Translate

Sunday 18 March 2012

சவீந்திர சில்வாவை குறி வைக்கும் வெள்ளைக்காரர்கள்!


கொமன்வெல்த் நாளை முன்னிட்டு நியுயோர்க்கில் உள்ள பிரித்தானிய வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்தில் கடந்தவாரம் வரவேற்பு நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.இந்த வரவேற்பு நிகழ்விற்கு, நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
 
சவீந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்படாதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்ன, இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அவுஸ்ரேலியாவுடன் இணைந்து கொமன்வெல்த் கூட்டத்துக்கு இலங்கையே இணைத்தலைமை வகிக்கிறது. இந்தநிலையில், சவீந்திர சில்வா புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாலித கொஹன்ன கொழும்பு உயர்மட்டங்களுடன் ஆலோசித்த பின்பே நிகழ்வை புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளார்.

இதேவேளை, அவுஸ்ரேலியாவுடன் கலந்தாலாசிக்காமலேயே, போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுப்பதில்லை என்ற முடிவை பிரித்தானிய நிரந்தர வதிவிடப் பிரதிநதி சேர் மார்க் லயல் கிரான்ட் எடுத்துள்ளார்.
இந்தநிலையில், வெள்ளைக்காரர்கள் சவீந்திர சில்வாவைக் குறிவைத்து செயற்படுவதாக உணரமுடிகிறது என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே, ஐ.நா பொதுச்செயலருக்கு அமைதி காப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்கும் குழுவின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சவீந்திர சில்வாவை, அந்தக் குழுவில் இருந்து வெளியேற்ற அதன் தலைவரான கனடாவைச் சேர்ந்த லூயிஸ் பிரெசெற் முயன்றதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜெனிவாவில் தீவிரம் பெற்றுள்ள இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகள், கடந்தவாரம் நியுயோர்க்கிலும் எதிரொலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment