ஹோஸ் பைப் வைத்து தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுபவர்கள், வண்டி கழுவுபவர்களுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் கடந்த 124 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் வறண்டு, நிலம் காய்ந்து வருகிறது. நீர்மட்டம் குறைந்து வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் வறட்சியை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு அரசு துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபற்றி நீர் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாக நிறுவனத்தின் இயக்குனர் ஜஸ்டின் டாபர்ஹம் கூறியதாவது: பிரிட்டன் முழுவதும் சுமார் 2.2 கோடி வீடுகளுக்கு 7 நிறுவனங்கள் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
வரலாறு காணாத வறட்சி நிலவுவதால் பிரிட்டன் முழுவதும் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, முதல் கட்டமாக வீடுகளில் ஹோஸ் பைப் பயன்படுத்தி தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றவும், வாகனங்கள் கழுவவும் தடை விதிக்கப்படுகிறது.
மேலும் இந்த தடை உத்தரவு ஏப்ரல் 5-ம் திகதி அமலுக்கு வரும் இந்த அரசு உத்தரவை மீறி தண்ணீரை வீணாக்குபவர்களுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தட்டுப்பாடு அதிகரித்தால் தொழிலகங்களிலும் இத்தடை கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளார்.
|
No comments:
Post a Comment