பொலிஸ் சீருடையில் வந்தவர்களினால் லண்டன் தமிழர் வீட்டில் பட்ட பகலில் கொள்ளை !video
பிரித்தானியாவின் புறநகர்ப்பகுதியான எல்த்தம் என்னும் இடத்தில், பட்டப்பகலில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மிகவும் சன நெரிசல் மிக்க இடத்தில் அமைந்துள்ள தமிழரின் வீட்டையே குறிப்பிட்ட மூவர் கொள்ளையடித்துள்ளனர். நேற்றைய தினம்(04.10.2012) மதியம் சுமார் 11.30 மணியளவில், தமிழர் ஒருவரின் வீட்டுக் கதவை பிரித்தானியப் பொலிசாரின் சீருடையில் வந்த இருவர் தட்டியுள்ளனர். அங்கிருந்த வயதான அம்மா ஒருவர், கதவைத் திறந்துள்ளார். தாம் பொலிசார் எனக்கூறி உள்ளே நுளைந்த அவ்விருவரும், குறிப்பிட்ட அம்மாவின் தலைமுடியைப் பிடித்து, அவரது வாயைப் பொத்தி மேல் மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே அவரது கணவரையும் கன்னத்தில் பலமாகத் தாக்கி அவ்விருவரையும், ஒரு இடத்தில் முடக்கியுள்ளனர்.
இவ்விருவரும் வெள்ளை இனத்தவர்கள் என்று அறியப்படுகிறது. இதேவேளை முகமூடி அணிந்த மூன்றாவது நபர் ஒருவர்( இவர் ஆசிய இனத்தவர்) நுளைந்து நகைகள் மற்றும் பணத்தை எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டு அவர்களை மிரட்டியுள்ளனர். இறுதியில் அந் நபரே தேடுதலை நடத்தி பல நகைகளை எடுத்துக்கொண்டு மூவருமாக அங்கிருந்து அகன்றுள்ளனர். அதிர்சியில் இருந்து மீளாத இத் தம்பதியினர், இது ஒரு திட்டமிடப்பட்ட கொள்ளைச் சம்பவம் என்று தெரிவித்துள்ளனர். காரணம் என்னவென்றால், தாம் தமது நகைகளை பாங் லாக்கரில் வைத்திருந்ததாகவும், சமீபத்தில் ஒரு கல்யாணவீட்டுக்குச் செல்வதற்காக தாம் அதனை வீட்டிற்கு எடுத்து வந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதனை அவதானித்தே கள்வர்கள், செயல்பட்டுள்ளனர். இதில் தமிழர் சிலர் பிண்ணனியில் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இத் தமிழர் சில வெள்ளை இனத்தவர்களோடு இணைந்தே பொலிஸ் சீருடையில் இக் கொளையில் ஈடுபட்டுள்ளனர். எனவே இக் கொள்ளைக் கும்பலை பொலிசார் பிடிக்கும்வரை, லண்டனில் உள்ள தமிழ் மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை: பொலிஸ் சீருடையில் கொள்ளைச் சம்பவம் !

No comments:
Post a Comment