அமெரிக்காவைச் சீண்டினால் நாம் ஒரு பாண் துண்டையாவது சாப்பிட முடியுமா? இப்போது அமெரிக்காவும், அதன் இறக்குமதிப் பொருள்களும் எமக்கு வேண்டாம் என விமல் வீரவன்ஸ கூறு கின்றார்.
அப்படியானால், இதற்கு முன் னர் இந்தியா எமக்கு பருப்பு விநி யோகித்தபோது இந்த வாயாடி அமைச்சர் எங்கே போயிருந்தார் எனக் கடுவெல நகரசபைத் தலைவர் ஜி.எச்.புத்ததாஸ கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கடுவெல பிரதேச நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு:
அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறியதற்குப் பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா எமது நாட்டுக்கான கோதுமை மா ஏற்றுமதியைத் தடைசெய்தால் என்ன நடக்கும்? எமக்கு ஒரு பாண் துண்டை ஆசைக்குக் கூட சாப்பிட முடியாத நிலை ஏற்படும்.
ஜெனிவாவில் நமது நாடு தற்போது பெரும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத் துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் அமைச்சர்கள் வீண் பேச்சுகளைத் தவிர்த்து, பொறுப்புடன் செயலாற்றவேண்டும். எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உதவியளிக்கும் வகையில் அமைச்சர்கள் செயற்பட வேண்டும் என்றார் புத்ததாஸ.
No comments:
Post a Comment