ஜெனீவாவில், அமெரிக்கா வெற்றி பெறும் என்றால் இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக வாக்களிக்கும். தோல்வி அடையுமென்றால் ஆதரவாக வாக்களிக்கும். இதுவே இந்தியாவின் சித்தாந்தம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.
இதுதொடர்பாக குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில்,
இந்தியா என்றுமே இலங்கைக்கு எதிராகவே செயற்படும். தமது நலனுக்கே முன்னுரிமை வழங்கும். எனவே மேற்கண்ட சித்தாந்தத்தையே இன்று கடைப்பிடித்து வருகிறது.
அதேவேளை தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கு இந்திய மத்திய அரசாங்கம் அடிபணிந்து எமக்கெதிரான செயல்பாட்டிற்குள் இறங்கியுள்ளது. இது இந்தியாவின் கடைசிக் காலமாகும்.
இந்தியாவின் தலைவிதி எதிர்வரும் 23 ஆம் திகதியோடு மாறிவிடும். அந்நாடு துண்டு துண்டாகப் போகின்றது.
தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி தமிழ்நாட்டை பிரிப்பதற்கான திட்டத்தை அமெரிக்கா நிச்சயம் முடுக்கிவிடும். இதற்கு தமிழ்நாடும் சாதகத் தன்மையோடு இணங்கிச் செயல்படும். இந்த ஆரம்பத்தோடு அந்நாடு துண்டு துண்டாக பிரியும்.
ஜெனீவாவில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தோல்வி கண்டாலும் இலங்கையை பிரிக்கும் தந்திரோபாயத்தை அமெரிக்கா கைவிடாது. வெற்றி பெற்றாலும் இந்தத் தந்திரோபாயம் தொடரும் என்றார்.
No comments:
Post a Comment