அமைச்சர் விமலின் வாய் வீரம் அம்பலம்!
அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு பகிரங்க அறைகூவல் விடுத்த அமைச்சர் விமல் வீரவன்ஸ தொடர்ந்து ஜி- மெய்ல் பாவனையை மேற்கொண்டு வருகின்றார்.
இவரால் கடவெலவில் நேற்று ஆற்றப்பட்ட உரை ஒன்றின் ஓடியோ 15 ஊடக நிறுவனங்களுக்கு ஜி – மெய்ல் மூலமாகதான் அனுப்பப்பட்டு இருக்கின்றன.
ministryofconstructionsl@gmail.com என்கிற ஜி – மெய்ல் முகவரி பயன்படுத்தப்பட்டு உள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள பிரேரணைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற வகையில் ஜி – மெய்ல், பெப்சி, கொக்கோ கோலா, மக்டொனால்ட்ஸ், கே. எஃப். சி உட்பட அமெரிக்க உற்பத்திகள் மற்றும் தயாரிப்புக்கள் ஆகியவற்றை பொதுமக்கள் கை விட வேண்டும் என்று விமல் கேட்டு இருந்தார்.
ஜி – மெய்ல் பாவனையை அவரும் கை விட்டு விடுவார் என்று அறிவித்து இருந்தார்.

No comments:
Post a Comment