சிறீலங்காவின் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவினதும் அவரது குடும்பத்தினரதும் முழுமையான நோக்கம் இலங்கையினைத் தனிச் சிங்கள தேசிய நாடாகவே வைத்திருக்க விரும்புகின்றனர். பயங்கார நடவடிக்கைகள் தொடர்பிலான பிரித்தானியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் பில் றீஸ் தெரிவித்துள்ளார்.


அல்ஜசீரா தொலைக்காட்சி சில நாட்களுக்கு முன்னர் இலங்கை நிலவரம் தொடர்பில் நடைபெற்ற “நல்லிணக்கம் எட்டப்பட்டதா?” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்ச்சியில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி ஆலோசகர் ரஜீவ விஜயசிங்கவும் ஈழத்தமிழர் சார்பில் பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர் குமார் குமரேந்தின் ஆகியோருடன் மூன்றாம் தரப்பு உறுப்பினராக பயங்கர நடவடிக்கைகள் தொடர்பிலான பிரித்தானியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் பில் றீஸ் கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த பில் றீஸ், இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படுகின்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணை ஒன்றே தேவை. போர் மூன்று ஆண்டுகளாகியும் எந்த ஒரு நல்லிணக்கமும் ஏற்படவில்லை. இலங்கையினை தனிச் சிங்கள தேசியத்தைக் கட்டியெழுப்பும் வகையிலேயே மஹிந்தராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் விரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.