இலங்கையில் இனப்படுகொலையை நடத்திய அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் ஏற்றி தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை கோயம்பேடு காய்கறி, பழம் மற்றும் பூ மார்க்கெட் ஆகியவை மூடப்பட்டன.சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இதில் அடைக்கப்பட்டுள்ளன.
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் இவர்கள் அனைவரும் உண்ணாவிரதத்தையும் மேற்கொண்டனர்.
இந்திய அரசே, இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை நேரடியாக மேற்கொள்ள வேண்டும். ராஜபக்சேவை சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் வலியுறத்தினர்.
உண்ணாவிரத்தில் கலந்துகொண்ட வியாபாரி ஒருவர் கூறுகையில், பெரிய தலைவர்கள் யாராவது மறைந்தால் மட்டுமே பூ மார்க்கெட்டுக்கு விடுமுறை விடுவோம். பல கோடி ரூபாய் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டாலும், இருந்தாலும் இலங்கை தமிழர்களுக்காக நாங்கள் இந்த வேலைநிறுத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment