Translate

Saturday 4 August 2012

பதின்மூன்று நாட்களை தாண்டியும் உறுதியுடன் தொடரும் சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம்

13ம் நாள் உண்ணாநிலை போராட்டம் காணொளி 2

Sivanthan protest -  Jeyanandamoorthy interview


 

பதின்மூன்று நாட்களை தாண்டியும் உறுதியுடன் தொடரும் சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம்
சிறிலங்கா அணியினர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதனை இடைநிறுத்த வேண்டும்.  
இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு சர்வதேச மட்டத்திலான சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும். 


தாயகத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும், நிலப்பறிப்பு நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்த வேண்டும். 

சிறிலங்கா சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அரசியற் கைதிகளான போராளிகளை விடுதலை செய்ய வேண்டும். 

மேற்கு நாடுகளில் அகதி தஞ்சம் கோருபவர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் என ஐந்து அம்சக் கோரிக்கைகளை சர்வதேச சமூகத்தின் முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார். 

இன்றய தினம் திரு. சிவந்தனுக்கு ஆதரவாக லண்டனின் புறநகர்ப்பகுதியான ஹரோவைச் சேரந்த திரு. குணா அவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டத்தை நடாத்தினார். 

திரு.சிவந்தன் உண்ணாநிலைப் போராட்டத்தை நடாத்தி வரும் பந்தலுக்கு அருகிலும், ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகிலும் அவரது கோரிக்கைகளடங்கிய துண்டுப்பிரசுரங்களை பெருமளவில் தமிழ் இளையவர்களால் விநியோகிக்கப்பட்டது. 

திரு. சிவந்தனை நேரில் வந்து சந்திக்க வசதியில்லாதவர்களும், வெளிநாடுகளில் வசிப்பவர்களும் அவருடன் sivanthan27@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியினூடாக தொடர்பு கொண்டு உங்கள் ஆதரவினை வெளிப்படுத்த முடியும்.

No comments:

Post a Comment