இந்திய இராணுவத்தினரால் தாக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டு இறந்தார். மகள் சித்திரா 20வயதில் 1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
மகன் ரமேஸ் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இரண்டாவது மகன் nஐஸ்ரின் இராணுவத்தினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
மகள் மேரிமரில்டா 2004 ஆம் ஆண்டு சுனாமியில் மூன்று பிள்ளைகள் மற்றும் அவரது கணவர் ஆகியோருடன் பலியானார்.
மிக மிக வறுமை நிலையில் உள்ளார்.
05 முழுப்பெயர்:- திருமதி மங்கயற்கரசி குமாரசிங்கம்
முகவரி:- அம்பிளாந்துறை வடக்கு, கொக்கட்டிச்சோலை
கணவர் சித்திரவேல் வசந்தராசா அவர்கள் 1996 ஆம் ஆண்டு தேங்காய் வியாபாரத்திற்காக சென்றபோது இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டு கோட்டைக்கல்லாற்றில் வீசப்பட்டார். ஆற்றிலிருந்து மீனவர்கள் உடலை கண்டெடுத்தனர். இவரை ஏற்கனவே இராணுவம் தேடித்திரிந்ததாக அவரது மனைவி கூறினார். நான்கு பிள்ளைகளுடன் மிகவும் வறுமையில் வாடுகின்றார்.
இரண்டு பிள்ளைகள் பாடசாலையில் கல்வி பயில்கின்றனர். தொடர்ந்து படிப்பிக்க முடியாத நிலையில் உள்ளார்.
06 திருமதி சதீஸ் nஐயக்குமாரி(35)
கணவர்:- காளிமுத்து சதீஸ் (காணாமல் போயுள்ளார்)
முகவரி:- அம்பிளாந்துறை வடக்கு, கொக்கட்டிச்சோலை.
மகன் சதீஸ் அதிசன் வயது 3
என்ர பெயர் nஐயக்குமாரி. நான் முன்னாள் போராளியாக இருந்தனான். 2004 ஆம் ஆண்டு சமாதான காலப்பகுதியில மட்டக்களப்பில் ஒரு கூட்டத்திற்கு பாபா அண்ணை ஆக்களோட போய் திரும்பி வந்து கொண்டிருக்கேக்குள்ள கருணா குழு ஆக்கள் மறைஞ்சிருந்து சுட்டத்தில எனர இரண்டு கால் எலும்பும், இரண்டு கை எலும்புகளும் நாலைஞ்சு இடத்தில முறிஞ்சு போச்சுது. விலா எலும்பு, நெஞ்சு எலும்பும் உடைஞ்சுபோச்சுது. இப்ப கை, கால் இரண்டிலயும் தகடு வைத்துப் பூட்டிஇருக்கு. நான் காயப்பட்ட பிறகு வன்னியில அங்கவீனமடைந்சாக்களை பராமரிக்கிற இடத்தில தங்கி இருந்தனான். ஆப்ப திருகோணமலையை சேர்ந்த சதீஸ் என்ற போராளி என்னை திருமணம் செய்ய தானாக விரும்பி முன்வந்படியால எனக்கும் அவருக்கும் 2008 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.
இன்னும் ஒரு ஆளின்ர உதவி இல்லாமல் என்னால செயற்பட முடியாது. இடம்பெயரும்வரையும் எனக்கு ஆக்களின்ர உதவி இருந்தது. அவரும் என்னை அக்கறையாக பார்த்தவர். ஆனால் இடப்பெயர்வுக்குள்ள அவரும் என்னோட இருக்க முடியவில்லை. நான் பிள்ளையோட சரியா கஸ்ரப்பட்டுப்போனன். இடம்பெயந்து முள்ளிவாய்க்கால் வரையும் போன்னான். முள்ளிவாய்க்கால்ல 13 திகதி வைகாசி மாதம் 2009 ஆம் ஆண்டு அவரும் காயப்பட்டிட்டார். அவரை ஆஸ்பத்திரியில போட்டிருக்கு எண்டு கேள்விப்பட்டு வேற ஆக்களின்ர உதவியோட காயப்ப்டடவரை முள்ளிவாய்க்கால் ஆஸ்ப்பத்திரியில போய் பாத்தனன்;. ஆனால் என்னால அவரை என்னோட கூட்டிக் கொண்டுவர முடியாமல் போச்சுது.
காயப்பட்ட ஆக்கள தூக்கேக்குள்ள இவரையும் ஆமி தூக்கிக் கொண்டு போனது எண்டு கதைக்கினம். ஆனால் என்ன நடந்தெண்டு ஒண்டும் தெரியேல்ல. நானும் பிள்ளையும் ஒருமாதிரி ஆக்களின்ர உதவியோட முகாமுக்கு வந்து சேர்ந்தம். ஏன்ர மனிசனை இப்பவரைக்கும் தேடிக்கொண்டுதான் இருக்கிறன். ஆனா ஒரு தகவலும் கிடைக்கேல்ல.
முகாமில இருந்து என்ர சொந்த ஊருக்குப் போனன் அங்க எங்கட ஊர்ச் சனம் எங்களை நாயளவுக்கும் மதிக்குதில்லை. சின்ன உதவிக்கு கூட ஒருத்தரிட்டயும் போகமுடியேல்ல. உறவுகள் கூட திரும்பிப் பார்க்குதில்லை. நினைச்சால் தற்கொலை செய்ய வேணும் போல இருக்கு. ஆனா இந்த பிஞ்சுக் குழந்தைக்காக வாழ வேணும் எண்டு மனதை கல்லாக்கிக் கொண்டு இருக்கிறன்.
ஏன்ர அண்ணாவையும் முந்தி ஒருக்கா ஆமி கொண்டுபோய் கட்டி வைச்சு அடிச்சதில அவருக்கும் மனநிலை பாதிக்கப்பட்டிட்டுது. அவற்ரை மனிசியும் அவரை விட்டிட்டு பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு போட்டா. அவரும் அப்பாவோட தான் இருக்கிறார். தங்கச்சியின்ர கணவரும் காணாமல் போட்டார். அவவும் அப்பாவோடதான் இருக்கிறா. இப்ப நானும் அப்பாக்கு சுமையா போய் இருக்கினறன். நான் ஆரொக்கியமான ஆளாய் இருந்தால் கூட பறாவாயில்ல கூலி வேலை செய்தெண்டாலும் என்னையும் பிள்ளையையும் பாத்துக் கொள்ளுவன். என்ர அலுவலையே தனியா பாக்க முடியாமல் இருக்கிறன்.
அப்பாவுக்கும் இப்ப வயது 65 அவராலயும் கூலி வேலை செய்யேலாது. எப்படி என்ர பிள்ளையை வளத்து காப்பாத்தப் போறனெண்டே தெரியேல்ல.
முகாமுக்கால வந்தாப்பிறகு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கNஐந்திரனை தொடர்பு கொண்டு என்ர நிலைமையை சொன்னனான். அவர் வெளிநாட்டில இருக்கிற தனக்கு தெரிஞ்சாக்களிட்ட கதைச்சு உதவி எடுத்து தெல்லாம் எண்டு சொன்னவர். பிறகு கனடாவில இருக்கிற சிரிஆர் றேடியோ ஆக்களோட கதைச்சு ஒப்பிறேசன் செய்யுறதுக்கெண்டு காசு வாங்கி தந்தவர். நான் இருந்த வீட்டில தண்ணி அள்ளுறதுக்கு ஒரு கிணறு இல்லை. பக்கத்து வீட்டில போய் அள்ள முடியாத உடல் நிலை அதால அந்த காசில நான் ஒரு கிணத்தை வெட்டிப்போட்டன். அதுக்குப் பிறகு அவர்களிட்ட ஒப்பிறேசனுக்கு எண்டு சாசு கேக்கிறது சரியில்லை எண்டு நான் வேதனையையும் தாங்கிக் கொண்டு இருந்தனான். எண்டாலும் கஜேந்திரன் அண்ணை பத்மினி அக்கா ஆக்கள் இடைக்கிடை என்னோட தொடர்பு கொண்டு கதைக்கிறவை. காசு உதவியள் செய்யுறவை.
ஒருவருசத்துக்கு முதல்ல கைகால் வேதனை எண்டு சொல்லி யாழ்ப்பணம் போய் டொக்டரை சந்திச்சனான். அப்ப டொக்டர் எக்ஸ்றே எடுத்துப் பாத்துப்போட்டு, என்ர கையிலயும் கால்லையும் வைச்சிருக்கிற பிளேற்ரில பூட்டியிருந்த ஆணியள் நாலைஞ்சு கழண்டுபோட்டுதாம். உடன ஒப்பிறேசன் செய்ய வேணும் எண்டு ஒரு வருசத்துக்கு முதல் டொக்டர் சொன்னவர். ஆனால் கஸ்ரத்தில நான் ஒப்பிறேசன் செய்ய வெளிக்கிடேல்ல.
அனால் வேதினை தாங்கேலாமல் கNஐந்திரன் அண்ணையோடையும், பத்மினி அக்காவோடையும் என்ர நிலைமையை சொல்லி கதைச்சனான்.
ஆவை என்ர கதையை கேட்டு இரக்கப்பட்டு இப்ப திருப்பவும் ஒப்பிறேசன் செய்யுறதுக்கு பிரான்சில இருக்கிற கிருபா அண்ணா இராசாத்தி அக்காவை தொடர்பு படுத்தி விட்டிருக்கினது. அவையள் வெளிநாட்டில உள்ள ஆக்களிட்ட கேட்டு உதவி எடுத்து தெல்லாம் எண்டு சொல்லி இருக்கினம்.
அந்த உதவி நிச்சயம் பெற்றுத் தருவம் எண்டு ராசாத்தி அக்கா சொன்னவா. அதோட நான் யாழ்ப்பாணம் வாறத்துக்கும் உதவி செய்தவா. அவையள் சொன்னபடியால ஒப்பிறேசனுக்கெண்டு நான் யாழ்ப்பாணம் வந்தனான். . டொக்டரை போய் சந்திச்சு வாற மாதம் 2 ஆம் திகதி ஒப்பிறேசனுக்கு டேற் எடுத்துப் போட்டன்.
07 மகேந்திரம் கலைவாணி(33)
முகவரி:- 250பி- அன்னைவேளாங்கன்னி வீதி, மாயவனூhர்
வட்டக்கச்சி
கணவர் செல்லத்தம்பி மகேந்திரன்(34) முன்னாள் போராளி என்ற குற்றச்சாட்டில் பொலநறுவையிலுள்ள புனர்வாழ்வு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இவரது சொந்தஇடம் மட்டக்களப்பு. 1996 இல் வவுணதீவில் துடையுடன் கால் துண்டிக்கப்பட்டது. மீண்டும் முள்ளிவாய்க்காலில் காயமடைந்துள்ளார்.
மிகவும் மோசமாக உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அடிக்கடி பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதி;க்கப்படும் நிலையில் உள்ளார். அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கணவனை சென்று பார்ப்பதற்கு வசதி இல்லாத காரணத்தால் அவரை சென்று பார்க்க முடியாத பரிதாபகரமான நிலையில் உள்ளார். குடும்பம் மிக மிக வறுமை. பிள்ளைகளுக்கு உணவுக்கும் , பிள்ளைகளை கற்பிப்பதற்கும் வசதியில்லாத நிலையில் கண்ணீரோடு வாழ்கின்றார்.
08. இராஐரட்ணம் தேவானந்தராஐ;
த.முகவரி:- துரை வீதி, தாவடி வடக்கு
முன்னாள் போராளியான இவர் போராட்டத்தில் காயமடைந்து முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இடுப்புக்கு கீழ் உணர்வு இல்லாமல் உள்ளார்.
மிகவும் வறுமை நிலையில் உள்ளார். உணவு மற்றும் மருத்துவ தேவைகளைவேநிறைவு செய்ய முடியாது பெரும் அவதியுறுகின்றார். அடிக்கடி வைத்தியசாலைக்கு சென்றுவர வேண்டிய கட்டாய தேவை உள்ளது. படுக்கைப் புண் ஏற்பட்டு சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ளார். அதற்கான பணவசதி இல்லாததால் வேதனையை தாங்கிக் கொண்டு இருக்கின்றார். ஒருதடவை வைத்தியசாலைக்கு சென்று வருவதற்கு ஆட்டோ செலவு அதிகம். அதனை விடவும் சலம் வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் பை, மருந்துக் குளிசைகள், சலம் மலம் வெளியேற்றவதற்கு பயன்படுத்தப்படும் nஐல், படுக்கைப் புண்ணுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பிறே, கோஸ், பன்டேச், பிளாஸ்ரர் என எல்லாவற்றுக்கும் அதிகம் செலவாகின்றது. இந்த செலவுகள் எதனையும் சமாளிக்க முடியாது பெரும் துன்பத்தை அனுபவிக்கின்றார்.
09. சந்தனம் சசிகுமார்(36)
த.முகவரி:- வன்னியசிங்கம் வீதி, தாவடி வடக்கு, கோண்டாவில்;
நி.மு:- பெரியசாளம்பன்,தொட்டியடி, ஒட்டுசுட்டான்
மனைவி:- சசிகுமார் கோகிலவதனி(30)
மகன் ச.பரன் (வயது 6) ஆண்டு-01
மகள் ச.நிகல்யா(2.5வயது)
1994 ஆம் ஆண்டு காயமடைந்து முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டது. அதனால் கழுத்துக்கு கீழ் உணர்வு இல்லை. 2004 ஆம் ஆண்டளவில் மீண்டும் உணர்வு திரும்பியிருந்தது. முள்ளிவாய்க்காலில் மீண்டும் காயப்பட்டமையால் மீண்டும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டுள்ளது. குடுமு;பம் மிக மிக வறுமை. மிகவும் வறுமை நிலையில் உள்ளனர்.
அடிக்கடி வைத்தியசாலைக்கு சென்றுபடுக்கைப் புண்ணுக்கு மருந்து கட்ட வேண்டியுள்ளது. ஒருதடவை வைத்தியசாலைக்கு சென்று வருவதற்கு அதிகளவு ஆட்டோ செலவு ஏற்படுகின்றது. அதனால் புண்ணுக்கு மருந்து கட்டாமல் அவரது உடல் நிலை மோசமடைந்து கொண்டு செல்கின்றது. அதனை விடவும் சலம் வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் பை, மருந்துக் குளிசைகள், சலம் மலம் வெளியேற்றவதற்கு பயன்படுத்தப்படும் nஐல், படுக்கைப் புண்ணுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பிறே, கோஸ், பன்டேச், பிளாஸ்ரர் என எல்லாவற்றுக்கும் அதிகம் செலவாகின்றது. இந்த செலவுகள் எதனையும் சமாளிக்க முடியாது பெரும் துன்பத்தை அனுபவிக்கின்றார்.
10. சத்தியசீலன் மகேந்திரவர்மன்
முகவரி:- முனைக்காடு வடக்கு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
கிழக்கு மாகாணத்தில் 2006-2007 காலப்பகுதியில் சிறீலங்கா இராணுவம் மேற்கொண்ட ஆக்கரமிப்பு இராணுவ நடவடிக்கையின்போது சொத்துடமைகள் அனைத்தையும் இழந்து காயமடைந்துள்ளனர். மிகவும் மோசமான வறுமை நிலையில் உள்ளனர்.
11. திருச்செல்வம் சிவமலர்
முகவரி:- கிருஸண்ணபுரம், கிளிநொச்சி
2001ம் ஆண்டு போராட்டத்தில் காயமடைந்து முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இடுப்புக்கு கீழ் உணர்வு இழந்த நிலையில் உள்ளார்.
குடும்பம் மிகவும் வறுமை நிலையில் உள்ளது. அடிக்கடி வைத்தியசாலைக்கு சென்றுபடுக்கைப் புண்ணுக்கு மருந்து கட்ட வேண்டியுள்ளது. ஒருதடவை வைத்தியசாலைக்கு சென்று வருவதற்கு அதிகளவு ஆட்டோ செலவு ஏற்படுகின்றது. அதனால் புண்ணுக்கு மருந்து கட்டாமல் அவரது உடல் நிலை மோசமடைந்து கொண்டு செல்கின்றது. அதனை விடவும் சலம் வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் பை, மருந்துக் குளிசைகள், சலம் மலம் வெளியேற்றவதற்கு பயன்படுத்தப்படும் nஐல், படுக்கைப் புண்ணுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பிறே, கோஸ், பன்டேச், பிளாஸ்ரர் என எல்லாவற்றுக்கும் அதிகம் செலவாகின்றது. இந்த செலவுகள் எதனையும் சமாளிக்க முடியாது பெரும் துன்பத்தை அனுபவிக்கின்றார்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1597

No comments:
Post a Comment