உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை என அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரதேசங்களில் இராணுவ மயக்கமலை தவிர்த்தல், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுதல் உள்ளிட்ட பல பரிந்துரைகள் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே அமெரிக்கத் தீர்மானத்தின் பிரதான கோரிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரதேசங்களில் பாடசாலைகள் மற்றும் வீதிகளை இலங்கை அரசாங்கம் அமைத்துள்ளதாகவும், அவ்வாறான நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் இன்னும் பல விடயங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.