Translate

Friday, 28 December 2012

இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்களின் பயிற்சி முடிவடைகிறது


இலங்கை இனப்படுகொலை இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் பெண்களின் பயிற்சி நிறைவு எதிர்வரும் 3ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளுக்கு கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது என இராணுவத் தரப்பு தெரிவித்திருந்தது.

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை-அஸாத் சாலி எச்சரிக்கை! Read more about முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை-அஸாத் சாலி எச்சரிக்கை! [7557] | இலங்கை செய்திகள் | செய்திகள் at www.inneram.com


முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை-அஸாத் சாலி எச்சரிக்கை!இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சிங்களர்களின் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்ப்பதாக, முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயருமான அஸாத் ஸாலி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்:
"முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்து வருகின்றன. இதற்கு ஆதாரமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை பௌத்த பிக்குகள் சிங்களக் குழுவினரால் முஸ்லிம் வர்த்தகர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

சூடு பிடிக்கிறது குற்றப்பிரேரணை விவகாரம்; அரசும் எதிரணியும் பகிரங்க தொலைக்காட்சி விவாதம்

news
ஆளும் தரப்பினருக்கும் எதிரணியினருக்கும் இடையில் புதுவருடத்தில் பகிரங்க விவாதம் ஒன்று நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்படுக்கின்றது.

தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றிலேயே இந்த விவாதம் நடத்தப்படவிருப்பதாகவும் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பிலேயே இந்த விவாதம் நடத்தப்படவிருக்கின்றது.

ஜனநாயகத்தை மதித்து குற்றவியல் பிரேரணைக்கு ராஜபக்ஷ அரசு தீர்வு காண வேண்டும்! – ‘த இந்து’ வலியுறுத்து


ஜனநாயகத்தை மதித்து குற்றவியல் பிரேரணைக்கு ராஜபக்ஷ அரசு தீர்வு காண வேண்டும்! – ‘த இந்து’ வலியுறுத்து

மஹிந்த ராஜபக்ஷ அரசானது நிறுவனங்கள் அல்லது ஜனநாயக அரசியல் நடைமுறைகள் ஆகியவற்றைப் பலவீனப்படுத்தாத வகையில்  பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டுவந்த குற்றவியல் பிரேரணை மீதான மோதலுக்குத் தீர்வு காணவேண்டுமென சென்னையிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான ‘த இந்து’ நேற்றைய தனது  ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

அகிலன் பவுண்டேசனின் உதவியுடன் வந்தாறுமூலையில் விசேட தேவையுடையோருக்கான பாடசாலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த அனர்த்தின் தாக்கம் காரணமாக விசேட தேவையுள்ள சிறுவர்களாக பிறந்தவர்களை அரவணைக்கும் வகையிலான பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   இலண்டன் அகிலண் பவுன்டேசனின் அனுசரணையுடன் மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் இந்தபாடசாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அன்பகம் பாடசாலை என்ற பெயரில் திறந்துவைக்கப்பட்ட இப்பாடசாலையில் இப்பகுதியை சேர்ந்த சுமார் 27 விசேட தேவையுடைய மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அன்பகம் தலைவர் டேவிட் சுதாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, இலண்டன் அகிலன் பவுண்டேசன் ஸ்தாபர் கோபாலகிருஸ்ணன், மாகாணசபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், பிரசன்னா இந்திரகுமார் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் இணைத்தலைவர் சேயோன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பாடசாலையின் பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
 http://www.thinakkathir.com/?p=46065

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்கவில் கைது!


அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் குறித்த நபர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளனர். இவ்வாறு பிரவேசித்த 46 பேரை அவுஸ்திரேலிய அரசாங்கம் விசேட விமானம் ஒன்றின் மூலம் நாடு கடத்தியிருந்தது.

பிரித்தானிய குடியுரிமையுடைய கைதிகளை அந்நாட்டு சிறைகளுக்கு அனுப்பி வைக்குமாறு சுரேஸ் கோரிக்கை


பிரித்தானிய குடியுரிமையுடைய கைதிகளை அந்நாட்டு சிறைகளுக்கு அனுப்பி வைக்குமாறு சுரேஸ் கோரிக்கை
பிரித்தானிய குடியுரிமையுடைய கைதிகளை அந்நாட்டு சிறைகளுக்கு ஆனுப்பி வைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இலங்கைச் சிறைகளில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய குடியரிமையுடைய சிறைக் கைதிகளை அந்நாட்டு சிறைச் சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தலைவர் பிரபாகரன் பற்றி எம்மிடம் விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை;ஹத்துருசிங்க சொன்னது பொய்: மாணவர்கள் தெரிவிப்பு!


பயங்கரவாத விசாரணைத் திணைக்களத்தினர் தம்மிடம் நடத்திய விசாரணைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய கேள்விகள் எவையும் எழுப்பப்படவில்லை என்றும் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும் யாழ்ப்பாணப் பல்லைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயிரம் புலி உறுப்பினர்களை கைது செய்ய புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை: சிங்கள ஊடகம்


ltte-akka2ஆயிரம் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் இராணுவப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டு செயற்பட்ட உறுப்பினர்களே இவ்வாறு கைது செய்யப்பட உள்ளனர்.
புனர்வாழ்வு அளிக்கப்படாத, சரணடையாத மற்றும் கைது செய்யப்படாதவர்களே இவ்வாறு கைது செய்யப்பட உள்ளனர்.முன்னாள் புலி உறுப்பினர்கள் பாதாள உலகக் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

மன்னாரில் சிங்கள குடியேற்ற விரிவாக்கம்; கோத்தபாய நேரில் ஆராய்வு!


ts_Mannar_20121226_08p12மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எல்லையோரக்கிராமமான முள்ளிக்குளம் சிங்கள மயப்படுத்திவரும் நிலையில் அதன் உச்சமாக பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய நேரடியாகச் சென்று சிங்கள மயமாக்கும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கடற்படையினருடன் விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்
மன்னார் மாவட்ட அபிவிருத்தியை ஆராய்தல் என்ற போர்வையில் நேற்று முன்தினம் முள்ளிக்குளம் சென்ற கோத்தபாயவை  வடமேற்கு பிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரோஹன பெரேரா உட்பட அதிகாரிகள் வரவேற்று அழைத்துச்சென்றனர்

யாழில் கைதான 45 பேரும் பூசா முகாமில்!- கைது செய்யப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர்: பொலிஸ் பேச்சாளர்


SRILANKA_POLICEயாழ்ப்பாணத்தில் கடந்த பல வாரங்களில் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 45 பேர் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும், நீண்டகாலமாக சேகரித்து வந்த புலனாய்வுத் தகவல்களின்படியே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்!


யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மாத்தளையில் தமிழ் இளைஞர் சிங்கள காடையர்களால் அடித்துக் கொலை!


இரத்தோட்டை - பாத்தாளவத்தை மத்திய பிரிவு பண்வில பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் சிங்கள காடையர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த மோதல் சம்பவம் 26ம் திகதி மாலை இடம்பெற்றதாக இரத்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 36 வயதுடைய கோபால் என்பவரே உயிரிழந்துள்ளார்.

"கொழும்பு சிறைகளின் தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்"



ஜயலத் ஜெயவர்த்தன
கொழும்பு சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி சந்தேகநபர்களுக்கும் புனர்வாழ்வு பயிற்சி வழங்கி அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயலத் ஜெயவர்த்தன கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சிறைச்சாலைகளிலுள்ள தமிழ்க் கைதிகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.

மன்னார் ஆயரிடம் சி.ஐ.டி இனர் விசாரணை


மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய பிதா. இராயப்பு ஜோசப் மீது குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாக செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுதல் தொடர்பில் ஆயரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடமிருந்து பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.

வடக்கில் அடை மழை; குளங்கள் பெருக்கெடுப்பு: மக்களின் இயல்பு வாழ்வு பெருமளவு பாதிப்பு!


வடக்கில் பெய்துவரும் அடை மழை மற்றும் குளங்களின் பெருக்கெடுப்புக் காரணமாக மக்களின் இயல்பு வாழ்வு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
 
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களில்அனைத்துக் குளங்களும் நிரம்பி வழிகின்றன. ஆறுகள் பெருக்கெடுத்துப் பாய்கின்றன. இதனால் வீதிப்போக்குவரத்து பல இடங்களிலும் தடைப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அனைத்து சமூக மக்களையும் மீள்குடியேற்றுமாறு JNP , டக்ளஸிடம் கோரிக்கை


யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அனைத்து சமூக மக்களையும் மீள்குடியேற்றுமாறு JNP , டக்ளஸிடம் கோரிக்கை

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அனைத்து இன சமூக மக்களையும் மீள் குடியேற்றுமாறு ஜே.என்.பி கட்சி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் N;காரியுள்ளது.  
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள் குடியேற்ற அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜே.என்.பி.யின் பேச்சாளர் முஹமட் முசம்மில் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை விட அடிப்படைவாத சக்திகளின் நடவடிக்கைகள் தலைதூக்கியுள்ளன: வசந்த பண்டார



நாட்டில் இன்று வேலுப்பிள்ளை பிரபாகரனை விட அடிப்படைவாத சக்திகளின் நடவடிக்கைகள் தலைதூக்கி வருகின்றன.
எனவே, இவை தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகுமென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்தார்.

தமிழ் இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதற்கு அரசு முயற்சி



தமிழ் இளைஞர்களை மிகவும் திட்டமிட்ட முறையில் வன்முறையில் தள்ளி அவர்களைப் பயங்கரவாதிகள் எனக் காட்டுவதற்கு இந்த அரசு முயல்கிறது. தமிழ் இளைஞர்கள் எவரும் இந்த அரசின் சதி வலையில் சிக்கவேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம்: அஸாத் ஸாலி எச்சரிக்கை!



'பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பினூடாகவும், ஏனைய சிங்கள இனவாதிகளினூடாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும், அராஜகங்களையும் அரசு தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடுவதனூடாக முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதையா அரசு எதிர்பார்க்கின்றது எனக் கேள்வி எழுப்பிய முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணி, முஸ்லிம்களை அந்த நிலைக்கு ஆளாக்கவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தது. 

கோதாபாய கருத்து தெரிவிப்பது தேசிய நல்லிணக்கத்துக்கு எதிரான செயல்..



தமிழர்கள் கைவிட்டு விட்ட, முஸ்லிம்கள் நினைத்து பார்த்திராத பிரிவினை பாதையை இவர்கள் இன்று தூண்டிவிடுகிறார்களா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

Saturday, 15 December 2012

தமிழ் உணர்வாளர்கள் தொடர்பு கொள்க


சனிக்கிழமை காலை 10.30 க்கு "எக்ஸ்பிரஸ் அவன்யு " வாயிலில் "இலங்கையை புறக்கணிப்போம் " பிரச்சாரம் துவங்க உள்ளது .இப்போராட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்புள்ள தோழர்கள் ,பொதுமக்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் தொடர்பு கொள்க : இராஜா ஸ்டாலின் -9884877487.(15/12/12-சென்னை)
Photo

Saturday, 8 December 2012

இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் மூலோபாயத் திட்டம் என்ன?

இதயச்சந்திரன் 

அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் அமெரிக்காவின் அழைப்பை ஏற்று , தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அங்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.
மார்ச்சில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் முக்கிய கூட்டத்தொடரிற்கு முன்பாக , அமெரிக்கா சில காய் நகர்த்தல்களை இலங்கை விவகாரத்தில் கையாள முற்படுகிறது என்பதையே இந்த வசந்த அழைப்பு உணர்த்துகிறது.

யாருக்குச் சொல்லி அழ?


தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் இருக்கும் வரைக்கும் தமிழரின் பாதுகாப்புக்கு ஒரு கவசம் இருந்தது. தமிழரின் மீது கை வைத்தால்பிரபாகரன் படை பதில் சொல்லும் என்ற அச்சம் சிங்களப் பேரினவாதத்திடம் இருந்ததுஆனால் அந்தக் கவசத்தை இழந்து நாங்கள் கேட்கஒருவரற்ற இனமாய் நாதியற்று நடுத்தெருவில் நிற்கின்றோம்.
http://www.infotamil.ch/photos/top/general/K%20%203.jpg


  • "உங்களின் பிள்ளைகள், உறவுகள் புதைக்கப்பட்ட மண்ணில்- அவர்கள் நினைவாக ஒன்று கூடி- அழுவதற்காக, அவர்களின் ஆன்மாக்களோடுஉறவாடுவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுப்போருக்காக எதிர்காலத்தில் வாக்களியுங்கள். வாக்குகளுக்காக உங்களைத் தேடிவருவோரிடம் இதையெல்லாம் நிறைவேற்றித் தருவீர்களா என்று கேள்வியை எழுப்புங்கள். அத்தகைய உறுதிமொழி தருவோருக்குவாக்களியுங்கள். இந்தக் கேள்வியை எழுப்பத் தகுந்த தருணம் இதுவே. இதைத் தவற விட்டால் எம் உறவுகளுக்காக மௌனமாகஅழுவதைவிட வேறேதையும் செய்யமுடியாது போகும்." மரணித்த வீரர்களுக்காக ஒரு நினைவுத்தூபியைக் கூட வைத்திருக்க முடியாதநிலை காணப்படுகிறது. தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்திலேயே இந்த நிலை. சிங்களப் பேரினவாதம் தமிழர் மீது எந்தளவுக்குக்கோலோச்ச முனைகிறது என்பது இதிலிருந்தே வெளிப்படையாகிறது. இறந்தோரை வணங்கும் மரபு தமிழருடையது. ஆனால் அந்த மரபைக்கூடக் கடைப்பிடிக்க முடியாத வகையில் சிங்களப் பேரினவாதம் காடைத்தனங்களைக் கட்டவிழ்த்து விடுகிறது. சிங்கள அரசுடன் இணங்கிப்போகலாம் என்று தமிழ்மக்களுக்கு ஆலோசனை கூறிவோர்இந்த உரிமையைக் கூட விட்டுக் கொடுக்காதவர்களிடத்தில் இருந்துஎதைத் தான் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்? தமிழ் மக்கள் தமது நிலத்தில் ஒரு நினைவுச்சின்னத்தை வைப்பதற்குக்குக் கூடஉரிமை இல்லாத போதுஅடிப்படைச் சுதந்திரத்தை எப்படிப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்? இறந்தவர்களுக்கு மரியாதைசெலுத்துவதே மனிதனின் இயல்பு- மரபு.
    அது எதிரியாயினும் நண்பனாயினும் மாறுபாடு இருக்கக் கூடாது என்பதே நாகரீக மனித சமுதாயத்தின் பண்பு. ஆனால் இறந்து போனஒருவரின் நினைவுத்தூபியைக் கூட விட்டுக் வைக்கக் கூடாது என்று கங்கணம் கட்டியுள்ள சிங்களப் பேரினவாதம் உயிரோடு இருக்கும்தமிழர்களுக்கா உரிமைகளை வழங்கப் போகிறது?

இலங்கை ஊடாக இந்திய இரகசியங்களை பாகிஸ்தானுக்கு கடத்த முயன்றவர் சிக்கலில்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் ஆசாத் நகரை சேர்ந்தவர் தமிம் அன்சாரி (வயது35). கடந்த செப்டெம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு இலங்கையில் உள்ள தூதுவர்கள் மூலம் இந்திய ராணுவ ரகசியங்களை சி.டி., மற்றும் பென்டிரைவ் மூலம் கடத்த முயன்ற போது கியூ பிரிவு பொலிஸார் தமிம் அன்சாரியை கைது செய்தனர்.

விபசாரத்தில் ஈடுபட்ட தொலைக்காட்சி நாடக நடிகை கைது


விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் தொலைக்காட்சி நாடக நடிகை ஒருவரை கண்டி பொலிஸின் விஷேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த இவர், கண்டி, தங்கொல்லை பிரதேசத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கிருந்தவாரே இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

தேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள் -அதிர்ச்சி ரிப்போர்ட்


தேங்காய் எண்ணெய்  தேய்த்தால் வழுக்கை  ஆவீர்கள் -அதிர்ச்சி ரிப்போர்ட் ..

ஆமாம் கடைகளில் விற்கும் கலப்பட தேங்காய் எண்ணெய்  பயன்படுத்தினால் வழுக்கை  ஆவது -முடி கொட்டுவது மட்டும் இல்லாமல் முடி நரைக்கவும் செய்யும் எனபது உண்மை 
தேங்காய்  எண்ணையே  கலப்படம் தானா ? 
கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய்   என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!!
சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு  பதில் வேறு என்ன இருக்க முடியும் ?

என்னைப்பார்த்து ஜாதி வெறியன் என்கின்றனர் : ராமதாஸ் ஆவேசப்பேச்சு

திருக்கோவிலூரில் நேற்று பா.ம.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசினார். 

அப்போது அவர், ''தமிழகத்தில் நடைபெறும் 2016 சட்டமன்ற தேர்தலில் 110 இடங்களில் நாம் வெற்றிபெறப்போகின்றோம். இதுவரை வன்னிய மக்களிடம் ஒற்றுமை இல்லாமல் இருந்து வந்தது. தற்போது நாம் ஒற்றுமையாகிவிட்டோம். எனவே நாம் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பது சுலபம். வன்னியர்கள் ஆண்டால்தான் நாடு உருப்படும். 

ராஜபக்சே சொல்லித்தான் தமிழர்களைக் கொன்று குவித்தோம்.. சிங்கள தளபதி ‘பகீர்’ பேச்சு!


ராஜபக்சேதான் எந்தவித சர்வதேச நெருக்கடி வந்தாலும் அதற்குப் பயப்படாதீர்கள். தொடர்ந்து தாக்குதல் நடத்தி தமிழர்களைக் கொன்று குவியுங்கள் என்று உத்தரவிட்டார். அவரது ஊக்குவிப்பால்தான் எங்களால் தமிழர்களைக் கொல்ல முடிந்தது என்று பச்சையாகவே பேசி சிங்களத்தின் இன அழிப்பை உறுதி செய்துள்ளார் இலங்கை ராணுவ தளபதியான ஜெகத் ஜெயசூரியா.
ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்கால் என்ற மிகச் சிறிய பகுதிக்குள் சிக்கிக் கொண்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொத்து வெடிகுண்டுகளை வீசிக் கொடூரமாகக் கொன்று குவித்தது சிங்கள ராணுவம்.
இந்த நிலையில் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து விடாமல் நடத்துமாறும், தமிழர்களைக் கொல்லுமாறும் ராஜபக்சேதான் உத்தரவிட்டதாக இலங்கை ராணுவ தளபதி ஜெயசூர்யா பகிரங்கமாகவே கூறியுள்ளார்.

போர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்


“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர மறுத்ததால் எனது எட்டு வயது நிரம்பிய மகளுக்கு எனது சொந்த வீட்டில் கூட பிறந்த நாளைச் செய்யமுடியாது”
இவ்வாறு அமெரிக்காவினை தளமாகக்கொண்ட The Washington Post ஊடகத்தில் Simon Denyer எழுதியுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்செய்தி அறிக்கையின் முழுவிபரமாவது:

முள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் !


நாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக் கொண்டே வந்தார் கர்ணன்.
கிளிநொச்சியை நோக்கி வரும் வழியில் கண்ட இரணமடு குளத்தில் இப்போது இராணுவம் ஏதோ விமான நிலையம் கட்டுகிறார்களாமே என்று கேட்டேன்.

Friday, 30 November 2012

யாழ். பல்கலை. மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரம்! அமெரிக்கா தூதரகம் அறிக்கை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெள
ியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளதாவது.

விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று! மீண்டும் எழுவதும் தான்!- கவிஞர் வைரமுத்து"


"விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று! மீண்டும் எழுவதும் தான்!- கவிஞர் வைரமுத்து"
===================
''உண்மையைச் சொல்லுங்கள்... இலங்கையில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்?''  இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளிவரும் "விகடன் மேடை" என்னும் பகுதியில் கவிஞர் வைரமுத்துவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் வருமாறு:
 

இறந்தவர்கள் வீர சொர்க்கத்தில்,  இருப்பவர்கள் கோர நரகத்தில். 

பத்துத் தமிழர்கள் கூடி நின்று பேசினாலும் இராணுவத்திற்குச் செய்தி போகிறது. அடுத்த சில நிமிடங்களில் கூட்டம் அச்சுறுத்திக் கலைக்கப்படுகிறது. 

கையில் வைத்து அழுத்தப்படும் பணமோ, கழுத்தில் வைத்து அழுத்தப்படும் கத்தியோ, சில தமிழர்களை உளவாளிகளாக மாற்றி வைத்திருக்கிறது. 

இரகசியமாக விநியோகிக்கப்படும் போதைப் பொருள் பகிரங்கமாகப் பாதுகாக்கப்படுகிறது. 

பதின்பருவத்துப் பிள்ளைகள் இன்னோர் ஆயுதம் ஏந்திவிடக் கூடாது என்பதற்காகச் சாராயத்திலும் போதைப் பொருளிலும் காயடிக்கப்படுகிறார்கள். 

எது நேரக் கூடாதோ - ஆனால், ஒரு போர்ச் சமூகத்தின் உடன் விளைவாக எது நேருமோ - அது நேர்ந்தேவிட்டது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சொல்கிறேன்; கொத்துக் கொத்தாய்ப் பாலியல் தொழில் நடக்கிறது. 

அரசு ஊழியர்கள் தமிழர்களாயிருந்தால் சிங்களப் பகுதிக்கும், சிங்களவர்களாயிருந்தால் தமிழ்ப் பகுதிக்கும் திட்டமிட்டுப் பரிமாறப்படுகிறார்கள். 

இதனால், இனவாத அரசு எதை எதிர்பார்க்கிறதோ, அது நடந்துகொண்டே இருக்கிறது. அதாவது, சிங்கள - தமிழ் இல்லற இனக்கலப்பு தொடங்கித் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

இது அதிகரிக்கும் பட்சத்தில் இன்னும் சில பத்தாண்டுகளில் நம்மவர்களின் இனமொழி அடையாளம் முதலில் கொஞ்சம் கொஞ்சமாகவும் முடிவில் முற்றிலுமாகவும் அழிக்கப்பட்டு விடும். பிறகு, எவரை எதிர்த்து எவர் போராடுவது? 

இந்தியாவும் ஐ.நா-வும் தமிழர்கள் கொல்லப்படுவதை ஏதோ உடல்தானம் செய்கிறார்கள் போலும் என்று ஒதுங்கிக்கொண்ட பிறகு எங்கே போய் முறையிடுவது? 

இன உணர்வாளர்கள் கதறிக்கொண்டே இருக்கிறார்கள், கரையில் மாரடித்துக் கதறும் அலைகளைப் போல. 

ஆனால் ஒன்று. விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று, மீண்டும் எழுவதும்தான்.
 
ஆனந்த விகடன்''உண்மையைச் சொல்லுங்கள்... இலங்கையில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்?'' இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளிவரும் "விகடன் மேடை" என்னும் பகுதியில் கவிஞர் வைரமுத்துவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் வருமாறு:


இறந்தவர்கள் வீர சொர்க்கத்தில், இருப்பவர்கள் கோர நரகத்தில். 

தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது மாவீரர் வணக்க நாள் செய்தி !


Posted Image

• நமது தேசத்தின் கூட்டு நினைவுகளில் நீங்கா இடம் பெற்;றுவிட்ட மாவீரர் தந்த வலுவோடும் ஆன்மபலத்தோடும் விடுதலைப்பயணத்தினை அயராது தொடர்ந்து முன்னெடுப்போம்!
• உலக சமூகம் தமிழ் மக்களது அரசியல்பெருவிருப்பினைக் கண்டறிய அனைத்துலக நியமங்களின்படி மக்கள் வாக்கெடுப்பினை நடாத்த வேண்டும்!
இன்றைய தேசியமாவீரர் நாளில் நமது மாவீரர்களை மனதிருத்தி நாம் உலக சமுதாயத்திடம் நீதி கோருகிறாம். நாம் நம்மை சிங்களத்தின் பிடியிலிருந்து விடுவித்து நமக்கெனச் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைத்துக் கொள்ள ஆதரவு தாருங்கள் என்று நியாயத்தின் பேரால் உலக சமுதாயத்திடம் கோருகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்வி.உருத்திரகுமாரன் அவர்களது மாவீரர் வணக்கநாள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு ஒரு போதும் 13 ஐ நிராகரிக்கவில்லை; அரச ஊடகங்கள் பொய்ப்பிரசாரம் - சுமந்திரன்

news
தமிழர்களுக்கு முழுமையான அதிகாரப்பகிர்வை வழங்க அத்திபாரமாக அமையும் 13ஆவது திருத்தச் சட்டத்தை தாம் ஒருபோதும் நிராகரித்ததில்லை என உறுதிபடத் தெரிவித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

தமது நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்த பின்னரும் அரச ஊடகங்கள் தொடர்ச்சியாகப் பொய்ப் பிரசாரங்களைச் செய்வது விஷமத்தனமானது என்றும் குறிப்பிட்டது. 

அடக்குமுறைகள் வென்றதாக வரலாறில்லை: த.தே.கூ.



அடக்குமுறைகள் வென்றதாக உலகெங்கிலும் வரலாறில்லை. இதனைப் புரிந்துகொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


யாழ். பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்ட இராணுவம் மற்றும் பொலிசாரின் செயலைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முறையிட்டால்தான் நடவடிக்கை; டி.ஐ.ஜி. சொல்கிறார்

news
பல்கலைக்கழக விடுதிக்குள் இராணுத்தினர் அத்துமீறி நுழைந்தது தொடர்பாகவோ அல்லது பொலிஸாரால் மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பிலோ எதுவித முறைப்பாடும் செய்யப்படவில்லை. முறைப்பாடு செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) எரிக் பெரேரா தெரிவித்தார். 

தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலையே : முன்னாள் ஐரோப்பிய எம்.பி. எவன்ஸ்


இலங்கைத்தீவில் உள்ள தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொள்வது ஒர் இனப்படுகொலையே என பிரித்தானியாவினைச் சேர்ந்த முன்னாள் ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் எவன்ஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் பங்குகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் ஆரம்பமமாகியுள்ள நாடுகடந்த அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வின் முன்நிகழ்வாக, பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த மாநாட்டில கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இக்கூற்றினை அவர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துதைத் தடுப்பது காட்டுமிராண்டித்தனம்: சுரேஷ்


யாழ் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்ட இராணுவம் மற்றும் பொலிசாரின் செயலைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

இனவாடை வீசும் சிறிலங்கா கிரிக்கற்றைப் புறக்கணிப்போம் - ஆஸி. எழுத்தாளர்


மனித உரிமைகள் தொடர்பாக அவுஸ்திரேலியா சர்வதேச அரங்கில் ஒரு தோற்றப்பாட்டைக் காட்டுகின்றபோதும்,  பாதுகாப்பில்லாத ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கு பதிலாக அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அல்லது அவர்களின் வேண்டுகோள்களை செவிமடுக்காத ஒரு தலைமையாகவே இருந்துவருகிறது.  


ஆனால் இதற்கு விதிவிலக்காக இந்தப் போக்கை கண்டிக்கும் வகையிலான ஒரு நிகழ்வு.  

ஒரு பகுதி புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர் - கருணா


ஒரு பகுதி புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர் - கருணா
 புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்தும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம்சுமத்தியுள்ளார்.
 
இலங்கை வாழ் தமிழ் மக்களை புலம்பெயர் மக்கள் நேசித்தால் இலங்கைக்கு வந்து அவர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும்.  எனினும் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை என குறிப்பிட்டதுடன் விமானப்படையினர் முல்லைத்தீவு வான் பரப்பில் விமானங்களைச் செலுத்துவதில் எவ்வித பிழையும் கிடையாது.

இராணுவத்தினராலும், பொலிஸாரினாலும் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு மிரட்டல்; வைத்தியசாலை விடுதியை விட்டு பறந்தனர்


இராணுவத்தினராலும், பொலிஸாரினாலும் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களை, புலனாய்வாளர்கள் மிரட்டி வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றியுள்ளதாக “உதயனுக்கு’  தகவல்கள் கிடைத்துள்ளன.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய அமைதியான போராட்டத்தை இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து அடிதடி நடத்திக் கலைத்தனர். இதன்போது மாணவர்கள், மாணவிகள் பலர் இராணுவத்தினரால் கலைத்துக்கலைத்து மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டனர்.

படைகளுக்கு பல்கலைக்கழகத்தில் என்ன வேலை ? – மாவை எம்.பி. கேள்வி


யாழ்.பல்கலைக்கழக வளாகத்துக்குள் படையினரை அனுப்பியது யார்? அவர்களுக்கு அங்கு என்ன வேலை? எனக் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இதற்கு உயர்கல்வி அமைச்சர் உரிய பதிலளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

சிங்கள காடையர்களின் தமிழ் மக்கள் மீதான கோரப்படுகொலைகள் (படங்களை இணைப்பு)

கேணல் ரமேஸ் படுகொலை புதிய ஆதாரம் காட்டுமிராண்டித்தனமாகப் படுகொலை (படம் இணைப்பு )கேணல் ரமேசை அடித்து கொன்ற பின் தீயிட்டு கொளுத்திய சிங்கள காடையர்கள் புதிய ஆதாரம் (படங்கள் )சிங்கள காடையர்களின் தமிழ் மக்கள் மீதான கோரப்படுகொலைகள் (படங்களை இணைப்பு)
நித்திரைய தமிழா கொஞ்சம் நிமிர்ந்து பாரடா !!உன் உறவுகள் கிடக்கும் கோலத்தை பார் !!
யாருக்கு என்ன தீங்கு செய்தார்கள் !! சுகந்திரமாய் வாழ நினைத்தற்கு இன்று
அவர்கள் அனுபவிக்கும் வேதனையை பார்!!
நீயும் தமிழன் தானே !!உனது இனத்தின் மீது உனக்கு இல்லையா பற்று!!
இறப்பதும் இறந்து கிடப்பதும் உனது சொந்தங்களே !! தமிழா ஒருகணம் சிந்தித்து பார் !!
ஈழ மக்களின் உனது உறவுகளின் உடல்கள் கிடக்கும் கோலத்தை பார்!!
பிஞ்சு முதல் முதியோர் வரை அனைவருமே கொன்று அழிக்கபட்ட தேசத்தை பார் !!
உனக்கும் உரிமையுண்டு உணர்வுகள் உனக்கிருப்பின் உனது உறவுகளுக்காக நீயும் போராடு!!
படுக்கையிலும் கொன்றொளித்த சிங்கள பேய்களின் கோரத்தாண்டவத்தை பார் !!
கண்களை முடாமல் ஒரு கணம் உனது குடும்பமென சிந்தித்து பார் தமிழனே !! என் உறவுகளே
குழந்தைகள் இதயம் பலவீனமானவர்கள் பார்வையிட வேண்டாம்…...read more 

பிரித்தானிய வாழ் தமிழர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர அழைப்பு !

இறந்தவர்களின் நினைவுக்குச் செலுத்தப்படும் மரியாதை!
உலகின் பல்வேறு நாடுகளில் வருகை தந்துள்ள தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் பிரித்தானிய அரசியல் பிரதிநிதிகள் என பலரும் பங்கெடுத்துக் கொண்டிருந்தனர்.
http://varudal.com/http://naathamnews.com/?p=7866



- தமிழீழ தாயகத்தில் மட்டுமல்ல புலத்திலும ஈழத்தமிழர்களுக்கான அரசியல் வெளியினை முடக்க சிறிலங்கா அரசு தீவீரம் !
- நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வினை முடக்க சிங்கள பேரினவாதம் இடைவிடா முயற்சி !
- ஈழத்தமிழர்கள் ஓர் அரசுக்குரிய இனம் என்பதனை அடையாளப்படுத்த முருதாசன் திடலில் அணிதிரளுமாறு அழைப்பு !

யுத்தக் குற்றம் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம்: கூட்டமைப்பு வலியுறுத்தல்

News Service
அரசாங்கம் பொறுப்புக்கூறும் விடயத்தில் தொடர்ந்தும் தவறிழைத்து வருகின்றது. யுத்தக் குற்றம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளாது, இராணுவ மட்டத்தில் மட்டுமே விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதனால் சுயாதீன சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஐநா தூதுக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை வந்துள்ள ஐநாவின் ஆசிய பிராந்திய அபிவிருத்தி நிறுவனத்தின் தெற்காசிய பிராந்தியங்களுக்கான குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஹிட் ரோக்கி டோன் தலைமையிலான தூதுக்குழுவினரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தலைமையிலான எம்.பிக்கள் குழுவினர் நேற்று மாலை கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே இவ்வலியுறுத்தலை விடுத்துள்ளனர்.

செந்தமிழனின் பாலை - யமுனா ராஜேந்திரன்


செந்தமிழனின் பாலை - யமுனா ராஜேந்திரன்

ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான நிக்கோல் கிட்மேன் நடித்த லார்ஸ் வான் டிரையரின் டாக்வில்திரைப்படம் முழுமையானதொரு அரசியல் திரைப்படம். ஸ்டுடியோ செட் ஒன்றினுள் நாடக மேடைச் சட்டக வடிவத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் அது. செவ்வியல் ஓபரா வடிவத்தை நவீன வாழ்விற்குப் பெயர்த்தால் எப்படி இருக்கும்? நடன அசைவுகளுக்குத் தக்க உச்ச ஸ்தாயியில் பாடல்கள்; சமகால அரசியல் தன்மையுள்ள கச்சிதமான உரையாடல்கள்; நாடக மேடைச் சட்டகம் போன்று திட்டமிட்டபடி கொஞ்சம் விரித்துக் கொண்ட வெளி. இதுதான்டாக்வில் திரைப்படத்தின் கதை நிகழும் களம்.

சம்பூர் என்ற கிராமமே இலங்கையின் வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டிருக்கின்றது


சம்பூர் என்ற கிராமமே இலங்கையின் வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டிருக்கின்றதுஒரு அரசாங்கம் தான் செய்ய வேண்டிய கடமையைப் புறந்தள்ளிவிட்டுதனது இராணுவ முன்னெடுப்புகளால் உயிருக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறி அங்கு அகதிகளாக வாழும் தமிழ் மக்களிடம் உள்நாட்டில் அகதிகளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது வெட்கக்கேடான விடயம். 

ஆயினும் தங்களது கடின உழைப்பில் ஈட்டிய சொற்ப வருமானத்தில் தங்களது செலவுகளைக் குறைத்துக்கொண்டு எமது மக்களுக்கு அவர்கள் செய்திருக்கின்ற உதவிகள் அளப்பரியவை. 

வேலைக்கு அழைத்துச் சென்று குவைத் விபசார விடுதியில் ஆந்திர பெண்கள் விற்பனை


குவைத் வேலைக்கு அழைத்து செல்லப்பட்ட ஆந்திர இளம்பெண்கள் பேர் அங்குள்ள விபசார விடுதியில் விற்கப்பட்டனர். சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள கொத்தப்பள்ளியைச் சேர்ந்தவர் பார்வதி (18). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கிராமத்தில் கூலிவேலை செய்து வந்தார்.

இலங்கை இராணுவம் மேற்கொண்ட யுத்தக் குற்றங்களை வெளியுறவு அமைச்சர் ஏற்றுக்கொண்டார்: விக்கிலீக்ஸ்

News Service
எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்கள் மற்றும் அதிகாரப் பரவலாக்கம் போன்ற விடயங்களில் தம்மை தனிப்பட்ட பொறுப்பாளராக எடுத்துக்கொள்ளலாம் என்று இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகல்லாகம தெரிவித்திருந்ததாக விக்கீலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் உதவி இராஜாங்க செயலாளர் ரிச்சர் பௌச்சரிடம் இந்த உறுதிமொழியை போகல்லாகம வழங்கியிருந்தார் என்று அமெரிக்கத் தூதரகத்தின் செய்தி அனுப்பலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய வாழ் தமிழர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர அழைப்பு !

News Service
* தமிழீழ தாயகத்தில் மட்டுமல்ல புலத்திலும ஈழத்தமிழர்களுக்கான அரசியல் வெளியினை முடக்க சிறிலங்கா அரசு தீவீரம் !
* நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வினை முடக்க சிங்கள பேரினவாதம் இடைவிடா முயற்சி !
* ஈழத்தமிழர்கள் ஓர் அரசுக்குரிய இனம் என்பதனை அடையாளப்படுத்த முருதாசன் திடலில் அணிதிரளுமாறு அழைப்பு !
பிரித்தானிய மண்ணிலதொடங்கவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வினை முடக்குவதற்கு தீவீர முயற்சிகளை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அரசுக்கு பதிலடி கொடுக்க பிரித்தானிய வாழ் தமிழர்களை அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர அழைப்பொன்றினை விடுத்துள்ளது.

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

வரும் 2.12.2012 ஞாயிறு, காலை 10.36 மணிக்கு, ராகு விருச்சிகத்தில் இருந்து துலாமிற்கும், கேது ரிஷபத்தில் இருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியாகின்றனர். இவர்கள் 21.6.2014 வரை இந்த ராசிகளில் செயல்படுவர்................... read more