தமிழர் பகுதிகளில் இலங்கை அரசாங்கமும் இராணுவமும் இணைந்து மேறகொண்டுவரும் நில அபகரிப்பை எதிர்த்து நாடு தழுவிய வகையில் சாத்வீகப் போராட்டம் ஒன்றை நடாத்துவதற்கு தமிழரசுக்கட்சியின் கொள்கைபரப்புச் செயலர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.இம்மாத இறுதியில் கிளிநொச்சியின் முறிகண்டியில் இப்போராட்டமானது ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக நாட்டின் சகல இடங்களுக்கும் இது விஸ்தரிக்கப்படும் என்றும் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.’
தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கு பகுதிகளில் அண்மைக்காலமாக இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட வகையில் நில அபரிகரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழ்ர் பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன.
தமிழ் மக்களது காணிகளை இராணுவம் அபகரித்து மக்களை நடு வீதியில் விட்டு வைத்திருக்கின்றது.
முறிகண்டியில் இராணுவத்தினால் பறிக்கப்பட்ட பொது மக்களது காணிகளை திரும்ப பெற்றுத்தரக் கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு இராணுவப் புலனாய்வாளர்கள் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் மிகவேகமாக தமிழர் வாழ்விடங்களை அழிக்கும் செயற்றிட்டத்தை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வருகின்றது. இதனால் தமிழர்களின் வாழ்வியலானது கேள்விக்குறியாகியுள்ளது
எனவே இவற்றை கண்டித்து சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு இப்போராட்டத்தை மேற்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment