வெளிநாடொன்றில் பிறந்த வாழ்க்கைத் துணைக்கு பிள்ளைகள் இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட பிரித்தானிய பிரஜை 30,000 ஸ்ரேலிங் பவுணுக்கும் அதிகமான தொகையை வருமானமாக ஈட்ட வேண்டியிருக்கும். இத்தொகை பிள்ளைகளின் ௭ண்ணிக்கையில் தங்கியிருக்கும்.
வருடமொன்றுக்கு 250,000 ஆகவுள்ள பிரித்தானியாவுக்கான குடிவரவை 25,000 ஆல் குறைப்பதற்காகவே மேற்படி திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை செயலாளர் தெரேஸா மே தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரேரணைகளானது பிரித்தானியர்களை திருமணம் செய்வதன் மூலம் அந்நாட்டு நலன்புரி முறைமையில் அனுகூலங்களை சில வெளிநாட்டவர்கள் பெறுவதற்கு முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் ௭ழுந்துள்ள நிலையில் அதனைத் தடுப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையாக இந்தப் புதிய பிரேரணைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment