தம்புத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பிரதேச மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் கூட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகமும் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :-
விபத்தின்போது பெண் பாதசாரி ஒருவர் பலியான சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான வாகன சாரதியை விடுதலை செய்ய பொலிஸார் எடுத்த முடிவைக் கண்டித்து தம்புத்தேகம பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்தின் மீது கல் வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து விபத்தில் பலியான பெண்ணின் சடலத்துடன் பொலிஸ் நிலையத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்ற பிரதேசவாசிகள், தமக்கு நியாயம் வேண்டும் என கோஷமிட்டதுடன், கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது சில ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் நிலையத்தின் வாயிற்கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்துள்ளனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுத்தாக்குதல் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கண்ணீர் புகைகுண்டுத் தாக்குதல் மேற்ககொண்டதானலேயே ஆர்ப்பாட்டக்காரர்கைளக் களைக்க முடிந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விபத்துடன் சம்பந்தப்பட்டதாகக் கருதப்பட்ட சந்தேக நபரான சாரதியை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது. |
No comments:
Post a Comment