கொழும்பு, மார்ச்.20: 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல் தீர்வு ஒன்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தவுள்ளது என்பது தொடர்பாக விளக்கமளிக்குமாறு, இலங்கை அரசாங்கத்தை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியை அடுத்தே, இலங்கையிடம் இந்தியா இது பற்றி விளக்கம் கோரியுள்ளது. இந்தக் கடிதத்துக்கு இலங்கை உடனடியாகவே பதில் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment