Translate

Sunday 10 June 2012

லண்டனில் காலில் அடிவாங்கிய விஜய்: ஆஸ்பத்திரியில் அனுமதி !

துப்பாக்கி படப்பிடிப்பில் நடிகர் விஜய் எதிர்பாராத விதமாக காயமடைந்தார். அவருக்கு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அதிர்வு இணையம் அறிகிறது. விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் துப்பாக்கி. இதனை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார், கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பது யாவரும் அறிந்த விடையம்.
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் துப்பாக்கியின் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின்போது சண்டைக் காட்சி ஒன்றில் விஜய் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது கால்மூட்டில் அவருக்கு அடிபட்டது. வலியால் துடித்த விஜய் ஐயோ அம்மா என்று கத்தியுள்ளார். இதனை அடுத்து அவர் தென்கிழக்கு லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது. இந்தப் படப்பிடிப்பு முடிந்ததும், மெல்போர்னில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்க முடிவு செய்திருந்தார் விஜய். ஆனால் காலில் அடிபட்டதால் அந்த விழாவுக்கு செல்வதை அவர் ரத்து செய்துவிட்டதாக தற்போது அறியப்படுகிறது. துப்பாக்கி படப்பிடிப்பு தொடர்ந்து விஜய்க்கு பெரும் சோதனைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் படத்தில் இடம்பெற்ற புகைப் பிடிக்கும் காட்சிக்காக பெரிய சர்ச்சை கிளம்பிய விடையம் மக்களுக்கு நினைவிருக்கலாம். இதனால் புகைப்பிடிப்பது மாதிரி காட்சிகளே இந்தப் படத்தில் இருக்காது என்று இயக்குநர் முருகதாசும், விஜய்யும் பின்னர் அறிவித்தது நினைவிருக்கலாம் ! 

தற்போது அவருக்கு காலில் அடிபட்டும் உள்ளது.

No comments:

Post a Comment