Translate

Thursday, 20 October 2011

முற்பகல் கொடுத்தது பிற்பகல் கிடைக்குது.

முற்பகல் கொடுத்தது பிற்பகல் கிடைக்குது...அன்பு விதைத்தால் மட்டுமே முளைக்கும். 


விதைத்தது முளைக்கவில்லை என்றால் விதையில் பழுது. பழுதான உள்ளங்கள் இருந்தென்ன இலாபம்? அன்னையின் கடனை அடைத்தவர் யார்? ஒற்றை முத்தம் ஓரிரு சொல்லுள் அன்பு மென்மையான தொடுகை..இது போதும் அன்னை மனம் குளிர..ஆயிரம் கொட்டி கொடுக்க தேவை இல்லை..அன்னைக்கு.. இதைக் கூட ஒருவனால் கொடுக்க முடியவில்லை என்றால் அத்தகைய மனிதர்கள் இருந்தென்ன...இறந்தென்ன?

தொடர்ந்தும் தாக்கினால் வழியை மாற்றுவோம் – மாணவர்கள் எச்சரிக்கை (Photo in)


யாழ்.பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் சுப்பரமணியம் தவபாலன்இனந்தெரியாத நபர்களினால் நேற்றுத் தாக்கப்பட்டதைக் கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் சமூகம் பாரிய ஆர்பாட்டம் ஒன்றை இன்று மேற்கொண்டது.
இந்த ஆர்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர் மீதான தாக்குதலைக் கண்டித்தும் இலங்கை அரசு உடனடியாக இதனை நிறுத்த வேண்டும் மாணவர் சக்தியோடு விளையாட வேண்டாம் என்றும் மாணவர்கள் கோஷமிட்டனர்............ read more 

காணிகளைப் பிரித்தால் மீண்டும் இனப்பிரச்சினை ஏற்படும்: விமல் எச்சரிக்கை.


இந்த நாட்டின் காணிகளை எந்தவொரு காரணத்திற்காகவும் பிரித்து வைக்க முடியாது என வீடமைப்பு, நிர்மாணம், பொறியியல் மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள அனைத்து இடங்களும் அரசாங்கத்திற்குச் சொந்தமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்........... read more 

சிங்களக் குடியேற்றங்கள் பற்றி சபையில் கூட்டமைப்பு விவாதிக்கமுடியாதாம்: அனுமதியோம் என உறுமிய சிங்கள் எம்.பிக்கள்.


வடக்கு, கிழக்கில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் காணிப்பதிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்க தமிழ்க் கூட்டமைப்புக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர். ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை நடந்தபோது அதில் கலந்துகொண்ட நாடாளு மன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தெரிவித்திருக்கின்றனர்............ read more 

துமிந்த சில்வா பாதுகாப்புச் செயலாளருடன் நெருங்கிப் பழகினார் – ராஜித


துமிந்த சில்வா பாதுகாப்புச் செயலாளருடன் நெருங்கிப் பழகினார் – ராஜித

 
முல்லேரியா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் துமிந்த சில்வா பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுடன் நெருங்கிப் பழகி வந்தார் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.......... read more 

திருச்சி இடைத்தேர்தல்; அ.தி.மு.க. வெற்றி ; புதுச்சேரியில் ரெங்கசாமி கட்சி வெற்றி

திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க, வேட்பாளர் பரஞ்ஜோதி 14 ஆயிரத்து 684 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான 5 தபால் ஓட்டுகளும் தி.மு.க., வேட்பாளர் நேருவுக்கு கிடைத்துள்ளன. 18 வது இறுதி சுற்று எண்ணிக்கையின்படி அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதி 69 ஆயிரத்து 29 ஓட்டுகளும், தி.மு.க., வேட்பாளர் கே.என். நேரு 54 ஆயிரத்து 345 ஓட்டுகளும் பெற்றுள்ளார். இதையடுத்து 14 ஆயிரத்து 684 ஓட்டுகள் ............ read more 

ஜனாதிபதி நினைத்தால் 24 மணி நேரத்திற்குள் தீர்வு வழங்க முடியும் _


  வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி நினைத்தால் 24 மணி நேரத்திற்குள் தீர்வு வழங்க முடியும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அரசாங்கத் தரப்பிடம் இன்று தெரிவித்துள்ளது. .
அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் இடையே இன்று பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணித்தியாலமாக இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது............. read more

தமிழ்வாணி போல், மீனா போல் எங்கள் தேசத்தின் விடிவிற்காய் நாம் ஒன்றாக எழுவோம்!


இறுதி யுத்த களத்தில் விடுதலைப் புலிகளது உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அவர்களது ஆன்மாக்கள் திசை எங்கும் சிதறிச் சென்று உலக நாடுகள் எங்கும் ஈழத் தமிழினத்தின் மேல் சிங்கள அரசு நடாத்திய இன அழிப்புப் போருக்காக நீதி கோரியபடியே உள்ளன.,.......... read more 

பயங்கரவாதத்தை வென்றதற்காக சிறிலங்காவுக்கு சான்றிதல் கொடுக்கும் இந்தியா-அனலை நிதிஸ் ச. குமாரன்


பதினேழு நாடுகளுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளுடன் போர் செய்ய முக்கிய காரண கர்த்தாவாக இருந்த இந்தியா, திடீரென சிறிலங்காவுக்கு பயங்கரவாதத்தை ஒழித்த வெற்றி நாடு என்கிற பட்டத்தை வழங்கியுள்ளது. தனது அயல்நாடுகளில் இஸ்திரத்தன்மையை இல்லாதொழிப்பதன் மூலமாக தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ளலாம் என்கிற வியூகத்தில் ஏவிவிடப்படும் பயங்கரவாதத்தை இந்தியா எப்படி அழிக்கப்போகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது............. read more 

போருக்குப் பிறகான சூழலும் சர்வதேசமும்


போருக்குப் பிறகான சூழலும் சர்வதேசமும்



போருக்கு பிறகான அய்.நாவின் மனித உரிமை அமர்வில் அமெரிக்கா-மேற்குலகம் சார்ந்த அரசுகள் சாராத எதிர் கூட்டணி (இக்கூட்டணியும் ஈழ ஆதரவிற்காகவன்றி தத்தமது ஆளும்வர்க்க நலனுக்கு சார்பாக உருவானதுதான்) இந்தியாவின் பெரும் முயற்சியினால் முறியடிக்கப்பட்டது. இலங்கைக்கு ஆதரவாக கொணரப்பட்ட இந்த தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்க-மேற்குலக எதிர்ப்பு மற்றும் முன்னால் எதிர்ப்பு நாடுகளின் ஆதிக்கம் அதிகமிருந்தது. இதன் மூலம் இலங்கையானது மேற்குலக எதிர்ப்பு முகமூடியை முன்வைத்து செயல்பட்டது. இந்த அடிப்படையிலேயே இலங்கையை தண்டிப்பது என்பது மேற்குலகிற்கு எதிரான ஒரு நாட்டின் தீவிரவாதத்திற்கு எதிரான போரை வளரும் மற்றும் பின் தங்கிய நாடுகள் ஆதரிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் நகர்வுகளை இந்தியாவும் சீனாவும் மேற்கொண்டன.

இலங்கைக்கான கனடியத் தூதுவரை மீள அழைக்க வேண்டுமென கனடிய அரசினரிடம் வேண்டுகோள்


இலங்கைக்கான கனடியத் தூதுவரை மீள அழைக்க வேண்டுமெனவும், இலங்கையைப் பொதுநலவாய அமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டுமெனவும் மனித உரிமைகளுக்கான
கனடியத்தமிழ் முதியோர் கனடிய அரசினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
"யுத்தக்குற்றம் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றம் புரிந்த இலங்கை ஆட்சிக்கெதிராக கனடியப் பிரதமர் திரு. ஸ்ரிபன் காப்பர் அவர்களும், கனடிய வெளிவிவகார அமைச்சர் திரு. யோன் பெயாட் அவர்களும் தாங்கள் வாக்குறுதி அளித்தவாறு இலங்கை அரசுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு இது ஒரு உகந்த நேரமாகும்" என்று மனித உரிமைகளுக்கான கனடியத்தமிழ் முதியோர் அமைப்பின் பணிப்பாளர்களில் ஒருவரான திரு.குமார் இராசிங்கம் அவர்கள் கூறினார்கள்.

" கூட்டாளி " திரைப்பட முன்னோட்டம்

இதுவரை வெளிவந்த ஈழத்து திரைப்படங்களிலிருந்து மாறுபட்டது இந்த திரைப்படம்! இந்த கதையின் சாராம்சம்.

Wednesday, 19 October 2011

உள்ளாட்சித் தேர்தல்: தற்போதைய நிலவரங்கள்


உள்ளாட்சித்தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி தற்போதைய நிலவரங்கள் வெளியிடப்படுகின்றன. 
உள்ளாட்சி தேர்தலின் 2ம் கட்ட ஓட்டுப் பதிவின் மதிய நேர நிலவரப்படி திருச்சியில் 50.77 சதவீத ஓட்டும், நாகை மாவட்டத்தில் சீர்காழியில் 50சதவீதமும், மயிலாடுதுறையில் 47சதவீதமும், கரூரில் 59.30 சதவீத ஓட்டும் பதிவாகியுள்ளது.......... read more 

இலங்கை நாடாளுமன்றத்தில் கொள்ளையர்களும், கொலைகாரர்களுமே அதிகம்: சந்திரிகா

இலங்கை நாடாளுமன்றத்தில் கொள்ளையர்களும், கொலைகாரர்களுமே அதிகம்: சந்திரிகா
இலங்கை நாடாளுளுமன்றத்தில் கொள்ளையர்களும், கொலைகாரர்களுமே அதிகம் பேர் உள்ளதாக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.

சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு கூறிய அவர்,கல்வித்துறையின் மூலம் இந்த சமூகத்தை சீர்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்றும்,அவ்வாறு இல்லாவிட்டால் இந்த சமூகம் சீரழிந்து விடும் என்றும் தெரிவித்தார்......... read more 

சிறீலங்காவில் சிந்தனைக்கு வரமறுக்கும் பாலஸ்தீன விவகாரம்…


ஒரு பாலஸ்தீனனுக்கு சுதந்திரமாக வாழக்கிடைத்த உரிமை ஏன் ஈழத் தமிழனுக்கு கிடைக்கக்கூடாது…?........ read more 

மனித உரிமை மீறல்கள் அழுத்தம் அதிகரிக்கும் அமெரிக்கா


மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசு உடனடியாக பிரதிபலிப்பை வெளிப்படுத்த வேண்டுமென்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது............ read more 

முள்ளிவாய்க்காலில் நின்ற நேரடிச் சாட்சி மீனா:(Video in)

இறுதிப் போர் நடைபெற்றவேளை அவுஸ்திரேலிய தமிழ் பிரஜையான திருமதி மீனா கிருஷ்னமூர்த்தி தனது நேரடிச் சாட்சியத்தைப் பதிவுசெய்துள்ளார். அவருடன் டாக்டர் சாம்பவியும் இணைந்து அவுஸ்திரேலியாவில் 3 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்க முனைப்புகளைக் காட்டியுள்ளனர். இதனை அவுஸ்திரேலியாவின் முன்னணி தேசிய தொலைக்காட்சியான எ.பி.சி ஒளிபரப்பியுள்ளது. சுமார் 9 நிமிடம் ஒளிபரப்பப்பட்ட இந்தக் காணொளியால் அவுஸ்திரேலிய மக்கள் ஆடிப்போயுள்ளனர்........... read more 

இலங்கையின் இராணுவத்தையும் மற்றும் இனப்படுகொலைகளையும் காப்பாற்றும் இந்தியாவின் மறைமுகப் பரப்புரை


இலங்கையின் போர்க்குற்றங்களைப் பற்றி விசாரிக்க சரியான நேரத்தை எதிர்பார்த்துஜெனிவா காத்திருக்கும் இந்த நேரத்தில், புதுடில்லியானது தமிழீழ நாட்டின் திரிகோணமலையில், இலங்கையுடன் இணைந்து பாரிய-இராணுவ கூட்டு நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் எதிர்கட்சியான பா.ஜ.க-வின் மூத்த தலைவர் திரு.முரளி மனோகர் ஜோசி அவர்கள், சிங்கள-பௌத்த மறுமலர்ச்சி ஆதரவாளர்களின் நினைவாக வரும் காரிக்கிழமை (சனி) கொழும்புவில் உரை நிகழ்த்த இருக்கிறார்........ read more 

படமெடுத்த புலனாய்வுத்துறையினரை படமெடுத்த தமிழர்கள் !

 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் தவபாலன் அவர்கள் வீதியில் வைத்து தாக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த பல்கலைக்கழக மாணவர் சமூகம் அடுத்த நாள் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. உயர்பட்டப்படிப்பு பீடத்துக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலரை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் புகைப்படங்களை எடுத்தனர். பின்னர் அவர்களை இவ்விரு புலனாய்வுப் பிரிவினரும் கூப்பிட்டு எச்சரித்துள்ளனர். இவர்கள் மாணவர்களுடன் பேசும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அதிர்வு இணையத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. புலனாய்வுப் பிரிவால் மட்டும் தானா புகைப்படம் எடுக்க முடியும் எம்மாலும் அவர்களை எடுக்கமுடியும் என்பதுபோல இது அமைந்துள்ளது.......... read more 

கருணாவும் ரணிலும் அன்று பேச்சுவார்த்தைகளை ஈடுபட்ட முக்கியமான பிரதேசத்துக்கு நான் இன்று வருகை தந்திருக்கிறென். கிழக்கில் ஜனாதிபதி


இந்த நாட்டில் இனிமேல் குறுகிய இனவாத அரசியல் வேண்டாம்.அனைவரும் ஜனநாயக வழியில் வாழ வேண்டும். இந்த நாட்டில் எல்லா மக்களும் சமவுரிமையுடன் சுய கௌரவத்தோடு வாழவேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
மட்டக்களப்பு ,வவுனதீவு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டம் நீர் சுற்றிகரிப்பு நிலையத்தினை மக்களிடம் கையளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர். இதனைத் தெரிவித்தார்............ read more 

மீண்டும் ஓர் போர்களத்தைத் தடுக்கும் வல்லமையைக் கொண்டுள்ளது மகிந்த அரசு


தமிழினத்திற்குச் சிங்களப் பேரினவாதிகளால் அரங்கேற்றப்பட்ட அட்டூழியங்கள், அராஜகங்கள் கடந்த கால கறைபடிந்த நாட்கள்.

அந்த அராஜகத்தையும் அட்டூழியங்களையும் மறுப்பதற்கோ மறப்பதற்கோ தமிழனாய்ப் பிறந்த எவனுக்கும் மனம் வராது.

இருந்தும் எமது எதிர்காலம் தொடர்பில் அதீத அக்கறை கொண்டு, தமிழினத்தை இனியொரு போர்க்களத்திற்கு இழுத்துச் செல்வதைத் தடுத்து, அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்றை முன்வைக்கக் கூடிய பலம் வாய்ந்த அரசே மகிந்த அரசு............ read more 

தமிழ் மக்களின் மூலதனமான கல்வியைக் கலங்கப்படுத்துகிறாரா யாழ்.அரச அதிபர்?

தமிழ் மக்களின் மூலதனமான கல்வியைக் கலங்கப்படுத்துகிறாரா யாழ்.அரச அதிபர்?]

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக அனைவராலும் விவாதிக்கப்பட்டு வரும் விடயங்களில் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார், பலாலி ஆசிரியர் கலாசாலை தொடர்பில் வெளியிட்ட கருத்தும் பிரபல்யமடைந்து காணப்படுகின்றது........   read more 

இடைத்தேர்தல் எச்சரிக்கை!

இடைத்தேர்தல் வெற்றி தோல்விகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு அரசியல் கட்சியின் செல்வாக்கைக் கணித்துவிட முடியாதுதான். ஆனால், இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடித்ததுமுதலே, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தொடர்ந்து தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது என்பதுதான் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் காங்கிரஸýக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவை பூதாகரமாக்கிக் காட்டுகிறது............. read more

அமெரிக்க அழைப்பாணை... ஆடிப்போன மஹிந்த ராஜபக்ச!


அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவால் ஆட்டம் கண்டு போயிருக்கிறார் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச.
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க விசாரணைக் குழு ஒன்றை அமைத்தபோது, இலங்கையில் இருந்து உயிர் தப்பித்து வந்தவர்கள், அந்தக் குழுவிடம் தங்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்......... read more 

தவபாலன் மீதான தாக்குதலுக்கு படையினர் பதில் தரும் வரை பகிஷ்கரிப்பு தொடரும்!- யாழ்.பல்கலை. ஒன்றியம்


யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு, பாதுகாப்புத் தரப்பினர் உரிய பதில் தரும் வரையில் மாணவர்களின் பகிஷ்கரிப்புப் போராட்டம் தொடரும் எனவும் உரிய பதில் தரத்தவறும் பட்சத்தில் போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டமாக வெடிக்கும் எனவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்திருக்கின்றது.......... read more 

வடமாகாணத்திலேயே தமிழர்களை சிறுபான்மை இனத்தவராக மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி: மனோ


  கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டு குடியேற்றங்களை நடத்தி தமிழ், முஸ்லிம் மக்களை சிறுபான்மையினராக மாற்றி வருவதற்கு இணையான திட்டத்தை வடக்கில் அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. வடமாகாணத்தில் குறிப்பாக வன்னி பெருநிலப்பரப்பில் தமிழர்களை சிறுபான்மையினராக மாற்றிவிடும் கைங்கரியத்தில் அரசாங்கம் முனைப்புடன் செயற்படுகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,......... read more 

கூட்டமைப்பின் உண்ணாவிரதத்தை ஏற்க முடியாது; காணி அமைச்சரின் கூற்றுக்கு த.தே.கூ. கண்டனம்

news
வடக்கு கிழக்கில் காணி பிரச்சினை உள்ளதாகக் கூறி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என சிறிலங்காவின் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். ....... reAD more

குடா நாட்டில் மட்டும் 120,000 மக்கள் இன்னமும் குடியேறவேண்டியுள்ளது.


புதன்கிழமை, அக்டோபர் 19, 2011
 மக்கள் அவலம்
குடாநாட்டில் மட்டும் இன்னமும் 120,000 மக்கள் (28,000 குடும்பங்கள்) மீழ் குடியேறவேண்டியுள்ளது. இந்த 28,000 குடும்பங்களும் சிங்கள இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, சிறிலங்கா அரசாங்கத்தினால் உயர் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்...... read more 

அமெரிக்க காங்கிரஸ்காரர்களுக்கு யாழில் படம் காட்டிய சிங்கள அரசு


US congress visit to Jaffna
சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கோத்தபாயவுடன் சந்திப்பை மேற்கொண்டிருந்தனர். அதன் பின்னர் ஹெலிகொப்டர் மூலம் இன்று (19/10/2011) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்கள். இங்கு இவர்களுக்கு நிறைகுட வரவேற்பளிக்கப்பட்டது. இதே வேளை கடந்த முறை ரொபேர்ட் ஓ பிளேக்கிற்கு இந்த வரவேற்புக்கள் இடம்பெறவில்லை......... read more 

வாசுதேவ நாணயக்காரவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!


ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அண்மையில் முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அமைச்சரிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது........ read more 

போரின் பின்னர் அமெரிக்க காங்கிரஸ் நாடாளமன்ற குழுவினர் யாழ்ப்பாணத்தில்

அமெரிக்க நாடாளமன்றகுழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டு யாழ்படைதலைமைஅதிகாரிகள் மற்றும் அரசாங்கஅதிகாரிகளை சந்தித்து  கலந்துரையாடியுள்ளர்கள்.

கூட்டமைப்புக்கு விவாத அனுமதி எதிர்க்கின்றனர் அரச எம்.பிக்கள்

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் காணிப்பதிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்க தமிழ்க் கூட்டமைப்புக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்...... read more 

அவுஸ்திரேலியாவால் விசாரணை செய்யப்பட வேண்டிய மூவர் - அனைத்துலக நீதித்துறை ஆணைக்குழு

இது தொடர்பாக குறிப்பாக மூவர் தொடர்பாக உடனடி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அவுஸ்திரேலியாவின் நீதித்துறை ஆணைக்குழு தனது அறிக்கையில் வலியுறுத்திக் கூறியுள்ளது.............. read more 

Tuesday, 18 October 2011

GTV NEWS 18.10.2011

எமது உரிமைப் பேராட்டத்தை உலகிற்கு காட்டவே தமிழ்க் கூட்டமைப்பு தேர்தல்களை எதிர்கொள்கிறது அரியநேத்திரன் எம்.பி. தெரிவிப்பு

ariyanthiranகொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற வெற்றியின் மூலம் அங்கு வாழும் தமிழ் மக்களும் அரசை நிராகரித்துள்ளனர் என்பதனை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். ........... read more 

தமிழர்களுக்கு உரியதை செய்தால் தமிழ்க் கூட்டமைப்பு மு.கா.வை பிரதேசங்களிலிருந்து அகற்ற முடியும் மட்டக்களப்பில் அமைச்சர் ராஜித

தமிழர்களுக்குத் தேவையானவற்றை வழங்குவதன் மூலமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் அந்தப் பிரதேசங்களில் இருந்து அகற்ற முடியும் என கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் உவர் நீர் இறால் குஞ்சு உற்பத்தி நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;.......... read more 

சர்வதேச ரீதியில் புலிகளின் நடவடிக்கைகள் அதிகரிப்பு இலங்கைக்கு ஐரோப்பிய பொலிஸ் எச்சரிக்கை - பீரிஸ் _


  சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பது தொடர்பாக ஐரோப்பிய பொலிஸ் இலங்கைக்கு எச்சரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை பரிஸ் நீதிமன்றத்தில் அண்மையில் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 21 பேருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ........ read more 

அமெரிக்கா ஜிஎஸ்பி வரிச் சலுகையினை நீடிக்கின்றது

அமெரிக்க அரசாங்கம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக வரிச்சலுகையினை ( ஜிஎஸ்பி) 2013 வரை நீடித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன் மூலம் 2010ஆம் ஆண்டு இறுதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சிறிலங்காவிற்கான  ஜி.எஸ்.பி. திட்டம் 2013ஆம் ஆண்டு வரை நீடிக்கப்படும்.

இராணுவ வீரர் ஒருவருக்காக 1027 கைதிகளை விடுவிக்கவுள்ள இஸ்ரேல் _


  காசா பகுதி ஹமாஸ் பிரிவினரிடம், கடந்த ஐந்து ஆண்டுகளாக சிக்கியுள்ள, தனது நாட்டு இளம் இராணுவ வீரர் ஒருவரை மீட்பதற்காக, பலஸ்தீனத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளை, இஸ்ரேல் விடுவிக்கவுள்ளது. ........ READ MORE 

உச்சநீதிமன்ற விசாரணையில் மூவர் தூக்கு தண்டனை: தில்லியில் வைகோ

சென்னை, அக்.18: மூவர் தூக்கு தண்டனை குறித்த விசாரணை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் பெற்றதை அடுத்து, அக்.19ம் தேதி நடக்கும் விசாரணையில் கலந்துகொள்வதற்காக வைகோ தில்லி செல்கிறார் என்று மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...

ஐரோப்பாவில் புலிகள் மீள் எழுச்சி -euro பொலிஸ் இலங்கைக்கு எச்சரிக்கை ..!


ஐரோப்பாவில் புலிகள் மீள் எழுச்சி -  Euro பொலிஸ் இலங்கைக்கு எச்சரிக்கை ..!

  ஐரோப்பாவில் தமிழீழ விடுதலை புலிகள் மீள் எழுச்சி பெற்று தமது கட்டமைப்புக்களை சீரிய முறையில் கட்டி எழுப்பி வருகின்றனர் . இவர்களின் இந்த திடீர் அசுர வளர்ச்சி மீள் ஒருங்கிணைவு இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என euro பொலிஸ் இலங்கைக்கு எச்சரித்துள்ளது .

பிரித்தானியாவில் இரத்து செய்யபட்ட பகுதிகளில் மீள் தேர்தல் -தமிழீழ அரசு அறிவிப்பு ..!


பிரித்தானியாவில் நாடு கடந்த அரசினால் மேற்கொள்ள பட்ட தேர்தல்களின் போது முறை கேடான முறையில்
வாக்கு பதிவுகள் இடம்பெற்ற தேர்தல் தொகுதிகள் வாக்குகள் இரத்து செய்ய  பட்டு மீள் தேர்தல்
நடை பெரும் என அறிவிக்க பட்டது .

வீரப்பன் .....ஒரு வரலாறு !!!!!!!

இன்றோடு எழு ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா ? சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு எழு ஆண்டுகள் ஆகின்றன.

வீரப்பனை கொன்றோம் என்று மார் தட்டிக் கொண்டவர்களும், அதிகாரி வீட்டில் சப்பாத்தியும் தோசையும் சுட்டவர்களும், அதிகாரி ஷூவுக்கு பாலீஷ் போட்டவர்களும், ஒரு படி பதவி உயர்வும், இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு கிரவுண்...டு நிலமும் பெற்று இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன.

நீங்கள் புகைப்பிடிப்பவரா? நன்றே செய்க அதனை இன்றே செய்க!


நீங்கள் புகைப்பிடிப்பவரா? நன்றே செய்க அதனை இன்றே செய்க! 



1. போதையை ஏற்படுத்துதல்:
புகைத்தல் போதையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆரம்ப பழக்கமுடையோருக்குச் சிறிது கூடுதலாகவே போதை ஏற்படுகிறது. ஏனைய போதைவஸ்துக்களைப் பாவிப்பதன் மூலம் ஏற்படுகின்ற அளவுக்குப் போதை ஏற்படாத போதும், மிகக் குறைந்த அளவிலாவது புகைப்பவர்கள் போதை கொள்கிறார்கள். 

காணிப் பிரச்சினை: வவுனியாவில் உண்ணாவிரதம்


உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டிருந்த தமிழ் அரசியல் பிரமுகர்கள்
உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டிருந்த தமிழ் அரசியல் பிரமுகர்கள்

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் வலிந்து சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி தமிழ்க் கட்சிகள் வவுனியாவில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளன.
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் காணி மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக மூன்று கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.......... read more 

வன்னிப் போருக்கான காரணங்களை விளக்கி நோர்வே அறிக்கை வெளியிடவுள்ளது! தடுக்கும் முயற்சியில் இலங்கை


இலங்கையின் அமைதி முயற்சியில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் போருக்கான காரணங்களை விளக்கி நோர்வே அரசு, அவற்றை விசேட அறிக்கையாக வெளியிடவுள்ள நிலையில், அதனை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்காக நோர்வே அரசுடன் இலங்கை அரசு இராஜதந்திர மட்டத்திலான காய்நகர்த்தல்களை முன்னெடுத்துள்ளது எனத் தெரியவருகிறது......... read more 

பலம் பொருந்திய கைகளே சகோதரனின் கொலைக்குக் காரணம்!- பாரதவின் சகோதரர்கள் குற்றச்சாட்டு


பாரத லக்ஸ்மனுடைய சேவையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மறந்துவிட்டது. பலம்பொருந்திய கைகளே அவருடைய கொலைக்குக் காரணம் என கொலன்னாவ துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பாரத லக்ஸ்மனின் சகோதரர்கள் இன்று தெரிவித்தனர்.............. read more 

தமிழனைத் தலைகுனிய வைத்தவர்கள் - பழ. நெடுமாறன்

இந்திய அரசிலும், அரசியலிலும் பல தமிழர்கள் உயர் பதவிகள் வகித்து தங்களது அறிவாற்றல், நிர்வாகத் திறமை ஆகியவற்றால் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்தனர்.
இந்தியாவின் கடைசி கவர்னர்- ஜெனரலாக பதவி வகித்த இராஜாஜி, குடியரசுத் தலைவர்களாக ஆர். வெங்கட்ராமன், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆகியோரும் மத்திய அமைச்சர்களாக ஆர்.கே. சண்முகம் செட்டியார், டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், சி. சுப்பிர மணியம் போன்றோரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராசர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக முகமது இஸ்மாயில், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவராக..... read more 

ஐந்து பில்லியன் டொலர்களிற்காக மஹிந்தவிற்கு உதவப்போகும் இந்தியா?

2018 பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டியினை சிறிலங்காவில்நடத்த ஒத்துழைத்தால் அது இந்தியாவிற்கு ஐந்து பில்லியன் டொலர்கள் வரையான கட்டுமான முதலீட்டினைப்பெற்றுக்கொடுக்கும் என சிறிலங்கா பேரம் பேசுகின்றது.............. read more 

போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான சான்று அவுஸ்ரேலியாவிடம் உள்ளது

அவுஸ்ரேலியாவின் முன் நாள் தூதுவராக பணியாற்றும் முன் நாள் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் தெஸர சமரசிங்க நன்றாக மாட்டிக்கொண்டுவிட்டார் என்றே கூறப்படுகின்றது. இவர் மீதான போர்க் குற்றச்சாட்டினை பொலிசார் விசாரிக்க முடியும் என கூறப்படும் சூழலில் அவர் தன் மீதான குற்றச்சாட்டினை மறுத்துள்ளார்............. read more 

இலங்கைத்தீவீல் தமிழர்களின் உரிமைப் போராட்டம் உயிர்ப்புடன் உள்ளதென்பதன் குறியீடே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உண்ணாநிலைப் போராட்டம் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாநிலைப் போராட்டம் நம்பிக்கை தருவதாகக உள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.
தமிழர்தாயகத்தில் உள்ள தமிழர் நிலங்கள் பல்வேறுப்பட்ட வகையிலும், போர்வையிலும் சிறிலங்கா அரசினால் திட்டமிட்ட வகையில் அபகரிக்கப்பட்டு வரும் நிலையினை, சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு வரும் முகமாக, மூன்று பிரதான கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் திங்கட்கிழமை வவுனியாவில் உண்ணாநிலைப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது............. read more 

போராட்டங்கள் அதிகரித்தால் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும்

சுரேஷ் எம்.பி எச்சரிக்கை

வடக்குக் கிழக்கில் அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு கொடுக்கவில்லை. அந்த வகையில் தங்கள் இஷ்டத்திற்கேற்ப குடியேற்றங்களை ஏற்படுத்தவோ, நிலங்களைச் சுவீகரிக்கவோ அல்லது தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவோ நாம் அனுமதிக்க முடியாது. அவ்வாறு இடம்பெற்றால் இப்படியான போராட்டங்கள் மேலும் மேலும் அதிகரித்து இலங்கையில் அநாவசியமான ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்கும். அது ஒட்டுமொத்த இலங்கைக்கும் நல்லதொரு நிலையாக இருக்காது என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்................ read more 

லண்டன் சென்ற இந்திய பயணிகள் தவிப்பு - விமானத்தில் 8 மணி நேரம் அடைத்து வைப்பு

லண்டன் சென்ற இந்திய பயணிகள் தவிப்பு - விமானத்தில் 8 மணி நேரம் அடைத்து வைப்பு
லண்டன்; இந்தியாவில் இருந்து லண்டன் சென்ற ஏர்.இந்தியா விமானம் குறிப்பிட்ட ஹீத்ரு விமான நிலையத்தை அடையும் முன்னதாக காட்விக் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்........... read more 

தேச வழமைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும்

வடக்கிற்கு தனித்துவமாக அமுலிலிருக்கும் பயங்கரவாத கொள்கைகளுக்குத் துணை போகும் தேசவழமைச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும். 


வடக்கில் மாவீரர் குடும்பங்கள் ஆக்கிரமித்துள்ள காணிகளையும் அரசாங்கம் காலதாமதமின்றி சுவீகரிக்க வேண்டும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல ஊறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.............. read more 

கோத்தாவின் மனைவியுடன் கைகோர்த்து நடனமாடிய கருணா

நேற்று சிறிலங்கா இராணுவத்தினரின் 40 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இரவு நடன இசை விருந்து நிகழ்ச்சி கொழும்பில் பிரபல ஹோட்டல் ஒன்றில் நடந்தது. இதன் போது ஒட்டுக்குழு மன்னன் கருணா இரவு 10 மணிபோல அந்த விருந்து நடக்கும் இடத்திற்கு வந்தார். சிறிது நேரத்தின் பின்னர் கோத்தாவும் , கோத்தாவின் மனைவியும் கூடவே கருணாவும் மேடையில் ஏறி நடனம் ஆடினர்............. read more 

தமிழ் செல்வந்தர்களை அறிமுகப்படுத்தி தருமாறு லியாம் பொக்ஸ் கேட்டார்.

 2007-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போர் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த நேரம் நான் பிரித்தானியாவின் முன் நாள் பாதுகாப்பு செயலர் லியாம் பொக்ஸ்( அந்த நேரம் அவர் நிழல் அமைச்சராக இருந்தார்) அவர்களை சந்தித்து சிறிலங்காவில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி கூறுவேன்........... read more  

காணிப் பதிவுகளை உடன் நிறுத்தாவிடின் போராட்டம் வெடிக்கும்; வவுனியா உண்ணாவிரத மேடையில் மாவை சேனாதிராசா எம்.பி. முழக்கம்


காணிப் பதிவுகளை உடன் நிறுத்தாவிடின் போராட்டம் வெடிக்கும்; வவுனியா உண்ணாவிரத மேடையில் மாவை சேனாதிராசா எம்.பி. முழக்கம்  
18 அக்டோபர் 2011, செவ்வாய் 8:45 மு.ப
newsதமிழர் பகுதிகளில் காணிப்பதிவு உட்பட தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள குரோதச் செயற்பாடுகளை அரசு உடன் நிறுத்தாவிடின் மக்களைத் திரட்டி போராட்டங்களைப் பல வடிவங்களில் முன்னெடுப்போம். தமிழ் மக்கள் எங்கெல்லாம் வாழுகின்றார்களோ அங்கெல்லாம் எமது சாத்வீகப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்.   மேலும்...

தமிழ் மாணவர்களின் தலைமைத்துவத்தை விரும்பாத தீய சக்திகளின் வெளிப்பாடே மாணவர் ஒன்றியத் தலைவர் மீதான தாக்குதல் - அனைத்துப் பீட மாணவர் ஒன்றியம் கண்டித்து அறிக்கை

யாழ். பல்கலைக்கழக மாணவர்  ஒன்றிய தலைவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து  அனைத்துப் பீட மாணவர்களினாலும் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது............ read more

Monday, 17 October 2011

இணையத்தில் வேகமாக தரவிறக்கம் செய்வதற்கு

இணையத்தில் வேகமாக தரவிறக்கம் செய்வதற்கு நாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும் போது 5 மடங்கு வேகமாக தரவிறக்கம் நடைபெறுகிறது. இது ஒரு கட்டண மென்பொருள். இதன் சந்தை மதிப்பு $25 ஆகும். இதன் புதிய பதிப்பை கிராக் செய்து Full Version-க தரவிறக்கலாம். இதன் IDM ஜ தரவிறக்கம் செய்து நிறுவியதும் உங்கள் கணணியை Restart செய்யவும்.www.puthithu.com