அமெரிக்காவை தவிர வேறு ஒரு நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை நிர்வகிக்கும் இரண்டு அமெரிக்கர்கள் இருக்கும் ஒரே நாடு இலங்கை எனவும் இவர்கள் வேறு யாருமில்லை எனவும் ஜனாதிபதியின் சகோதரர் இருவர் எனவும் சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஏகாதிபத்திய அழுத்தங்கள் காரணமாக இலங்கை மாத்திரமல்லாது மேலும் பல நாடுகள் அனைத்து துறைகளிலும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா மீது நடத்திய தாக்குதலில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அன்று முதல் இன்று வரை ஏகாதிபத்திவாதிகளினால் சுமார் 30 லட்சம் மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 22 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள சேகுவேராவின் நினைவு தினத்தை முன்னிட்டு, இரண்டு வாரங்கள் நடத்தப்பட உள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தும் போதே ரத்நாயக்க இதனை கூறியுள்ளார்.
அமெரிக்காவை தவிர ஒரு நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் அமெரிக்க பிரஜைகள் இருக்கும் ஒரே நாடு இலங்கையாகும். பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் என்ப ஒரு நாட்டின் முக்கிய துறைகளாகும். எமது நாட்டின் ஜனாதிபதியின் சகோதரர்கள் இருவர்தான் இந்த துறைகளுக்கு பொறுப்பாக உள்ளனர் எனவும் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடதக்கது. அத்துடன் அமைச்சர் டளஸ் அழகபெருமவும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.
No comments:
Post a Comment