நாட்டில் மனித உரிமைகளோ சட்டங்களோ முறையாக பின்பற்றப்படவில்லை என ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குற்றம் சட்டியுள்ளார்.
நேற்றை தினம் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான இயக்கத்தினர் ஒழுங்கு செய்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாறும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தங்களை முறியடிப்பதற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை ஆட்சியிலுள்ள அரசாங்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தங்களை முறியடிப்பதற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை ஆட்சியிலுள்ள அரசாங்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து சட்டங்களுக்கும் முரணாக வகையில் முன்னாள் இராணுவத் தளபதியை சிறையில் தடுத்து வைத்திருக்கிறார்கள்.
சிவில் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனங்களுக்கு முரணானது இந்த சாசனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு அமைய இலங்கையும் நடந்து கொள்ளும் என கையெழுத்திட்டுள்ளது. எனவே இவற்றை கருத்திற் கொண்டு சரத்பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையானது சர்வதேச நாடுகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வது புத்திசாதூரியமான விடயமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment