Translate

Wednesday 14 March 2012

மன்னார் ஆயர் இராயப்புவுக்கு ஜாதிக ஹெல உறுமய கொலை அச்சுறுத்தல்!


மன்னார் ஆயர் இராயப்புவுக்கு ஜாதிக ஹெல உறுமய கொலை அச்சுறுத்தல்!

 http://www.thinakkathir.com/?p=32354
இலங்கைச் சூழல் குறித்து ஐநா மனித உரிமைப் பேரவைக்கு கடிதம் எழுதிய மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய மற்றும் அரசாங்க சார்பு ஊடகங்களால் அச்சுறுத்தலுக்கு ஆளாவது குறித்து தாம் கவலையடைவதாக கத்தோலிக்க குருமார்கள், அங்கிலிகன் குருமார்கள் உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்டோர் ஐநாவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இலங்கை சூழல் குறித்து மன்னார் ஆயர் மற்றும் வடக்கில் உள்ள 30 கத்தோலிக்க குருமார்கள் சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதினர். இதையடுத்து அவர்கள் மிரட்டப்பட்டதாக நாட்டின் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள கிறிஸ்தவ குருமார்களும், பொதுமக்களும் ஐநா விடம் தற்போது தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து வெளிவரும் திவயின, மற்றும் ஜலண்ட் பத்திரிகைகள் உட்பட அரசசார்பு பத்திரிகைகள் மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆயருக்கு எதிராக சிங்களவர்களை தூண்டி விடும் வகையில் அப்பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டு வருவதுடன், ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசி வருகின்றனர்.
வட பகுதியில் இருக்கும் கத்தோலிக்க குருக்கள் மக்களின் கருத்தை பிரதிபலிக்கும் நோக்கிலேயே ஐநாவுக்கு கடிதத்தை தாம் எழுதியதாக அருட்தந்தை டொமினிக் தெரிவித்தார்.
அந்தக் கடிதம் இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்று தவறாக பொருள் கொள்ளப்பட்டதாகவும் அதனால் சில மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment