Translate

Friday, 16 March 2012

இலங்கை அரசின் போர்க்குற்றம் மீண்டும் நிரூபித்தது சனல் 4


இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள்-தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் எனும் காணொளி, இலங்கை அரசாங்கமும் இராணுவத் தலைமைப் பீடமும் மேற்கொண்ட போர்க்குற்றங்களை மீண்டும் ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளது. 

இந்தியா, அமெரிக்காவின் உறவை துண்டித்தால் நிம்மதியாக வாழலாம் _


  இந்தியாவினதும் அமெரிக்காவினதும் உறவை துண்டித்தால் மாத்திரமே இலங்கையர்கள் நிம்மதியாக வாழ முடியும். நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து அரசாங்கம் வரலாற்று முட்டாள்தனத்தை செய்துள்ளது. 

ஜெனீவா தீர்மானத்தால் இலங்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பில்லை _


  இலங்கையில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள எக்ஸ்போ கண்காட்சிக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஜரோப்பிய,மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தக துறை சார்ந்தவர்கள் வருகை தரவுள்ளதுடன்,சர்வதேச ஊடகவியலளார்கள் 70 பேரும் அந் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். 

தமிழினப் படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவுகூரல்.


 முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு கூரல் பிரித்தானியாவில் வழமைபோல், பிரித்தானிய தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

 இந்நிகழ்வு லண்டனில் 2012 மே 18 ஆம் திகதி நடைபெற உள்ளது என்பதை அனைத்து தமிழ் பாடசாலைகள், தமிழ் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் தமிழ் மக்களுக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பாலச்சந்திரன் படுகொலை- மழுப்புகிறார் சிறிலங்கா அதிபரின் பேச்சாளர்


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிறிலங்காப் படைகளால் நீதிக்குப் புறம்பான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சனல்-4 ஆவணப்படம் சுமத்தும் குற்றச்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் நிராகரிக்கவில்லை. 

உயர்ஸ்தானிகரை இலங்கை அரசாங்கம் மீள அழைத்துக் கொள்ள வேண்டும் - சீ.பீ.ஐ.


உயர்ஸ்தானிகரை இலங்கை அரசாங்கம் மீள அழைத்துக் கொள்ள வேண்டும் - சீ.பீ.ஐ.
 இந்தியாவிற்கான உயர்ஸ்தானிகரை இலங்கை அரசாங்கம் உடனடியாக மீள அழைத்துக் கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சனல் 4 தொலைக்காட்சியில் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" முழுமையான காணோளி:




மனித உரிமைமீறல்களை விமர்சனம் செய்வோரை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்த வேண்டாம்


மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குரல் கொடுக்கும் தரப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளுன் ஆதரவாளர்களாக சித்தரிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விமர்சனம் செய்வோரை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழீழ விடுதலையை வென்று எடுக்க எம்மினம் தவிர்ந்த எதுகும் இனி தடை இல்லை!-மலர் 
யுத்தத்தினால் நாட்டினை பாழாக்கிய அரசியல் சர்வாதிகாரிகள், தற்போது வெவ்வேறு தோற்றங்களில் நாட்டை பாழாக்கி வருவதாக குறிப்பிட்டுள்ள அரசியல் வாதிகள் புரிந்தது போல் கூட நாம் எமது விடுதலைக்கான நகர்வை பொறுப்போடு உணரவில்லை. காரணம் இந்தியாவின் பாதுகாபபுடன் அரசியல் போர் என்பது மறுக்க முடியாத இன அழிப்பு! ஆனால் அத்தனைக்கும் இந்தியா காரணமாக இருந்தது என்பதற்கு அப்பால் தற்போதைய சந்தற்பங்களை தமிழினம் பயன்படுத்த வேண்டிய தேவையும் கடந்த கால தவறுகளும் நிறைய உண்டு.

போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைக்கு, பிரித்தானியா மீண்டும் வலியுறுத்து


போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை நிறைவேற்ற வேண்டும் எனவும் பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு; ஜெயலலிதாவின் கோபம் அதிகரிப்பு


இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு; ஜெயலலிதாவின் கோபம் அதிகரிப்பு
ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் பிரேரணை தொடர்பில் கலந்தாலோசிப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் விடுத்த அவசர வேண்டுகோளை தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நேற்றுத் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார்.

"சீனாவில் அரசியல் சீர்திருத்தங்கள் தேவை"


சீன நாடாளுமன்றத்தில் வென் ஜியா போ
சீனாவில் மேலும் அரசியல் சீர்திருத்தங்கள் தேவை என்று அதன் பிரதமர் வென் ஜியா போ கோரியுள்ளார்.
தமது நாடு பெற்று வரும் பொருளாதார நன்மைகளை பாதுகாக்க இந்தச் சீர்திருத்தங்கள் அவசரமாகத் தேவைப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாயவின் வெள்ளை வேன் தரப்பினரை சிறைபிடித்த பிரதேச மக்கள் !

கொலன்னாவ நகர சபைத் தலைவர் ரவீந்திர உதேஷாந்வைக் கடத்திச் செல்ல முயற்சித்த வெள்ளை வேன் குழுவின் கொலைக்காரர்கள் நால்வரையும் மீட்டுக்கொள்வதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்�ஷவின் பிரத்தியேக செயலாளர் லெப்டின் கேர்ணல் நிவுன்ஹெல்ல சிவில் உடையில் களமிறக்கப்பட்டுள்ளார். கொலன்னாவ நகர சபைத் தலைவரைக் கொலை செய்வதற்கு வந்த வெள்ளை வேன் குழுவினரை அப்பிரதேச பொதுமக்கள் மடக்கிப் பிடித்து, வெல்லப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். எனினும், இவர்களை உடனடியாக விடுவிக்குமாறு உயர் தரப்பினரிடமிருந்து தொடர்ச்சியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

ஐ.நா. கண்காணிப்புக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கமாட்டோம்

இலங்கையின் விவகாரங்களுக்கு உள்நாட்டு ரீதியிலேயே தீர்வுகாணப்படும். அந்த வகையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதனை கண்காணிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கண்காணிப்புக் குழுவுக்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு இடமளித்தால் நாட்டில் மீண்டும் பயங்கரவாத பிரச்சினை உருவாகிவிடும். நாட்டின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பதில் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்ருமான லக்ஷ்மன் யாப்பா அபேயவர்த்தன தெரிவித்தார்.

Thursday, 15 March 2012

திமுக வெற்றிப் பெற்றால் அதிமுக ஆட்சிக்கு மூக்கணாங்கயிறு போடுவது போல் இருக்கும்: திருமாவளவன்


திமுக வெற்றிப் பெற்றால் அதிமுக ஆட்சிக்கு மூக்கணாங்கயிறு போடுவது போல் இருக்கும்: திருமாவளவன்
---------------------------------------
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமாரை ஆதரித்து சங்கரன்கோவிலில் திமுக பிரச்சார பொதுக்கூட்டம் (15.03.2012) நடைபெற்றது. 

பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், 

எமக்காக ஏதாவது செய்யுங்கள்….

தமிழக உறவுகளே இந்தியா வழங்கிய பணத்தில் தமிழனுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படவில்லை. மாறாக தமிழனை கொன்றொழித்த சிங்கள படைச் சிப்பாய்களுக்கு பரிசாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றன. 
(இதனை உங்களுக்கு சொல்லியும் எந்த பலனும் இல்லை. ஏனெனில் நீங்கள் ஊமைகள், செயலாற்றல் அற்றவர்கள், இதனை தடுக்க உங்களால் என்ன செய்துவிட முடியும்….?

"இலங்கையில் ஆட்சி மாறினால் தான் முன்னேற்றம் காணமுடியும்" ஜான் ஹோம்ஸ்



ஜான் ஹோம்ஸ்
ஜான் ஹோம்ஸ்

"இலங்கையில் ஆட்சி மாறினால் தான் முன்னேற்றம் காணமுடியும்" ஜான் ஹோம்ஸ்



இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் போர்க்காலத்தில் நடந்த்தாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விஷயங்களில் பொறுப்பு கூறுவது குறித்த பிரச்சினையில் முன்னேற்றம் காண முடியும் என்று ஐ.நா மன்றத்தின் மனிதநேய விவகாரங்களுக்கான முன்னாள் துணைத் தலைமைச் செயலர் சர் ஜான் ஹோம்ஸ் கூறியிருக்கிறார்............ read more

வஞ்சிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் - தண்டிக்கப்படுமா இலங்கை?


வஞ்சிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் - தண்டிக்கப்படுமா இலங்கை?
- மகா.தமிழ்ப் பிரபாகரன்
இலங்கை அரசின் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தும் சேனல் 4-ன் புதிய ஆவணப் படம் குறித்த அலசல் இது. (வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது)

"ஆசையால் வெற்றி பெற்றவன் அந்தப் போதையால் தவறுகள் செய்து அழிவைத் தேடுவான். ஆனால் தன்னடக்கம் உள்ள மனிதன் அறிவுடன் சிந்தித்து எப்போதுமே இன்பமாக வாழ்ந்திடுவான்." இது சிங்களவர்கள் வணங்கும் புத்தரின் வாக்கு!

குடிநீருக்காக போராடும் மக்கள்: சேற்று நீர் பருகவேண்டிய அவலநிலை (பட இணைப்பு) _


  தமக்கு முறையான குடிநீர் விநியோகத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கோரி மேல் கொத்மலைத் திட்டத்தின் புதிய வீடமைப்புத் திட்டத்தின் குடியிருப்பாளர்கள் நேற்று புதன் கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

அட்டன் நுவரெலிய பிரதான வீதியில் தலவாக்கலையில் அமைக்கப்பட்டு வரும் மேல் கொத்மலை நீர் தேக்கத் திட்டத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு அதன் சுற்றுப்புறத்தில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
 .............. read more

இலங்கை அரசு எப்போதும் தனது உறுதிமொழியை நிறைவேற்றியதே இல்லை


இலங்கை அரசு எப்போதும் தனது உறுதிமொழியை நிறைவேற்றியதே இல்லை

இலங்கை அரசு எப்போதும் தனது உறுதிமொழியை நிறைவேற்றியதே இல்லை
இந்தியா இலங்கை
 இடையேயான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நட்பை கருத்தில் கொண்டு இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான ஜெனீவா தீர்மானத்தின் மீது முடிவெடுக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


இலங்கைக்கு எதிராக
 ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று சென்னை விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் (15.03.2012)ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஜெனீவா தீர்மானம் தொடர்பில் இலங்கையில் இனக்கலவரம் வரும் என்ற சம்பிக்கவின் கருத்து பாரதூரமானது – மனோ கணேசன்


ஜெனீவா தீர்மானம் தொடர்பில் இலங்கையில் இனக்கலவரம் வரும் என்ற சம்பிக்கவின் கருத்து பாரதூரமானது – மனோ கணேசன்

உத்தேச ஜெனீவா தீர்மானம் தொடர்பில் இலங்கையில் 1983 ஆம் ஆண்டு நடைபெற்றதை போல ஒரு இனக்கலவரம் வரலாம் என்று, தமிழ் மக்களை பயமுறுத்தும் தொனியில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க கருத்து தெரிவித்து இருப்பது பாரதூரமானது.   

தமிழர்கள் வளர வேண்டுமானால் அவர்களை பணம் சம்பாதிக்க தூண்ட வேண்டும் :ஜெயகிருஷ்ணன்


 
'பெரும்பாலான தமிழர்கள் , தங்களுடைய இலக்கே ஒரு வேலையில் அமர்வது என்று தான் இருந்தார்கள் . ஒரு இனத்தின் வளர்ச்சி பணம் , படிப்பு சார்ந்து தான் இருக்கிறது. தமிழர்கள் வளர வேண்டுமானால் அவர்களை பணம் சம்பாதிக்க தூண்ட வேண்டும்.பத்திரிக்கை வழியாக அதை எப்படி செய்வது என்று யோசித்தபோது உருவானது தான் தொழில் துறைக்கான தமிழ் இதழ்' என்று கூறும் ஜெயகிருஷ்ணன் தமிழில் முதன் முதலில் தொழில் துறைக்கான இதழாக 'வளர் தொழிலை' 1989 - ல் தொடங்கியவர்.

இன-மதவாதத்தை முன்னிறுத்தி நாடுகளிடையே ஆதரவினைத் திரட்ட சிறிலங்கா முயற்ச்சி !


 ஐ.நா மனித உரிமைச் சபையில் நாடுகளின் ஆதரவினைத் திரட்ட ,இன-மதவாத்தை சிறிலங்கா முன்னிறுத்தி ஆதரவினை திரட்ட எத்தனிப்பதாக, 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றங்கள், இனப்படுகொலை விவகாரங்களுக்கான அமைச்சர் டிலக்சன் மொறிஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின்பிழையான போக்கின் காரணமாகத்தான் ஜெனிவாப் பிரச்சினை....


அரசாங்கத்தின்பிழையான போக்கின் காரணமாகத்தான் ஜெனிவாப் பிரச்சினை  என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றஉறுப்பினர் ரஞ்சன் ராமநாயக சிங்களப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவிப்பு

சர்வதேச நாடுகளின் அழுத்ததிற்கு இலங்கை  அரசாங்கம் உள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தின் போதுஅரசாங்கம் சகல தரப்பினரிடம் இருந்து ஆதரவு கோரி நிற்கிறது. இந்நிலையில் பிரதான ஐக்கியதேசிய கட்சி என்ற வகையில் இந்த காரியத்திற்கு அலட்சியமாக இருப்பதாகத் தோன்றுகிறது. இதுசரியா?............  read more 

காயபட்டவர்களை அழைத்து சென்று சுட்டு கொன்ற இராணுவம் அதிர்ச்சி தகவல் !


இறுதி யுத்தத்தில் காய பட்ட மக்களை அழைத்து சென்று மருத்துவ உதவி செய்வது போல பாசாங்கு காட்டி விட்டு அவர்களை இராணுவம் சுட்டு கொன்றதாக சனல் போவிடம் கண்கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளன .
காயமடைந்த ஐம்பதாயிரத்து மேற்பட்ட மக்கள் உரிய மருத்துவ சிகிச்சை இன்றி இறந்ததுடன்
மிகுதி பேர் இவ்வாறு இலங்கை படைகளினால் சுட்டு படுகொலை செய்ய பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது !

இன, மதவாதத்தை முன்னிறுத்தி ஆதரவினைத் திரட்ட சிறிலங்கா முயற்ச்சி! நா.த.அரசாங்கம்


இன, மதவாதத்தை முன்னிறுத்தி ஆதரவினைத் திரட்ட சிறிலங்கா முயற்ச்சி! நா.த.அரசாங்கம்
ஐ.நா மனித உரிமைச் சபையில் நாடுகளின் ஆதரவினைத் திரட்ட ,இன-மதவாத்தை சிறிலங்கா முன்னிறுத்தி ஆதரவினை திரட்ட எத்தனிப்பதாக,� நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றங்கள், இனப்படுகொலை விவகாரங்களுக்கான அமைச்சர் டிலக்சன் மொறிஸ் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் மகனின் கொலை: புதுடெல்லியைக் கலக்கிய சூடான விவாதம் !


பிரபாகரன் மகனின் கொலை: புதுடெல்லியைக் கலக்கிய சூடான விவாதம் ! 
இறுதியுத்ததின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகனை இலங்கை இராணுவம் சுட்டது தொடர்பாக NDTV யில் சூடான விவாதம் ஒன்று நேற்று(12) இடம்பெற்றுள்ளது. ஜனதா கட்சித் தலைவரும் புலிகள் எதிர்ப்புவாதியுமான சுப்ரமணியசுவாமி, ஜீ.பார்த்தசாரதி, கம்மியூனிஸ் கட்சி ராஜா, மனித உரிமை ஆர்வலர் கங்கூலி, ஊடகவியலாளர் மீனா குமார், உலகத் தமிழர் பேரவை(GTF) பேச்சாளர் சுரேன், சனல் 4 கொலைக்களத் தயாரிப்பாளர் காலம் மக்ரே மற்றும் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் நாராயன சாமி ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

அரசியல் தீர்வுக்கு மனித உரிமை கவுன்ஸில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்


அரசியல் தீர்வுக்கு மனித உரிமை கவுன்ஸில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கை இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கவுன்ஸில் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஜனநாயக அரசாங்கமொன்று யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது


ஜனநாயக அரசாங்கமொன்று யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது

ஜனநாயக அரசாங்கமொன்று யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஐநா தீமனத்தை ஆதரிக்க பின்னிற்கும் காரணம்

இந்தியா ஐநா தீமனத்தை ஆதரிக்க பின்னிற்கும் காரணம் இந்தப்போரை நடத்தியதே இந்தியாதான் என்பதற்கு ஒரு ஆதாரம் - 1 இது பரந்தன் சந்திக்கு அருகில் எடுக்கப்பட்ட படம் இது (சிறிலங்கா படையின் ராணுவ சீருடையில் இந்திய இராணுவம்) 

மந்திரிசபையிலிருந்து விலகுவோம், காங்கிரஸுக்கு திமுக மிரட்டல்


மேலவையில் இலங்கை பிரச்னை குறித்து வெளியுறவு துறை அமைச்சர் கிருஷ்ணா தாக்கல் செய்த அறிக்கையை அதிமுக உறுப்பினர்கள் கிழித்து எறிந்தது குறிப்பிடத்தக்கது..

இத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசில் கூட்டணி கட்சியான திமுக கோரிக்கை விடுத்துள்ளது. இத்தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்காவிட்டால் தமிழர்களுக்கு மத்திய அரசு இழைத்த துரோகமாகவே கருதப்படும் என்று கூறிய கருணாநிதி மந்திரிசபையிலிருந்து விலகுவது குறித்து செயற்குழுவில் முடிவெடுக்கப்படும் என்றார்......... read more

பிராணப் முகர்ஜிக்கு, இளைஞர் காங்கிரஸ் யுவராஜா கண்டனம்

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர்  யுவராஜா நேற்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் எந்த நிலையிலும் தமிழர்களின் உரிமையை ஒரு போதும் விட்டுத்தராது. 

இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையிலான இலங்கை ராணுவம் நடத்திய இந்த கொடுரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வரவும், இலங்கையில் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ராஜபக்சேவையும், இந்த கொடுரத்தில் ஈடுபட்ட  அனைவரையும் தண்டிக்கும் வகையில் அமெரிக்க அரசு ஐக்கிய நாட்டு சபையில் இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வந்து உள்ளது.......... read more 

'கோக்'கும் வேண்டாம், 'ஜிமெயிலும்' வேண்டாம்- சிங்கள அமைச்சர் 'கத்தல்'!

கொழும்பு: அமெரிக்க தயாரிப்புகளைப் புறக்கணிப்போம். கோக் போன்ற குளிர்பானங்களைப் புறக்கணிப்போம், ஜிமெயிலைப் புறக்கணிப்போம் என்று சிங்கள அமைச்சரான விமல் வீரவன்ச் கூறியுள்ளார்.

கொழும்பில் அமெரிக்காவுக்கு எதிராக நடந்த பேரணியின்போதுதான் இப்படிக் கூறியுள்ளார் வீரவன்ச. இவர் ராஜபக்சே அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருக்கிறார். .......... read more 

மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவார்கள் என்று கருணாநிதி பூச்சாண்டி!

மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவார்கள் என்று கருணாநிதி பூச்சாண்டி!

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கா விட்டால், மத்திய அமைச்சரவையில் இருந்து விலகப் போவதாக திமுக எச்சரித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைச் சபையில் தமிழர் தரப்பு இராஜதந்திரச் செயற்பாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது !


சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றின் அவசியத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில், தமிழர் தரப்பின் இராஜதந்திரச் செயற்பாடுகளை, நா.த.அரசாங்கம் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இராணுவத்தினர் உட்படுத்தப்பட்டால் நாட்டில் இனக்கலவரம் ஏற்படும்! பேரினவாதி சம்பிக்க


இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஜெனீவாவில் பிரேரணையை சமர்ப்பித்துள்ளது. அது நிறைவேற்றப்பட்டு சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இராணுவ வீரர்கள் உட்படுத்தப்பட்டால் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்டதைப் போன்ற இனக்கலவரம்  இலங்கையில் இடம்பெறும் என்று பேரினவாத அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.

இந்தியா, இலங்கைக்கு ஆதரவளிக்கும் என்ற செய்தி கசிந்ததால் சோனியா காந்தியின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை!


ஐ. நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு பல நாடுகள் தமது ஆதரவை வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், இந்திய அரசு, அமெரிக்கா முன்வைத்துள்ள இலங்கைக்கெதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சியினரின் குரல்களும் பாராளுமன்றத்தில் எம்.பிக்களின் மூலமாக வலியுறுத்தப்பட்டிருப்பதுடன் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

இலங்கையில் அமெரிக்காவுக்கெதிரான போராட்டங்கள் குறித்து, அமெரிக்கா தீவிர கண்காணிப்பு!


இலங்கையில் அமெரிக்காவுக்கெதிராக இடம்பெற்றுவரும் எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்பாக, அமெரிக்கா அரசாங்கம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு 22ல்! 100 அமெரிக்க இராஜதந்திரிகள் களத்தில்!!


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை எதிர்வரும் 2 ம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ள நிலையில், ஜெனிவாக் களத்துக்கு மேலும் முக்கியமான 100 அதிகாரிகளைக் களமிறக்கியுள்ள அமெரிக்கா, தனது இறுதிக்கட்ட முயற்சியை முழுவீச்சுடன் முன்னெடுத்து வருகின்றது என்று தெரிவிக்கப்படுகிறது.

போர்க்குற்றம்: இலங்கை பதில் சொல்லியே ஆகவேண்டும் - அமெரிக்கா

ஜெனீவா, மார்ச் 15 (டிஎன்எஸ்) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகளுக்கு அந்த நாடு பதில் கூறியே ஆக வேண்டும். இல்லையெனில் இலங்கையில் மீண்டும் மோதல்கள் மற்றும் உள்நாட்டு போர் வெடிக்கும் ஆபத்து உள்ளது என்று அமெரிக்க அரசின் உதவி செயலாளர் ஹோபேட் ஓ பிளேக் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.  ............. read more 

போர்க்குற்றம்: இலங்கை‌த் தூதரு‌க்கு இந்தியா சம்மன்

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, நிகழ்ந்த போர்க்குற்றங்கள், மனித உரிமமீறல்கள் தொடர்பாக வெளியாகியுள்ள காணொளி காட்சிகள் குறித்து விளக்கம் கேட்டு இலங்கை தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த போர்க்குற்ற காட்சிகள் அடங்கிய ஆவணப்படங்களை சேனல் 4 தொலைக்காட்சி தொடர்ந்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது, இலங்கை அரசுக்கு பன்னாட்டு அளவில் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது............. read more

பகிரங்க மன்னிப்பு கோரினார் இலங்கை தூதர்

புதுடெல்லி: தமிழக எம்.பிக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் இலங்கை தூதர் பிரசாத் கரியவாசன். தமிழக எம்.பிக்கள் குறித்து தான் தரக்குறைவாக பேசவில்லையென்று அவர் கூறியுள்ளார். 
மேலும்,  எம்.பிக்கள் மனம் புண்பட்டிருந்தால் தாம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். தனது பேட்டியை பத்திரிக்கைகள் திரித்து வெளியிட்டுள்ளதாக கரியவாசன் புகார் தெரிவித்தார். மேற்கத்திய நாடுகள் இலங்கைக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறினார். இலங்கை மனித உரிமை மீறல் குறித்த கேள்விக்கு பதிலளிக்க கரியவாசன் மறித்து விட்டார்.   

Wednesday, 14 March 2012

நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் செலவில் கொக்குவிலில் தொழிற்பயிற்சி நிலையம் திறந்து வைப்பு


newsதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அனுசரணையில் நிறுவப்பட்ட தொழிற்பயிற்சி நிலையம் கொக்குவிலில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நான் இந்திய குடிமகன்தானா என்பதை பரிசீலனை செய்வேன் - தா. பாண்டியன்


நான் இந்திய குடிமகன்தானா என்பதை பரிசீலனை செய்வேன் - தா. பாண்டியன்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=oWeDFmSqfqk 

பிராபாகரனை கொலை செய்ய ஆதரவு நல்கிய ஐநா -நம்பியார் “


தலைவர் பிரபாகரன் இலங்கை அரசினால் கைது செய்ய பட்ட விடயம் ஐநாவில் அன்று முக்கிய நிலையில் இருந்த நம்பியாருக்கு தெரியும் .
அவரும் பிரபாகரனை இலங்கை அரசு உயிரோடு பிடித்து வதைகள் செய்வது அனைத்தும்  அறிந்துள்ளார்  .
ஆனால் பங்கி மூன் நிர்வாகத்துடன் ஐக்கிய பட்ட இவர்களினால் அவை யாவும் மூடி மறைக்க பட்டு திட்டமிடபட்ட ஐநா இலங்கை கூட்டு படுகொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது தற்போது
உறுதிபடுத்த பட்டுள்ளது .......... read more

விடுதலைப் புலிகள் மீதான தடையை தமிழக அரசு ஆதரிப்பது நியாயமற்றது: நாம் தமிழர் கட்சி‏


சிங்கள பெளத்த இனவாத அரசின் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்த  ஆயுதமேந்திப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது மத்திய  அரசு விதித்துள்ள தடையை நீட்டிக்க தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளது தமிழர் நலனுக்கு எதிரான நியாயமற்ற நடவடிக்கையாகும்.

பிரபாகரன் கொலையை வைத்து தமிழ் மக்களை குழப்ப சிங்களம் சதி !

சனல் போ வெளியிட உள்ள தலைவர் தொடர்பானதும் அவர்களது குடும்பம் தொடர்பான
போர்குற்றங்கள் உலகை அந்த காணொளி வரமுன்னரே பெரும் பர பரப்பினை உருவாக்கி வரும்
நிலையில் இந்தியாவுக்கு பெரும் சிக்கல் இதனால்  எழும் என்ற  நிலையிலும் தமிழகம் கொந்தளிக்கும் என்ற நிலையில்
தற்போது அந்த ஆதாரங்களை பொய் எனவும் போலியானது எனவும் திட்டமிடபட்ட பொய் பரப்புரை ஒன்றினை
தமிழர் ஊடகங்களை வைத்து நடத்துவதற்கு சிங்களம் பாரிய தீட்ட மிடலினை வகுத்துள்ளது ............ read more


மீண்டும் ஏமாற்றியது இந்தியா; இலங்கையின் உறவை கருத்திற் கொண்டு ஜெனிவா முடிவு அமையும் - எஸ்.எம்.கிருஷ்ணா

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நட்பு உள்ளது. அதனைக் கருத்திற் கொண்டே ஜெனீவா தீர்மானம் குறித்து முடிவெடுக்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

சோனியா காந்தியின் உருவ பொம்மைக்கு செருப்படி - பெரியார் தி க வினர் கைது


சோனியா காந்தியின் உருவ பொம்மைக்கு செருப்படி - பெரியார் தி க வினர் கைது

அமெரிக்கா இலங்கை அரசு மீது போர்க்குற்றம் செய்ததாக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து ஐநா சபையில் உள்ள அனைத்து நாடுகளின் ஆதரவை கேட்டது.

இதற்கு பல்வேறு நாடுகளும் இலங்கை அரசு போர்க்குற்றம் செய்திருக்கிறது என்று தங்களுடைய ஆதரவை தெரிவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்திய அரசு அமெரிக்கா கொடுத்திருக்கிற தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் எம்.பிக்களின் மூலமாக அழுத்தம் கொடுத்து வருகின்றன.