Translate

Tuesday 20 March 2012

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான கண்டம் தாண்டும் வரை வடக்கில் திறப்பு விழாக்களுக்கு தடை:-


ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான  கண்டம் தாண்டும் வரை வடக்கில் திறப்பு விழாக்களுக்கு தடை:-
வடக்கிலுள்ள பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து அரச திணைக்களங்களிலும்; எதிர்வரும் 22ம் திகதி வரை எந்தவொரு கட்டிட திறப்பு விழாக்களையோ பொது நிகழ்வுகளையோ நடத்தக்கூடாதென  வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார். தற்போது ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக எழுந்துள்ள கண்டம் தாண்டும் வரை மௌனம் காக்க அவர் இவ்வுத்தரவை பிறப்பித்திருந்ததாக கூறப்படுகின்றது.


கடந்த சில நாட்களிற்கு முன்னர் கோப்பாய் மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளில் இரு பாடசாலை புதிய கட்டிட திறப்பு விழாக்களுக்கு ஆளுநர்; தலைமையினில் திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. பாடசாலை நிர்வாகங்கள் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்த நிலையில் குறித்த நாளன்று காலைவேளை தீடீரென இவ்வறிவித்தலை வடக்கு மாகாண ஆளுநர் பிறப்பித்துள்ளார்.
எனினும் இந்நிகழ்விற்கென ஆளுநரை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைக்குமாறு கல்வித் திணைக்கள அதிகாரிகள் அதிபர்களுக்கு பணிப்புரை பிறப்பித்துள்ளனர். இதனால் மாணவர்களிடமிருந்து பணம் வசூலித்து அனைத்து ஏற்பாடுகளையும் அலங்காரங்களையும் மேற்கொண்ட பாடசாலை நிர்வாகங்கள் ஏமாற்றமடைந்துள்ளன. இந்நிகழ்விற்கென ஒவ்வொரு பாசாலையும் சுமார் ஒரு இலட்சம் வரையில் செலவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது 

No comments:

Post a Comment