Translate

Friday, 9 December 2011

இந்திய உதிரியின் நாடகம் – சேரமான்

வெளிநாடுகளில் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதை விடுத்து, தம்முடன் நேரடியாக இந்தியா தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று உருத்திரகுமாரனின் உதவியாளரிடம் 02.12.2008 அன்று திட்டவட்டமாக தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் தெரிவித்திருந்த நிலையில், தன்னை சந்திப்பதற்கு இந்திய இராசதந்திரியான எஸ்.பி.சிங் விருப்பம் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு 04.12.2008 அன்று வன்னிக்கு செய்தியொன்றை உருத்திரகுமாரன் அனுப்பி வைத்திருந்தமை பற்றி எமது கடந்த தொடரில் பார்த்திருந்தோம்............. read more 

அணு உலைகளுக்கு மாற்று : வெளிவராத உண்மைகள் (2) - முனைவர் வே. பிரகாஷ்


அணு உலைகளுக்கு மாற்று : வெளிவராத உண்மைகள் (2)
- முனைவர் வே. பிரகாஷ்
இந்தியாவில் இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பு (ஈர்ய்ச்ங்க்ங்ழ்ஹற்ண்ர்ய் ர்ச் ஒய்க்ண்ஹய் ஒய்க்ன்ள்ற்ழ்ஹ்) உள்ளது. அதில் ஆற்றல் தணிக்கை மற்றும் மேலாண்மைக்கான அமைப்பு (ஊய்ங்ழ்ஞ்ஹ் ஆன்க்ண்ற் & ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் ஈங்ப்ப்) உள்ளது. அவர்கள் பல்வேறு பெருந்தொழில் நிறுவனங்களில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான வழிவகைகளைக் கணக்கிட்டு மின்சேமிப்பிற்கு வழிவகுத்துக் கொடுக்கின்றனர்.

காணொளி-"தந்தையும் தம்பியும்" - நூல் வெளியீட்டு நிகழ்ச்சி

"தந்தையும் தம்பியும்" - நூல் வெளியீட்டு நிகழ்ச்சி 
இடம்: தி.நகர்,சென்னை நாள்:2-12-2011



தமிழக அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் குவைத் தமிழர் கூட்டமைப்பின் வேண்டுகோள்


வணக்கம். குவைத்தில் வாழ்ந்துவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் அமைப்புகளும் இணைந்து இக்கோரிக்கையினை முன்வைக்கின்றோம். தமிழகத்தில் மொழிக்கும் இனத்திற்கும் நிலத்திற்கும் எதிரான செயல்பாடுகள் எவ்வித அச்சுறுத்தலுமின்றிப் பரவித் தமிழர்களை அழுத்திவைப்பது நெடுங்காலமாக மிக எளிதாக நடைபெற்று வருகின்ற ஒன்றாகும்.

சென்னையில் மலையாள ஆலுகாஸ் நகையகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி சிறையில் உள்ள தோழர்கள் மீது புதிய பொய் வழக்கு தோழர் பெ.மணியரசன் கண்டனம்


முல்லைப்பெரியாறு அணையை உடைக்கத் திட்டமிட்டுள்ள கேரள அரசியல் கட்சிகள் மலையாள மக்களுக்கு இனவெறியூட்டி, கேரளாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் நிலையை உண்டாக்கியுள்ளனர். தமிழகத்திலிருந்து ஐய்யப்பன் கோயிலுக்குச் சென்ற அப்பாவித் தமிழர்களை மலையாளிகள் தாக்கினர். தமிழகத்திலிருந்து சென்ற வாகனங்களைத் தாக்கினர். கூலிவேலைக்குச் சென்ற தமிழகப் பெண்கள் உள்ளிட்ட 500 தொழிலாளிகளை சிறைபிடித்து வைத்தனர். மலையாளிகளின் இனவெறியுடன் அப்பாவித் தமிழர்களுக்கெதிராக நடத்திய மேற்படி அட்டூழியங்கள் மீது சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கை எதையும் கேரள அரசு எடுக்க வில்லை.

சுப்பிரமணியசுவாமி வழியில் காங்கிரசை ஒழிக்க முடியுமா?

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு பேசிய சீமான், “பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர் வழியில் காங்கிரசை ஒழிக்க வேண்டும்.'' என்று இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். ஏற்கனவே, பெரியாரையும், முத்துராமலிங்கத்தையும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவர்கள் என்ற ஒரே நேர்கோட்டில் இணைத்து மிகப்பெரிய பிழை செய்தார். இப்போது, அம்பேத்கரை, முத்துராமலிங்கத்தோடு இணைத்ததோடு மட்டுமில்லாமல், முத்துராமலிங்கத்தைக் காங்கிரஸ் ஒழிப்பு வீரர் என்று பட்டம் கொடுத்து மகிழ்கிறார் சீமான்.,................. read more 

எல்லா அமைப்புகளும் ஒன்றுகூடியது: பிரித்தானியாவில் மீண்டும் ஒற்றுமை !

நேற்று மாலை பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு, 1948ம் ஆண்டு முதல் சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழ்பேசும் மக்கள் மீது இடம்பெற்று வருகின்ற, இனப்படுகொலை, போர்க்குற்றம் மற்றும் மானிடத்திற்க்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஓர் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறித்தி பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்ப்பாட்டில் பிரித்தானியாவில் சமகருத்துள்ள தமிழ் அமைப்புகளுடன் ஓர் கருத்துப்பகிர்வு இடம்பெற்றது. குறிப்பாக பிரித்தானியாவில் செயல்படு ஒன்பதிற்கும் மேற்பட்ட அமைப்புகள் இதில் கலந்துகொண்டு ஒரு மித்த குரலாக ஒலித்திருந்தது பெரும் நம்பிக்கை தரும் விடையமாக அமைந்திருந்தது........... read more 

சீமான் – அவதூறுகளை அறுத்தெறியும் அறம்


seeman_200_copy காங்கிரசு என்ற மாபெரும் இன எதிரியை அடையாளம் காட்டி அழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த எமக்கு, எதிரிகளின் சீறிப் பாயும் தோட்டாக்களுக்கு மத்தியில் சகத்தோள்களின் அக்கறையில்லாத அவதூறுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதே என்ற உறுத்தலும் வருத்தமும் இருந்தது உண்மைதான். இந்த பத்தி கூட அவதூறுகளுக்கு எதிரான விளக்கம் அல்ல. மாறாக எதுதான் உண்மை என்பதற்கான மீள் வாசிப்பு. அவ்வளவே. எங்கள் தோள்கள் மேல் கைபோட்டு சொல்லும் அக்கறையுடனான விமர்சனங்களுக்கும், உண்மைக்குப் புறம்பான அவதூறுகளுக்குமான வேறுபாட்டினை நாம் அறிவோம். எம் மீதான, புதிதாக தோன்றியிருக்கும் இன ஆதரவு அரசியலின் மீதான அக்கறையில் விமர்சனக் கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் தோழமைகளின் கருத்துக்களில் நாங்கள் என்றென்றும் நம்பிக்கையும், அன்பும் கொண்டவர்களாக இருக்கிறோம் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறோம்............ read more 

Thursday, 8 December 2011

HELP OUR PEOPLE BACK HOME!


HELP OUR PEOPLE BACK HOME
"Kattuvali Kiramam 2011" 

Date:  Sunday 18th December 2011 @ 6pm to 10pm at
Venue : Zoroastrian Centre, 440 Alexandra Avenue, Rayners Lane, Middx, HA2 9TL.
Pungudutivu got Talent Competition,
Pungudutivu Graduates honored,
Pungudutivu "Mannin Maintharkal" honored,
Raffles tickets with lots of surprises and much more..........,

முதலுதவி அளிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்


முதலுதவி அளிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

ஒரு கையோடு இருந்தால் போதும். எல்லா சந்தர்ப்பங்கம் நாமாகவே சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று நினைத்துவிடாதீர்கள். காரணம் சிகிச்சை முறைகள் நபருக்கு மாறுபடும். சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். ஆனாலும் சில பொதுவான விதிகளை மட்டுமே இங்கே தொகுத்துள்ளோம்.
முதல் கட்டமாக, முதலுதவி செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் மூன்று:
1.உயிரைப் பாதுகாக்க வேண்டும்.
2.நிலைமை மோசமாவதைத் தடுக்க வேண்டும்.
3.சீக்கிரத்தில குணமளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது தைரியம். பாதிக்கப்பட்டவர்களைத் தேற்றி, ஆறுதல் சொல்ல வேண்டும். பயப்படக் கூடாது. தவிரவும் வேறு சில பொறுப்புகளும் உள்ளன.

Raasi Palan 08-12-2011 Jaya Tv

இன்றைய இராசிபலன்

Raasi Palan 08-12-2011 Jaya Tv  



 

Raasi Palan 08-12-2011 Jaya...

Tuesday, 6 December 2011

“புலிகளை ‘வைக்க வேண்டிய’ இடத்தில் வையுங்கள்” -இந்திய ரகசியம்!


“விடுதலைப்புலிகள் இயக்கத்தை ‘வைக்க வேண்டிய’ இடத்தில் வைத்திருங்கள்” இந்தியா நார்வேயிடம் ரகசியமாக இவ்வாறு தெரிவித்தது என்று, நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியான நார்வே நாட்டு ஆவணம் ஒன்று கூறுகின்றது.
இந்த விஷயம், மத்திய அரசு இதுவரை ஸ்ரீலங்கா கொள்கை பற்றி தெரிவித்துவந்த கருத்துகளுக்கு தலைகீழாக உள்ளது!
இந்திய மத்திய அரசு வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்கும்போது, “ஸ்ரீலங்கா அரசு விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்திவிட்டு பேச வேண்டும்” என்று கூறிய போதிலும், அவர்களின் நிஜ விருப்பம் விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்பதிலேயே இருந்தது என்றும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது............ READ MORE 

புலம்பெயர் தமிழர்களைச் சந்திக்க சிங்கள எம்.பிக்கள் குழு லண்டன் பயணம்


லண்டனை மையப்படுத்திச் செயற்படும் இலங்கையர்களைச் சந்திப்பதற்காக 40 வயதிற்குபட்ட எம்.பிக்கள் குழுவொன்று எதிர்வரும் 8 ஆம் திகதி வியாழக்கிழமை லண்டன் பயணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஹரின் பெர்னான்டோ, நிரோஷன் பெரேரா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் வசந்த சேனநாயக, ஹுனைஸ் பாரூக் மற்றும் எரிக் வீரவர்த்ன போன்றோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது......... READ MORE 

உங்களை நேசிக்கும் பெண், யாரென்று கண்டுபிடிப்பது எப்ப‍டி?​

உங்களை நேசிக்கும் பெண், யாரென்று கண்டுபிடிப்பது எப்ப‍டி?​
உங்களை நேசிக்கிற பெண் நேருக்கு நேர் பார்க்க மாட்டாள். கடைக் கண்ணால் நோ க்குவாள். நீங்கள் பாராத சமயமாய்ப் பார் த்து மகிழ்வாள். உங்கள் மீது அக்கறையற் றவள்போல் பாசாங்கு செய்வாள். அவசி யமில்லாத நிலையிலும் அளவுக்கு மீறி இழுத்து போர்த்திக் கொள்வாள்.
நீங்கள் ஏதாவது கேட்டு வைத்தால் புன் முறுவலுடன் தலை குனிவாள். பொருள ற்ற வார்த்தைகளை உதிர்ப்பாள். ஆனால். உங்கள் அருகாமையை விரும்புவாள் மணிக்கணக்கில் மௌனமாய் அமந்திருப் பாள்............. read more

ஈழத் தமிழர்களுக்காய் ரஜனி குரல் கொடுக்க வேண்டும் – தீபச்செல்வன்


ஈழத் தமிழர்களுக்காய் ரஜனி குரல் கொடுக்க வேண்டும் – தீபச்செல்வன் 

ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் அவலத்தின் பொழுது திரைத்திரையினருடன் கலந்து நடிகர் ரஜனிகாந்த் குரல் கொடுத்தார் என்று குறிப்பிட்ட ஈழ கவிஞரும் ஊடகவியலாளருமான தீபச்செல்வன் நடிகர் ரஜனிகாந்த் ஈழத்தில் மூன்று தலைமுறைகளாக சூப்பஸ்டாராக செல்வாக்குப் பெறுபவர் என்று குறிப்பிட்டார்.
ரஜனிகாந்தின் படங்களை புலிகள் ஒரு பொழுதும் தடை செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இழத்தில் ரஜனிகாந்த் தொடர்பில் இந்தியா டுடே பத்திரிகையில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

WATCH GTV LIVE

1000 இடைநிலைப் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தில் யாழ். இந்துக் கல்லூரி!!


1000 இடைநிலைப் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தில் யாழ். இந்துக் கல்லூரி!!


கல்வி அமைச்சினால் 1000 இடைநிலைப் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யும்  திட்டத்தில் யாழ். இந்துக் கல்லூரியும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது என கல்லூரி அதிபர் கணேசராசா தெரிவித்துள்ளார்.

இந்து இளைஞன் மலர் வெளியீட்டு விழா இன்று கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார்............. read more 

தலைவர் பிராபகரன் உயிரோடு உள்ளார் சீமான் பரபரப்பு அறிக்கை !


தலைவர் பிராபகரன் உயிரோடு உள்ளார் சீமான் பரபரப்பு அறிக்கை !

தமிழீழ தேசிய தலைவர் உயிரோடு உள்ளார் என செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார் .
அவர் உரிய நேரத்தில் உரிய வேளை வருவார் என பர பரப்பு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார் .!

Raasi Palan 06-12-2011


Raasi Palan 06-12-2011 Sun Tv

Raasi Palan 06-12-2011 Sun...

Raasi Palan 06-12-2011 Jaya Tv

Raasi Palan 06-12-2011 Jaya...

“சிறிலங்கா அதிபரின் ஐ.நா உரையை எழுதியது நாங்களே“


ஐ.நாவில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிகழ்த்திய உரையை தாமே எழுதிக் கொடுத்ததாக பிரித்தானியாவின் பொதுஉறவுகள் நிறுவனமான பெல் பொட்டிங்கர் கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஐ.நாவில் நிகழ்த்திய உரையில், மனிதாபிமானப் போர் தொடர்பாக மீளாய்வு செய்வதாகக் குறிப்பிட்ட சிறிலங்கா அதிபர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தமது படையினரின் நடவடிக்கைகள் குறித்தும் விபரித்திருந்தார்....... read more 

கூட்டமைப்பின் மூன்று முக்கிய கோரிக்கைகளை ஏற்க அரசு மறுப்பு - பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது

"01.வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்தல்.
02.மாகாணத்திற்கு சட்டம், ஒழுங்கு, பொலிஸ் அதிகாரம்.
03.அரச காணிகளை மாகாண அரசுக்கு உரித்தாக்குதல்.



இனப்பிரச்சினை தீர்வு குறித்த அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட பிரதான முக்கிய மூன்று விடயங்களை செயற்படுத்த அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது............ read more 

"வணக்கம். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குத்தான் கொண்டாட்டம் என்பார்கள்.


"வணக்கம். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குத்தான் கொண்டாட்டம் என்பார்கள்.
சில நாட்களாக இந்தப் பனிப்போரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இரண்டு பூனைகளும் குரங்கும் அப்பம் பிரித்த கதை தெரியும்தானே!
தேசியவாதிகள் ஆளுக்கு ஆள் மோதிக் கொள்வதால் எதிரிக்குத்தான் இலாபம். தேசியத்துக்குக் கடும் இழப்பு.
டக்லஸ் தேவானந்தா மீது யாரும் கல் எறிவது இல்லை. அதனால் அவர் தப்பிக் கொள்கிறார்.
அண்மையில் மாகாணசபைக்கு காவல்துறை, காணி அதிகாரம் தேவையில்லை என்று டக்லஸ் பேசினார்.

யுத்தம் முடிந்தும் காணாமல் போன பிள்ளைகளைத் தேடி அலையும் பெற்றோர்கள்!!

யுத்தம் முடிந்தும் காணாமல் போன பிள்ளைகளைத் தேடி அலையும் பெற்றோர்கள்!!

இறுதி யுத்தம் முடிவுக்கு வந்து இதுவரையில் 2000 சிறார்கள் அவர்களின் குடும்பறங்களுடன் இணைக்கப்பட்டிருந்தாலும் தற்போதும் பெற்றோர்கள் தமது காணாமல் போன பிள்ளைகளைத் தேடி அலைகின்றனர்.

இவ்வாறு பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் The Economist சஞ்சிகையில் எழுதப்பட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி..read more 

வட மாகாண முதலமைச்சர் பதவியை நிராகரித்த ஜே. சிறிரங்கா!

வட மாகாண முதலமைச்சர் பதவியை நிராகரித்த ஜே. சிறிரங்கா!

வடமாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட முன்வருமாறு அரசு விடுத்த வேண்டுகோளை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சிறீரங்கா நிராகரித்திருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வடமாகாண முதலமைச்சர் பதவிக்கு ஆளுங்கட்சியின் அமைச்சர் ஓருவரே நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்ப்பட்ட சூழ்நிலையில், ஆளுங் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர், சிறீரங்காவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்குமாறு வலியுறுத்துகின்றனர்.
இதனடிப்படையில் இந்த விடயம் குறித்து ஆளுங் கட்சி அரசியல் பிரமுகர்கள் சிலர் சிறீரங்காவுடன் தொடர்பு கொண்டு விரிவாகக் கலந்துரையாடினர் எனத் தெரிகிறது.

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை நிலை குலைய வைக்கும் முயற்சியில் ரி.ஆர்.ரி. வானொலி!

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை நிலை குலைய வைக்கும் முயற்சியில் ரி.ஆர்.ரி. வானொலி!
பாரிஸ் நகரிலிருந்து ஒலிபரப்பாகும் ரி.ஆர்.ரி. தமிழ் ஒலி என்ற வானொலி சிங்கள தேசத்தின் விருப்பங்களோடு இணைந்து செயற்படுவது போலவே தோன்றுகின்றது. 

இந்த வானொலியை ஆரம்பித்து நடாத்தும் ரங்கன் எனப்படும் சிறிரங்கன் ஆரம்ப காலத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் செயற்பாட்டராகப் பணி புரிந்தார். இவரது தவறான செயற்பாடுகள் காரணமாக இவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்ட இவர், ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகள் தன்னைக் கொலை செய்வதற்கு முற்பட்டதாக பிரஞ்சு காவல்துறையில் முறைப்பாடும் செய்திருந்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரான்சில் பதிவு செய்யப்பட்ட முதல் முறைப்பாடாக இது உள்ளது. 

முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்தால் தமிழகத்தை விட்டு மலையாளிகள் வெளியேறட்டும்


முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்தால்
தமிழகத்தை விட்டு மலையாளிகள் வெளியேறட்டும்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன்  அறிக்கை

முல்லைப் பெரியாறு அணையைத் தகர்த்துத் தரைமட்டமாக்கிட மூர்க்கமாக முயல்கிறார்கள் மலையாளிகள். இந்தியத் தேசியம் பேசும் காங்கிரசும் சர்வதேசியம் பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மலை யாளிகளிடம் இனவெறியைத் தூண்டி, அணையை உடைப்பதற்கான ஆயத்தங்கள் செய்து வருகின்றன.

கற்க கசடற 2012 - திருக்குறள், தொல்காப்பியம் மற்றும் ஆத்திசூடி போட்டி

கற்க கசடற 2012 - திருக்குறள், தொல்காப்பியம் மற்றும் ஆத்திசூடி போட்டி

தமிழ் இளையோர் அமைப்பினால் கடந்த வருடம் நடாத்தப்பட்டு மிக பெரிய வெற்றிகண்ட கற்க கசடற திருக்குறள் போட்டி மீண்டும் ஒரு முறை 2012 சனவரி மாதம் தொடங்கவுள்ளது. கடந்த வருடம் 300 ற்கும் அதிகமான தமிழ் மாணவர்கள் பங்கு பற்றி இவ் போட்டிக்கு வரவேற்பை அள்ளி தந்துள்ளார்கள். அதன் அடிப்படையில் இம்முறை நாம் திருக்குறளுடன் சேர்த்து தொல்காப்பியம் மற்றும் ஆத்திசூடி போன்றனவற்றையும் ஒரு போட்டியாக அறிவித்துள்ளோம். 

இலங்கை ஆட்சியாள‌ர்களின் எந்தக் கோரிக்கைக்கும் இணக்கந் தெரிவிக்க வேண்டாமென்று உலகத்தமிழ் மக்கள் அனைவரினதும் சார்பாக மிகவும் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.


ஈழத்தமிழ் மக்களுக்கெதிரான‌  "இனப்படுகொலையை" மறைப்பதற்காக‌ சிறீலங்கா இனவாதசிங்கள ஆட்சியாள‌ர்களினால் நடாத்தப்படுகின்ற எந்தவொரு மாநாட்டிலும், நிகழ்வுகளிலும்; உலகத்தமிழ் மக்களினால் மிகவும் போற்றப்படுகின்ற மாமனிதரான நீங்கள், பங்குபற்றமாட்டீர்கள் என்று உலகத் தமிழர்கள் அனைவரும் மிகவும் நம்பிக்கையுடன்உள்ளார்கள்.

நம்பிக்கை இன்னும் சாகவில்லை...!!!!


MAAVEERAR-FAMILY-5.jpg

வழமைக்கு மாறாக அன்று வானம் கறுத்துக்கிடந்தது.தூரத்தில் கார்முகில்கள் திரண்டு மழைக்குணமாய் இருந்தது.

கார்த்திகை 27.இது கல்லறைகள் பூப்பூக்கும் மாதம்.அதனால்த்தான் என்னவோ வானம் இப்பிடி கிடக்குது.

சந்திரன் போன கிழமைதான் தடுப்பில இருந்து வெளியில வந்திருந்தான்.கிட்டத்தட்ட இரண்டு வருசம் இருண்ட உலகத்தில் அவனது வாழ்க்கை கரைந்துபோனது.சந்திரன் கடைசி நிமிசம் வரை வெளியில வருவன் எண்டு நம்ப இல்லை.எல்லாம் கெட்ட கனவு போல நடந்து முடிந்து விட்டது.

காலத்தை வென்ற பேச்சாளர் - எம் ஆர் ராதா

 காலத்தை வென்ற பேச்சாளர் - எம் ஆர் ராதா
தமிழகத்தில் இப்பொழுது எதற்க்கெடுத்தாலும் போராட்டம், கூடங்குளம், முல்லை பெரியார் அனை, ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் தாக்கபட்டனர், இந்த பேச்சு 40 வருடங்களுக்கும் முன்பே தமிழ் நாட்டில் தமிழனின் நிலை, சினிமா நடிகர்கள் பற்றி புட்டு புட்டு வைத்த எம் ஆர் ராதா.............read more 



M.R.Radha Speech at Malasiya - 1



Monday, 5 December 2011

TNAயின் நிலைப்பாட்டை ஜனநாயக மக்கள் முன்னணி ஆதரிக்கிறது:- குமரகுருபரன்


பாராளுமன்ற தெரிவுக் குழு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஜனநாயக மக்கள் முன்னணி ஆதரித்துள்ளதுடன், அதனை வரவேற்றுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நல்லையா குமரகுருபரன் இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டதன் மூலம் இந்த ஆதரவினைத் தெரிவித்துள்ளார்............read more

சர்வதேசத்தின் நலன்சார் போட்டியில் இலங்கைத் தீவின் முக்கியக்கியத்துவம்!- பொன்.கஜேந்திரகுமார்


சீனாவின் பொருளாதார போட்டி, இந்தியாவின் பாதுகாப்பு போட்டி, அமெரிக்காவின் வல்லரசுப் போட்டி, என இலங்கையை மையப் படுத்திய, சர்வதேச அரசியல் போட்டிகள், தமிழர் தரப்பிற்கு சாதகமான அரசியற் சூழலையையே தக்கவைத்துள்ளது.
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில் தெரிவித்திருந்தேன்............ read more

தமிழ் மொழித்"தரப்படுத்தலுக்கு" "அப்துல் கலாம்" அவர்களை துணைக்களைக்கும் சிங்கள ராஜபக்க்ஷ.

http://eeladhesam.com/images/stories/cartoon/kaddurai/apdul%20kalaam.gifஎதிர்வரும் 2012 ஆண்டை, மும்மொழி ஆண்டாக பிரகடனப்படுத்தி, சிங்கள கட்டாய திணிப்பை சட்டமூலமாக்குவதற்கு ஸ்ரீலங்கா அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷ அறிவிப்பு வெளியிட்டிருப்பதாக தெரிகிறது............. read more

காணாமல்போன பிள்ளைகளை இன்னமும் தேடிவரும் பெற்றோர்


இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது காணாமல்போன தமது பிள்ளைகளை அவர்களின் பெற்றோர் இன்னமும் தேடிவருவதாக பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் த எக்னொமிஸ்ற் என்னும் சஞ்சிகை தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் விடுதலைப்புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்புத் திட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்ட தனது மகனை தயாரான சாந்தகுமார் கமலா இன்னும் தேடிவருவதாக இச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது............. read more

பயங்கரமான காலகட்டத்தில் பயணிக்கிறது நாடு - கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன


கடந்த பல வருடங்களாக எதிரணி ஒன்றின் தேவைப்பாடு பற்றி பலராலும் உணரப்பட்டு வந்தது. இது தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகளும் பல முறை நடைபெற்று வந்தன. இந்த விடயம் இலகுபோல் தெரிந்தாலும் மிகவும் கடினமான ஒரு பணியாகும்............ read more 

அங்கவீனர் அதிகமுள்ள சமூகமாக எமது சமூகம் மாற்றப்பட்டுள்ளது.


யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் விசேட தேவைக்குட் பட்டோர் தினம் 2011. 04.12.2011 ஞாயிற்றுகிழமை மு.ப 10.00 மணியளவில் யாழ் விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் ஆர்.மகேந்திரன் தலைமையில் யாழ் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் பிரதம விருந்தினராக பேராசிரியர் இரா.சிவசந்திரனும் திருமதி சறோஐ சிவசந்திரனும் கலந்துகொண்டனர். கௌரவ விருந்தினராக யாழ்ப்பாண சமூக சேவை திணைக்களத்தை சேர்ந்த ஏ.ஞானவேல், எஸ்.அகிலன் அவர்களும் யாழ்ப்பாண மத்திய கல்லூரி அதிபர் எஸ்கே.எழில்வேந்தன் அவர்களும் சட்டத்தரணி மு.றெமீடியஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள்........... READ MORE 

திருட்டை சுட்டிக்காட்டினாலும் திருந்தாத மனிதன் இணையத்தள போலிகள்!


நேற்று எங்கள் இணையத்தளத்தில் கனடாவிலிருந்து எமது சகோதர இணையத்தள உரிமையாளரால் பிரத்தியேகமாக அனுப்பி வைக்கப்பட்ட தலையில் 2020 ஊசிகளை ஏற்றி உலக சாதனை என்ற வீடியோவை அதற்குரிய செய்தியை நாம் எழுதி தினக்கதிரில் வெளியிட்டோம். அந்த வீடியோவும் செய்தியும்  எமது தமிழ்வணிகம் மற்றும் தினக்கதிர் இணையத்தளங்களுக்கு சொந்தமானது............ READ MORE

தமிழீழ மக்களாகிய நாங்கள் யாரும் யாருக்கும் எதிரிகள் அல்ல!


ஒரு வகையாக பாரிய அசம்பாவிதங்கள் எவையும் இல்லாமல், இந்த வருட மாவீரர் தினமும் வெகு சிப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. சில நாடுகளில் ஏட்டிக்குப் போட்டியான மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெற்றாலும், தமிழ் மக்கள் தமது தேசத்தின் புனிதர்களுக்குத் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
புலம்பெயர் தமிழர்களைப் பிளவு படுத்தும் நோக்கிலான சிலரது நகர்வுகளைத் தமிழ் மக்கள் நிராகரித்திருப்பது மனதுக்குப் பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்குள் ஏற்பட்ட அதிகாரம் போட்டிக்கு மாவீரர் தினம் பலியாகிவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருப்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும். இரு தரப்பாகப் பிரிந்து நின்று மோதல் போக்கைத் தொடர்வதற்குத் தாம் ஆதரவு வழங்கப் போவதில்லை என்றே பெரும்பாலான தமிழர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள்.

டிசம்பர் 21-ல் முற்றுகைப் போராட்டம்: வைகோ


முல்லைப் பெரியாறை காக்கும் நோக்கத்துடன் டிசம்பர் 21 ஆம் தேதி தமிழ்நாட்டிலிருந்து கேரளத்திற்குச் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்து வாகனங்களை தடுத்து நிறுத்தும் மறியல் போராட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை வைத்துக் காமெடிக்குத் தயாராகும் சிங்கள ஆட்சியாளர்கள்!


இறுதி யுத்தத்தின் பின்னர் சிங்கள ஆட்சியாளாகளால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையை, கடந்த 20-11-2011 அன்று சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது.

மயிலிறகால் தடவிப் பெற்றுக்கொள்ள முடியுமா, தமிழீழ விடுதலையை?


தமிழ்த் தேசிய விடுதலைத் தளத்தை மலினப்படுத்தி, அதற்கான விலையை எதிரியிடம் பெற்றுக்கொள்ளத் துடிப்பவர்கள் இரண்டு விடயங்களுக்கு அதிகம் முன்னுரிமை வழங்குகின்றார்கள்.
ஒன்று, ஆயுதம் ஏந்திய இன்னொரு விடுதலைப் போராட்டம் சாத்தியமில்லை. இரண்டாவது, வெளிப்படைத் தன்iமையுடனான ஜனநாயகப் போராட்டம். இந்த இரண்டுக்குமே நெருங்கிய தொடர்பு இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

திருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர் : உதுல் பிரேமரத்ன


 திருமகள், 1996 செப்டம்பர் மாதம் எட்டாம் திகதி இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அப்பொழுது அவர் ஆறு மாத கர்ப்பிணி. அவர் மட்டுமல்லாது அவரது கணவரான அந்தோணிப் பிள்ளை ரொபர்ட் மெக்ஸலனும் அன்று கைது செய்யப்பட்டார். திருமகள் வயிற்றிலிருந்த குழந்தையோடு சேர்த்துஅன்றைய தினம் சிறிய குடும்பமொன்று கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இச் சிறிய குடும்பமானது விசாலமானதொரு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர். அது வெலிக்கடைச் சிறைச்சாலை. இன்னுமொரு துரதிஷ்டமான சிறிய சிறைக் கைதியொருத்தியை உலகுக்குப் பிரசவித்ததன் மூலம் திருமகள் சிறைச்சாலையில் வைத்தே தனது வயிற்றுச் சுமையைக் குறைத்துக் கொண்டார்.