இலங்கையிலும் மாலைத்தீவிலும், விஞ்ஞானம், மானுடவியல், பொறியியல் மற்றும் கலைத்துறைகளில் திறமையான சில மேதாவிகள் உள்ளனர். இவர்கள் 'மேதாவிலாச திறமையாளர் குடிவரவு பாதை' என்னும் விசேட ஏற்பாடு வழியாக ஐக்கிய இராச்சியத்தில் வேலை செய்யும் சாத்தியத்தை ஆராய்ந்து பார்க்கும்படி நான் விதந்துரைக்கின்றேன் என இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய உயர்ஸ்தானிகர் கூறியதாக கொழும்பிலுள்ள பிரத்தானிய உயர்ஸ்தானிகரலயம்; கூறியுள்ளது.
இந்த விசேட ஏற்பாட்டிற்கு அமைய ஓகஸ்ட் 2011 இல் ஏப்ரில் 2013 வரையான காலப்பகுதிக்கு 1000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின்கீழ் விஸாவுக்கு விண்ணப்பிப்போருக்கு வேலை வழங்குநரின் அனுசரணை தேவை இல்லை. இவ்வாறு பிரித்தானியாவுக்கு வருவோருக்கு முதலில் 3 வருடம் 4 மாதங்களுக்கு விஸா வழங்கப்படும். தேவைக்கேற்ப விஸாக்காலம் நீடிக்கப்படும். 5 வருட பிரித்தானியாவில் இவர்கள் தங்கிவிட்டால் நிரந்தர வதிவுரிமை கோர முடியும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப முகவரி: http://www.ukba.homeoffice.gov.uk/sitecontent/applicationforms/pbs/t1-exceptional-talent-guide.pdf
No comments:
Post a Comment