Translate

Sunday 22 May 2011

போர்க்குற்றத்தில் இருந்து ஏன் இந்தியா சிறிலங்காவை காப்பாற்றுகின்றது. கஸ்பாரின் ஆய்வு


India
இந்தியா சிறிலங்காவின் போருக்கு உதவி செய்தது என்பது வெள்ளிடைமலை. அதேபோல சிறிலங்காவில் தமிழர்க்கு எதிரான போர்க்குற்றத்தில் இந்தியாவிற்கும் கணிசமான பங்கு உண்டு. இந்த நிலையில் சர்வதேச விசாரனை ஒன்று வருமாக இருந்தால் நிச்சயமாக இந்தியாவின் போர்க்குற்றத்திற்கான பங்களிப்பினை சர்வதேச விசாரணை குழு கண்டறிந்து அதனை சுட்டிக்காட்டும். ஆகவேதான் இந்தியா சிறிலங்காவை போர்க்குற்றம் தொடர்பில் தொடர்ந்தும் பாதுகாக்க முற்படுகின்றது.
.
சரி இந்தியாவை போர்க்குற்றத்தில் தொடர்பு படுத்தினால் என்ன பாதிப்பு? இது இந்தியாவிற்கு மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத  நிலைதான். இந்தியா பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் கொண்டுவந்து தன்னையும் ஒரு நிரந்தர நாடாக இணைக்க  மிகப்பெரும் முஸ்தீபுகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்காக பல்வெறு அறிக்கைகள் மட்டுமன்றி மேற்குலகினுடனான  ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டு வருகின்றது.
.
ஆனால் மேற்குலகம் இன்னமும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவை நிரந்தர நாடாக இணைக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டைகளை போடுவதிலும் பின் நிற்கவில்லை. இதற்காக இந்தியாவை பொறுத்தவரை அவர்கள் கையில் வைத்துள்ள விடயம் மனித உரிமை மீறல்கள் பற்றிய சுட்டியே.
.
கடந்த காலங்களில் இந்தியா மனித உரிமை மீறல்கள் விடயத்திலும் மிக கவனமாக நடந்து வருகின்றது. ஆனால் இலங்கை தொடர்பான விடயத்தில் சிங்கள அரசின் போர்க்குற்றச்சாட்டில் இந்தியாவிற்கும் பங்குண்டு என நிரூபிக்கப்பட்டால் அதுவொன்றே மேற்குலகத்திற்கு போதுமானது இந்தியாவின் ஐ. நா. சபையின் பாதுகாப்பு சபையில்  நிரந்தர உறுப்புரிமை நாடாக மாறுவதனை ஒத்தி வைப்பதற்கு. இதுதான் உண்மையில் இந்தியா சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றினை நடக்க விடாது இலங்கையினைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதற்கான காரணம். இவ்வாறு கூறியுள்ளார் கஸ்பார்...............read

No comments:

Post a Comment