யாழ்ப்பாணத்தில் தமிழர்களது வாழ்விடங்கைள ஆக்கிரமித்து ஏற்கனவே படையினர் தமது இராணுவத்தளங்களை அமைத்துள்ள நிலையில், தற்போது தமது படைதளங்களுக்காக பொது மக்களது காணிகளை பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு தொடர்ச்சியாகவே மண்டதீவிலும் கடற்படையினர், பொது மக்களது பாரிய நிலப்பரப்பை ஆக்கிரமித்து படைத்தளம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே இப்பகுதியில் கடற்படையினர் தளம் ஒன்றை அமைத்துள்ள நிலையில், தற்போது அத்தளத்திற்காக பொது மக்களது காணிகளை பறிக்கும் நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு கடற்படையினர் மேற்படி தளத்திற்காக காணிகளை சுவீகரித்தால் மண்டத்தீவிலுள்ள 1ஆம் வட்டாரம் முழுமையாகவும் 2ஆம், 4ஆம் வட்டராங்கள் பகுதியாகவும் கடற்படையினர் வசம் சென்று விடும்.
இதேவேளை இப்பகுதியில் ஏற்கனவே வைத்தியசாலை விடுதிகள் உள்ளிட்டவற்றை கடற்படையினர் அமைத்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment