Translate

Tuesday 24 May 2011

ராஜபக்சவின் ஆட்சியில் மக்கள் அமைதியாக இல்லை காப்பாற்றுங்கள் கூறுகின்றார் கே.பி

தலைப்பபைப் பார்த்தவுடன் உங்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும் , ஆனால் உண்மைதான் கே.பிதான் அப்படி கூறியிருக்கின்றார். தவளை தன் வாயால் கெடும் என்பார்கள் அதே போல்தான் தன்னை அறியாமலே மனதில் உள்ள உண்மையை கே.பி கூறியிருக்கின்றார்.

கே.பியின் பேட்டி பல ஊடகங்களில் வெளிவந்தது அதை உற்றுக் கவணியுங்கள், இரண்டுவிதமான உண்மைகள் அப்பட்டமாக வெளிவரும். ஒன்று எமது மக்கள் அமைதியாக வாழ விரும்புகிறார்கள் தயவு செய்து அவர்களை அமைதியாக வாழ விடுங்கள் என்று ஒன்றும் அமைதியாக வாழ உதவியும் செய்யுங்கள் என இரண்டாவதாக இந்தியாவிடம் கெஞ்சுவார் கே.பி. முதலாவதில் மக்களை  அமைதியாக வாழ விடுங்கள் என இந்தியாவிடம் கேட்கிறார்.!

நன்றாக யோசியுங்கள் எவர் எமக்கு தொந்தரவு கொடுக்கிறார்களே அமைதியை கெடுக்கிறார்களோ அவர்களிடம்தான் இறுதியாக வெறுப்பாக கெஞ்சுவார்கள் இனியாவது விட்டுவிடு என்பது போன்று ஆகவே கே.பியே நேரிடையாகவே தெரிவிக்கிறார் இந்தியாவால்தான் தமிழர்க்கு அமைதி இல்லை ஆகவே தமிழர்களை இத்தோடாவது விட்டுவிடுங்கள் என்பதே அது.

அடுத்தது மக்கள் அமைதியாக வாழ உதவி செய்யுங்கள் என்கிறார் ஏற்கனவே மகிந்த மக்களுக்கு அமைதியையும் சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறார் என அரசும் ஒட்டுக்குழுக்களும் அறிவிக்கும் போது கே.பி மக்கள் அமைதியாக வாழ உதவி செய்யுங்கள் என இந்தியாவிடம் ஏன் கேட்க வேண்டும்?.

மகிந்தவின் ஆட்சியில் மக்கள் அமைதியை இழந்து தவிக்கிறார்கள் ஆகவே மகிந்தவிடம் இருந்து காப்பற்றுங்கள் என்பதுதான் அவரை அறியாமல் கே.பி உதிர்ந்திருக்கும் வார்த்தைகள். இக்கட்டுரையை சிங்களம் பார்த்தவுடன் கே.பிக்கு அழைப்பு மகிந்தவினால் அன்பாக விடுக்கப்படும்..
எப்படியே சிங்கள அரசின் ஏற்பாட்டிலேயே தமிழர்க்கு அமைதி இல்லை என்பதை உலகம் அறிய சிங்களமே சாட்சியளித்துள்ளது.
என்னும் நிறைய வரும்…..

No comments:

Post a Comment