Translate

Friday 5 October 2012

மாவீரர் மாதத்தில் இசை நிகழ்ச்சியைப் புறக்கணிப்போம்: ஆர். கே. செல்வமணி கோரிக்கை


கனடாவில் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி இசைஞானி இளையராஜாவின் இசைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாவீரர் மாதமான நவம்பர் மாதத்தில் களியாட்டங்களை தவிர்க்குமாறு இந்திய திரைப்பட இயக்குனர் ஆர். கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இப்பூமிப் பந்தில் தமிழன் என்றொரு இனம் இருப்பதற்கு அடையாளமாக இருப்பவர்கள் யாரென்றொல் ஈழத்திலே புறநானூற்றைப் புரட்டிப்போட்ட 40,000இற்கும் மேற்பட்ட அந்த மாவீரர்கள்தான்.
ஈழத்திலே தமிழர்களின் உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் தமிழ்ப் பெண்ணின் மானத்தை காப்பதற்காகவும் தன்னுயிர் ஈந்த அந்த வீரர்களின் அளப்பரிய தியாகங்களை ஆண்டுதோறும் நினைவுக்கூரும் மாதந்தான் நவம்பர் மாதமாகும்.
பல்வேறு இயக்கங்களை சேர்ந்த இந்த மாவீரர்கள் கடந்த 50 வருடங்களாக ஈழத்தமிழர் விடுதலைக்காகவும், நம் சந்ததியின் சுதந்திரத்திற்காகவும் தங்களின் இளமைக் கனவுகளையும், உற்றார்- பெற்றோரையும் மறந்து தங்களையே ஆகுதியாக்கி வீரகாவியமானவர்கள் ஆவார்கள்.
வாழவேண்டிய வயதிலே அன்பு மனைவியையும், ஆருயிர்க் கணவனையும், மழலைச் செல்வங்களையும் மறந்து மண்விடுதலைக்காக மரணித்திருக்கின்றார்கள். இப்படி ஆணும் பெண்ணும் சரிசமனாக வீரத்துடன் போராடி காற்றோடு காற்றாகக் கலந்துபோன மாவீரர்களைப் போற்றுகின்ற மாதந்தான் நவம்பர்மாதம்.
இந்த நவம்பர் மாதத்திலே ஈழத்தமிழர் மாத்திர மன்றி உலகத்தமிழர்கள் அத்தனைபேரும் நவம்பர் மாதத்தை தியாகமானதாகவும், வீரமானதாகவும் வணக்கத்திற்குரிய மாதமாகவும் போற்றி வருகின்றார்கள். மாண்டுபோன மாவீரர்களின் நினைவுகளை தம் இனத்திற்கும், சந்ததியினருக்கும் அவர்கள் இரத்தத்திலே ஊற்றிவருகின்றனர்.
இந்த நவம்பர் மாதத்திலே உலகத் தமிழினம் எந்தவொரு இசைவிழாக்களையும், களியாட்ட விழாக்களையும் கொண்டாடி மகிழ்வதில்லை. இம்மாத்தில் அனைத்துக் களியாட்ட விழாக்களையும் புறக்கணித்து புனிதமான மாவீரர்களைப் போற்றுகின்ற மாதமாகப் போற்றுகின்றது ஆனால், இலங்கை அரசா§கம் இந்த மாவீரர்களின் மாதத்தை மறக்கடிக்க முயல்கிறது.
துரோகிகளை பயன்படுத்தி களியாட்டங்களை நடத்தி வீரநிகழ்ச்சிகளை மறக்கடிக்க முயல்கிறது. இதற்காக தமிழ்திரைப்பட துறையே கூட வஞசகமாக அவர்களுக்கு தெரியாமல் பயன்படுத்திக்கொள்ள துடிக்கிறது.
இதற்காக கருணாவைப்போல், கே.பி யைப்போல் ஈழ தமிழர்களே சில துரோகிகளை பயன்படுத்தி தமிழ்திரைப்பட துறையை விலைபேச நினைக்கிறது. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்,
விநியோகஸ்தர்கள் சங்கங்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம் என திரைப்பட துறையின் அனைத்து பிரிவினரும் இதுவரை அனைத்து ஈழதமிழர்களுக்கான அனைத்து போராட்டங்களிலும் தோளோடு தோள்நின்று போராடி வந்திருக்கின்றோம்.
ஈழத்தமிழர்களுக்காக கண்ணீர் சிந்திய தமிழ்திரைப்படதுறை மாவீரர்களின் நினைவுகளை மறக்கடிக்க நினைக்கின்ற இலங்கை அரசின் இந்த சதிக்கு பலி ஆகிவிட கூடாது என்று அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.என தெரிவித்துள்ளார்.
Filed in: தாயகம்/இலங்கை

No comments:

Post a Comment