Translate

Tuesday, 3 April 2012

காணாமல் போன தமிழ் மக்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் இலங்கை அரசின் முயற்சியும் தோல்வி:-


காணாமல் போன தமிழ் மக்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் இலங்கை அரசின் முயற்சியும் தோல்வி:-

காணாமல் போன தமிழ் மக்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் இலங்கை அரசின் முயற்சியும் தோல்வி:-

காணாமல் போன தமிழ் மக்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்கும் இலங்கை அரசின் முயற்சியும் தோல்வியை தழுவியுள்ளது. வட-கிழக்கில் காணாமல் போனவர்களது எண்ணிக்கை தொடர்பான உத்தியோக பூர்வமான தகவல்கள் எதுவும் இன்று வரை எவரிடமும் இல்லாதேயுள்ளது. 

ஜெனிவா மட்டுமல்ல, நியுயோர்க், வொசிங்டனையும் எதிர்கொள்ளத் தயார் – மார்தட்டுகிறார் மகிந்த!


ஜெனிவா மட்டுமல்ல, நியுயோர்க், வொசிங்டனையும் எதிர்கொள்ளத் தயார் – மார்தட்டுகிறார் மகிந்த!

ஜெனிவா, நியுயோர்க், வொசிங்டன் என்று உலகில் எங்கிருந்து வரும் அழுத்தங்களையும் எதிர்கொள்வதற்கு தமது அரசாங்கம் தயாராகவே இருப்பதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

திருகோணமலை மாவட்ட கட்டளைத் தளபதி பதுமன் பூஸாவுக்கு மாற்றம்.


திருகோணமலை மாவட்ட கட்டளைத் தளபதி பதுமன் பூஸாவுக்கு மாற்றம்.
திருகோணமலை பகுதிக்கான முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டளைத் தளபதி பதுமனை திருகோணமலை தடுப்புக்காவல் சிறைச்சாலையிலிருந்து பூஸா சிறைச்சாலையின் பயங்கரவாதிகள் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றுமாறு திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கூடங்குலம் அணு உலை மன்னாருக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் வடக்கிற்கு ஆபத்து என குமுறுகிறார் சம்பிக்க


கூடங்குலம் அணு உலை மன்னாருக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் வடக்கிற்கு ஆபத்து என குமுறுகிறார் சம்பிக்க

கூடங்குலம் அணு உலை மன்னாருக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் வடக்கிற்கு ஆபத்து என குமுறுகிறார் சம்பிக்க
அணுசக்தி பயன்பாடு தொடர்பில் இந்தியாவுடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம்?
அணுசக்தி பயன்பாடு தொடர்பில் இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வு ஒனப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடத் திட்டமிட்டுள்ளது.
அணுசக்தி அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் இந்த யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட்டு உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

'ஓட்டை வாய்' காரியவாசத்தை தூதர் பதவியிலிருந்து தூக்கும் ராஜபக்சே!


'ஓட்டை வாய்' காரியவாசத்தை தூதர் பதவியிலிருந்து தூக்கும் ராஜபக்சே!

கொழும்பு: இந்தியாவுக்கு இலங்கை தூதராக தற்போது இருக்கும் பிரசாத் காரியவாசத்தை தூதர் பதவியிலிருந்து விடுவித்து வெளியுறவுத்துறை செயலாளராக மாற்ற இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாம். அவருக்குப் பதில் சிங்களர் ஒருவரை தூதராக அனுப்பவிருக்கிறதாம் இலங்கை.

உலகின் எந்தவொரு அழுத்தங்களையும் எதிர்கொள்ளவதற்கு தயார்: ராஜபக்சே


உலகின் எந்தவொரு அழுத்தங்களையும் எதிர்கொள்ளவதற்கு தயார்: ராஜபக்சே

Ready to face any Pressure: Rajapaksa - World News Headlines in Tamil
உலகின் எந்தவொரு இடத்தில் இருந்து வரும் அழுத்தங்களையும் எதிர்கொள்ளவதற்குத் தாம் தயாராகவேயுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கை போர்குற்றம் : புதிய ஆவணங்களை வெளியிட தயாராகி வரும் அமெரிக்கா


sri lanka war crimes
FILE
இலங்கை போர்குற்றம் குறித்த புதிய ஆவணங்களைவெளியிட அமெரிக்கா தயாராகி வருகிறது. 

மனித உரிமை மீறல் தொடர்பாக ஜெனிவாவில் ஐ.நாமனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகநிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம், இலங்கைஅரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

மனித உரிமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை இலங்கை புரிந்து கொள்ள வேண்டும் - பரசுராமண்


மனித உரிமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை இலங்கை புரிந்து கொள்ள வேண்டும் - பரசுராமண்

மனித உரிமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை இலங்கை புரிந்து கொள்ள வேண்டும் - பரசுராமண்

மனித உரிமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை இலங்கை புரிந்து கொள்ள வேண்டுமென யுனேஸ்கோ அமைப்பின் இலங்கை, இந்திய, மாலைதீவு, பூட்டான் பிரதிநிதி ஆறுமுகம் பரசுராமண் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல் தொடர்பான விவகாரங்களில் உரிய கவனம் செலுத்தாது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீமான்- நாஞ்சில் சம்பத் கருத்து மோதல்?


சீமான்- நாஞ்சில் சம்பத் கருத்து மோதல்?
சென்றவார “தமிழக அரசியல்” இதழில் அய்யா நாஞ்சில் சம்பத் அவர்கள் அளித்த பேட்டியில் திராவிடத்தை பழித்து பேசி சீமான் பிழைப்பு நடத்துகிறார், அவர் என்னோடு பொது மேடையில் திராவிடத்தை பற்றி விவாதிக்க தயாரா என்று சவால் விட்டிருந்தார்.

அதற்கு இந்த வார இதழில் சீமான் அளித்த பதில் இது..

தமிழினத்தின் வரலாறு பண்பாடு என்ன என்பதனை தமிழினம் உணர்ந்தால் தமிழீழம் சாத்தியமாகும்

தமிழினத்தின் வரலாறு பண்பாடு என்ன என்பதனை தமிழினம் உணர்ந்தால் தமிழீழம் சாத்தியமாகும்
Tuesday, 03.04.2012, 10:34am (GMT)


தேசியத்தை பாதுகாப்பது அவசியம் என்பது தமிழினத்தின் கடமைதான் ஆனால் அதில் முரண்பாடுகள் அற்ற விமர்சனங்களுக்கு பதில் காணப்பட வேண்டும் அதில் தேசியத்தை வீழ்ச்சி நிலைகளுக்கப்பால் பயணிப்பதற்கு சந்தற்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டியது காலத்தின் தேவை. அதில் பலநேர்வழிகள் தவிர்கப்படுவதை புரிந்துணரப்பட வேண்டியது இன்றைய தேவைகள்.

காணாமற்போன 30 பேர் பற்றிய தகவல்களை தருமாறு இலங்கையிடம் அமெரிக்கா!


காணாமற்போன 30 பேர் பற்றிய தகவல்களை தருமாறு இலங்கையிடம் அமெரிக்கா!

காணாமல் போன 30 பேர் பற்றிய தகவல்களை வழங்குமாறு அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம்  கோரியுள்ளது.  இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் ஊடாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நோர்வே செஞ்சிலுவைச் சங்கம் இலங்கையில் இருந்து வெளியேற்றம் !

இலங்கையின் பல பிரதேசங்களிலும் அனர்த்த காலங்களில் பல்வேறு தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த நோர்வே செஞ்சிலுவை சங்கம் கடந்த 31 ஆம் திகதியுடன் தமது பணிகளை முடித்துக்கொண்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. சுனாமி மற்றும் யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார மற்றும் மீள் கட்டுமாணப் பணிகளில், நோர்வே செஞ்சிலுவைச் சங்கம் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் - ரஸ்யா

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரஸ்யா கோரிக்கை விடுத்துள்ளது. ஆணைக்குழுவின் பரிந்துரை அறிக்கையை அமுல்படுத்துவதன் மூலம் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் விளாடிமிர் மிக்கேய்லோவ் தெரிவித்துள்ளார்........... read more 

Sunday, 1 April 2012

வட மாகாணத்தில் 2,087 சிறார்கள் தமது தாய் தந்தை இருவரையும் இழந்த நிலையில் உள்ளனர்.

வட மாகாணத்தில் 2,087 சிறார்கள் தமது தாய் தந்தை இருவரையும் இழந்த நிலையில் உள்ளனர். 10,404 சிறார்கள் தாய் அல்லது தந்தை ஆகிய ஒருவரை இழந்த நிலையில் உள்ளனர். இந்தச் சிறார்களில் 10,878 சிறார்கள் உறவினர்களுடன் தங்கியுள்ளனர். அரச மற்றும் தனியார் இல்லங்களில் 1,613 சிறார்கள் தங்கியுள்ளனர் என வட மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தில் பதியப்பட்டுள்ள எண்ணிக்கையே இவை என அதன் ஆணையாளர் ரி.விஸ்வரூபன் தெரிவித்துள்ளார்.

தவிக்கின்றேன். தவிக்கின்றேன்


ஆபுத்திரன் கதை கேட்டேன் அன்று.
நாய்புத்திரன் நிலை கண்டேன் இன்று.
‘நாயிற் கடைப்பட்ட நாயேன்’ என மணிவாசகன்
நவின்ற உரை நான் உணரக்காட்டிய நாயாம் தாயே!

நானிலத்து வாழும் மானுடரும் அறியா
‘நன்றியுள்ள மிருகம் நாய்’ எனும்
நற்றமிழ் வாக்கு நிலைத்திட,
ஊண் உருகி ஊன் உருகி
உருக்குலையும் பாலனுக்கு,

கொலைகாரனின் ஆலோசனையுடனும், ஒப்புதலுடனும் விசாரணையை மேற்கொள்ள வேண்டும்


அமெரிக்கா அறிமுகம் செய்த வரைவுத் தீர்மானத்தின் மிக முக்கியமான மூன்றாவது பிரிவில், பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களின் கீழ் நடத்தப்பட வேண்டிய விசாரணையில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் ஆலோசனையையும், விசாரணையை மேற்கொள்வது தொடர்பான சட்ட ரீதியான தொழில்நுட்ப உதவிகளையும் இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருந்தது.

இதனை, இலங்கை அரசுடன் ஆலோசனை நடத்தியும், அதன் ஒப்புதலைப் பெற்றும் ஐ.நா. மனித உரிமை மன்றம் நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியா திருத்தம் செய்துள்ளது. இது கொலைகாரனின் ஆலோசனையுடனும், ஒப்புதலுடனும் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.

இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. அவையில் கொண்டு வரும் தீர்மானத்தை நிறைவேற்ற வாக்களித்துவிட்டு, அதே நேரத்தில் அந்தத் தீர்மானம் பலமான நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான திருத்தங்களை இந்திய அரசு செய்துள்ளது.
 

இலங்காபுரி வேந்தன் இராவணேஸ்வரனால் வழிபடப்பெற்ற திருத்தலம்


இலங்காபுரி வேந்தன் இராவணேஸ்வரனால் வழிபடப்பெற்ற திருத்தலம்
ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் இந்துக்களின் புனிதத்தலம் திருக்கோணேஸ்வரம்.

தெட்சண கைலாயம் என்றும் அடிக்கொரு லிங்கம் அமைந்திருக்கும் சிவபூமி என்றும் இலங்காபுரி வேந்தன் இராவணேஸ்வரனால் வழிபடப்பெற்ற திருத்தலம் என்றும் பெருமை பெற்ற அப்புண்ணிய ஷேத்திரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச்சிறப்புடையது. 

ஒரு உண்மை தெரிய வேண்டும்

ஒரு உண்மை தெரிய வேண்டும் 
இது என்ன கேள்வி - நீ ஹிந்தியன் இல்லை - தமிழன்- உனக்கு யாரும் உதவ மாட்டார்கள் - நீ மட்டுமே உன்னை காத்து கொள்ள வேண்டும் .

வறுமை காரணமாக , வில்வித்தை வீராங்கனை நிஷா ராணி


வறுமை காரணமாக , வில்வித்தை வீராங்கனை நிஷா ராணி தத்தா, உலகத்தரம் வாய்ந்த தனது "வில்லை' விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது துரதிருஷ்டவசமானது என, விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன் தெரிவித்தார்.
ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தின், பத்மடா கிராமத்தை சேர்ந்தவர் நிஷா ராணி தத்தா, 21. டாடா வில்வித்தை அகாடமியில் பயிற்சி பெற்ற இவர், பாங்காங்க் கிராண்ட் பிரிக்சில் நடந்த சர்வதேச வில்வித்தை போட்டியில், இந்தியா சார்பில் தங்கம் வென்றுள்ளார். வறுமை காரணமாக போதிய பண வசதி இல்லாததால், வில்வித்தையில் இருந்து ஒதுங்கி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார். 

கொழும்பில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு -மக்களுக்கு எச்சரிக்கை ! !


எதிர் வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு
கொழும்பு மற்றும் அதன் புற நகர் புறங்களில் காவல்துறையினரின்  பாதுகாப்பு பல படுத்த பட்டு
தீவிர  கண்காணிப்பு பணிகள் முடுக்கி  விட பட்டுள்ளன .
மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும் .கொலை ,கொள்ளைகளை .தடுக்கும் நோக்குடன் இந்த விசேட  மேலதிக பாதுகாப்பு பணிகள் முடுக்கி விட பட்டுள்ளதாகவும் இவை தொடர்பாக மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி வலியுறுத்த பட்டுள்ளது !

ஜெனீவா தீர்மானத்துக்கு அரசு உடன்படப் போவதில்லை : ஜி.எல்.பீரிஸ் _


  ஜெனீவா மனித உரிமைகள் பேரவையானது கள்வர்களின் குகையாகவும் அரசியல் நயவஞ்சகம் மற்றும் ஒரு தலைபட்சம் நிறைந்த நிறுவனமாகவும் இருப்பதால் அது நியாயத்தை தாபிக்கக் கூடிய சபையல்ல என்று அமெரிக்க மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளே விமர்சனம் முன் வைத்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று சபையில் தெரிவித்தார்.

சிறிலங்கா அரசுடனான பேச்சுக்களில் அனைத்துலகத் தலையீடு அவசியம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு


மூன்றாம்தரப்பு நடுநிலை தேவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“இனப்பிரச்சனைக்கு அரசியல்தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் சிறிலங்கா அரசு கடந்த காலங்களில் பேச்சுக்களில் ஈடுபடவில்லை.

இராசீவ் காந்தியால் அழிந்த தமிழீழமும்​, அழிவை நோக்கும் தென் தமிழகமும்: கொளத்தூர் மணி


இராசீவ் காந்தியால் அழிந்த தமிழீழமும்​, அழிவை நோக்கும் தென் தமிழகமும்: கொளத்தூர் மணி
சென்னை தாம்பரத்தில் நேற்று மாலை 6 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி தனது உரையில் அமெரிக்காவின் ஐநா தீர்மானம் பற்றியும், இராசீவ் காந்தி ஒப்பந்தத்தால் அழிவை நோக்கியுள்ள கூடங்குளம் நிலை பற்றியும், தனித்தமிழ்நாடு எண்ணத்தை தமிழக மக்களின் மனதில் எண்ண வைக்க்கும் இந்திய அரசின் நிலை பற்றியும் தெளிவாக கூறியுள்ளார்................... read more 

தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, சர்வதேச சமூகம் தனது காத்திரமான பங்களிப்பை இலங்கைத்தீவில் செலுத்த வேண்டும்!


- சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை !
- தமிழீழத்தில் ஐ.நாவின் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை !
- அனைத்துலகத்தின் கண்காணிப்பில் தமிழீழத்தில் பொதுசன வாக்கெடுப்பு !

 ஆகிய தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, சர்வதேச சமூகம் தனது காத்திரமான பங்களிப்பை இலங்கைத்தீவில் செலுத்த வேண்டுமென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் மாணிக்கவாசகர் தெரிவித்துள்ளார்.

சரணடைந்த பெண்களை கூட்டகா கர்ப்பழித்த சிங்கள இராணுவம் - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.


சரணடைந்த பெண்களை கூட்டகா கர்ப்பழித்த சிங்கள இராணுவம் - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.

இனவழிப்பிற்கெதிரான தமிழர் அமைப்பினால் தேவிபுரத்தில் நடந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ள கூட்டுப் பாலியல் வன்புணர்வு பற்றிய சாட்சிகள் கண்ணால் கண்ட சாடிசியங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

சுமார் 200 பேர்கொண்ட பொதுமக்கள் குழுவொன்று முன்னேறிவந்த இராணுவ அணி ஒன்றிடம் சரணடைந்தபோது சுமார் 20 இளம் பெண்களைத் தனியாகப் பிரித்தெடுத்த இராணுவம் அவர்களைக் கூட்டாகப் பாலியல் வன்புணர்விற்கு உற்படுத்தியதாக கண்ணால் கண்ட சாட்சியங்கள் கூறியுள்ளன. 2009 ஏப்ரில் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் சிறிலங்காவில் நிலவி வரும் அடக்குமுறை மற்றும் சாட்சியங்களுக்கான பாதுகாப்பின்மை என்பவற்றால் இதுவரை வெளியே வராமல் இருந்துள்ளது.

இலங்கையைக் கண்காணிக்கத் தனது அலுவலகத்தை அமைக்கிறது மனித உரிமை சபை!


இலங்கையைக் கண்காணிக்கத் தனது அலுவலகத்தை அமைக்கிறது மனித உரிமை சபை!
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் அமுல்படுத்தப்படுகின்றதா என்பதனைக் கண்காணிக்க இலங்கையில் அலுவலகம் அமைக்கிறது மனித உரிமை சபை.

மேலைநாட்டு ஊடகங்களிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள் - உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் மன்றாடும் ராஜபக்சே

இலங்கைக்கு எதிராக மேலைநாட்டு ஊடகங்களால் மேற்கொள்ளப்படும் தவறான பரப்புரைகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்று உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் மகிந்த ராஜபக்சே கேட்டுக்கொண்டுள்ளார்

கொழும்பில் நேற்று ஊடக மேம்பாட்டு மையத்தை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே திறந்து வைத்தார்.

சந்திரிகா ,ரணில் இந்திய திடீர் பயணம் -பேச போவது என்ன ..?

இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின்போது தமிழர்கள் மீது மனித உரிமைகள் மீறப்பட்டது. இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதை எதிர்க்கும்படி இந்தியாவிடம் இலங்கை கெஞ்சியது. ஆனால் அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா வாக்களித்தது.

தமிழரின் உரிமைப் போராட்டத்தை சர்வதேசம் அங்கீகரித்துள்ளது


தமிழரின் உரிமைப் போராட்டத்தை சர்வதேசம் அங்கீகரித்துள்ளது ஜெனிவா தீர்மானம் இதனை வெளிப்படுத்தியது என்கிறார் மாவை
தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தைச் சர்வதேச நாடுகள் அங்கீகரித்து விட்டன. ஜெனிவா மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதனை வெளிப்படுத்தியிருக்கிறது. இராஜதந்திர ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண் நகர்வுகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா.

நாம் எடுபிடி ஆட்கள் அல்லர்…


நாம் எடுபிடி ஆட்கள் அல்லர்…
மூன்றாம் தரப்பு ஒன்றின் மத்தியஸ்தம் அல்லது அனுசரணை இல்லாமல் இலங்கை அரசுடன் இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றிய பேச்சுக்களில் ஈடுபடுவது பயன்தராது. அவ்வாறான பேச்சுக்கள் மூலம் எந்தப் பிரயோசனமும் இல்லை என்றே கூட்டமைப்பு கருதுகிறது.

இலங்கையில் முதல் மன்னனும், கடைசி மன்னனும் தமிழனே! யோகேஸ்வரன் எம்.பி முழக்கம்


இலங்கையில் முதல் மன்னனும், கடைசி மன்னனும் தமிழனே! யோகேஸ்வரன் எம்.பி முழக்கம்
இலங்கையின் வரலாற்றில் முதலாவது மன்னனும் தமிழன் தான் இலங்கையின் வரலாற்றில் இறுதியாக ஆண்ட மன்னனும் தமிழன்தான். இது வரலாறு. சிங்கள மக்களின் நூல் என்று சொல்லப்படுகின்ற மகாவம்சம் உண்மை அல்ல திட்டம் இட்டு சோடிக்கப்பட்டது.

அந்த மகாவம்சம் கூட இந்த நாட்டின் முதலாவது மன்னன் தமிழன் என்பதைக் காட்டியிருக்கிறது. இந்த நாட்டின் பூர்வீக குடிகளாகிய நாங்கள் எங்களது வரலாற்று தடயங்களை பதிவு செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு எதிராக லண்டனில் வழக்கு-உலகத் தமிழர் பேரவை

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு எதிராக லண்டனில் வழக்கு-உலகத் தமிழர் பேரவை


லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில், பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் போர்க்குற்றவாளியான மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர விலக்குரிமைக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர விலக்குரிமையை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் நீக்க வேண்டும் என்றும், அதன்மூலம் அவருக்கு எதிராக லண்டனில் சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என்றும் உலகத் தமிழர் பேரவை சார்பில் நேற்று இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஜெனிவா தீர்மானம் - இலங்கை அரசாங்கம் அச்சமடைந்து, பாதிப்பான மனநிலையில் இருக்கிறது – கவலைப்படும் சம்பந்தன


ஜெனிவா தீர்மானம் - இலங்கை அரசாங்கம் அச்சமடைந்து, பாதிப்பான மனநிலையில் இருக்கிறது – கவலைப்படும் சம்பந்தன

ஜெனிவா, ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினால் நிறைவேற்றப்பட்ட யோசனை காரணமாக இலங்கை அரசாங்கம் அச்சமடைந்து, பாதிப்பான மனநிலையில் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

LLRC யின் பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை பூரண அர்ப்பணிப்புடன் உள்ளது - கோத்தபாய


LLRC யின் பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை பூரண அர்ப்பணிப்புடன் உள்ளது - கோத்தபாய

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை பூரண அர்ப்பணிப்புடன் இருப்பதாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  ஜப்பான் சென்றுள்ள பாதுகாப்புச் செயலாளர், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளரை சந்தித்து பேசும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

NEW SRILANKAN ORDER ஐ நோக்கி சிவில் சமூகங்கள் கைகோர்க்கட்டும்

முள்ளிவாய்க்கால் போருடன் இலங்கையின் வரலாற்றை புதிதாக எழுதுவதற்கு சிங்கள புத்திஜீவிகளில் ஒரு பகுதியினரும் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களும், சிங்கள அரசியல் தலைமைகளும் புறப்பட்டுள்ளனர்.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் பெண் போராளிகளின் 'பெஷன் ஷோ'


புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் உறுப்பினர்கள் சிலரை தாம் விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. நேற்றைய தினம் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள
ராமகிருஷ்ன மண்டபத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. சுமார் 380 பேர் இதில் விடுவிக்கப்பட்டனர். இந் நிகழ்வுகளில் பெண் போரளிகளை நாகரீக உடைகள் அணிந்து கலந்து கொண்டனர்...........   read more

ஜெனீவா தீர்மானத்தின் சூத்திரங்கள்!


22/03/2012 அன்று ஜெனீவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட சிறிலங்கா தொடர்பிலான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன அந்த வகையில் அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பெனின், கெமரூன், சிலி, கொஸ்டரீக்கா, செக் குடியரசு, கோத்தமாலா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி, லிபியா, மொரிடஸ், மெக்சிகோ, நைஜீரியா, நோர்வே, பெரு, போலந்து, மோல்டோவா, ரோமானியா, ஸ்பெயின், சுவிட்ஸர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, உருகுவே. ஆகியன வாக்களிக்க, இலங்கை அரசாங்கத்திற்கு 15 நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தன.
பங்களாதேஷ், சீனா, கொங்கோ, கியூபா, ஈக்குவாடோர், இந்தோனேசியா, குவைத், மாலைத்தீவு, மைவுரிடானியா, பிலிபைன்ஸ், கட்டார், ரஸ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து, உகாண்டா. போன்ற நாடுகள் உள்ளடங்குகின்றன.

புலிகள் விடுதலை: மாடல் பெண்களை வாடகைக்கு அமர்த்திய அரசு !


புலிகள் விடுதலை: மாடல் பெண்களை வாடகைக்கு அமர்த்திய அரசு !
புணர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் உறுப்பினர்கள் சிலரை தாம் விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. நேற்றைய தினம் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ராமகிருஷ்ன மண்டபத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. சுமார் 380 பேர் இதில் விடுவிக்கப்பட்டனர். இந் நிகழ்வுகளில் பெண் போரளிகளை நாகரீக உடைகள் அணிந்து வரும்படி இராணுவத்தினர் பணித்திருந்தனர்.

வட மாகாணத்தின் முதலமைச்சர் தயா மாஸ்டர்? பாரிய முயற்சியுடன் களத்தில்!


வட மாகாணத்தின் முதலமைச்சர் தயா மாஸ்டர்? பாரிய முயற்சியுடன் களத்தில்!
வட மாகாணத்தின் முதலமைச்சராகப் போட்டியிடுவதற்கு விடுதலைப்புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வட மாகண சபைத் தோ்தல் நடக்கும் பட்சத்தில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு இவர் தீவிரமாக முனைப்புக்காட்டி வருவதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்கள் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை இலக்கு வைத்துத் எதிர்பிரச்சாரத்திற்கு திட்டம்-கொழும்பு ஊடகம் கூறுகிறது


தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்கள் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை இலக்கு வைத்துத் எதிர்பிரச்சாரத்திற்கு திட்டம்-கொழும்பு ஊடகம் கூறுகிறது

tamileelam newsதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்கள் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை எதிர்ப்பு பிரச்சாரங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 27ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி வரையில் லண்டனில் ஒலிம்பிக் போட்டிடகள் நடைபெறவுள்ளன.

பிரசன்ன டீ சில்வா லண்டனில் இருந்து தப்பியோடும் நிலை !


தற்போது லண்டனில் உள்ள பிரசன்ன டீ சில்வா இலங்கைக்கு தப்பியோடும் நிலை தோன்றியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இன்று மாலை பிரித்தானிய நேரம் 7.00 மணிக்கு சனல் 4 தொலைக்காட்சி இது தொடர்பான செய்தி ஒன்றை ஒளிபரப்ப உள்ளது. தற்சமயம் இலங்கையின் சிறப்புத் தூதுவராக பிரித்தானியாவில் தங்கியுள்ள பிரசன்ன டி சில்வாவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு இலங்கையில் பிரசன்ன டீ சில்வா இராணுவ அதிகாரியாகக் கடமையாற்றியவேளை அவர் இன அழிப்பில் ஈடுபட்டார் என்றும் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளைச் செய்தார் என்றும் அவர்மேல் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கடாபியை போன்று வீதியில் இழுத்துச்சென்று நாட்டுத் தலைவரை பழிவாங்க இலங்கை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்

லிபியாவின் தலைவர் கடாபியை போன்று வீதியில் இழுத்து சென்று நாட்டு தலைவரை பழிவாங்குவதற்கு இந்த  நாட்டு மக்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறினார்