Translate

Sunday, 25 September 2011

தமிழக உள்ளூராட்சித் தேர்தல் - பெரியண்ணன் யார்?

ஆக மொத்தம் கட்சிகள் தங்களின் பலத்தையறியாமல் பெரிய கட்சி ஒன்றின் முதுகில் ஏறி அமர்ந்து அதை தன் சொந்த பலமாக காட்டும் தந்திரத்திற்கு நாற்பதாண்டுகளுக்கு பின்னர் முடிவு கட்டப்பட்டிருக்கிறது. இனி வரும் தேர்தல்களில் கூட நீங்கள் உள்ளாட்சித் தேர்தலில் இவளவு வாக்குகளைத்தான் பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கு இவளவுதான் இடங்கள் ஒதுக்கப்படும் என திமுக, அதிமுக இரண்டுமே கூட்டணிகளின் தேர்தல் சீட்களை முடிவு செய்யும் நிலையை உருவாக்கியுள்ளது. இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் திமுக, அதிமுக கட்சிகளால் புறக்கணிக்கப்படுகிற கட்சிகள் மூன்றாவது அணி அமைக்க முயலக்கூடும். ஆனால் அப்படி ஒரு அணி அமைந்தால் அதற்கு எந்த பெரியண்ணன் தலைமை தாங்குவார்?ராமதாஸா? வைகோவா? அல்லது விஜயகாந்தா? ............. read more 

No comments:

Post a Comment