சிறு ஏற்றுமதிப் பயிர் ஊக்குவிப்பு அமைச்சில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் ரெஜினோல்ட் குரே மேற்கண்டவாறு கூறினார்.இவர் இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், சீனி உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பில் இந்தியாவின் அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள கடந்த வாரத்தில் எனது தலைமையில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளின் குழு இந்தியாவின் உத்தரப் பிரதேசத்திற்கு விஜயம் செய்தது. அங்கு எமக்கு சிறந்த வரவேற்பும் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இந்த விஜயத்தின் ஒரு கட்டமாக தமிழகத்தில் கோயம்புத்தூருக்கும் செல்ல வேண்டியிருந்தது.
இதன்போதே சனல் 4 தொலைக்காட்சிக்கு படங்களையும் போலித் தகவல்களையும் வழங்கி இலங்கைக்கு எதிரான படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒருவரான சீமான் மற்றும் வைகோ குழுவினர் எமது வருகையை எதிர்த்து போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். இது குறித்து தமிழகப் பொலிஸார் எம்மை தெளிவுபடுத்தினர். வீண் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாது இரு நாட்டு உறவிற்கும் பங்கம் ஏற்படாத வகையில் இந்தியாவிலிருந்து சுய விருப்பின் பேரில் நானும் எனது குழுவினரும் இலங்கை வந்தடைந்தோம். யாரும் எங்களை வெளியேற்றவோ நாடு கடத்தவோ இல்லை.
இந்திய அரசு எமது விஜயத்திற்கு பூரண ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும் வழங்கியது. குறிப்பிட்ட சிறு குழுவினரே அரசியல் நோக்கங்களுடன் செயற்பட்டனர். இவர்களின் சுயநல நோக்கங்களுக்காக இந்தியாவுடன் முரண்படத் தேவையில்லை. இலங்கையிலும் இவ்வாறான வெளிநாட்டுப் பிரஜைகளின் வரவை எதிர்த்து போராட்டங்கள் இடம்பெறுகின்றன என்றார்.
No comments:
Post a Comment