Translate

Wednesday 14 March 2012

பிரித்தானியாவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் பெண்கள் தொடர்பான அதிர்ச்சி ரிப்போர்ட்!


பிரித்தானியாவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் பெண்கள் தொடர்பான அதிர்ச்சி ரிப்போர்ட்!
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் பிரித்தானியப் பெண்களில் 80 சதவீதம் பேர் வெளியில் சொல்வதில்லை என்று புதிய ஆய்வு ஒன்றில் இருந்து தெரிய வந்துள்ளது.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படும் பெண்களில் அனேகமானோர் தங்களது குடும்ப கௌரவம், அவமானம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு காவல்துறையினரிடமும் புகார் அளிப்பதில்லை என்று குறித்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் இதன் மூலம் தப்பித்து விடுகின்றார்கள். இந்த நிலை ஆசிய நாடுகளில் தான் பொதுவாக அதிகம் காணப்படுகின்றது.
ஆனால் ஐரோப்பிய நாடு ஒன்றில் இவ்வாறான ஒரு நிலை காணப்படுவது ஆச்சரியத்தை தருவதாக இணையக் கருத்துக் கணிப்பை மேற்கொண்ட வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்..
இவ்வாறான நிலைக்கு முக்கிய காரணம் காவல் துறையினர் மீதான அவநம்பிக்கை ஆகும்.
காவல் துறையினரிடம் புகார் அளித்தாலும் பொதுவாக குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர் என்று மக்கள் நினைக்கின்றார்கள். 1600 பெண்களிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.
29 வீதமான பெண்கள் நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ கூட இந்த விடயத்தைத் தெரிவிப்பதில்லை என்று கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment