Translate

Thursday, 28 June 2012

சி.சிறிதரன் குற்றப்புலனாய்வால் விசாரணை!


வெளிநாட்டு தமிழ் இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியிருந்த சமகால அரசியல் நிலைமைகள் குறித்த செவ்வியொன்று தொடர்பாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்று விசேட குற்றப்புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்பட்டுள்ளார்.

Wednesday, 27 June 2012


போராட்டங்கள் என்ன செய்யும்? 

'வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்...' ஆங்கிலத்தில் அறியப்படும் சிறந்த பழமொழி ஒன்றின் அழகான தமிழாக்கம் இது. இனப்போர் முடிந்து மூன்று ஆண்டுகள் முழுமையுமாக முடிந்த பின்னர், இன்றைய சூழலிலும் இலங்கை தமிழ் மக்களுக்கும் அவர்களின் அரசியல் தலைமைக்கும் வெகுவாக பொருந்தும் விடயம் இது. அதிலும் குறிப்பாக, அரசிற்கு எதிராக சர்வதேச சமூகம் முன்னெடுக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த நடவடிக்கை அளித்துவரும் ஊக்கத்தின் அடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது மொட்டவிழும் மக்கள் போராட்டங்களுக்கும் இது பொருந்தும்.

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகள் கலைப்பு

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளை இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்  இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; மன்றில் ஆஜராகுமாறு சிவாஜிலிங்கத்துக்கு அழைப்பு


நீதிமன்றக் கட்டளையை வீதியில் கிழித்து எறிந்து, நீதிமன்றத்தை அவமதிப்புக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அரசியல் பிரிவுத் தலைவருமான சிவாஜிலிங்கத்திற்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா இன்று புதன்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்தார். 

அதிர்வு இணையத்தை இலங்கை அரசு இலங்கையில் தடைசெய்துள்ளது !
அதிர்வு இணையத்தை இன்று முதல் இலங்கையில் பார்க்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசானது அதிர்வு இணையத்தை இலங்கையில் முற்றாகத் தடைசெய்துள்ளது. இலங்கை அரசின் மனிதப்படுகொலை, இன அழிப்பு , போர்குற்றங்கள் என்பன தொடர்பாக பல ஆதாரங்களை நாம் வெளியிட்டுள்ளோம். சமீபத்தில் பிரித்தானியா வந்து, பெருத்த அவமானத்துடன் திரும்பிய மகிந்தர், தனக்கு எதிரான போராட்டங்களை ஊக்குவித்தது யார் என்று அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு கோரியிருந்தார் என்ற செய்திகள் வெளியானது யாவரும் அறிந்ததே. பிரித்தானியாவில் தங்கியுள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரிகள் இருவர் ஒரு அறிக்கையை கடந்த வாரம் சமர்பித்துள்ளனர் எனவும் அறியப்படுகிறது.

இதனை அடுத்து அதிர்வு இணையத்தை இலங்கையில் தடைசெய்ய, பாதுகாப்பு அமைச்சு, ISP இன்ரர் நெட் வழங்குணருக்கு உத்தரவிட்டுள்ளது.

மனிக்பாமுக்குக் கொண்டு செல்லப்பட்ட 19 குடும்பங்களின் நிலை ?

திருமுறிகண்டியில் இருந்து இரவோடு இரவாக வவுனியா மனிக்பாம் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட 19 குடும்பங்களும் அங்கு போதிய வசதிகளும் இருப்பிடங்களும் இன்றி அந்தரிக்க விடப்பட்டுள்ளனர்.

இந்து மகாவித்தியாலயத்தில் இருந்து 3 பஸ்களிலும் 3 லொறிகளிலுமாக நேற்றிரவு 7.30 மணியளவில் ஏற்றப்பட்ட மக்கள், இரவு 11 மணியளவில் மனிக்பாம் முகாமில் இறக்கப்பட்டனர்.

Tuesday, 26 June 2012


தமிழீழம் அமைக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!

தமிழீழம் அமைக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!


இலங்கையில் தமிழீழம் அமைக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம்
 நிறைவேற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
தமிழக வாழ்வுரிமை கட்சியின் முதல் அரசியல் விழிப்புணர்வு மாநாடு கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்திருந்தனர். 

உரிமைகளை அடையும் வரை ஓயமாட்டோம்; போராடுவோம் முறிகண்டியில் மாவை சூளுரை
news
 எமது உரிமைகளை அரசும், இராணுவமும், பௌத்த குருமாரும் அழித்துவருகின்றனர். இதற்கெதிராக நாங்கள் ஜனநாயக ரீதியிலான பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

தமிழர் பகுதிகளில் விகாரைகள் அமைப்பது இனவாதச் செயல்தேசிய பிக்குகள் முன்னணி காட்டம்
news
 தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும் எனச்சுட்டிக் காட்டியுள்ள தேசிய பிக்குகள் முன்னணி, யுத்தம் முடி வடைந்துள்ள போதிலும் தமிழர்களின் வாழ்க்கை இன்னும் இருண்ட யுகத்திலேயே இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.

  வடக்கு தேர்தலை வலியுறுத்தவோ அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கவோ மேனன் வரவில்லை


வட மாகாண தேர்தலை வலியுறுத்தவோ அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு அழுத்தம் கொடுக்கவோ இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் இலங்கைக்கு வரவில்லை. மாறாக வழமையானதும் பொது வானதுமான விஜயமாகவே அவரின் விஜயம் காணப்படும் என்று அரசாங்கம் தெரிவித்தது.


இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் சிறந்த இராஜ தந்திர உறவுகள் காணப்படுகின்றன என்றும் அரசாங்கம் குறிப்பிட்டது. 


கனடாவில் சிறைத்தண்டனை பெறும் அகதிள் நாடு கடத்தப்படலாம்!

கனடாவில் சிறைத்தண்டனை பெறும் அகதிள் நாடு கடத்தப்படலாம்!

கனடிய குடியேற்றச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்றை கனேடிய அரசு அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சட்டத்தின் மூலம் ஆறு மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை பெற்ற அகதிகள், நிரந்தர வாழ்விட உரிமை பெற்றவர்கள் மற்றும் விருந்தினர்களை எளிதாக நாடு கடத்த முடியும். 

மேலும் இவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு எவ்வித அனுமதியும் கிடையாது. இதுதவிர கனடாவுக்குள் அனுமதிக்கப்பட முடியாதவர்கள், நாட்டின் நலனுக்கு எவ்வித பிரச்சினையையும் ஏற்படுத்த மாட்டார்கள் என்று கருதினால் அமைச்சர்கள் அவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கும் இந்த புதிய சட்டம் வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது
.

யூன் 26ல் அமெரிக்கா - கனடா - பிரான்ஸ் - சுவிஸ் ஆகிய நாடுகளில் நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


tgte-june26_2012.jpg
நாளை செவ்வாய்கிழமை (26-06-2012) தமிழர் தாயகத்தின் திருமுறிகண்டிப் பகுதியில் முன்னெடுக்கப்படும் நில  அபகரிப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு வலுவூட்டும் வகையில், அமெரிக்கா - கனடா - பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டங்களில் அனைவரையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

நாங்களும் ஆர்ப்பாட்டம் செய்தோம் என்றிருக்க வேண்டாம்


யாழ்ப்பாணம்  - தமிழர் தாயகத்தில் நடந்து கொண்டி ருக்கும் நில அபகரிப்புக் குறித்த பல் வேறு விடயங்கள் தொடர்பில் தமி ழ்த் தரப்புக்கள் எதிர்ப்புக்களைத் தெரி வித்து வருகின்றன.தமிழ்த் தரப்புக் கள் தெரிவித்து வருகின்ற எதிர்ப்பு க்கள் என்பது, அரசாங்கத்தை திசை திருப்புமென்றோ அல்லது நிலஅபகரி ப்பை அரசு நிறுத்துமொன்றோ எதிர் பார்க்க முடியாது.

யூன்-26 : தாயகப் போராட்டத்திற்கு வலுவூட்டுவோம் : வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அழைப்பு !

http://www.youtube.com/watch?v=vdhBvISFuLw&list=UU5FJYFVgMQ2nTU6L9QdM7rg&index=2&feature=plcp
http://youtu.be/vdhBvISFuLw

யூன்26ல் தமிழர் தாயக தமிழர் தலைவர்களால், ஒன்றினைந்து முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு உந்துசக்தியாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பினை ஏற்று, புலம்பெயர் நாடுகளில் அணிதிரளவேண்டுமென, உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

திருமுறிகண்டியில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மக்கள் வெள்ளம் ஆர்ப்பரிப்பு- “எமது நிலம் எமக்கு வேண்டும்”


இராணுவம், காவற்றுறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் என அரச இயந்திரத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியது.
திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயச் சூழலில் காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கு கொண்டு தமிழர் நிலம் வன்பறிக்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பரித்து வருகின்றனர்.

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு சமாந்திரமாக, தொடர்சியான போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கின்றது.



இலண்டனில் யூன் 26ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4:30மணிக்கு ஆர்ப்பாட்ட ஒன்று கூடல்
இடம்: 10, Downing Street, London, SW1A 2AA

யூன் 26ல் தமிழர் தாயக தமிழர் தலைவர்களால், ஒன்றினைந்து முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு உந்துசக்தியாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பினை ஏற்று, புலம்பெயர் நாடுகளில் அணிதிரளவேண்டுமென, உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.


எங்களுக்கு எங்கட காணி நிலம் வேண்டுமென, வன்னியில் இருந்து ஒலித்திருக்கும் தாயொருவரின் குரல், சிங்கள அரசினால் தமிழர் தாயகத்தில் அபகரிக்கப்படும் நிலங்களது வலியினை வெளிப்படுத்தி நிற்கின்றது.

Monday, 25 June 2012

,நல்லவர்களை மட்டும் சோதனையும் வேதனையும் செய்கிறீர்


உங்களை அந்தக்கடவுளால் கூட திருத்த முடியாது!!பொய் செல்ல சிலர் அதற்கு ஆமா போடா சிலர்,கடவுளே அப்பாவிகளை இவர்களிடமிருந்து காப்பாற்றும்,இவர்களின் பொய்களை நம்பி சோம்பேறிகளும் மூடர்களும் நேற்று இருந்ததைவிட இன்று பெருகிவிட்டனர்,காரணம் விஞ்ஞானம் தந்த ஊடகங்களை இவர்கள் துஷ்பிரயோகம் செய்வதே!!



இவர்கள் தமது இலக்கை அடைய உம்மையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றுகிறார்கள்,இதில் கெட்டவரிடம் நீர் இலகுவில் ஏமாந்து போகிறீர்,,நல்லவர்களை மட்டும் சோதனையும் வேதனையும் செய்கிறீர்,ஓ!! இவர்களிடம் அதிகம் தொடர்பில் உள்ளதால் இவர்களின் குணம் உமக்கும் வந்துவிட்டதோ??

நாளை மாலை லண்டனில் பாரிய ஆர்பாட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது !

நாளை மாலை லண்டனில் பாரிய ஆர்பாட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது !
Date: 26.06.2012
Time: 5.00 pm to 7.30pm
Venue : 10 Downing Street, London, SW1A 2AA
தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும், இலங்கை இராணுவத்தினர் நில அபகரிப்பைச் செய்து வருகின்றனர். இந் நிலை நீடித்தால் இன்னும் சிறிது காலத்தில் வடகிழக்குப் பகுதியில் இராணுவத்திற்கும், சிங்களவர்களுக்குமே காணிகள் இருக்கும் நிலை தோன்றும். பரம்பரை பரம்பரையாக தமிழர்கள் வாழ்ந்துவரும் பூர்வீக நிலங்கள் பறிபோகும் அபாயம் தோன்றியுள்ளது. இதனை தடுக்க பிரித்தானியா தலையிடக்கோரி, நாளை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்களின் இல்லம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த நாடு கடந்த தமிழீழ அரசு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இதற்கான பொலிஸ் அனுமதியையும் அவர்கள் சற்று நேரத்துக்கு முன்னதாகப் பெற்றுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர், அதற்கு சற்றும் குறையாத வேறுவடிவிலான பேரவலத்தை தமிழர் தாயகம் தற்போது எதிர்நோக்கியுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர், அதற்கு சற்றும் குறையாத வேறுவடிவிலான  பேரவலத்தை தமிழர் தாயகம் தற்போது எதிர்நோக்கியுள்ளது. 

தமிழர்களின் இருப்பை கேள்விக் குறியாக்குவதுடன், தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை இருந்த இடம்தெரியாமல் தொலைந்து மறைந்துபோய்விடச் செய்யும், திட்டமிட்ட நாசகார நகர்வை ராஜபக்ஸ்ச தலைமையிலான பௌத்த சிங்களப் பேரினவாத அரசு தீவிரமாக மேற்கொண்டுவருகின்றது. 

தாயகப் போராட்டத்திற்கு வலுவூட்டுவோம்: கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அழைப்பு!


தாயகப் போராட்டத்திற்கு வலுவூட்டுவோம்: கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அழைப்பு!


தமிழர் தாயக பிரதேசத்தில் நாளை முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு உந்துசக்தியாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பினை ஏற்று, புலம்பெயர் நாடுகளில் அணிதிரளவேண்டுமென உலகத் தமிழர் பேரவையின் தலைவர் கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அழைப்பு விடுத்துள்ளார்.

முறிகண்டி மக்களைக் கதறக் கதற மீண்டும் முகாம்களுக்கு ஏற்றிய இராணுவம்: போராட்டம் நிறுத்தப்படாது பா.உ. சிறீதரன்


முறிகண்டி மக்களைக் கதறக் கதற மீண்டும் முகாம்களுக்கு ஏற்றிய இராணுவம்: போராட்டம் நிறுத்தப்படாது பா.உ. சிறீதரன்
திருமுறிகண்டியில் மீளக்குடியமர்விற்காக காத்திருந்த பொது மக்களை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து வலுக்கட்டயமாக வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நெடிய பனை மரங்கள், சாட்ச்சி...


எம்மை தாய் தந்தையர் இல்லாதவராக்கி ஒரு வாய் சோற்றுக்கு அலைய விட்ட பாவத்தை எந்த கங்கையில் குழித்து நீ கழுவுவாய்? 
வட்டியும் முதலுமாய் பாவம் உன்னை சூழ்ந்து அழிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.


நிலவற்ற வானில், நீடித்து செல்கிறது

நெடிய பனை மரங்கள்,
சாட்ச்சி...

ஈழமண்… இப்போது மயான பூமி! – ஆனந்த விகடன்



ஈழமண்… இப்போது மயான பூமி! – ஆனந்த விகடன்

எத்தனை பூச்செடிகள் வைத்து மறைத்தாலும், மயானக் கரை நாற்றம் மறையாது. 30 ஆண்டுகளாக யுத்த பூமி… 3 ஆண்டுகளுக்கு முன் மரண பூமி… இன்று ஈழம்… மயான பூமி!
சீனத்து சென்ட், ரஷ்ய அத்தர், கியூபா ஜவ்வாது என எதைக் கொண்டுவந்து ராஜபக்சாக்கள் தெளித்தாலும்… நள்ளிரவில் எழும் இரத்த ஓலங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அரண்டுகிடக்கும் அரசாங்கத்துக்கு இருண்டதெல்லாம் புலியாகத் தெரிகிறது. ஒரே ஒரு ஆள் புலிக்கொடியை, மே தின ஊர்வலத்தில் காட்ட… கொழும்பில் வெடி வெடித்த அளவுக்குக் குமுறல்கள். (இதை அரசாங்கத்தின் செட்- அப் என்று சொல்பவர்களும் உண்டு! )
உலக நாடுகளில் எது நண்பன், எது எதிரி என்பதைக் கண்டுபிடிப்பது மட்டுமே இன்றைய இலங்கை அரசாங்கத்தின் வேலையாகிவிட்டது.

ஈழத் தமிழர்களின் அழிவுக்கு முகர்ஜியே முழுக் காரணம் நாஞ்சில் சம்பத் காட்டம்


news
 "எல்லாத் துயரச் சம்பவங்களுக்கும் துணை நின்ற பிரணாப் முகர்ஜி, இந்திய நாட்டின் ஜனாதிபதியாவது தமிழர்களுக்குத் துயரம்,'' என மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.
 
இராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் கூறியவை வருமாறு:
முல்லைப்பெரியாறு அணைக்காகத் தொடர்ந்து வைகோ போராடி வருகின்றமையைப் பொறுக்க முடியாத கேரள அரசு, தற்போது சிறுவாணி, அமராவதி நதிகளின் தண்ணீரைத் தேக்கி வைக்கிறது. இதைக்கண்டித்து கோவையில் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும். பிரணாப்பை இந்தியாவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது ஊழல் திமிங்கிலங்களுக்கு மகிழ்ச்சியான விடயம். 

இனப்படுகொலைக்கு சுயாதீன விசாரணை கோரி சென்னையில் பேரணி! – மே 17 இயக்கம் அழைப்பு!


இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை தொடர்பாக சர்வதேச அளவிலான சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தின் தலைநகரான சென்னை மெரினா கடற்கரையில் ஒன்று திரளுமாறு பொதுமக்களுக்கு மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்துவதாயின் 13ஆவது திருத்தத்தினை அமுல்படுத்த வேண்டும்: ஐ.தே.க. _


  இந்தியாவுடன் நட்புறவை வலுப்படுத்த வேண்டுமென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து உண்மையானால் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும். இல்லா விட்டால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி அதனை இரத்து செய்ய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அதனை விடுத்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் இணைந்து கூட்டறிக்கை விடுப்பதால் பலனில்லையென்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. 

அரசியல் தீர்வுத் திட்டம் என்ன? முதலில் மக்களுக்குத் தெளிவுபடுத்துக! – இதயச்சந்திரன்


அரசியல் தீர்வுத் திட்டம் என்ன? முதலில் மக்களுக்குத் தெளிவுபடுத்துக! – இதயச்சந்திரன்

யாழ். மே தினக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் சிங்கக்கொடி பிடித்த விவகாரம், தென்னிலங்கையில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதைத் தெரிந்துதான் செய்தேன் என்று அடம்பிடிப்பதால் சிங்களத்திற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

கொடி பிடித்து நல்லிணக்கத்தை உருவாக்கலாமென்று சம்பந்தன் கற்பிதம் கொண்டாலும் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேத்தானந்த தேரர் விடுவதாக இல்லை.

மனிதக் கொலை, கற்பழிப்பு செய்த அமரேவுக்கு மாத்திரம் புதிய நீதியா..?


மனிதக் கொலை, கற்பழிப்பு செய்த அமரேவுக்கு மாத்திரம் புதிய நீதியா..?

மனிதக் கொலை, கற்பழிப்பு, கொள்ளை போன்ற பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஜுலம்பிட்டி அமரே எனப்படும் மீகஹகமகே அமரசிறி கடந்த 19 ஆம் திகதி தங்காலை நீதிமன்றில் ஆஜரான போது அப்போது நீதவானால் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கு அமரேவுக்காக இடை நடுவில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற நடைமுறைக்கு அமைய இவ்வாறு வழக்கை இடைநடுவில் கைவிட முடியாது.

Sunday, 24 June 2012

யாழில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் வாடகை குடியிருப்பாளர்கள்!


யாழ். மாவட்டத்தில் வாடகை வீடுகளில் குடியிருப்போர் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக வாடகைக் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பீரிஸினால் அமெரிக்காவிடம் கையளித்த ஆவணம் குறித்து சண்டேலீடர் சவால்!


இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில், அமெரிக்காவிடம் செயன்முறை திட்டம் எதனையும் கையளிக்கவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்து வருகிறது.

எவ்வித மிரட்டல்கள் வந்தாலும் பயப்பட போவதில்லை! திருமுறிகண்டி போராட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும்! சிறிதரன் எம்.பி.


எவ்வித மிரட்டல்கள் வந்தாலும் பயப்பட போவதில்லை! திருமுறிகண்டி போராட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும்! சிறிதரன் எம்.பி.

சிங்கள இராணுவத்தினால் தமிழரின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிரான போராட்டம் திட்டமிட்டபடி திருமுறிகண்டி பகுதியில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை  நடைபெறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐநாவில் ஆராய ஆயத்தம்


இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐநாவில் ஆராய ஆயத்தம்

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐநா - ஜெனீவாவில் ஆய்வு ஒன்றை நடத்த தயாராகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய கால இடைவெளிக்குள் விமர்சனம் என்ற திட்டத்தில் பல நாடுகளுடன் சேர்ந்து இலங்கையும் பங்குபற்றும் எனவும் இத்திட்டம் இந்த ஆண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் இடையே ஜெனீவாவில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோட்முண்ட் மாநகர சிவன்கோவில் கொடியேற்ற திருவிழா!


siva-drawing.jpg
டோட்முண்ட் மாநகர சிவன்கோவில் கொடியேற்ற திருவிழா
23.06.2012

மேலதிக விபரங்கள் இங்கே

கடற்படையினரால் மீள்குடியேறிய மக்கள் இரவோடு இரவாக அச்சுறுத்தி விரட்டி அடிப்பு

sri-lanka-cp-RTR24H2D
மன்னார் பேசாலை பகுதியில் அமைந்துள்ள பற்றிமா வீட்டுத்திட்டத்தில் மீள்குடியேறியிருந்த குடும்பங்களைக் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடற்படையினர் அச்சுறுத்தி பலவந்தமாக வெளியேற்றியுள்ளனர்.

இலங்கையில் வழிபாட்டுத் தலங்கள் தகர்ப்பு! கத்தோலிக்க குருமார் கொலை! தமிழக மத தலைவர்கள் கண்டனம்!


இலங்கையில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதற்கு தமிழக அனைத்து மத தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னையில் ஆர்ச் பிஷப் ஏ.எம்.சின்னப்பா, பேராசிரியை சரஸ்வதி, இந்தியன் தவுகித் ஜமாத் தேசிய தலைவர் எஸ்.எம்.பாகர், தேசிய லீக் கட்சி தலைவர் பஷீர், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஐதர்அலி, தமிழக இந்து துறவியர் பேரவை அமைப்பாளர் சுவாமி சதா சிவானந்தா உள்ளிட்ட அனைத்து மத தலைவர்கள் கூட்டாக பேட்டி அளித்தனர்.

காவல்துறை மீது 'மேலிடத்து அழுத்தம்': மூத்த அமைச்சர் குற்றச்சாட்டு


மூத்த அமைச்சர் அதாவுத செனவிரட்னஇலங்கையில் நேற்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் சரணடைந்து ஒரு மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட மூத்த அமைச்சர் அதாவுத செனவிரட்ன, தன் மீதான நடவடிக்கைகளுக்கு 'மேலிடத்து அழுத்தங்கள் தான் காரணம்' என்று கூறுகிறார்.,,,,,,,,,,,,,, read more 

இலங்கையுடன் முட்டி மோதி அதனை ஒரு கை பார்ப்பதற்கு ஐ.நா.

uno-logo
இலங்கை தொடர்பான விடயத்தில் இனிமேல் இறுக்கிப் பிடிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தயாராகி வருகின்றது என்பது ஐ.நாவின் முகவர் அமைப்புக்கள் மேற்கொண்டு வரும் அண்மைக்கால செயற்பாடுகளிலிருந்து தெட்டத் தெளிவாகிறது.

ஈழத் தமிழர்களை காக்க இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம்கள் இணைந்த புதிய அமைப்பு துவக்கம்


சென்னை: ஈழத் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை கண்டிக்க இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் சேர்ந்து தமிழ் மக்கள் மன்றம் என்ற புதிய அமைப்பை சென்னையில் துவங்கியுள்ளனர்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் சேர்ந்து தமிழ் மக்கள் மன்றம் என்ற புதிய அமைப்பை சென்னையில் துவங்கியுள்ளனர். இந்த அமைப்புக்கு சென்னை மயிலை பேராயர் ஏ.எம். சின்னப்பா தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராஜபக்சேவுக்கு தமிழக மதத் தலைவர்கள் கண்டனம்!


இலங்கையில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதற்கு  தமிழக அனைத்து மத தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக சென்னையில் ஆர்ச் பிஷப் ஏ.எம்.சின்னப்பா, பேராசிரியை சரஸ்வதி,  இந்தியன் தவுகித் ஜமாத் தேசிய தலைவர் எஸ்.எம்.பாகர், தேசிய லீக் கட்சி தலைவர்  பஷீர், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஐதர்அலி, தமிழக இந்து துறவியர்  பேரவை அமைப்பாளர் சுவாமி சதா சிவானந்தா உள்ளிட்ட அனைத்து மத தலைவர்கள்  கூட்டாக அளித்த பேட்டியில்,

பொய்த் தகவல்களை கூறி மன்மோகன் சிங்கை ஏமாற்றிய ராஜபக்ச

பிரேசிலில் இந்தியப் பிரதமரைச் சந்தித்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச பொய்யான தகவல்களைக் கூறி ஏமாற்றியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மன்மோகன், ராஜபக்ச சந்திப்பில் பேசப்பட்டது என்ன என்ற தகவலை இந்திய அயலுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஈழத்தமிழர் இனப்படுகொலை: போர்க்குற்றங்களை காண்பிக்கும் புதிய சாட்சியங்கள்


சரணடையும் தமது எதிரிகளை சாதாரண பொதுமக்கள் போல் நடாத்தப்படும் பண்பு ஏனைய உலக நாடுகளில் காணப்படுகின்றது. ஆனால் இலங்கையில் அவ்வாறானதொரு மனிதப் பண்பு காணப்படவில்லை என Salem-News.com இணையத்தின் செய்தியாளர் Tim King எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
அவர் எழுதியுள்ள கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில்,................. read more 

இலங்கைத் தூதரகங்களில் விலை மாதர்களாக்கப்படும் பணிப்பெண்கள்!


இலங்கைத் தூதரகங்களில் விலை மாதர்களாக்கப்படும் பணிப்பெண்கள்!

இலங்கைக்கு அதிக அந்நிய செலாவாணியை ஈட்டிக் கொடுக்கும் துறைகளின் ஊழியர்கள் வரிசையில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மத்திய கிழக்கு நாடுகளில் பணிப் பெண்கள் ஈட்டித்தரும் அந்நிய செலாவாணி ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும். மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கைப் பணிப்பெண்கள் நிர்க்கதியாகினர். நிர்க்கதியாகும். பெண்கள் அவர்களது வீட்டு உரிமையாளர்களால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர். அதன் பின்னர் பாதுகாப்புத் தேடி தூதரகங்களுக்கு வரும் பெண்களின் கதையோ எரிகாயங்களுடன் அடுப்பில் விழுந்த கதையாகிவிட்டது.

விடுதலைப்புலி ஆதரவு அமைப்புக்கள் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பிரசாரம்



ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சில அமைப்புக்கள் இலங்கைக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது திவயின பத்திரிகை.

யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீது வழக்குத் தொடருவேன்: மாவை சேனாதிராசா


நீதிமன்றில் எமக்கெதிராக பொய் வழக்குத் தாக்கல் செய்தமைக்கும், எமக்கு அவமானம் ஏற்படுத்தியமைக்கும் எதிராக யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீது வழக்குத் தொடரப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்திருக்கின்றார்.

LLRC பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை


LLRC பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கை பரிந்துரைகளை அமுல்படுத்தவது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எவ்வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு இலங்கை அளித்த வாக்குறுதிகள் பற்றிய தகவல் அம்பலம்


அமெரிக்காவிற்கு இலங்கை அளித்த வாக்குறுதிகள் பற்றிய தகவல் அம்பலம்
அமெரிக்க அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் பற்றிய தகவல் அம்பலமாகியுள்ளன.
 
அண்மையில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர்ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர், அந்நாட்டு ராஜாங்கச் செயலாளர் ஹிலரிகிளின்ரனிடம் இந்த ஆவணத்தை சமர்ப்பித்துள்ளனர்.

ராஜபக்சே போன்றவர்கள் பிறந்தது சிங்களர்கள் செய்த பாவம்.. இலங்கைத் தலைவர்


கொழும்பு: இலங்கை அரசில் இன வாதிகளை வெளியேற்றாவிட்டால் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் அரசு எந்த நேரத்திலும் கவிழும். இவரைப் போன்றவர்கள் இங்கு பிறந்தது சிங்களர்களும், பெளத்தவர்களும் செய்த பாவம் என்று இலங்கையைச் சேர்ந்த சிங்களக் கட்சியான நவசம சமாஜக் கட்சி கூறியுள்ளது.
இது குறித்து நவசம சமாஜக் கட்சி தலைவரும், தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கூறுகையில்,

ராகுல் காந்தியை இழிவுபடுத்தி காட்சி: நடிகர் கார்த்தி வீட்டு முன்பு போராட்டம்


கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அருண்பிரசாத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
 
’’கடந்த வெள்ளியன்று (22-ந்தேதி) வெளியான சகுனி படத்தில் இந்திய தேசிய காங்கிரசின் இளம் தலைவர் ராகுல் காந்தியை இழிவு படுத்தும் முறையில் அவரின் பெயரை குறிப்பிட்டு பேசுகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

பிரான்சில் அகதித்தஞ்சம் கோரியுள்ளவர்களின் நிலை குறித்தான கருத்தாடல் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


பிரான்சில் சமீபத்திய காலங்களில் அகதித் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களின் நிலைகுறித்தான, கருத்தாடல் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.

அனைத்துலக அதிகள் நாளினை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழர்கள் மீது ஒரு துரும்பு பட்டாலும் இனி இந்தியாவில் இருந்துதான் போர் கிளம்பும்

இனியும் ஈழத் தமிழர்கள் தாக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் தமிழர்கள் மீது ஒரு துரும்பு பட்டாலும் இனி இந்தியாவில் இருந்துதான் போர் கிளம்பும் என்பதை இலங்கை தலைவருக்கு தெரிவித்துக்கொள்வதாகவும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அரசின் பொறிக்குள் ஜெயலலிதா சிக்குவாரா - ஹரிகரன்


இந்திய – இலங்கை அரசுகளுக்கு இடையிலான உறவுகளில் ஜெனீவா தீர்மானத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள மந்தமான நிலை தொடர்ந்து நீடிக்கின்ற நிலையில், இந்தமாத இறுதியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கொழும்பு வரப் போகிறார்.