இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்: பிரதமர்
புதுதில்லி,மார்ச்.19: இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலில் கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் இன்று பதிலளித்தார்.
அவர் பேசுகையில், தினேஷ் திரிவேதி நல்ல பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2020-ம் ஆண்டை நோக்கி அவரது பட்ஜெட் அமைந்திருந்தது. அவர் பதவி விலகியது வருத்தமளிப்பதாக உள்ளது. அவரது ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளேன் என்றார்.
மேலும் கடந்த 2 ஆண்டுகளாக விலைவாசி உயர்வு பெரிய பிரச்னையாக உள்ளது. சீரான விலைவாசியுடன் வளர்ச்சியை எட்டுவதே நமது லட்சியம் என்று அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத்தை உறுதியுடன் கையாள தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது அவசியம். கூட்டணி அரசு அமைத்திருப்பதால் அனைத்து விவகாரங்களிலும் கருத்தொற்றுமை தேவைப்படுகிறது என பிரதமர் குறிப்பிட்டார்.
இலங்கைத் தமிழர் குறித்து பேசிய பிரதமர், இலங்கையில் தமிழர் பகுதிகளில் இயல்புநிலை திரும்பி வருகிறது, இலங்கைத் தமிழர்கள் குறித்த எம்பிக்களின் கவலைகளையும் உணர்வுகளையும் மத்திய அரசு பகிர்ந்துகொள்ளும். இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட்ட இந்தியா வலியுறுத்தியுள்ளது என்றார்.
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்தின் இறுதி வரைவு அறிக்கை நமக்கு இன்னும் கிடைக்கவில்லை எனினும் அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என அவர் தெரிவித்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்பை திமுக எம்பிக்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர்.
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வந்தது. இதுதொடர்பாக நாளை உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என திமுக அறிவித்திருந்தது. இந்தநிலையில் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment