தி.மு.க. உயர்நிலை செயல் திட்டகுழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் கனிமொழி எம்.பி. தனியார் டி.வி.க்கு அளித்த பேட்டியில்,
“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்கவில்லை என்றால் அடுத்து என்ன செய்வது என்பதை தி.மு.க. தலைவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
இந்த பிரச்சினையில் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகும் நிலையை மத்திய அரசு உருவாக்காது என்று நம்புகிறேன்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைமீறல் சம்பவங்கள் தொடர்பாக நாங்கள் சொல்வதை மத்திய அரசு புரிந்துகொள்ளும். எனவே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்கும் என்று நம்புகிறேன்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நடைபெறுவதால், இலங்கை விவகாரத்தில் தி.மு.க. மென்மையான போக்கை கடைபிடிக்கிறது.
இலங்கையின் உள் விவகாரத்தில் இந்தியா தலையிடாது என்று மத்திய அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment