40 ஆயிரம் பொதுமக்கள் படுகொலையை மூடி மறைக்க முடியாது! இலங்கைக்கு எதிரான பிரேரணை வலுப்பெறுவது உறுதி!- ஈலின் டொனஹோ
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 40 ஆயிரம் பொதுமக்கள் படையினரால் கொல்லப்பட்டனர் என்பதை இலங்கை அரசு மூடி மறைக்க முடியாது என அமெரிக்காவின் மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா தூதுவர் ஈலின் டொனஹோ தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரச படையினருக்கும் இடையில் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனிதவுரிமை மீறல் தொடர்பில் விசாரணைகள் நடத்துமாறு வலியுறுத்துவதற்கு தமக்கு பிரதான உதவியாளர் ஒருவர் கிடைத்துள்ளார்.
இதனடிப்படையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக அமெரிக்காவின் மனித உரிமைகள் பேரவையில் ஜெனீவா தூதுவர் ஈலின் டொனஹோ குறிப்பிட்டுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் பிரேரணை வெற்றிபெறுமாக இருந்தால் சட்டபூர்வமான எந்தவொரு கொள்கைகளையும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் முன்வைக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டது போல இறுதிக் கட்ட யுத்தத்தில் 40 ஆயிரம் பொது மக்கள் படையினரால் கொல்லப்பட்டனர் என்பதை இலங்கை அரசு மூடி மறைக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
அத்துடன் மூன்று வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இப் பிரேரணை அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
.
.
No comments:
Post a Comment