Translate

Monday 19 March 2012

சும்மா இல்ல.. படிச்சுப் பார்க்கணுங்க


சும்மா இல்ல.. படிச்சுப் பார்க்கணுங்க
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில் உள்ள விபரங்களை இந்தியா முதலில் நன்கு வாசித்து அறிந்து கொண்டதன் பின்னரே முடிவு எடுக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரான்ஸ், நோர்வே உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானம் மீது எதிர்வரும் 23ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இந்தியா மற்ற நாடுகளுடன் தொடர்பு கொண்டு ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த எஸ்.எம்.கிருஷ்ணா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தன்னை கவலை அடைய செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே ஐ.நா. தீர்மானம் தொடர்பாக தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விவாதித்து கருத்து பெறவேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Source: SriLankamirror

No comments:

Post a Comment